Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"என் காதருகே வந்து பேசு சகோதரி!" - புகழேந்தி தங்கராஜ்

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயம்தான் இன்றைய திகதியில் தலைப்புச் செய்தி. யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால், முல்லைத் தீவு, திருகோணமலை - என்று பிள்ளை செல்லுமிடமெல்லாம்,  ராணுவ நெருக்கடிகளையும் மீறி, தமிழ் மக்கள் திரளுகின்றனர். கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவன் ஒரு துரும்பு கிடைத்தால்கூட, உடும்பு மாதிரி பிடித்துக் கொள்வதைப் போல, கடைசி வாய்ப்பான நவ்விப் பிள்ளையைச் சந்தித்து மன்றாடுகிறார்கள் அவர்கள்.

நவநீதம் பிள்ளையின் யாழ் வருகையின் போது, காணாமல் போன தங்கள் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறுநாளே மிரட்டப் பட்டதும்,  "இப்படியெல்லாம் புகார் சொல்லிக் கொண்டிருந்தால், உங்கள் பிள்ளைகள் மாதிரியே நீங்களும் காணாமல் போய்விடுவீர்கள்" என்று ராணுவத்தினர் அன்பாக எச்சரித்ததும் பழைய செய்திகள்.  இன்னும் சில பகுதிகளில், வீடு தேடிப் போய் அவர்களை மிரட்டும்  புலனாய்வுப் பிரிவினர் - "புலிகளுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறீர்களா" என்று அச்சுறுத்தும் தொனியில் கேள்விமேல் கேள்வி கேட்பதுதான் புதிய செய்தி. (இங்கேயுள்ள கியூ பிரான்ச் மட்டும் என்ன செய்கிறது என்று நினைக்கிறீர்கள்?)

'புலிகளுடன் தொடர்பில் இருக்கிறீர்களா' என்று இலங்கையில் இப்போது இருப்பவர்களில் ஒரே ஒருவரிடம் மட்டும்தான் சிங்கள ராணுவம் கேட்கவில்லை. அவர், நவநீதம் பிள்ளை. அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்காமலேயே, அவர் குறித்து அப்படியொரு  முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறது பௌத்த சிங்கள சமூகம். "அவர் நவ்விப் பிள்ளை இல்லை, புலிப் பிள்ளை"  என்கிறது,  கோதபாயவின் கிளிப்பிள்ளைகளில் ஒன்று. அந்த சிங்கள இனவாத அமைப்பின் பெயர், ராவண சக்தி.

நவநீதம் பிள்ளை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் தான் - என்று முத்திரையே குத்திவிட்ட ராவண சக்தி, 'இலங்கை முழுக்க முழுக்க சிங்கள நாடு, இங்கே வேற்று இனங்களுக்கு இடமேயில்லை' என்று இனத்துவேஷத்துடன் வெளிப்படையாகவே  பிரகடனம் செய்கிறது.

நவநீதம் பிள்ளை அமெரிக்காவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கையாள் - என்பது தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் (!!!) என்கிற  அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர என்கிற அதிமேதாவியின் குற்றச்சாட்டு. இந்த தே.ப.தே.இயக்கம், கோதபாயவின் இன்னொரு கிளிப்பிள்ளை. இவர்களெல்லாம், வடக்கு மாகாணத்தில் தேர்தலே நடத்தக்கூடாது என்று ஒற்றைக்காலில் நின்றவர்கள்.

"நவநீதம் பிள்ளையின் அறிக்கை நடுநிலையாக இருக்காது. அவர் பாரபட்சமாகச் செயல்படுகிறார். அவரது அறிக்கை, அரசுக்கு மட்டுமே பிரச்சினையாக இருக்காது, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பிரச்சினையாக இருக்கும். விடுதலைப் புலிகளை மீண்டும் இயங்க  வைப்பதே ஐ.நா.வின் நோக்கம்" என்றெல்லாம் புலம்பித் தீர்த்திருக்கிறார் அமரசேகர. (இப்படியெல்லாம் மேன்மையான நோக்கங்கள் கூட இருக்கிறதா ஐ.நா.வுக்கு?)

