Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நடந்தது என்ன? - கோர விபத்தும் அதன் பின்னணியும்!

Featured Replies

25 ஆண்டுகளிற்கு முன்னர் மிகவும் கோரமான தொடருந்து விபத்து ஒன்று 1988ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி Gare de Lyon தொடருந்து நிலையத்தில் 56 பேரின் உயிழப்புகளுடன் தன்னைப் பதிவு செய்து கொண்டது.

21072013%20001.jpg

தொடர்ந்து சிறு சிறு  காயங்களுடனும் இழப்புக்களுடனும் பிரான்சின் தொடருந்துச் சேவை தன்னைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டே இருந்தது. ஆனால் கடந்த 12ம் திகதி ஒரு விபத்து பிரான்சையே உலுக்கி எடுத்தது. ஆறு உயிர்களைப் பலி கொண்ட இந்த விபத்து பலரைப் படுகாயங்களுக்கு உள்ளாக்கியது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 17மணி 14 நிமிடத்திற்கு Brétigny-sur-Orge (Essonne) தொடருந்து நிலையத்தை நெருங்கிய பரிசிலிருந்து லிமோஜ் நோக்கிச் சென்று கொண்டிருந்த நகரங்களுக்கிடையிலான தொடருந்து இலக்கம் 3657 கொடூரமான விபத்திற்கு உள்ளானது. இத் தொடருந்தின் ஏழு பெட்டிகள் விபத்திற்கு உள்ளாகின. அதில் நான்கு பலத்த சேதத்திற்குள்ளாகின. ஒரு பெட்டி முற்றாகச் சிதைந்தது. விபத்திற்குள்ளான பெட்டிகள் பிரெத்தினி தொடருந்து நிலையத்தின் தரிப்பிடத்தினை உடைத்துக் கொண்டு தடம்புரண்டது.

உடனடியாக அபாய சமிக்ஞையையும் அபாய அறிவிப்பையும் தொடருந்து சாரதி மேற்கொண்டமையால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த தொடருந்துகள் நிறுத்தப்பட்டு பாரிய அழிவு தடுக்கப்பட்டது.  உடனடியாக சிவப்பு நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. உடனடியாக விரைந்த அவசர முதலுதவிப் படையினரும் தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் இடம்பெற்றபோது இத் தொடருந்தில் 370 பயணிகள் பயணம் செய்திருந்தனர்.

17 மணி 57 நிமிடத்திறகுத் தான் விபத்து நடந்த இடத்திற்குச் செல்வதாகத் தனது டிவிட்டரில் போக்குவரத்து அமைச்சர் பிரெட்ரிக் குவியே அறிவித்தார். அதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் மனவல் வால்ஸ் அவ்விடத்திற்கு விரைந்தார். எசொன் பிரந்தியம் எவ்ரி நகர முதல்வராக இருந்த மனுவல் வால்ஸ் விபத்தின் சேதமும் உயிரிழப்புக்களும் அதிகமாக இருக்கலாம் எனவும் அவசர சேவைகளின் உடனடிச் சேவை இழப்புக்களைக் குறைக்கலாம் எனவும் தெரிவித்தார்.

விபத்து நடந்த சமயம் அவ்விடத்திற்கு ஒரு RER C தொடருந்தும் வந்துள்ளது. அதிலிருந்து விபத்தைப் பார்த்த 19 வயதுடைய வல் து மார்னில் வசிக்கும் El Mehdi Bazgua வழங்கிய சாட்சியம் விபத்தின் கொடூரத்தை விபரித்தது. “நான் வெளியில் ஒரு பாரிய சத்தத்தைக் கேட்டேன். பாரிய புழுதி மண்டலம் கிளம்பியது. கற்களெல்லாம் கிளம்பிப் பறந்தன. புழுதி அடங்கியபோது சிதறிக்கிடந்த தொடருந்து பொதிகளை ஏற்றிவரும் தொடருந்தோ என அந்தப் புழுதி மண்டலம் என்னை எண்ண வைத்தது. அந்த அதிர்ச்சியின் பின்னர் எல்லோரும் எமது தொடருந்தை விட்டு இறங்கினோம்.

அங்கே பாதி மயக்க நிலையில் தலை பிளந்தபடி ஒருவர் தள்ளாடிச் செல்வதைப் பார்த்தேன். பலரும் வெட்டுக் காயங்களால் அவதியுற்றனர். எல்லோரும் எல்லாத் திக்கிலும் ஓடத் தொடங்கினார்கள். பலர் உள்ளே சிக்கிக் கிடந்தார்கள். ஒரு SNCF அதிகாரி, ஒரு மனிதன் ரெண்டு துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடப்பதாகக் கூறினார். RER Cயில் வந்த பலர் பயத்தினால் அழத் தொடங்கினார்கள். நான் என் வாழ்நாளில் அடையாத அதிர்ச்சியை அடைந்தேன். பலர் அக்காட்சிகளைப் படம் பிடிக்கவும் காணொளியில் பதிவு செய்யவும் தொடங்கினார்கள். காயப்பட்டுக் கிடந்தவர்கள் அவர்களை நோக்கிக் கோபமடைந்தார்கள். இறுதியாக எம்மைக் காவற்துறையினரின் உதவியோடு வெளியே கொண்டு சென்றனர்.” என்று அந்த விபத்தினை அவர் விபரித்திருந்தார்.

