Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நாம் எதையோ தொலைத்துவிட்டோம் ஆனால் எதனை என்பதுதான் தெரியவில்லை"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Maveetar%20-%20Illam.jpg

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் போரில் மட்டும் தோல்வி கொள்ளவில்லை. இவர்கள் தோற்றுவித்த புலிகள் அமைப்பும் முற்றாக அழிக்கப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் உடல் உள ரீதியாக பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட்டனர். இவர்கள் இன்றும் போரின் வடுக்களைச் சுமந்தவாறு வாழ்கின்றனர். 

இவ்வாறு The New York Times ஊடகத்தில் AATISH TASEER எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

A%20mass%20cemetery%20of%20Tamil%20Tiger

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே வாரத்தில், சிறிலங்காவின் வடக்கில் தனித் தாய்நாடு கோரிப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் தமது போராட்டமானது தற்போது 'கசப்பான முடிவை எட்டியுள்ளதாக' அறிவித்திருந்தார்கள். புலிகள் அமைப்பானது தமிழ் மக்கள் சார்பாக கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் போராடி பின்னர் போரில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டது. 

இன்றும்கூட, சிறிலங்காவின் வடக்கில் வாழும் தமிழ் மக்கள் பல்வேறு அழிவுகளைச் சந்திக்கின்றனர். இவர்களது வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் பயிரிடப்படாது காணப்படுகின்றன. தலைகள் துண்டிக்கப்பட்ட பனைமரங்கள் இங்கு காணப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக யுத்தம் இடம்பெற்ற தமிழர்களின் கிராமங்கள் செறிவான எறிகணைகளால் அழிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இங்கு யுத்தத்தின் வடுக்கள் இன்னமும் காணப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான துயிலுமில்லங்கள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றின் அழிவுகளைத் தற்போதும் காணலாம். 

கடந்த மார்ச்சில் நான் முதன்முதலாக சிறிலங்காவின் வடபகுதிக்குச் சென்றபோது, இராணுவ ரீதியாக எவ்வாறான இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டேன். ஆனால் தாம் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்பது தொடர்பில் தமிழ் மக்கள் உளரீதியாக மிக ஆழமான தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். உண்மையில் புலிகள் அமைப்பு போரில் தோற்கடிக்கப்பட்டமையானது தமிழ் மக்களின் மனஉறுதியை பலவீனப்படுத்தியுள்ளது. 

சிறிலங்காவின் வடக்கில் போர் இடம்பெற்ற, காடுகளால் சூழப்பட்டுள்ள கடல்நீரேரிப் பகுதியில் புலிகளின் தலைவர் பயன்படுத்திய பதுங்குகுழி ஒன்று காணப்படுகிறது. இப்பதுங்குகுழியானது நிலத்தின் கீழ் மூன்று மாடிகளைக் கொண்டுள்ளது. இங்கு சிறுநீரகத்தின் மணமும் வெளவால்களின் எச்சங்களால் எழும் துர்நாற்றத்தையும் உணரமுடியும். இச்சதுப்பு நிலப்பகுதியில் புலிகள் அமைப்பு எவ்வாறு அழிக்கப்பட்டிருக்கும் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியும். 

