Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் தலைவர்களின் தவறுகளுக்கும், சுயநல நோக்கங்களுக்கும்விலையாக மக்களின் உயிரகளே பலி கொடுக்கப்படுகின்றன. இதற்க்கு இலங்கைத்தீவும் விதிவிலக்கல்ல!

Featured Replies

அரசியல் தலைவர்களின் தவறுகளுக்கும், சுயநல நோக்கங்களுக்கும்விலையாக மக்களின் உயிரகளே பலி கொடுக்கப்படுகின்றன. இதற்க்கு இலங்கைத்தீவும் விதிவிலக்கல்ல!

பிரிவினைவாத முரண்பாட்டு அரசியல் புதைகுழிக்குள் இலங்கைத்தீவின் மக்களைத் தள்ளிவிட்டு, பிரித்தானியக் காலனித்துவவாதிகள்ஆட்சிப்பொறுப்பை சிங்களப்பெரும்பான்மையிடம ;ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். ஆட்சிப்பொறுப்பை மட்டுமல்ல இலங்கைத்தீவை முழுமையாக அபகரித்துக்கொள்ளும் காலனித்துவப் பேராசையையும் சேர்த்து பிரித்தானியர்களிடமிருந்து சிங்கள ஆட்சியாளர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

பிரித்தானிய எஜமானர்களிடம் கற்றுத்தேர்ந்த 'காலனித்துவக்கலையினை" ஏனைய பிற இனமக்களிடம் பிரயோகிக்கத் தொடங்கியது சிங்களத் தலைமை! இலங்கைத்தீவு முற்று முழுதான சிங்ஙள பௌத்த நாடாக மாற்ற வேண்டுமானால் ஏனைய இனங்கள் படிப்படியாக அழிக்கப்பட வேண்டுமல்லவா? இந்த இனவழிப்பு நடவடிக்கைகளை பல வழிகளில் கையாண்டன சிங்களப்பேரினவாத அரசுகள்.

சிங்கள அரசின் தமிழர்களின் உரிமையினைப் பறித்திடும் நோக்கங்களுக்கு சில தமிழ், இஸ்லாமிய, மலையகத்தலைவர்களும் தங்களது சுயநல இலாபநோக்கங்களை ஈடேற்றிடும் நோக்கில் துணை புரிந்து மாபெரும் வரலாற்றுத்தவறுகளைச் செய்தார்கள் என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மை. தமது சொந்த இனமக்களையே அழிவுக்கு உள்ளாக்கும், அவர்களுக்கு கிடைக்கவேண்டிய அரசியல் உரிமைகளைக் கிடைத்திடாமல் தடுத்திடும் இழிநிலை சுயநல அரசியல் இன்றும் தொடர்கதையாகவே இருக்கிறது.

தங்களது வாழ்வுரிமைக்காகவும், இனவிடுதலைக்காகவும ; போராடிய இலங்கைத்தீவின்பூர்வீகக்குடி மக்களான தமிழர்கள், இன்று மாபெரும் இனவழிப்பைச் சந்தித்து , சிங்கள - பௌத்த தேசத்தின் இறையாண்மையின்கீழ் அடிமைகொள்ளப்பட்டுள்ளார்கள். இந்தத் பெரும் துயரநிலைக்கும் மேற்குறிப்பிட்ட அரசியல்போக்குகளும் காரணமாகின.

இன்று அழிக்கப்படுவது தமிழ் இனம் மட்டுமல்ல! , உலகிலேயே முது மொழிகளில் ஒன்றும், தமிழர்களுக்கு மட்டுமல்ல பிற மொழிககளுக்கும் தாய் மொழியாக, வேராக விளங்கும் தமிழ் மொழியும் சேர்த்து அழிக்கப்பட்டுகொண்டிருக்கிறது . இனம் வாழ்ந்தால் தானே அந்த இனம் பேசும் மொழி வாழ்தல் கூடும்!

இப்போது சிங்கள இனவாத அரசின்கொலைகாரப் பார்வை ,தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. இலங்கைத்தீவு சிங்களர்க்கு மட்டுமே உரிய சிங்கள பௌத்த நாடு, இந்த நாடு பிற இன , மதங்களைச் சார்ந்தவர்களுக்கு உரித்துடயது அல்ல என்ற இனவாதக் கருத்துக்கள் தென்பகுதியில் இருந்து தினமும் கொட்டப்படுகின்றன.

