Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தரின் பெயரால்...

Featured Replies

புத்தரின் பெயரால்... - 1956 முதல் நடைபெற்ற தமிழர்கள் மீதான படுகொலைகளின் தொகுப்பு - பாகம் - 01

- பாண்டியன்

இலங்கைத்தீவின் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் வரலாற்றில் தமிழர்மீதான படுகொலைகள் பிரதான பாகமாகும். கோரமான படுகொலைகள் மூலம் தமிழர்களின் அரசியற் கோரிக்கைகளில் அவர்களைப்பின் தள்ளும் தந்திரோபாயம் சிறிலங்கா அரசாங்கத்தினால் இன்றுவரை பின்பற்றப்படுகின்றது. 1956தொடங்கி இன்றும் தொடரும் இப்படுகொலைகளின் தொகுப்பினை சங்கதி இணையத்தளத்தில் ஆவணமாக்க முயற்சிக்கின்றோம்.

இது ஓர் ஆரம்ப அடியெடுப்பாகும். எனவே இங்கே தரப்படும் தகவல்கள் பூரணமானவை இவற்றில் தவறவிடப்பட்டிருக்கக்கூடிய தகவல்கள், தரவுகள் படங்கள் வைத்திருப்பவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு அவற்றைவழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இங்கினியாக்கலை இனப்படுகொலை - 1956.06.05

1940களில் அக்கால கட்டத்தில் விவசாய மந்திரியாக இருந்த டி..எஸ். சேனநாயக்கா அம்பாறை மாவட்த்தில் அரச நிதியுதவியுடன் பல சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நிறுவினார். இதன் பின்னர் அரச உதவியோடு அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா அபிவிருத் தித்திட்டம் திருகோணமலையில் கந்தளாய்க் குடியேற்றத் திட்டம், அல்லைக் குடியேற்றத்திட்டம் போன்ற குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு சிங்கள மக்கள் வெளிமாவட்டங்களிலிருந்து கொண்டு வந்து குடியேற்றப்பட்டார்கள் அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு பொலிஸ் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது. விகாரைகள் கட்டப்பட்டன பௌத்த விகாரைகளில் பெரிய காண்டாமணி பொருத்தப்பட்டு பௌத்த குருமார்களால் அடிக்கப்படும் மணியோசை கேட்கும் தூரம் வரை சிங்கள பௌத்தர்களுக்குரிய பிரதேசமாக உத்தியோகப்பற்றற்ற வகையில் கணிப்பீடு செய்யப்பட்டது. இந்த வகையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலங்களும் சூறையாடப்பட்டன. தீகவாபி இவ்வாறான ஓரு சிங்கள குடியேற்றத்திட்டமாகும்.

1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காலஞ்சென்ற எஸ்.டபிள்யூ. ஆர் டி பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமர் ஆனார். அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான சிங்களம் மட்டும் சட்டத்தை 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் இலங்கை ஜனப்பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பித்தார். இதற்கு எதிராக அக்கால கட்டத்தில் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது எதிர்ப்பைத் தெரிவித்து நேரடி நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்தது. இதன் விளைவாக அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் ஐந்தாம் திகதி கொழும்பில் உள்ள பழைய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு முன்னால் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடாத்தியது. இதில் தமிழ்த் தலைவர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் கலந்து கொண்டார்கள். அக்கால கட்டத்தில் பிரபல்யம் பெற்றிருந்த தமிழ்க் கல்விமான் வணபிதா தனிநாயகம் அடிகளும் இந்தச் சத்தியாக்கிரகத்தில் 1940களில் அக்கால கட்டத்தில் விவசாய மந்திரியாக இருந்த டி..எஸ். சேனநாயக்கா அம்பாறை மாவட்த்தில் அரச நிதியுதவியுடன் பல சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நிறுவினார். இதன் பின்னர் அரச உதவியோடு அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா அபிவிருத் தித்திட்டம் திருகோணமலையில் கந்தளாய்க் குடியேற்றத் திட்டம், அல்லைக் குடியேற்றத்திட்டம் போன்ற குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு சிங்கள மக்கள் வெளிமாவட்டங்களிலிருந்து கொண்டு வந்து குடியேற்றப்பட்டார்கள் அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு பொலிஸ் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது. விகாரைகள் கட்டப்பட்டன பௌத்த விகாரைகளில் பெரிய காண்டாமணி பொருத்தப்பட்டு பௌத்த குருமார்களால் அடிக்கப்படும் மணியோசை கேட்கும் தூரம் வரை சிங்கள பௌத்தர்களுக்குரிய பிரதேசமாக உத்தியோகப்பற்றற்ற வகையில் கணிப்பீடு செய்யப்பட்டது. இந்த வகையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலங்களும் சூறையாடப்பட்டன. தீகவாபி இவ்வாறான ஓரு சிங்கள குடியேற்றத்திட்டமாகும்.