உடனடியாகவே பரிசிலுள்ள அரசினர் வைத்தியசாலைகள் அனைத்தும் தயார் நிலைக்கக் கொண்டுவரப்பட்டு அதிகளவான அவசரசிகிச்சைகளை மேற்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. காயங்களின் தீவிரத்தன்மை குறித்து அதற்குரிய வைத்தியசாலைகளில் சிகிச்சை செய்வதற்காக வெண்மைத் திட்டம் என அழைக்கப்படும் அவசர நிலை வைத்தியசாலைகளில் பிரகடனப்படுத்தப்பட்டது.

கிட்டத்தட்ட 300 தீயணைப்புப் படைவீரர்களும் 20 மருத்துவக் குழுக்களும் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினார்கள். அவசர சிகிச்சைக்குக் கொண்டு செல்வதற்கான மக்கள் பாதுகாப்பு மற்றும் அவசர முதலுதவிப் படையினரின் உலங்குவானு£ர்திகளும் தொடருந்து நிலையம் அருகே தரையிறக்கப்பட்டது. இரவு 9 மணியளவில் 6 பேரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. அப்பொழுதும் தொடருந்தின் சிதைந்த பகுதிக்குள் பலர் சிக்கிக் கிடந்தனர். படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளிற்கு அனுப்பப்பட்டனர்.

21 மணியளவில் அப்பொழுது தான் தனது ருமேனிய அதிகாரபூர்வப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்திருந்தார். விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கும் அவர்கள் குடும்பத்தினர்க்கும் ஆறுதல் கூறிய ஜனாதிபதி, அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய தருணம் இது எனக் கூறினார். 23 மணியளவில் பிரதமர் ஜோன் மார்க் ஜரோல் விபத்து இடத்திற்கு வந்தார்.   

மீட்புப்பணிகள் தொடர்ந்தன. இருந்தும் சிதைந்து கிடந்த தொடருந்தினுள் செல்வதும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதும் சிரமமாகவே இருந்தது. பிரெத்தினி நகரமுதல்வர் அவசரமாக ஒழுங்குகளைச் செய்து பயணிகள் தங்குவதற்கான வசதிகளைச் செய்து கொடுத்தார். காயப்பட்டு மீட்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவசரமாகத் தொடர்ந்து பயணிக்க வேண்டியவர்களிற்குப் பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 180 பேரை மாநகரசபை பொறுப்பேற்றுக்கொண்டது.

இதற்குள் சில இளைஞர்கள் உதவி செய்வது போல் பாசாங்கு செய்து களவுகளில் ஈடுபட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாசகார இளைஞர்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்த அவசர உதவிப்படையினர் மீது கற்களை வீசி உள்ளனர். இது பற்றி விபத்து நடந்த அடுத்த நாள் காலை அறிக்கை சமர்ப்பித்த போக்குவரத்துத்துறை அமைச்சர்’ சில இளைஞர்கள் சிறு களவுகளில் ஈடுபட்டதாகவும் முக்கியமாக இறந்து கிடந்தவர்களிடம் பொருட்களைக் களவாடியதாகவும் கூறியுள்ளார். முதலுதவிப் படையினர் மீது கல்வீசியும் உள்ளனர்.

இது ஒரு சில தனிப்பட்ட இளைஞர்களாலேயே நடாத்தப்பட்டது என்றும் குழுக்களாக இணைந்து எந்தவிதமான அசம்பாவிதங்களையும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறினார். அதே நேரம் ஒரு இளைஞர் சேவையில் ஈடுபட்டிருந்த அவசர சேவைப் பிரிவினர் ஒருவரிடமிருந்து செல்பேசியையும் திருடி உள்ளார். இது தொடர்பாகக் காவற்துறையினர், சிலரைக் கைது செய்துள்ளனர். இறந்தவர்களிடம் இருந்து பொருட்களைக் களவாடியமை பெரிதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தநாள் மதியமளவிலேயே பிரத்தியேக பாரந்து£க்கி ஒன்று தொடருந்து நிலையத்தினுள் கொண்டு வரப்பட்டு கவிழ்ந்து கிடந்த பெட்டிகள் து£க்கி நிறுத்தப்பட்டன. அதன்போது மேலும் பல உடலங்கள் எடுக்கப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆறு பேர் மட்டுமே உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாகப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். ஆனாலும் 700 தொன்களைத் து£க்கக்கூடிய இந்த நீளங்கள் மாற்றியமைக்கக் கூடிய இந்த பிரத்தியேக பாரந்து£க்கி மூலம் தொடருந்துகளை நிமிர்த்தவும் அப்புறப்டுத்தவும் பல நாட்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல இயந்திரங்கள் சேவையில் இந்தப் பாரந்து£க்கிக்குத் துணையாகச் செயற்படுகின்றன. தண்டவாளங்கள் திருத்தி அமைக்கப்பட்டு மீண்டும் மின்சாரத் து£ண்கள் அமைக்கப்பட்டுச் சேவை ஆரம்பிக்க பல நாட்கள் ஆகுமென தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 14ம் திகதித் தகவலின் படி இறந்த ஆறு பேரில் நால்வர் தொடருந்துத் தரிப்பிடத்தில் காத்திருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்திற்குள்ளாகிய தொடருந்து தரிப்பிடத்தை உடைத்துக் கொண்டு உள்நுழைகையில் இவர்களை மோதித் து£க்கி எறிந்துள்ளது. இதில் Etampes ஐச் சேர்ந்த Vincent  மற்றும் Brandon ஆகியோரும் அடங்குவார்கள்.