'இலங்கை அரசு குற்றவாளிதான் என்று காமன்வெல்த் மாநாட்டில் நிரூபிக்கும் வேலையில்தான்  நவ்விப்பிள்ளை ஈடுபட்டிருக்கிறார்' என்கிற அமரசேகரவின் கருத்து, நவநீதம் பிள்ளையின் நடவடிக்கைகளால் நொந்துபோயிருக்கும் மகிந்த சகோதரர்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது.

சிங்களவர்களுக்காக சிங்களவர்கள் நடத்தும் தென்னிலங்கை அரசியல்நாடகங்களில், அதிரடி அபிப்பிராயங்களின் ஒட்டுமொத்தக்  குத்தகைதாரராக நீண்ட நெடுங்காலமாகக் கொடிகட்டிப் பறப்பவர், விமல் வீரவன்ச. பான் கீ மூனையே தொழில் முறை உறவுமுறையெல்லாம் சொல்லி பாசத்துடன் அழைத்த பாசமலர்  இந்த வீரவன்ச. ஜனதா விமுக்தி பெரமுண (ஜே.வி.பி.) என்கிற சிங்கள இனவாத அமைப்பின் மூளையாக இருந்தவர். இப்போது ஜே.என்.பி. என்கிற இன்னொரு இனவாத அமைப்பின் முதுகெலும்பாக இருக்கிறார். மகிந்த ராஜபக்சேவின் கூட்டணி  அரசில் அமைச்சர் வேறு.

இலங்கை அரசைப் பழிவாங்கத்தான் நவநீதம் பிள்ளை இலங்கை வந்திருக்கிறார் - என்பது வீரவன்சவின் அபிப்பிராயம். 'பிள்ளையின் நடவடிக்கைகளில் கொஞ்சங்கூட நல்லெண்ணம் இல்லை, முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு எதிரானதாகவே அவரது செயல்பாடுகள் உள்ளன. நவ்விப் பிள்ளை விஜயத்தின் விளைவை அடுத்த மாதமே (செப்டம்பர்) அரசு உணரும்' என்று எச்சரித்திருக்கிறார் அவர். ஆக, வீரவன்ச, அமரசேகர இருவருமே, காமன்வெல்த் மாநாட்டுக்கு இடையூறாக நவநீதம் பிள்ளையின் அறிக்கை அமையும் என்று மகிந்த ராஜபக்சேவை எச்சரிக்கிறார்கள். இந்த எச்சரிக்கைகளால் அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் ராஜபக்சே பிரதர்ஸ்.

நவம்பர் மாதம் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு  நடக்குமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இரு மாதங்களுக்கு முன்பே, ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் ஆய்வுக் கூட்டத்தில் இலங்கை விஜயம் தொடர்பான முதல் அறிக்கையை நவநீதம் பிள்ளை வெளியிட இருக்கிறார்.

பிள்ளையின் செப்டம்பர் அறிக்கை, இலங்கையின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதாகத்தான் இருக்கும் என்று வீர, அமர மட்டுமின்றி அனைவருமே எதிர்பார்க்கின்றனர். அப்படியொரு அறிக்கை வெளிவந்துவிட்டால், இலங்கையின் பசுத்தோல் உறிக்கப்பட்டு விடும். ராஜபக்சேவுக்காகத் தயாராகும் காமன்வெல்த் நாற்காலியின் காலும் முறிக்கப்பட்டுவிடும். காமன்வெல்த் மாநாட்டு மேடையில் இலங்கையை அம்மணமாக உட்காரவைத்துவிட்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர ராஜபக்சே & கோவுக்கு வேறு வழியில்லாது போய்விடும்.

அந்த அவலக் காட்சியை இப்போதே மனக்கண் முன் நிறுத்தி  நீலிக்கண்ணீர் வடிக்கிறது வீரவன்ச, அமரசேகர கோஷ்டி.  மலேரியாவில் நடுங்குபவனிடம் 'டாக்டர் உனக்குப் போடப்போவது விஷ ஊசிதான்' என்று சொல்லி மேலதிகமாக நடுங்க வைக்கிற மாதிரி, ஏற்கெனவே உதறலில் இருக்கும் மகிந்தனை, ஆசிட் தொட்டியில் ஊறவைக்கப் பார்க்கிறார்கள் அவர்கள் இருவரும்.