1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காலஞ்சென்ற எஸ்.டபிள்யூ. ஆர் டி பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமர் ஆனார். அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான சிங்களம் மட்டும் சட்டத்தை 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் இலங்கை ஜனப்பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பித்தார். இதற்கு எதிராக அக்கால கட்டத்தில் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது எதிர்ப்பைத் தெரிவித்து நேரடி நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்தது. இதன் விளைவாக அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் ஐந்தாம் திகதி கொழும்பில் உள்ள பழைய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு முன்னால் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடாத்தியது. இதில் தமிழ்த் தலைவர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் கலந்து கொண்டார்கள். அக்கால கட்டத்தில் பிரபல்யம் பெற்றிருந்த தமிழ்க் கல்விமான் வணபிதா தனிநாயகம் அடிகளும் இந்தச் சத்தியாக்கிரகத்தில்

கொண்டார். அன்றைய தினம் சத்தியாக்கிரகிகள் சிங்களக் கடையர்களால் தாக்கப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து கொழும்பில் உள்ள தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள் கொள்ளையடிக்கப்ட்டன. கொள்ளையடிக்கபட்ட பின் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். இதன் எதிரொலியாக இனக்கலவரம் வெடித்தது. இலங்கைத்தீவு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான அச்ச உணர்வு மேலோங்கிக் காணப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் வெளி இடங்களில் இருந்து கொண்டு வந்து குடியேற்றபட்ட சிங்களக் காடையர்கள் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டார்கள். இதில் கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான இங்கினியாகலை என்ற இடத்தில் கரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 150 தமிழ்த் தொழிலாளர்கள் அதே தொழிற்சாலையில் வேலை செய்த சிங்களத் தொழிலாளர்களால் தாக்கபட்டார்கள். பலர் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அரைகுறை உயிருடன் இருந்தவர்களும் இறந்தவர்களும் எரியும் தீயில் தூக்கி வீசப்பட்டார்கள். இந்த இனக்கலவரம் மேலும் விஸ்தரிக்கப்பட்ட போது மட்டு அம்பாறை எல்லைக்கிராமமான துறை நீலாவணையைச் சேர்ந்த தமிழ் வாலிபர்கள் ஆயுதம் ஏந்திச் சிங்களக் காடையர்களையும் சிங்களப் பொலிசாரையும் அந்த இடத்தை விட்டு ஓட ஓட விரட்டியடித்தார்கள் இங்கு நடைபெற்ற இனப்படுகொலையே இங்கினியாக்கல இனப்படுகொலை என வர்ணிக்கப்படுகின்றது. இதுவே இலங்கை வரலாற்றில் முதன் முதலில் பெருந் தொகையாகத் தமிழ் மக்கள் படுகொலை செய்யபட்ட சம்பவமாகும். இப்படுகொலைகளில் ஏறக்குறைய 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக “Emergency 58” என்ற நூல் தகவல் வெளியிட்டுள்ளது.