தமிழ் மக்களின் சுயபுரிதலின் நம்பிக்கை ஒளியாக நீண்ட காலமாக புலிகள் அமைப்பு செயற்பட்டுள்ளது. ஆனால் இந்த அமைப்பானது மிகத் தவறான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் செயற்பட்ட புலிகள் அமைப்பானது தற்கொலைக் குண்டுத் தாக்குதலைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டது. இது சாதாரண போர் உத்தியல்ல. இது ஒருவர் தனது எதிரிகளை அழிப்பதற்காக தன்னைத் தானே அழித்து மேற்கொள்ளும் ஒருவித தாக்குதல் சம்பவமாகும். இது உண்மையில் ஒரு குறியீடாக காணப்படுகிறது. இந்த முறைமையை திரு.பிரபாகரன் மிக மோசமாகப் பயன்படுத்தியுள்ளார். பிரபகாரன் நவீன காலத்தின் Coriolanus [ரோமனின் துணிச்சலுள்ள யுத்த வீரர்] என விபரிக்கப்படுகிறார். அதாவது தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறையின் மூலம் தீர்வொன்றை முன்வைப்பதற்கு அவர் விருப்பங் காட்டவில்லை. இவர் விட்டுக்கொடுப்புக்கள் எதையும் மேற்கொள்ளாது, தமிழர்களை முடிவெதுவும் எட்டப்படாத யுத்தப் பயணத்தில் கூட்டிச்சென்றுள்ளார். இவரின் கைக்கொண்ட போர் உத்திகள் அனைத்தும் ஏமாற்றுத்தனமானவையாக காணப்படுகின்றன. 

நான் யாழ்ப்பாணத்தில் நின்றவேளையில் ஒருநாள், 1990ல் The Broken Palmyra என்கின்ற நூலை வெளியிட்ட எழுத்தாளர் ஒருவரின் சகோதரியின் வீட்டில் இரவுணவுக்காகச் சென்றிருந்தேன். இந்த நூலானது புலிகளுக்கு எதிரான தர்க்க ரீதியான கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்டிருந்தது. இதில் விடுதலைப் புலிகளினதும் சிறிலங்கா அரசாங்கத்தினதும் மீறல் செயற்பாடுகளை எவ்வித பாரபட்சமுமின்றி தர்க்க ரீதியாக முன்வைப்பதை மட்டும் நோக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் இந்த நூலானது திரு.பிரபாகரனைப் பொறுத்தளவில் தேசத் துரோகமாகக் காணப்பட்டது. இதனால் இந்த நூலை எழுதியவர் இந்த நூல் அச்சிடுவதற்கு முன்னர் புலிகள் அமைப்பால் கொல்லப்பட்டார். இந்தக் குடும்பத்தவர்கள் புலிகள் அமைப்பால் தமது சகோதரிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை மறக்கமுடியாது வாழ்கின்றனர். 

இதேபோன்று யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்த முஸ்லீம் பெண்மணி ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்த முஸ்லீம் குடும்பங்கள் 1990ல் எவ்வாறான துன்பத்தை அனுபவித்தனர் எனக் கூறினார். அதாவது 1990ன் காலை வேளை ஒன்றின் போது, பாடசாலை ஒன்றின் முன்னால் கூடுமாறு புலிகளால் உத்தரவிடப்பட்ட முஸ்லீம் குடும்பத்தவர்கள் இரண்டு மணிநேரத்திற்குள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டதாக கூறினார். தமது பெறுமதி மிக்க பொருட்கள், காணி உறுதிகள் என எதுவும் எடுக்கக் கூடாது எனத் தம்மிடம் புலிகள் கட்டளையிட்டதாகவும் குறித்த முஸ்லீம் பெண் கூறுகிறார். தாம் ஏன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற வேண்டும் எனப் புலிகளிடம் கேட்ட போது, 'நீங்கள் கொல்லப்படாமல் இருப்பது நல்ல வாய்ப்பு என நினைத்துக் கொண்டு உடனடியாக வெளியேறவும்' எனக் கட்டளையிட்டதாக அந்தப் பெண்மணி மேலும் கூறினார். இதன் பின்னர் தாம் லொறிகளில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாண மாவட்டத்தை விட்டு துரத்தப்பட்டதாக அவர் கூறினார். இந்த முஸ்லீம் பெண்மணி போன்ற ஏனைய முஸ்லீம்களும் 2009ல் யுத்தம் முடிவடைந்த பின்னரே தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள தமது சொந்த வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 