சிங்கள மிருகங்கள் இப்படியெல்லாம் அஞ்சி நடுங்குகிற அளவுக்கு அமைந்திருக்கிறது நவநீதம் பிள்ளை என்கிற அந்த தென்னாப்பிரிக்கப் பெண் சிங்கத்தின் நடவடிக்கைகள். சிங்கள  மிருகங்களின் மனித உரிமை மீறல்கள்  குறித்து தன்னிடம் புகார் கூறும் தமிழ்ப் பெண்களை சாதாரண உடைகளில் நின்றுகொண்டு இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிப்பதை அறிந்ததும், "என் காதருகே வந்து எனக்கு மட்டுமே கேட்கிற அளவுக்குப் பேசு" என்று சொல்ல முடிகிறது பிள்ளையால்! அந்த மூத்த சகோதரியின் காதருகே குனிந்து நம்பிக்கையுடன் பேசுகிறது தமிழினம். கண்கலங்கப் பேசும் அந்தத் தமிழ்ப் பெண்களைக் கட்டியணைத்து - 'உன் நிலையை நான் அறிவேன் சகோதரி' என்கிறார் பிள்ளை. கையெடுத்துக் கும்பிடுகிறார்கள் எங்கள் சகோதரிகள்.

முள்ளிவாய்க்கால், கேப்பாபிலவு, புதுமாத்தளன் என்று பல பகுதிகளில், நவநீதம் பிள்ளையிடம் புகார் கூறவந்த அப்பாவித் தமிழ்ச் சகோதரிகளை அச்சுறுத்தும் விதத்தில் சீருடையில்லாமல் நின்று கொண்டிருந்த ராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் நவநீதம் பிள்ளையின் நடவடிக்கையால் நொந்துபோய்விட்டனர். பிள்ளையின் இந்த உறுதிகுலையாத சமயோசித நடவடிக்கையையெல்லாம் பார்க்கிற போது, நீங்களும் நானும் நொண்டியடித்தால் கூட நவ்விப் பிள்ளை என்கிற அந்தத்   தனி மனுஷி காமன்வெல்த் மாநாட்டை நிறுத்திவிட்டுத்தான் ஓய்வார் என்று தோன்றுகிறது.

செப்டம்பரில் என்ன நடக்கும் என்பதை எதிர்பார்த்துத்தான்,  நோயாளி சீரியஸாக இருக்கும்போதே ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுபவர்களைப் போல், வீரவன்ச, அமரசேகர ஆகியோரின் புலம்பல் சத்தம் இப்போதே கேட்கத் தொடங்கியிருக்கிறது. 'நோயாளி பயந்துடப் போறாரு... வெளியே போய் அழுங்க' என்று சொல்கிற அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள் இலங்கையில். 'இப்பவே எதுக்குப்பா ஒப்பாரி வைக்கிறீங்க... செத்த பிறகு அழுங்க' என்று அவர்கள் சொல்வதைக் கேட்டு, இருக்கிற ஜீவனும் போய்க் கொண்டிருக்கிறது இனப்படுகொலை செய்த கொடியவர்களுக்கு!

எனக்கிருக்கிற கோபமெல்லாம், நாடாளுமன்றக் குழுக்கள் என்கிற பெயரில் இங்கேயிருந்து போன மோசடிக் குழுக்கள் மீதுதான். (ஏதாவது குலுக்கல் நடத்தித் தேர்ந்தெடுத்தார்களா அந்தக் குழுக்களை!) ஐ.நா.வை உள்ளேயே விடமாட்டோம் என்று நந்தி மாதிரி ராஜபக்சே நிர்வாகம் நின்றபோதே, அந்த மிருகத்தால் அன்போடு அழைக்கப்பட்டு - அதனிடமே நினைவுப்பரிசு வாங்கியவர்கள் இவர்கள்! தடயங்களையெல்லாம் அழித்தபிறகுதான் நவ்விப் பிள்ளை அழைக்கப்பட்டிருக்கிறார். இவர்களெல்லாம் எப்போதோ அழைக்கப்பட்டு விட்டார்களே! எப்போதோ சென்று வந்து விட்டார்களே! அங்கேபோய் என்ன கிழித்தார்கள் இவர்கள்!

