Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்துலக அளவில் மனித உரிமை பாதுகாப்புக்கு தலைமைதாங்க இந்தியாவால் முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக அளவில் மனித உரிமை பாதுகாப்புக்கு தலைமைதாங்க இந்தியாவால் முடியுமா?
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 07:59 GMT ] [ நித்தியபாரதி ]


இந்தியாவானது கடந்த இரு ஆண்டுகளாக பாதுகாப்புச் சபையில் நடந்து கொள்ளும் விதமானது இதன் வெளியுறவுக் கொள்கை வட்டாரம் தொடர்பில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அனைத்துலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கடும்போக்கான விவகாரங்களிலிருந்து இந்தியா விலகி நடந்துள்ளது.

இவ்வாறு The Morung Express எனும் ஊடகத்தில் Meenakshi Ganguly எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

இந்தியாவானது அதிகாரம் மிக்க நாடாக உள்ளதால் இது உலக விவகாரங்களில் தனது பங்களிப்பை வழங்குவதும் அதிகரித்துள்ளதாக பெரும்பாலான இந்தியர்கள் நம்புகின்றனர்.

பல்வேறு அனைத்துலக அமைப்புக்களின் ஊடாக BRICS - [an association of five major emerging national economies: Brazil, Russia, India, China and South Africa], CHOGM - [The Commonwealth Heads of Government Meeting], ASEAN -[The Association of Southeast Asian Nations], IBSA - (India, Brazil, South Africa), SAARC - [The South Asian Association for Regional Cooperation], NAM - [The Non-Aligned Movement], IOCARC - [The Indian Ocean Rim-Association for Regional Cooperation] ஏனைய உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா தானும் உலக விவகாரங்களில் தலையீடு செய்து அதன்மூலம் பூகோளத்தின் அதிகாரம் மிக்க நாடாக விளங்க வேண்டும் என நினைக்கிறது.

அதிகரித்து வரும் தொழிலாளர் படை மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுவரும் இந்தியாவானது தான் உலக விவகாரங்களில் தலையீடு செய்து குரல் கொடுக்க வேண்டும் என நம்புகிறது. இதனை எவரும் நிராகரிக்கவில்லை. ஆனால், இந்தியாவானது மனித அழிவுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, இதனை தனது முக்கிய வெளியுறவுக் கொள்கையாக வகுக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியாவானது நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியுடையது என இந்திய வெளியுறவுக் கொள்கை நம்புகிறது. உலக நாட்டுத் தலைவர்கள் தமது நாடுகளின் வர்த்தக சார் வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்கான ஒரு தளமாக இந்தியாவைக் கருதுகிறார்கள். இதனால் இவர்கள் இந்திய மத்திய அரசாங்கத்துடன் எப்போதும் தொடர்புகளைப் பேணிவருகின்றனர். இந்நிலையில் உலக வல்லரசுத் தலைவர்கள், ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்கப்படுவதற்கான தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், இந்தியாவுக்கான அனைத்துலக தலைமைத்துவப் பங்களிப்பானது தற்போதும் தெளிவற்ற நிலையில் இருப்பதால் இந்தியா இந்த விடயத்தில் எதனைச் செய்யவேண்டும் எனக் கருதும்? இந்தியாவானது இதுநாள்வரையில் தனது உள்நாட்டு அரசாங்கத் திணைக்களங்களைப் பயன்படுத்தி அனைத்துலக நாடுகளில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. பதிலாக, ஆசியாவின் வல்லரசு நாடான இந்தியாவானது மனித உரிமை மீறல்களுக்கு துணைபோயுள்ளது. இந்தியாவானது சில நாடுகள் மீது முன்வைக்கப்பட்ட மனித உரிமைத் தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்தது என்பது மிக அரிதாகும்.