சிங்கள அரசுடன் 'புத்திசாலித்தனமாக" இணக்கப்பாட்டு அரசியல் செய்து இஸ்லாமிய மக்களின் நலன்களை மட்டும் பாதுகாத்துவிடலாம ;என்று தமிழர்களின் விடுதலைப்போராட்டத்துக்ககு எதிராக அரசுடன் சேர்ந்து செயற்ப்பட்ட முஸ்லிம் தலைவர்கள ;இன்று செய்வதறியாது திகைத்துப்யோயுள்ளனர்!

மலையகத் தமிழ்ச் சகோதரர்களும், எவ்வித வாழ்வும் வளமும் முன்னேற்றமும் இன்றிப் பிரித்தானிய காலனிய அரசு விட்டு சென்ற அதே காலத்திலேயே வாழ நிரபந்பதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ், இஸ்லாமிய , மலையகத் தமிழர்கள் ஒடுக்குதலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்டுபவர்களாகவும் அதற்கெதிராக ஒன்றிணைந்து போராட வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் நாம் ஒன்றிணைந்து விடாதபடி எமக்கிடையில் முரண்பாடுகளை வளர்த்துப் பிரித்தாளும் கைங்கரியத்தையே சிங்கள அரசு தொடர்ந்தும் செய்து வெற்றியும் கண்டு வருகின்றது. நாம் இவ்வளவு பேரழிவுகளையும் சந்தித்தன் பிற்பாடும் , சிங்களத்தின் உண்மையான இனவழிப்பு கோரமுகத்தை ஐயம் திரிபற அறிந்ததன் பிற்பாடும் நாம் தொடர்ந்தும் ஏமாறப்போகின்றோமா? இனியேனும் நாம் சிந்திக்கணே;டும்!

அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை அற்ற நிலையிலேயே தமிழ் இளைஞர்கள் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய ஆயுதப் போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த போராட்டம் சாதி, இன மத பேதம் அற்ற மிகவும் உயர்ந்த நோக்கங்களுடன் , தமிழ் மக்களின் விடுதலை போராட்டம், காலனித்துவ ஆட்சிக்கு முன் வரையறுக்கப்பட்ட தமிழர் வாழும் பிரதேசங்களின் பாதுகாப்பிற்காகவும், தமிழர் உரிமைகளை பாதுகாக்கும் போராட்டமாகவே இந்த போராட்டம் உருவானது. இந்த போராட்டத்தில முஸ்லிம் தமிழர்கள், மலையாக தமிழர்களும் இணைத்து கொண்டார்கள். முஸ்லிம் இளைஞர்கள் தமிழர் படையணிகளில் முக்கிய இடத்தை கொண்டிருந்த காலமும் அன்று இருந்தது. 

ஆனால் தமிழ் மக்களின் போராட்டத்தில ;பின்னடைவை ஏற்படுத்திடவும், தமிழ்,இஸ்லாமியச் சமூகங்களின் உறவினில் விரிசலலை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட சதிகளில் நாம் வீழந்தது ஒரு வரலாற்றுப் பெரும் துயராகும்.

சிங்கள ஆட்சியாளர்கள் கிழக்கில் வைக்கத்தொடங்கிய இந்த அரசியல் சூழ்ச்சிப் பொறிக்குள் வட மாகாணமும் வீழ்ந்தது. 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்,மன்னார் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை அவர்கள் வாழ்ந்த சொந்த நிலப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட, நடந்திருக்கக்கூடாத துயர வடுவொன்று தமிழர் வரலாற்றில் பதிவானது.

இந்த வெளியேற்றத்தின் பின்னணியில் பல காரணங்கள் இருந்தாலும், சிங்கள அரசின் சூழ்ச்சியின் பெரும் பங்கும் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கிழக்கில் ஆரம்பித்த திட்டமிடப்பட்ட பிரிவினைவாதம் வடமாகாணம் வரை கொண்டுவரப்பட்டதில் சிங்கள அரசின் இனவாத உத்தியினால் பெறப்பட்ட வெற்றியின் உச்சகட்டமாகவே இதனைப் பார்க்க வேண்டும்.