ஆண் உறுப்பினர்களை விட்டுத்தள்ளுங்கள்... கூலிங் கிளாஸைக் கூட கழற்றாமல் நொந்துபோயிருக்கும் ஈழச் சகோதர்களை வேடிக்கை பார்க்கச் சென்றவர்கள் அவர்கள்! அவர்களைப் பற்றி நாம் பேசவேண்டாம். இங்கேயிருந்து கிருஷ்ண பரமாத்மாக்களால் அனுப்பப்பட்ட குந்திதேவிகள், ராஜராஜ சோழன்களால் அனுப்பப்பட்ட குந்தவைகள் எல்லாம் சென்று வந்தார்களே..... எங்கள் சகோதரிகளின் அழுகுரலை இந்தச் சகோதரிகள் கேட்டிருக்க வேண்டாமா? அவர்களை அருகே அழைத்து அணைத்திருக்க வேண்டாமா? 'காதுகொடுத்துக் கேட்கிறேன், உன் துயரைத் துணிவுடன் சொல்' என்று நம்பிக்கை அளித்திருக்க வேண்டாமா?

நவநீதம் பிள்ளை என்கிற சகோதரி, 'என் காதருகே வந்து சொல்' என்று எங்கள் சகோதரிகளை அரவணைத்துச் செவிமடுக்கிறாரே, அப்படிச் செய்ய இவர்களுக்கு எது தடையாக இருந்தது? பிள்ளையைப் போல் இவர்களும் மாதரசிகள் தானே! ஏன் இதைச் செய்யவில்லை? தன்னையொத்த இன்னொரு பெண்ணின் கண்ணீரைத் துடைக்கக்கூட முயலவில்லை என்றால், வேறு எதைச் சாதிக்க இவர்கள் இலங்கைக்குச் சென்று வந்தார்கள்! சொந்தச் சகோதரிகளைக் கற்பழித்த அரக்கர்களிடமிருந்து பரிசுப் பொருள் வாங்குவதற்காக மட்டுமா? மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்துபோகாமல் தனியே போய் மகிந்த மிருகத்துடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக மட்டுமா?

பிரதமர் நாற்காலி கனவில் மிதந்த குந்திதேவியும், இசை நாற்காலிப் போட்டியில் மூச்சிரைக்க ஓடி ஒருவழியாக எம்.பி. நாற்காலியில் அமர்ந்துவிட்ட குந்தவையும், நவநீதம் பிள்ளை என்கிற ஒரு பெண்ணரசியின் நடவடிக்கைகளைப் பார்த்து வெட்கித் தலைகுனிந்து  பதவி விலகுகிறார்கள் என்று வையுங்கள்....  இவர்களுக்குக் குறைந்தபட்ச தார்மீகப் பொறுப்பாவது இருக்கிறதே என்கிற அளவிலாவது நாம் இவர்களை மதிக்க முடியும். அப்படியெல்லாம் நாம் மதிக்க இவர்கள் வழிவகுப்பார்களா? அல்லது, இத்தாலிச்சாத்தனார் தான் 'மணிமேகலை' எழுதினார் என்கிற தந்தைசொல் தான்  மந்திரம் என்று அக்பர் சாலையில் போய்  மகுடி வாசிப்பார்களா? தெரியவில்லை.