இதில் Brandon (19) பிரெத்தினி விளையாட்டுக்கழகத்தின் தடகள வீரர் ஆவார். RER Cஇற்காகக் காத்திருந்த வேளையிலேயே இவர் உயிரிழந்துள்ளார். 23 வயதுடைய Vincent Cramard பிரித்தெனியிலுள்ள Lycée Jean-Pierre Timbaudயின் மேற்பார்வையாளர் ஆவார். இவருக்காக உயர்கல்விப் பாடசாலையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

21072013%20004.jpg

21072013%20005.jpg

இந்த விபத்தின் காரணம் என்ன?

21072013%20002.jpgதொடருந்துகளின் பயணத்தில் அதன் பயணப்பாதையை நிர்ணயிப்பது தண்டவாளங்களே. இந்த தண்டவாளங்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து அவற்றை இணைத்தும் பிரித்தும் மற்றைய தண்டவாளத்துடன் இணைத்தும் தொடருந்தின் பாதை ஒழுங்கமைக்கப்படும். இந்த நடவடிக்கை கட்டுப்பாட்டுத் தளத்திலிருந்து வழங்கும் கட்டளைகளிற்குத் தண்டவாளங்கள் இயங்குவதன் மூலமே நடைபெறும். இதனையே ஊசிமுனை முறை வழித்தட மாற்றிகள் (Aiguillage) என அழைப்பார்கள்.

எமது தேசத்தில் பண்டைய முறையான மனிதர்கள் மூலம் இயக்கப்படும் தண்டவாளம் மாற்றும் முறையே பயன்படுகின்றது. இதில் ஏற்படும் கோளாறுகளே பாரிய விபத்துகளிற்குக் காரணமாகின்றன. பிரெத்தினித் தொடருந்துத் தடமானது மிகவும் அதிகமான தொடருந்துப் போக்குவரத்தைக் கொண்டது. இங்கு நிமிடத்திற்குக் கிட்டத்தட்ட மூன்று தொடருந்துகள் கடந்து செல்கின்றன. நான்கு பெரிய தொடருந்துத் தடங்களும் மிகவும் செறிவான போக்குவரத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனாலும் கடந்த மே மாதம் முதல் இங்கு இந்த தண்டவாள வழித்தட மாற்றிகள் சரிவர இயங்காமல் போகத் தொடங்கின. இதனால் தொடருந்துகளின் போக்குவரத்து எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இவ்வழித்தட மாற்றிகளில் ஏற்பட்ட கோளாறே வெள்ளிக்கிழமையின் கொடூர விபத்திற்குக் காரணமாகி உள்ளது. தண்டவாளத்தில் கட்டளையை ஏற்று பிரிந்து இணையும் பொறிமுறையின் பகுதி ஒன்று சேதமடைந்து தண்டவாளத்தில் மேல் நோக்கியபடி நின்றுள்ளது. பத்துக் கிலோ எடையுடைய இவ் இருப்புத்துண்டு வழித்தடத்தை 3657ம் இலக்கத் தொடருந்து மாற்றியமைக்க விடாது தடுத்துள்ளது.

அத்தோடு அவ்வழித்தடத்தில் வந்த தொடருந்தின் இருப்புச் சிற்களை இடறித் தொடருந்தைத் தடம்புரளச் செய்து விபத்தை ஏற்படுத்தி உள்ளது என SNCF இன் உட்கட்டுமாணத்தின் இயக்குநர் Pierre Izard தெரிவித்துள்ளார்.

அத்தோடு உடனடியாக இப்படியான பொறிமுறை உள்ள 500 வழித்தடமாற்றிகளைப் பரிசோதிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் இவற்றைப் பரிசோதிக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைக் குறிப்பிடவில்லை. பத்துக் கிலோ எடையுடைய ஒரு இரும்புத்துண்டு பல்லாயிரம் தொன் எடையுடைய தொடருந்தைத் தடம்புரளவைத்ததுடன் பல உயிர்களையும் பலிகொண்டுள்ளது.

- சோழ.கரிகாலன்

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/31626/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.