1958 ஆம் ஆண்டு இனக்கலவரம்

1958 ஆம் ஆண்டு இனக்கலவரம் என்பது திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. அக்கலவரத்திற்குப் பலமான பின் புலம் ஒன்று இருக்கிறது. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ”33 ஆம் இலக்க சிங்களம் மட்டும் சட்டம்” ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக தமிழர் தரப்பினர் 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் 05 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிராக சத்தியக்கிரகப் போராட்டத்தை நடத்தினார்கள். இந்தப் போராட்டம் சிங்களக் காடையர்களால் பலாத்காரமாக வன்முறை பிரயோகிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1957 ஆம் ஆண்டு தமிழர் தரப்பினர் திருமலைக்குப் பாதயாத்திரை சென்று அங்கே ஒரு மாநாடு நடாத்தினார்கள். பண்டாரநாயக்கா அரசிற்கு ஒரு வருட காலக்கெடு கொடுத்து அதற்குள் தமிழ் மொழிக்குச் சம அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்றும் தமிழ்ப் பிரதேச அபிவிருத்திகளுக்காக பிராந்திய சபைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் திருமலை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வேண்டுகோளுக்கு அமைய பண்டாரநாயக்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் தான் அப்போதைய பிரதமர் ளு.று.சு.னு பண்டாரநாயக்கா தந்தை செல்வநாயகத்தோடு ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தார். இதன் விளைவாக 26.07.1957 அன்று தந்தை செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியோடு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஒரு உடன்படிக்கை செய்தார். இதுவே புகழ் பெற்ற 1957 பண்டா - செல்வா உடன்படிக்கையாகும்.

இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கண்டிக்குப் பாதயாத்திரை போனார். அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியானது "முதல் காலடி" (First Step) என்ற பிரசுரத்தையும் வெளியிட்டு இனவாதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஐக்கியதேசியக் கட்சியின் பிரச்சாரப் பத்திரிகையான "சியரட்ட" (Siyaratta) மிக மோசமான இனவாதப் பிரச்சாரத்தைத் தமிழருக்கு எதிராக மேற்கொண்டது. கண்டிக்குப் பாதயாத்திரை போகப் புறப்பட்ட ஜே.ஆர்.இன் பாத யாத்திரை இம்புள்கொட என்ற இடத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எஸ்.டபிள்யூ.ஆர் டி.பண்டாரநாயக்கா தலைமையில் வந்த இன்னொரு குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் பண்டாரநாயக்காவைப் பதவிக்குக் கொண்டு வந்த பிக்கு பெரமுனவைச் சேர்ந்த பௌத்தபிக்குமாரும் ஜாதிக விமுக்தி பெரமுனவைச் சேர்ந்த வெலிமடை எம்.பி கே.எம்.பி இராஜரட்னாவும் கொழும்பு ஆனந்தாக் கல்லூரி அதிபர் மெக்தானந்த போன்றவர்களும் சிங்கள தேசிய முன்னணியைச் சேர்ந்த ஆர்.ஜி. சேனநாயக்கா போன்றவர்களும் பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறியுமாறு பண்டாரநாயக்காவுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். இதனால் பிரதமர் பண்டாரநாயக்காவின் கொழும்பு 07 றொஸ்மீட் பிளேசில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்னால் பண்டா செல்வா உடன்படிக்கையைக் கிழித்தெறியுமாறு கோஷமெழுப்பினார்கள். அவர்களது கோஷத்திற்கும் கோரிக்கைகளுக்கும் அடிபணிந்த பண்டாரநாயக்கா தந்தை செல்வநாயகத்துடன் செய்து கொண்ட பண்டா-செல்வா உடன்படிக்கையை கிழித்தெறிந்தார். இதனைத் தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு மே மாதம் 24,25,26 ஆகிய திகதிகளில் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. வவுனியா மாநாட்டிற்கு வருகை தந்து கொண்டிருந்த மட்டு-அம்பாறையைச் சேர்ந்த தமிழரசுக் கட்சித் தொண்டர்கள் பொலநறுவை மாவட்டத்தில் ஹிங்குராகொட புகையிரத நிலையத்தில் வைத்து அவர்கள் பயணம் செய்த புகையிரதம் வழிமறிக்கப்பட்டுச் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டார்கள்.

இதே காலப்பகுதியில் நுவரெலியா மாநகர சபையின் மேயர் செனிவிரட்ண மட்டக்களப்புக்குச் சென்றுகொண்டிருந்த போது மட்டக்களப்பில் வைத்து தனிப்பட்ட காரணங்களுக்காகத் தாக்கப்பட்டார். பிரதமராக இருந்த பண்டாரநாயக்கா இதைப் பெரிதுபடுத்தி இலங்கை வானொலியில் பிரச்சாரம் செய்தார். இதைத் தொடர்ந்து தீவு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் வெடித்தது. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.