Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒஸ்கார் விருதுக்கான சிறந்த பட வரிசையில் திரையிடப்பட்டது Life of Pi

Featured Replies


image4542gjh.jpg
ஒஸ்கார் விருதுக்கான சிறந்த பட வரிசையில் திரையிடப்பட்டது Life of Pi
Jan 12 2013 09:29:47
 

 மொன்றியல் Yann Martel இன் நாவலை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் எடுக்கப்பட்டுள்ள Life of Pi  திரைப்படம் சிறந்த படங்களுக்கான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒன்பதில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று பிரமாண்டமாக திரையிடப்பட்டுள்ளது.

 
Best Achievement in Special Visual Effects
Rising Star Award (சூரஜ் ஷர்மா,  Pi யாக நடித்தவன்)
Best Production Design
Best Screenplay (Adapted)
Best Sound
ஆகிய வெவ்வேறு பிரிவுகளில் ஒஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம் நிச்சயம் விருதினை தட்டிச் செல்லும் என்றே பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. Life of Pi  என்பது மிகப்பிரபலமான நாவல் என்பதோடு  உலகம் முழுவதும் 9 மில்லியன் பிரதிகள் இது வரையிலும்  விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
 
சரி வாங்க படத்துக்கு போவோம்........
 
“லைப் ஆப் பை”   கனடாவில் எடுக்கப்பட்டுள்ள ஒரு ஹாலிவுட் படம் என்ற போதிலும் கூட இந்தியாவின் பாண்டிச்சேரி தான் கதைக்களம்.
image(2).jpeg
 
கதாநாயகனின் குடும்பம் இந்திய  மாநிலங்களில் ஒன்றான பாண்டிச்சேரியில் இருக்கிறது. கதாநாயகனின் அப்பா   விலங்குகளை கொண்ட ஒரு கண்காட்சி மையம் அதாவது உயிரியல் பூங்கா போன்ற அமைப்பினை  நடத்தி வருகிறார் . பூங்கா நடத்தும் இடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது. அதனால் காலி பண்ணச்சொல்கிறார்கள். வேறு வழியின்றி கதாநாயகனுக்கு கனடாவில் வேலை கிடைத்துள்ளதால் இங்கேயே வந்து  தங்கி விடத் தீர்மானித்து விலங்குகளுடன் கப்பலில் பயணம் செய்வது போல் நகர்கிறது கதை.
 
image%20(1).jpeg
 
இவர்கள் வரும் வழியில் கடல் புயல் ஏற்பட கதாநாயகனின் பெற்றோர்ரும் பல விலங்குகளும் மரணமடைய நேர்கிறது. இறுதியில் எஞ்சிய ஒரு வரிக்குதிரை , மனிதக் குரங்கு , புலி , எலியோட கதாநாயகனும் ஒரு படகில் பயணம் செய்கிறார். அந்த சாகசப்பயணம் தான் மீதிக் கதை.
 
 
 
சும்மா சொல்லக்கூடாது. ஒரே மாதிரி மசாலாப்படங்களை பார்த்து சலித்த கண்களுக்கு வித்தியாசமான துணிச்சலான கதை தான் . படத்தின் ஒளிப்பதிவாளரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவ்வளவு நேர்த்தியான உழைப்பு.
 
கதாநாயகன் சுராஜ் ஷர்மா  படத்தின் கதாப்பாத்திரமாகவே மாறி விட்டார். தமிழில் ஒப்பிட்டுப் பார்ப்பதானால் கமலுக்கு  அடுத்தபடியாக அசத்தியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். நிறத்தில் , உடல் மொழியில் இரு விதமான தோற்றம் அருமை.
image%20(2).jpeg
 
கதாநாயகி ஸ்ரவந்தி பரத நாடியக்கலைஞராக வருகிறார். மாநிறம் தான் . இருப்பினும் கொள்ளை அழகு.  நந்திதா தாஸ் தங்கை மாதிரி. மனதை சுண்டி இழுக்கும் தோற்றம் .. 
 
image%20(3).jpeg
 
தபு கதாநாயகனின் அம்மா. இவருக்கு அதிக காட்சிகள் இல்லை. வந்த வரையிலும் ஏதோ நடித்திருக்கிறார். பட இயக்குனர் ஆங் லி.
 
எல்லாவற்றையும் நாங்களே சொல்லக் கூடாது. மீதிப் படத்தை நீங்களே போய் பார்க்கலாமே!!
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.