இவர்கள் ஒருபுறம் இருக்க, ஐந்தே ஐந்து சீட் ரேஞ்சுக்கு அடித்து விரட்டப்பட்ட பிறகும், (அதிலும் ஒன்று கவிமணி என்கிற ஈடு இணையற்ற கவிஞனுக்காகத் தரப்பட்ட பரிசு) 'எனக்கு வலிக்கலை' என்று கண்கலங்கச் சொல்லும் கைப்பிள்ளை வடிவேலு கணக்காக,  விசனத்தை மறைத்தபடியே வசனம் பேசுகிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. (அதானே உங்க பேரு, ஞானம்?) இலங்கைப் பிரச்சினை தமிழ்நாட்டுத் தேர்தலைத் தீர்மானிப்பதாக ஒருபோதும் இருந்ததில்லையாம் ஞானத்துக்கு! அடுத்த தேர்தலில் துடைத்து எடுத்தாலாவது புத்தி வருகிறதா என்று பார்க்கவேண்டும். (அதுக்குள்ள 'தமிழ் மாநில'த்தைத் தூசுதட்டி எடுத்துவையுங்க ஞானம்!)

சேராத இடந்தனிலே சேரவேண்டாம் - என்பதை எங்கள் தோழர் ஒருவரே சென்ற தேர்தலில்தான் புரிந்துகொண்டார். ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்காக, ஐந்தாம் படையாக இருந்த கதர்ச்சட்டைகளுக்கு ஐந்தே சீட் கிடைத்த போது, ஒட்டி உறவாடி  நின்ற அந்தத் தோழருக்கு மேலதிகத் தண்டனையாக ஒரு சீட் கூட கிடைக்காத கொடுமை. ஈழம் என்னவெல்லாம் செய்யும் என்பதைத் தாமதமாகவாவது உணர்ந்துதான், ஒரு விமரிசையான விழாவில் கதர்ச் சட்டைகளைக் கழற்றிவிட்டிருக்கிறார்கள் அந்தத் தோழர்கள்.  (ஞானப்பழமாகவே இருந்தாலும் அழுகிய பழம்தானென்பதை அறிந்தபிறகு அதற்குப் பக்கத்தில் நல்ல பழத்தை வைக்கலாமா சிறுத்தையே!)

நவநீதம் பிள்ளை என்கிற நேர்மையான துணிச்சலான சகோதரி ஆண்மையுடன் ஒரு பயணத்தை இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட ஈழ மண்ணில் மேற்கொள்கிற நிலையில் கூட, இங்கேயிருந்து கயிறு திரிக்கிற வேலையைத்தான் செய்ய முடிகிறது காங்கிரஸ் கோழைகளுக்கு! கொல்லப்படுகிற, தாக்கப்படுகிற எங்கள் மீனவச் சொந்தங்களைக் காப்பாற்ற முடியவில்லை இந்தக் கயவர்களால்! கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யச் சொல்லி கடுதாசி எழுதுவார்களாம். வெட்கமில்லாமல் பேசுகிறார் ஞானதேசிகன்.  (முதல் எழுத்தை மாத்தியே ஆகணும் தேசிகன்!)

இந்தக் கொட்டாவியோடு ஞானம் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. சந்தடிசாக்கில், உழைத்துப் பிழைக்கும் மீனவச் சகோதரர்களைக் காட்டிக் கொடுக்கும் விதத்தில், அவர்கள் துன்புறுத்தப்படுவதை நியாயப்படுத்தும் விதத்தில் கூடுதலாக ஒரு குறட்டை விடுகிறார். தமிழ்நாட்டில் புத்தபிக்கு தாக்கப்பட்ட பிறகுதான் கைது செய்த மீனவர்களை விடுவிக்கும் விஷயத்தில் இலங்கை பிடிவாதம் பிடிக்கிறதாம்! இதன் பெயர் - ஞானத் திமிர் அல்ல... பதவித் திமிர், அதிகாரத் திமிர்! இதை நாம் அனுமதிக்கவே கூடாது. ஞானதேசிகன் எங்கே போனாலும், இதற்காக நேரடியாக நியாயம் கேட்டாக வேண்டும்!