இந்தியாவானது கடந்த இரு ஆண்டுகளாக பாதுகாப்புச் சபையில் நடந்து கொள்ளும் விதமானது இதன் வெளியுறவுக் கொள்கை வட்டாரம் தொடர்பில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அனைத்துலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கடும்போக்கான விவகாரங்களிலிருந்து இந்தியா விலகி நடந்துள்ளது. பொதுமக்கள் பெருமளவில் அழிக்கப்பட்ட வேளையிலும் கூட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கு உதவவில்லை.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ஜனநாயகத்தில் தலையிட்டு இந்தியா அவற்றின் ஜனநாயக மற்றும் உரிமைகளை அதிகரிக்கின்ற அதிகாரம் மிக்க பங்களிப்பை வழங்கவேண்டிய தேவையுள்ளது. இதனால் இந்தியாவானது, மிகவும் அடக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட மக்களுக்காக பொதுவான ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தனது செல்வாக்கை அதிகரிக்க வேண்டும்.

நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும் என இந்தியா விரும்பும் அதேவேளையில், இது மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்க வேண்டும். மாறாக அரசாங்கங்களின் நடவடிக்கைகளுக்காக குரல் கொடுக்கக் கூடாது. இருப்பினும் இந்த விடயங்களில் இந்தியாவானது எந்தவொரு முக்கியமான நகர்வுகளையும் முன்னெடுக்கவில்லை.

இந்தியாவானது வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார சக்தியாகவும், அனைத்துலக உதவி வழங்கும் நாடாகவும் இருப்பினும் கூட, இது தான் செய்ய விரும்பாத செயலைச் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளது தெளிவாகிறது. கடுமையான செயல் எனத் தான் கருதும் மேற்குலகால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளிலிருந்து இந்தியா விலகி நடக்கிறது. சீனா தொடர்பான தனது மூலோபாய நிகழ்ச்சித் திட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனத் தான் கருதும் செயற்பாடுகளை மேற்கொள்வதில் இந்தியா தயக்கம் காண்பிக்கிறது.

இந்தியாவின் அனைத்துலக செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் ஏனைய நாடுகளின் 'உள்ளக விவகாரங்களில்' தலையிடாக் கொள்கை நிகழ்ச்சித் திட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட சிலவற்றை இந்தியா தத்தெடுத்துக் கொள்வதாக தோன்றுகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது இருதரப்பு ஈடுபாடுகளையும், 'அமைதியான இராஜதந்திரம்' என்கின்ற கருத்தையும் முதன்மைப்படுத்துகிறது.

சிறிலங்கா அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பில் அனைத்துலக சமூகமானது நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், சிறிய மற்றும் வலுக்குன்றிய நாடுகள் மீதே அனைத்துலக சமூகமானது நடவடிக்கைகள் எடுப்பதாகவும் வல்லுனர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். தம்மை அடிமைப்படுத்திய கொலனித்துவ முதலாளிகள் தமது பொருளாதாரத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், தமது சொந்த நிதிசார் நலன்களை அடைவதற்காக சமூகப் பிரிவுகளை உருவாக்கியதாகவும் நம்புகின்ற அபிவிருத்தியடைந்த நாடுகளை ஆட்சி செய்யும் அரசாங்கங்களின் வெற்றியாளனாக இந்தியா தன்னைக் கருதுகிறது. கொலனித்துவ முதலாளிகள் எனக் கூறப்படும் நாடுகள் தாம் பல பத்தாண்டுகளாக மீறிய நியமங்களை தம்மீது சுமத்துவதாக அபிவிருத்தியடைந்த நாடுகள் கருதுகின்றன.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பூகோள பரஸ்பர, பன்முக இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பாரம்பரியமாக ஐரோப்பியர்கள் மற்றும் வட அமெரிக்கர்கள் தலைமை வகிக்கின்றனர். வெளிநாடுகளில் முதலீடு செய்தல், உதவி வழங்குதல், வர்த்தக மற்றும் நிதிச் சேவைகளை வழங்குதல், தமது இராணுவப் பலத்தைப் பயன்படுத்துதல், கலாசார மற்றும் வரலாற்று ரீதியான தொடர்புகளைப் பேணுதல் மூலம் ஐரோப்பிய நாடுகளும் வடஅமெரிக்க நாடுகளும் பொருளாதாரத்தைப் பலப்படுத்துகின்றன.