1990 நடந்த முஸ்லிம் மக்களின் வெளியேற்றம்தொடர்பில் கடந்தகாலத் தமது தவறை புரிந்து கொண்ட தமிழீழ விடுதலை புலிகள், 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி, தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகாரன், கலாநிதி அன்ரன் பாலசிங்கம், அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு தமிழ்ச்செல்வன் மற்றும் மட்டகளப்பு, திருகோணமலை பகுதிகளின் விடுதலை புலிகளின்இராணுவத் தளபதிகள் மற்றும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரௌவுப்ஹக்கிம், மற்றும் திரு அதாயுள்ள, திரு உதுமலெப்பெ, திரு மொஹிடீன் அப்துல் காதர், திரு பசீர் சேகு தாவூத், திரு மசூர் நூர்தீன் மற்றும் திரு மசூர் மௌலான ஆகியோருடன் நடந்த சந்திப்பில,; திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் 1990யில் வட பகுதியில் இருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியதை ஒட்டி ஒரு பொது மன்னிப்பு கேட்டதோடு, முஸ்லிம் மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில்வந்து மீண்டும் குடியேறும் படியும், அவர்களின் விவசாய நிலங்களில் விவசாயம் செய்யும் படியும், அவர்களின் பாதுகாப்பிற்கு தாம் உறுதி அளிப்பதாகவும் கூறிதன் பின்னர் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் ஒரு பொது கருத்து இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.

அத்துடன் இந்தப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் மக்கள் வடக்கு - கிழக்குப் பகுதியில், மக்கள் சமயத்தால் வேறுப்பட்ட ஒரு சமுதாயமாகவும், அவர்களின் தனித்துவமான அடையாளம், கலாச்சாரம் போன்றவை பாதுகாக்கப்படவேண்டும், முஸ்லிம் மக்களின் தனிப்பட்ட அடையாளம் பாதுகாக்கப்பட தமிழீழ விடுதலை புலிகள் ஆவனை செய்வார்கள் என்றும், அத்துடன் சமாதான பேச்சுவார்த்தையின் போது, முஸ்லிம் பிரதிநிதகள் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்று எழுத்தப்பட்ட இணக்கப்பாட்டில் தமிழர் சார்பாக தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் முஸ்லிம் மக்கள் சார்பாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரௌவுப் ஹக்கீம் அவர்களும் கையெழுத்து இட்டனர். என்பது அழிக்கப்படமுடியாத வரலாற்றுப் பதிவாகும்.

இந்த இணக்கப்பாடு பற்றி இங்கே எழுதப்பட வேண்டியதன் காரணம், தமிழீழ விடுதலை புலிகள், தமிழ் மற்றும் தமிழ்பேசும் இஸ்லாமிய மக்கள ; எப்போதும் ஒன்றிணைந்து, பரஸ்பர உறவுகளைப் பேணி தங்களது சொந்தத் தாய்நிலமான இலங்கைத்தீவின ;ஒன்றிணைந்த வடக்கு கிழக்குப் பிரதேசங்களை ஒன்றாகப்போராடிப் பெற்று விடுதலை பெற வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையினை ஆழமாகக் கொண்டிருந்தார்கள் என்பதை மீளவும் நினைவுபடுத்துவது இன்றைய தேவையாகவும் உள்ளது.

இந்த இணக்கப்பாட்டின் பின் நடந்தவற்றை முஸ்லிம் மக்கள் அறிந்து கொள்ளவேண்டியது மிகவும் முக்கியமானது எனக் கருதுகின்றோம். இந்த இணக்கப்பாட்டினை நடைமுறைப்படுத்தும் வகையில் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் தமிழ் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை, பேச்சு வார்த்தையின் போது கூட முஸ்லிம் மக்களை ஒரு தனித்துவமான மக்களாக கூறப்பட்ட போதும், அவர்களுக்கு ஒரு தனித்துவ அந்தஸ்து கொடுக்கப்பட்ட பின் கூட, திரு ரௌப் ஹக்கீம் சிறி லங்கா அரசின் பிரதிநிதியாகவே பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார்கள்.