சுமார் 700 மீனவர்களை ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றிருக்கிறதே இலங்கைக் கடற்படை என்கிற பொறுக்கிப் படை.... புத்த பிக்கு எவராவது தாக்கப்பட்டதாலா சுட்டார்கள் எங்கள் மீனவச் சொந்தங்களை? ஆயிரக் கணக்கான எங்கள் மீனவச் சகோதரர்களை அடித்து உதைத்து காயப்படுத்தியதே இலங்கைக் கடற்படை.... எந்த புத்த பிக்கு தாக்கப்பட்டான் அதற்குமுன்! உங்களுடைய கேவலமான அரசியலை நிறுத்துங்கள் ஞானதேசிகன். நீங்கள் நாக்கு வழிப்பதற்கு எங்கள் மீனவ உறவுகளின் உயிர்ப் பிரச்சினையை நீங்கள் தவறாகப் பயன்படுத்தினால் நடுத்தெருவில் நிறுத்தியாவது உங்களிடம் நியாயம் கேட்கவேண்டியிருக்கும்... நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்  முடிச்சுப் போடுவதை, ராஜீவ் கொலையோடு நிறுத்திக் கொள்ளுங்கள்!

தமிழக மீனவர்களால் தமிழீழ மீனவர்களுக்குத் தொல்லை - என்று பிரச்சினையைத் திசை திருப்பப் பார்க்கிறது இலங்கை. சிங்களக் கடல்  மிருகங்களிடமிருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வக்கில்லாத ஞானதேசிகனின் கட்சி ஆட்சி, அந்த மிருகங்களுக்காக வெட்கமேயில்லாமல் வக்காலத்து போடுகிறது. உண்மை என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்கிறார், அடங்கா மண்ணாகத் திகழும் வன்னி மண்ணின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம். "இன்று எம் தேசத்தில் என்ன நடக்கிறது? தமிழரின் பூர்விக நிலத்தில் சிங்களரைக் குடியேற்றி, தமிழருக்குப் பூர்விக வரலாறே இல்லை என்று நிறுவ இலங்கை முயல்கிறது. எம் கடலில் எங்கள் தமிழன் தொழில் செய்ய முடியாத நிலையை உருவாக்கி வருகிறது" என்று வேதனையுடன் பேசியிருக்கிறார் செல்வம்.

ஞானதேசிகன் போன்றவர்களுக்கு செல்வம் பேசியிருப்பதன் பொருள் புரிகிறதா? தமிழீழ மீனவர்களின் தலைவலி தமிழக மீனவர்கள் அல்ல...... தென்னிலங்கையிலிருந்து ஊடுருவி வந்து தமிழீழப் பகுதிகளின் கடல்வளத்தைச் சுரண்டும் சிங்கள மீனவர்களும் சீன மீனவர்களும்தான் இப்போது பிரச்சினை. அதைத் திசை திருப்புவதற்காகத்தான் எங்கள் தமிழக மீனவச் சொந்தங்களைத் திட்டமிட்டுத் தாக்குகிறது சிங்களக் கடற்படை. புத்த பிக்கு தாக்கப்பட்டதால்தான் இந்தத் தாக்குதல், கைது - என்றெல்லாம் அபாண்டமாகப் பழி சுமத்துகிறது தேசியம்... இல்லை, தேசிகம். இந்தப் பித்தலாட்டத்துக்காக ஞானதேசிகன் மன்னிப்பு கேட்பதுதான் நியாயம்! (ஞானதேசிகன் மன்னிப்பு கேட்கணும்னு லயோலாவுல இருந்து ஆளாளுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க செம்பியன்!)

கூடுதலாக, மன்மோகன் சிங் பற்றியும் ஒரு தகவல் கொடுத்திருக்கிறார் செல்வம். ஈழப் பகுதியைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்தித்தபோது, "நீங்கள் மாகாண சபையைக் கைப்பற்றுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று அவர்களிடம் சொன்னாராம் மன்மோகன். இந்த மனிதர் பார்த்துப் பார்த்துத்தான் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 70 ரூபாய்க்குப் போயிருக்கிறது. (யாராவது ரிசர்வ் வங்கிக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கப்பா!) எச்சரிக்கையாய் இருங்க செல்வம்....... ஒன்றரை லட்சம் உறவுகளின் ரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது வன்னி மண். நவநீதம் பிள்ளை மாதிரி நல்ல உள்ளங்கள் அங்கே வரட்டும்.....  காத்து கருப்பையெல்லாம் அண்ட விடாதீங்க!

http://www.sankathi24.com/news/32747/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.