தற்போது இந்தியாவானது சாத்தியமான தலைமைத்துவப் பங்களிப்பை மேற்கொள்வதற்கான வளங்களைக் கொண்டுள்ளது. இது தலையீட்டாளர் அணுகுமுறையுடன் உடன்படாதிருப்பதால் தற்போதும் மாற்றுவழிகளைக் கையாள வேண்டியுள்ளது. குறற்மிழைக்கும் அரசாங்கங்கள் மீது அழுத்தங்களைக் கொடுத்து நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை தற்போது மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியா இதற்கான தலைமைத்துவ மற்றும் ஆதரவு முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.

சிறிலங்கா விவகாரம் தொடர்பில் அண்மையில் இந்தியா தனது கருத்தை முன்வைக்க விருப்பங் கொண்டுள்ளதை வெளிப்படுத்தியதானது, இந்தியா தான் அனைத்துலக விவகாரத்;தில் தலைமை ஏற்கத் தயாராக இருப்பதற்கான நம்பிக்கை தரும் ஒரு சமிக்கையாக உள்ளது.

பல ஆண்டுகால 'அமைதி ஜனநாயகத்தின்' பின்னர் இந்தியா தற்போது சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புக்களாலும் போரின் போது மேற்கொண்ட அநீதிகள், குற்றங்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்துள்ளது. சிறிலங்கா தன்னால் இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2012 மற்றும் 2013 காலப்பகுதியில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை இந்தியா ஆதரித்துள்ளது.

சிறிலங்காவால் இது தொடர்பில் போதியளவு முன்னேற்றம் காண்பிக்கப்படவில்லை எனவும், சிறிலங்காவால் இழைக்கப்பட்ட மனிதாபிமான மீறல்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நம்பகமான, அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தூதரால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2013ல் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டியேற்பட்டதற்கான காரணம் என்பதை விளக்கும் போதே இந்தியத் தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவானது தனது வெளியுறவுக் கொள்கை எதிர்பார்ப்புக்களில் சில முக்கிய சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவின் இராஜதந்திரமானது குறைபாடுடையதாக காணப்படுகிறது. அதாவது வெளியுறவுக் கொள்கை உருவாக்கத்தில் இந்திய சிவில் சமூகமத்தின் பங்களிப்பு மிக அரிதாகும். மிகச் சில கொள்கை வகுப்பு அமைப்புக்களும், பல்கலைக்கழகங்களுமே இவ்வாறான விவகாரங்களில் சிறிதளவு செல்வாக்குச் செலுத்துகின்றன. அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளக் கூடிய வெளியுறவுக் கொள்கையை இந்தியா உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதுவரை காலமும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது பெருமளவில் மூலோபாய நலன்களை முதன்மைப்படுத்தி வரையப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் மூன்று யுத்தங்களையும், சீனாவுடன் ஒரு யுத்தத்தையும் இந்தியா மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் செயற்படும் ஆயுதக் குழுக்களால் இந்தியாவுடன் பாகிஸ்தான் தொடர்ந்தும் பகைமை பாராட்டி வருகிறது. ஆனால் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனா அகலக்கால் பரப்பியுள்ளது.

அதாவது பாகிஸ்தான், சிறிலங்கா மற்றும் பர்மா போன்ற நாடுகளில் சீனாவானது தனது முதலீட்டில் துறைமுகங்களை அமைத்து வருகிறது. சீனாவானது உண்மையில் மனித உரிமைகளைப் பாதுகாக்க முன்வருவதில்லை. ஏனெனில் இதன் வெளிநாட்டு வர்த்தக, முதலீடுகளைப் பாதுகாப்பதற்காக சீனாவானது மனித உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. பர்மாவில் ஆங்சாங் சூயி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் இராணுவ ஆட்சியுடன் தொடர்பைப் பேணுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற இந்தியாவின் தீர்மானத்தைப் பயன்படுத்தி சீனா, பர்மா விடயத்தில் தந்திரோபாயமாக செயற்படுகிறது. வெளியுறவு விவகாரங்களில் தான் முதன்மையான அணுகுமுறையைக் கைக்கொண்டால் சீனா இதனைத் தனது நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் என இந்தியா நம்புகிறது.

