Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீராத இராணுவ வன்கொடுமை! - கந்தரதன்

Featured Replies

 

 

போரைச் சாட்டாக வைத்து தமிழ் மக்களின் உயிர்களை பறித்த சிங்கள அரச கைக்கூலிப் படைகளான சிறீலங்கா இராணுவத்தினர், தமிழ் மக்களின் சொத்துக்கள் உடைமைகள் என்பவற்றையும் விட்டுவைக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மைகள். அவைபற்றி இப்பகுதியில் பலதடவைகள் எழுதி இருந்தோம். இந்நிலையில், போர் ஓய்ந்ததாக வெளி உலகை ஏமாற்றி வரும் சிங்கள அரசும் அதன் இராணுவத்தினரும் இன்னும் தமிழ் மக்களையும் மக்களின் சொத்துக்களையும் துடைத் தழிக்கும் செயற்பாடுகளை நிறுத்தியதாகத் தெரியவில்லை.

தமிழர் தாயகப் பகுதி எங்கும் இராணுவப் பிரசன்னமே காணப்படுகின்றது.

இதனை சர்வதேசங்களில் இருந்து தமிழர் தாயகப் பகுதிகளுக்கு செல்லும் பிரதிநிதிகள் கண்முன்னே கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு சிவில் நடவடிக்கைகளில் கூட இராணுவத் தலையீடு உள்ளதாகப் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவத்தினர் வைத்ததே அங்கு சட்டம். மீறி யாராவது தட்டிக் கேட்டாலோ அல்லது செயற்பட்டாலோ அந்தோ கதிதான். பாடசாலைச் செயற்பாடுகளில் கூட இராணுவத்தினரே தலையிடுகின்றனர். ஏற்கனவே வன்னிப்பகுதியில் பாடசாலை நிகழ்வுகளில் விருந்தினர்களாகத் தம்மையே அழைக்கவேண்டும் என்று இராணுவத்தினர் பாடசாலை நிர்வாகத்தினரை மிரட்டியமை நினைவிருக்கலாம்.

army%20tk%20a1atk.jpg

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நிகழ்வுகளுக்கு அழைக்கக் கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை அதிபர்களுக்கு இராணுவத்தினரால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை அதிபர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இராணுவத்தினர் புதிதாக அமைத்து வரும் புதிய பாதுகாப்பரணை மையப்படுத்தி குரும்ப

சிட்டி-கட்டுவன்-தெல்லிப்பழை-காங்கேசன்துறை வரை இப்புதிய பாதுகாப்பு நிலை அமைக்கப்படுவதாக வலிவடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மக்களது எதிர்ப்பையும் மீறி இதேபோன்று தொண்டமனாறு-ஒட்டகப்புலம்-வசாவிளான் வரை புதிய அரண் அமைக்கப்பட்டிருந்தது. அப்போதும் எஞ்சியிருந்த மக்களது வீடுகள் அழிக்கப்பட்டேயிருந்தன.

தற்போதும் பல வீடுகள், கட்டடங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன. நிரந்தரமாக பாதுகாப்பு வலயமாக 26 கிராம சேவையாளர் பிரிவுகளை மக்கள் நடமாடமுடியாத பகுதியாக அறிவித்து பலாலி முதல் காங்கேசன்துறை வரைபேண அரசு முற்பட்டுள்ளது. அதற்கு ஏதுவாகவே இப்புதிய அணை அமைக்கப்பட்டுவருகின்றது. இதனிடையே பாதுகாப்புக் காரணங்களுக்காக கட்டுவன் மேற்கு தெல்லிப்பளை பகுதியில் இடம்

பெயர்ந்த மக்களின் வீடுகள், கடைகளை இடித்து அகற்றும் வேலையை இராணுவத்தினர் செய்துவருகின்றனர்.

இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அங்குள்ள பாழடைந்த கட்டடங்கள், வீடுகளை பாதுகாப்புக்காக இடித்து அப்பகுதிகளைத் துப்புரவு செய்யும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர் எனவும் அத்தரப்பு நியாயம் கற்பித்துள்ளது. ஆயினும் இரவிரவாக இடித்தழிக்கும் பணி தொடர்வதாக மக்கள் தரப்பினில் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. வலி. வடக்கில் இருந்து 23 வருடங்களாக இடம்பெயர்ந்த நிலையில் 7 ஆயிரத்து 60 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 328 பேர் நலன்புரி நிலையங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி, அவர்கள் மீளக் குடியமர படையினர் அனுமதிக்கவில்லை.