அண்மையில ; நடைபெற்ற கிழக்கு மாகாணத ; தேர்தலிலும் கூட முஸ்லிம் மக்களின் சிவில் சமூகம் சிங்கள கட்சிகளுடன் கூட்டு வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது. அனால் வழமைபோல முஸ்லிம கட்சிகளின் தலைவர்கள ; சிங்கள கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து தங்களது இனநலத்தையும் கருத்திற்கொள்ளாது போட்டியிட்டனர், அதன் பலனையே நாம் இன்று அனுபவிக்கின்றோம்! இன்று கிழக்கு மாகாணத்தில் சிங்கள ஆட்சியாளர்களின் அதிகாரம மேலோங்கி;, பௌத்த கலாசாரம் திணிக்கப்படுவதையும், காணிகள் அபகரிப்புகளையும் காணலாம்.

2009 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையின் பின்னர் இன்று, சிறி லங்காப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கரங்கள் முஸ்லிம் மக்களின் கழுத்தை நெரிக்கத்தொடங்கியுள்ளன. தீவிர பௌத்த இனவாதிகள் இஸ்லாமிய பள்ளிவாசல்களை குறிவைத்துத் தாக்கத் தொடங்கியுள்ளனர், ஹலால் உணவினை நுகர்வதற்க்குக்கூட தடையேறப்படுத்தும்இழிநிலைக் காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.'தமிழ்ப் பயங்கரவாதம்" என்னும் கருத்தினை சர்வதேசத்தில் ஏற்கச்செய்து அவர்களது துணையினைப் பெற்று எபபடித் தமிழ் இன அழிப்புக்குப் பயன்படுத்திக்கொண்டார்களோ அதனைப்போலவே இஸ்லாமிய மக்களை ஒடுக்குவதற்க்கும்'இஸ்லாமியப் பயங்கரவாதம்" என்னும் சொல்லாடலை சர்வதேசத்தில் இருந்து எழும் எதிர்பினை தடுத்திடும் பாதுகாப்புக் கேடயமாகக் தூக்கிப்பிடிக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில்சிங்கள பௌத்தம்தவிர்ந்த ஏனைய இன, மதம் சார்ந்த மக்களின் இருப்பு திட்டமிட்டு அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற ஆபத்தான நிலையினை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். ஆனால்இவற்றைக் கண்டும் காணமல் அமைதியாகத் தங்களது அமைச்சுப் பதவிகளின்சுகானுபவத்தில் திளைத்திருக்கும் முஸ்லிம் அரசியல்தலைமைகளை நாம் பார்க்க கூடியதாக இருக்கிறது.

சரித்திரத்தை பின் நோக்கிப் பார்ப்போமானால்,, 1948 ஆம்ஆண்டில் மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பபட்டது. தமிழ் தலைவர்களின் உதவியினை நயவஞ்சகமாகப் பெற்றே அவர்கள் சார்ந்திருக்கும் மக்களின் எதிர்கால வாழ்வுக்கு அவர்களின் கைகளினாலேயே சவக்குழி வெட்டியது சிங்கள அரசு! இவ்வளவு பாடங்களைக் கற்றுக்கொண்ட பின்பும ; நாம் சிங்கள அரசுடன ; இணக்கப்பாட்டு அரசியல் குறித்துப் பேசுவோமாகில் பலியாகப்போகும் ஆடுகளே கொலைகாரனிடம் கழுத்தை நீட்டுவதற்க்கு ஒப்பானதாகும்!

இன்று தமிழ் மக்கள் இன அழிப்பையும், முஸ்லிம் மக்கள் ஒடுக்கு முறையையும் வன்முறையையும் எதிர்கொள்கின்றார்கள். அதே நேரத்தில் மலையகத் தமிழ்ச் சNhதரர்களின் நிலை ஒன்றும் மேம்பட்டதாக இல்லை எங்களைப் போன்ற சிக்கல்களை அவர்களும் எதிர்கொள்கிறார்கள். தமிழ், மற்றும் இஸ்லாமிய மக்களிற்க்கு அடுத்தபடியாக சிங்கள இனவாதிகளால் மலையக மக்களே குறிவைக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு நமக்குத்தேவை!

தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்க்கும், நிலங்களை அபகரிப்பபதற்க்கும், அவர்ளை அழிப்பதற்க்கும்கூட தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு இடையில் நிலவி வரும் முரண்பாடுளை, வேற்றுமைகளைத் மிகக் கவனமாக வளர்த்தெடுத்துக்அதனைத் திறமையாகக் கையாண்டு அவர்களை அழிக்கும் ஆயுதமாக அதனை சிங்கள அரசு தந்திரமாகப் பயன்படுத்தி வருகின்றது என்ற உண்மையினை இனியாவது நாம் உணர்ந்தேயாக வேண்டும்!.

இலங்கைத்தீவு முழுவதையும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தான நாடாக மாற்றும் முயற்ச்சிகள் மிகத்தீவிரம் பெற்று உள்ளன..,இந்த நாட்டில் தமிழ், இஸ்லாமிய, மற்றும் மலையகத் தமிழ் மக்கள் என்ற வேறுபாடுகளின்றி அனைவரும் இனவழிப்பையும், ஒடுக்குமுறைகளையும், வன்முறைகளையும் எதிர் கொள்ளவேண்டியவர்களாகவே நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள். எமக்கே உரித்தான எம் தாய்நிலம் நாம் மீட்டெடுத்த எம் சொந்த நிலம் மீளவும் எதிரியால் அபகரிக்கப்பட்டு சிங்கள மயமாக்கப்படுவதை எவ்வளவு காலத்துக்கு நாம் பொறுத்துக் கொள்ளளப்போகின்றோம்?

ஆகவே இன்று தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள், அவர்களிடையே வாழும் சிவில் சமூகம,; தமது அரசியல்வாதிகளிடம் தமது விடுதலைக்கான முக்கியதுவத்தை எடுத்துரைத்து சரியான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும், இலையேல் ஒரு புதிய சமுதாய மறு எழுச்சி தமிழ் மொழி பேசும் மக்களகளிடையே ஏற்பட வேண்டும்!

இந்தியாவில் வாழும் 8 கோடி தமிழர்கள், தமிழ் முஸ்லிம் மக்கள், அவர்களின் தலைவர்கள், மத , இன வேறுபாடின்றி ஈழத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்க ஒன்றாக குரல் கொடுக்கிறார்கள்;.

தமிழ் நாட்டில் இஸ்லாமிய தலைவர்கள் , மக்கள் ஈழத் தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும், தமிழர்களுக்கு என்று ஒரு நாடு உருவாக வேண்டும் என்று குரல் கொடுக்கும் போது, சிறி லங்காவில் வாழும் இஸ்லாமிய தமிழ் பேசும் மக்களும், மலையாக தமிழ் மக்களும் ஏன் இன்றும் சிங்கள ஆதிக்க வாதிகளின் பிடிக்குள் இருந்து அழிவுக்கு உள்ளாகிறார்கள்.

தமிழக மக்களின் உயிர்தியாகங்களும், தமிழக மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டங்களும,;எமது விடுதலைப் போராட்டம ; உயிர்ப்போடு எப்போது வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளத் தயாராக சாம்பலின் கீழ் இருக்கும் தணல்களாக இருக்கின்றன.

மலேசியாவில் வாழும் 20 லட்சம் தமிழ் மக்கள், மத இன வேறுபாடின்றி தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் என்று போராடுகிறார்கள்.

உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுடன் உலக மக்களும் குரல் கொடுக்கிறார்கள்.

இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம் மற்றும், மலையக தமிழர்கள் ஆகிய அனைத்துத் தமிழர்களும ; மத, கலாசார பேதமின்றி நாம் எல்லோரும், தமிழர்கள், என்ற சகோதர உணர்வோடும் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறப்போம் மன்னிப்போம ; என்னும் உயர்ந்த உளப்பாங்குடனும் விட்டுக்கொடுப்புகளுடனும் ஒன்றிணைந்து செயற்ப்பட வேண்டும்.

சிங்கள மக்களைப்போலவே சம உரிமையுடன் எங்களது பூர்வீக தாயக பிரதேசத்தில் சுதந்திரமாக வாழும் உரிமை எமக்கு இருக்கிறது, அதனை நிலை நாட்டும் உரிமையும் மத இன வேறுபாடுகளை நீக்கி தமிழர்கள் எமக்கு இருக்கிறது! அதனை நாம் வலியுறுத்துவோம்!

:இறைவன்

http://www.sankathi24.com/news/31698/64//d,fullart.aspx

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.