எதுஎவ்வாறிருப்பினும், ஜனநாயக நாடான இந்தியா, அடக்குமுறை மற்றும் சர்வதிகாரத்தைக் கைக்கொள்ளும் நாடுகளுக்கு வெளிப்படையாக உதவிகளைப் புரிவதால் ஆபத்தைச் சந்திக்கிறது. இந்தியாவானது அனைத்துலக சமூகத்தில் தன்னை முதன்மைப்படுத்துவதற்கான பல வாய்ப்புக்களைக் கொண்டிருந்தது. சிரியாவில், இந்தியா, பிறேசில் மற்றும் தென்னாபிரிக்கா – IBSA ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து 2011ல் பசார் அல் அசாட் அரசாங்கத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு கோரி சந்திப்பை மேற்கொண்டன. இதில் சில திருத்தங்களை மேற்கொண்ட அசாட் அரசாங்கம் தனது நாட்டில் மனித உரிமை விவகாரங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதனைத் தொடர்ந்தும் கண்காணித்து சிரியா மீது அழுத்தம் கொடுக்க இந்த மூன்று நாடுகளின் கூட்டு அணியானது தவறிவிட்டது. இதனைத் தொடர்ந்து இரு ஆண்டுகளின் பின்னர், சிரியாவில் 80,000 மக்கள் கொல்லப்பட்டனர். சிரியாவில் அமைதியை ஏற்படுத்தி, மனிதாபிமான உதவிகளை வழங்கி, பொறுப்பளிப்;பதற்கான அழுத்தத்தை மேற்கொள்வதற்கான அனைத்துலக முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களை முதன்மைப்படுத்துவதில் இந்தியா தனிப்பட்ட இராஜதந்திரத்தைத் தெரிவு செய்தது. சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற போது, பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகள் எதனையும் இந்தியா முன்னெடுக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கப் படைகளின் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இறுதிக்கட்ட யுத்தத்தில் 40,000 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காப் போரில் இந்தியா மிகப் பலமாகத் தலையீட்டைக் காண்பித்திருந்தால் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும்.

1959ல், இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்த போது தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தது. இதனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 100,000 வரையான திபெத்திய அகதிகளுக்கு இந்தியா தஞ்சம் கொடுத்தது. இதேபோன்று தென்னாபிரிக்காவில் நிலவிய நிறவெறி ஆட்சியை எதிர்த்து இந்தியா குரல்கொடுத்தது. 1990களில் இந்தியா தனது அயல்நாடுகளான பங்களாதேஸ் மற்றும் நேபாளத்தில் ஜனநாயகத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தது. ஆங்சாங் சூயி வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட போது, இந்தியாவானது பர்மாவில் இடம்பெற்ற இராணுவ ஆட்சியை எதிர்த்து மிகப் பலமாக விமர்சித்தது.

இன்று, தமது சொந்த உரிமைக்காகவும், கௌரவத்திற்காகவும் போராடும் அடக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதற்கான வாய்ப்பை இந்தியா தற்போது கொண்டுள்ளது. இது தனது சொந்த நலனை ஒருபுறம் தள்ளிவிட்டு அடக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். உலக நாடுகளில் பாதிக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதில் இந்தியா ஒருபோதும் தயக்கம் காண்பிக்கக் கூடாது. இந்த மக்களின் துன்பங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்தியா பணியாற்ற வேண்டும். ஜனநாயக நாடான இந்தியா, சீனாவைப் போலல்லாது, மனித உரிமைகளை மதித்து பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயற்பட வேண்டும்.

http://www.puthinappalakai.com/view.php?20130628108566

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.