வீடொன்றில் பணிப்பெண்ணாக உள்ள நடுத்தர வயதுடைய பெண்ணொருவர் பல வடுக்களுடன் வாழ்கிறார். அதாவது இவரது மகள் இவரது மாமனாரான தச்சுத் தொழில் புரியும் ஒருவருடன் கிளிநொச்சியில் வேலைக்குச் சென்றிருந்தார். கிளிநொச்சியில் யுத்தம் தீவிரமடைந்த போது, திரு.பிரபாகரனின் கட்டுப்பாட்டின் கீழிருந்த 300,000 வரையான தமிழ் மக்கள் முன்னேறி வந்த சிறிலங்கா இராணுவத்தை எதிர்கொள்வதற்கு புலிகள் அமைப்பால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டனர். இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் அகப்பட்டுக் கொண்ட இந்தப் பெண்ணின் மகன் போரின் போது படுகொலை செய்யப்பட்டதாக தன்னிடம் தனது மாமா தெரிவித்த போது தன்னால் அதனை நம்பமுடியாதிருந்ததாக வேதனையுடன் கூறுகிறார். 

வன்னியில் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த போது, பிரபாகரன் பெரும் தவறிழைத்திருந்தார். இவர் தனது சொந்த முக்கியத்துவத்தைப் பற்றி அல்லது மேற்குலக நாடுகளின் கண்ணியம் தொடர்பாக மிகைமதிப்பீடு செய்தார் எனக் கூறலாம். மேற்குலகத்தைப் பொறுத்த வரையில், போர் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பெரும் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் போரில் மட்டும் தோல்வி கொள்ளவில்லை. இவர்கள் தோற்றுவித்த புலிகள் அமைப்பும் முற்றாக அழிக்கப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் உடல் உள ரீதியாக பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட்டனர். இவர்கள் இன்றும் போரின் வடுக்களைச் சுமந்தவாறு வாழ்கின்றனர். இன்று சிறிலங்காவின் வடக்கானது சிங்கள பேரினவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ளது. இதனால் போர் வெற்றி மமதையில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் புதிய வீதிகளை அமைத்து வருவதுடன், தமிழ் மக்களுக்குச் சொந்தமான 6000 ஏக்கர் நிலப்பரப்புக்களை கையகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தெற்கிலிருந்து செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு போர் வெற்றி கொள்ளப்பட்ட நினைவிடங்களை சிறிலங்கா இராணுவத்தினர் காண்பிக்கின்றனர். 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்கள் வாழும் வடக்கில் பல்வேறு புதிய கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்த போதிலும் கூட, தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக தமிழ் மக்கள் உணர்கின்றனர். இவர்களில் பிழை எதுவுமில்லை. தற்போது தமிழ் மக்கள் போரின் பாதிப்புக்களுடன் வாழ்வதால் அவர்களைப் பொறுத்தளவில் எதனையும் சரியென உணரமுடியாது. தமிழ் மக்கள் தற்போது தமக்கென்றொரு தனித்துவமான வரலாற்றைக் கொண்டிருக்கவில்லை எனக் கருதுகிறார்கள். இவர்கள் பல பத்தாண்டுகளாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களாவர். இதனால் இவர்கள் தமது வாழ்வைத் தாம் தொலைத்துவிட்டதாக உணர்கிறார்கள். 

"நாங்கள் எதையோ இழந்துவிட்டோம். ஆனால் எதை நாம் இழந்துவிட்டோம் என்பது எமக்குத் தெரியாது. யுத்தம் தற்போது முடிவடைந்து விட்டது. ஆனால் தற்போது தமிழ் மக்களாகிய நாம் உளவியல் போருக்கு முகங்கொடுக்கிறோம். போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் எம்மைப் பார்ப்பவர்கள் நீங்கள் தமிழர்கள் நீங்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகத்துடன் நோக்கினர். ஆனால் தற்போது அவர்கள் நாம் எதுவுமற்றவர்கள் என்ற கண்ணோடு எம்மைப் பார்க்கிறார்கள்" என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்க் கலைஞரான ரி.சனாதனன் என்னிடம் கூறினார்.

http://www.puthinappalakai.com/view.php?20130513108255

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.