ஆயினும் படையினர் தம்வசமுள்ள காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் - ‘யோகட்’ உற்பத்தித் தொழிற்சாலை எனப் பல தொழில் நிறுவனங்களை உருவாக்கி வருகின்றனர். இதேவேளை, வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பொதுமக்களின் வீடுகள், படையினரால் இடித்து அகற்றப்படுவதற்கு எதிராக எதிர்வரும் 15 ஆம் திகதி துர்க்கையம்மன் ஆலய முன்றிலில் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ9 வீதியில் சுமார் 30 சிறிலங்கா இராணுவத்தின் பாரிய படைமுகாங்கள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல நூற்றுக்கணக்கான படைமுகாங்கள் வீதியின் உட்பகுதிக்குள் அதாவது மக்கள் குடியிருப்புகளை இலக்குவைத்து அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் பொது மக்களின் செறிவு மிகவும் குறைந்து காணப்படும் பூநகரிப் பகுதியில் உள்ள பொதுமக்களின் 806 ஏக்கர் நிலத்தினை கையகப்படுத்தியுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் 10 பாரிய முகாங்களை அமைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா செல்லும்போது கைதடியில் 523 ஆவது படைத்தலமையகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து கைதடியில் 52 ஆவது படைப்பிரிவு, கைதடியில் 3 ஆவது ரெஜிமென்ட், மிருசுவிலில் கெமுனு படைப்பிரிவு, நுணாவில் மத்தியில், வரணி, எழுதுமட்டுவாள், முகமாலை, பளை, புலோப்பளை, மாஞ்சோலை, ஆனையிறவு ஆகிய இடங்களிலும் பாரிய படைமுகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் 571 ஆவது ரெஜிமென்ட், இரணைமடுவில் தகவல் படைப்பிரிவு, கொக்காவிலில் 632 ஆவது ரெஜிமென்ட், மாங்குளம் 53 ஆவது ரெஜிமென்ட் என்றவகையில் அமைந்துள்ளது. இவற்றில் பெரும்பாலன காணிகள் பொது மக்களின் பூர்வீகச் சொத்துக்களாகும். இருப்பினும் சிறிலங்கா இராணுவத்திடம் மேற்படி காணிகளை மீட்பது தொடர்பில் பொது மக்கள் பெரும் போராட்டங்கள் நடத்தியும், தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மேற்படிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள படைத்தலைமையகத்தைப் பாதுகாக்கும் நடைவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியினைச் சூழவுள்ள மக்கள் குடியிருப்புகளை அண்டிய பகுதியில் மேலும் சிறு சிறு இராணுவக் காவலரண்களை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தினில் படையினரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புதுமுறிகண்டி பிரதேசத்தினில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ குடியிருப்புக்களில் படையினரது குடும்பங்கள் இம்மாதம் 11ஆம் திகதி முதல் குடியமர்த்தப்படவுள்ளதாக சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞரணி தலைவர் சிவகுமாரன் தெரிவித்துள்ளார்.

அதற்கேதுவாக அவசர அவசரமாக அப்பகுதிகளில் பணிப்புரைகளை விடுத்து வரும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இதற்கென வடமாகாணத்திலுள்ள ஏனைய மாவட்டங்களில் தமிழ் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியை மட்டுப்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறித்த முறிகண்டிப்பகுதியினில் ஏ-9 வீதியோரமாக கடந்த மூன்று வருடங்களாக  சீனவரசினுதவியுடன் அமைக்கப்பட்டு வந்த குடியிருப்பு வீடுகள் படையினரது குடும்பங்களுக்கேயென தற்போது தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் வரையான வீடுகள் அவைக்கான போக்குவரத்து மார்க்கங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது அப்பிரதேசத்தை வெலிஓயாவுடன் இணைக்கும் வகையினில் புதிய பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

முற்று முழுதாக விவசாய செழுமை மிக்க இம்மண்ணில் படையினர் பண்ணைகளை அமைத்து விவசாயத்தினில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்ட மக்கள் அருகிலுள்ள பகுதிகளினில் முகாம்களினிலும் நண்பர்கள் வீடுகளினிலும் அடைக்கலம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யாழ். நாவற்குழியில் நிரந்தர சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக ஆரம்பமாகியுள்ளன. இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடனும் இராணுவத்தினரின் பாதுகாப்புடனும் இந்தக் குடியேற்றப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த நிரந்தர சிங்களக் குடியிருப்பில் குடியேறியுள்ளவர்களுக்கு காணிகளைச் சொந்தமாக வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். நிரந்தர சிங்களக் குடியேற்றத்துக்காக உரிய அனுமதி பெறப்படாமல் 20 வீடுகளுக்கு சுவர்கள் எழுப்பப்பட்டு கட்டடப் பணிகள் விரைவாக்கப்பட்டுள்ளன. மேலும் 40 வீடுகளுக்கான அத்திபாரங்களை அமைக்க குழிகள் வெட்டப்பட்டுள்ளன. சிமெந்துக் கலவை இயந்திரங்கள் சகிதம் இரவு பகலாக வேலைகள் இடம்பெற்று வருகின்றன என்று அயல

வர்கள் தெரிவித்தனர். நிரந்தரக் கட்டங்களை அமைப்பதற்கான உள்ளுராட்சிச் சபையின் அனுமதி எதுவும் இந்த மக்களால் பெறப்படவில்லை.

சிங்கள மக்கள் நிரந்தரக் கட்டடங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் எதனையும் இதுவரை கோரவில்லை என்று சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.துரைராசா தெரிவித்துள்ளார். பிரதேச சபையின் அனுமதியின்றி இராணுவத்தினரின் துணையுடன் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் - சிங்களக் குடியேற்றம் ஒன்றை யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஏற்படுத்தி குடாநாடு முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள் தொடர்ச்சியைத் துண்டாடுவதற்கான திட்டமிட்ட முயற்சியே இது என்றும் தமிழ் அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்வாறு தமிழ் மக்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன. இவற்றுக்கு நீதிகேட்கும் தருணம் இதுவே! வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவா நோக்கி விரைந்து சென்று தமிழ் மக்களின் உரிமையைக் கேட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கதவைத் தட்டுவோம் வாருங்கள்!

(சூறையாடல்கள் தொடரும்)

நன்றி :ஈழமுரசு  

http://www.tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.