Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைவேட்கையுடன் எழும் தேசம் மிகவும் பலம் வாய்ந்தது! - சோழ.கரிகாலன்

Featured Replies

மக்கள் விடுதலைக்காய் போராடியவர்களை மக்கள் என்றுமே மறப்பதில்லை.

மாவீரர்களின் தியாகங்களும் மறக்கப்டுவதில்லை.

மாறாக மேலும் மேலும் எழுச்சியடைந்திருப்பதே வரலாறு.

வியட்நாம் தேசத்தின் வரலாறு மில்லியன் கணக்கான போராளிகளின் அர்ப்பணிப்பிலும் அவர்கள் குருதியிலும் நனைந்து சுதந்திரத்துடன் நிமிர்ந்து நிற்கின்றது. சிறிய இனம் மாபெரும் வல்லரசுகளுடன் மோதித் தம் சுதந்திரத்தை மீட்டெடுத்த பெருமை வியட்நாம் மக்களுக்கு உரித்தானது. அந்த வரலாற்றில் தவிர்க்க முடியாத பலம் வாய்ந்த ஒரு பெயர் General Vo Nguyen Giap.

Page%2013-2.jpg

மக்களை அணி திரட்டி பிரெஞ்சு வல்லரசுடனும் அமெரிக்க வல்லாதிக்க அரசுடனும் நெஞ்சு நிமிர்த்தி நின்று போராடிய பெருமை இவருக்குரியது. ஹோ சி மின்னுடைய நம்பிக்கைக்குரிய தானைத் தளபதி கியாப். இவர் தனது 102வது வயதில் வெள்ளிக்கிழமை 4ம் திகதி சாவடைந்துள்ளார். இவரே வியடநாமின் விடுதலைப் பேராளிகளில் இறுதியாக உயிருடன் இருந்தவர் ஆவார். இவர் கடந்த நான்கு வருடங்களாக இராணுவ மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வியடநாமின் ஹனோய் நகரின் இராணுவ வத்தியசாலையில் சாவடைந்துள்ளார்.

1380439_524927450921051_1505743054_n.jpg

ஜெனரல் வோ என்குயன் கியாப் ஒரு புத்திசாலித்தனமான, துணிவுள்ள தளபதி. தானாகவே களமுனைகளில் பயிற்சி பெற்ற அனுபவம் மிக்க தளபதியான கியாப் பிரான்சின் காலனித்துவத்தை முறியடித்து பிரான்சைத் தோற்கடித்து வெளியேற்றியதுடன் அமெரிக்காவின் கண்மூடித்தனமான கொம்யூனிச எதிர்ப்புப் போரை முறியடித்து அவர்கள் கனவைச் சிதைத்தவர். வியட்நாம் தேசத்தின் உருவாக்க ஜனாதிபதியான ஹோ சி மின்னிற்கு அடுத்தபடியாக நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி மக்களின் மனதில் இவர் நிறைந்துள்ளார். இவர் வியட்நாமின் தேசிய வீரர் ஆவார்.

ha%20noi%20vo%20nguyen%20giap%205.jpeg‘சிவப்பு நெப்போலியன்’ என்று அழைக்கப்படும் ஜெனரல் கியாப் ரப்பர் சில்லுகளின் கிழிசல்களால் செய்யப்பட்ட காலணிகளை மட்டுமே கொண்ட தனது  கரந்தடிப்படை இராணுவத்தைக் காடு மலைகளிற்கு ஊடாகப் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட பீரங்கிகளையும் எறிகணைகளையும் தோள்களில் துக்கிச் சென்று பிரெஞ்சு இராணுவத்தைச் சுற்றிவளைத்து உலகப் புகழ் வாய்ந்த தியன் பியன் பு (Dhien Bien Phu) யுத்தத்ததை 1954ம் ஆண்டு நிகழ்த்திக் காட்டினார். இதுவே பிரெஞ்சு இராணுவத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இந்த காலனித்துவ வீழ்ச்சி வியட்நாமைச் சுதந்திரமடைய வைத்தது மட்டும் அல்லாது அதைச் சுற்றியிருந்த இந்தோ-சீனப் பகுதிகளையும் விடுவித்தது. இந்த யுத்ததந்திரம் இன்று பல வல்லரசுகளின் இரணுவப் பயிற்சிக் கல்லுரிகளில் பாடமாகவே பயிற்றுவிக்கப்படுகின்றது. ஜெனரல் கியாப், மாவீரன் நெப்போலியனுக்குரிய போர்த்தந்திரமும் விடாமுயற்சியும் கொண்டவர் என்பதாலும் கம்யூனிசத்தைக் காப்பாற்றப் போராடியவர் என்பதாலும் ஒரு காலத்தில் எதிர் எதிர் முனைகளில் நின்ற பிரெஞ்சுத் தளபதிகளால் கூட இவர் சிவப்பு நெப்போலியன் எனப் பெருமைப்படுத்தப்பட்டார்.

Page%2013-3.jpg

அமெரிக்க வல்லாதிக்க அரசின் அனுசரனையுடன் பிரித்தாளப்பட்ட தெற்கு வியட்நாமினையும் தாக்கிக் கைப்பற்றி கொம்யூனிச வியட்நாம், கொம்யூனிசமற்ற வியட்நாம் என்றிருந்த இரு பகுதியையும் இணைத்து ஒரு வியட்நாம் ஆக்கிய போராட்ட வலு ஜெனரல் கியாப்பிடம் இருந்தது. பல போர்களில் இவர் கண்ட தோல்விகளையும் இழப்புக்களையும் ஏற்றுக் கொள்வதிலும் இவர் பின்நிற்கவில்லை. தெற்கு வியட்நாமின் முன்னைய தலைநகரமான சைகோன் மீதான போரின் 30வது வருட நிறைவில் செவ்வி வழங்கிய ஜெனரால் கியாப் ‘இந்தப் பேரைப்போல் ஒரு கடுமையான போரை நாம் சந்தித்ததும் இல்லை. இந்நப் போரில் நாம் இழந்த இழப்புக்கள் போல் எந்தப் போரிலும் இழக்கவுமில்லை’ எனக் கூறியிருந்தார்.

sand-paintings-of-general-vo-nguyen-giapஒரே இன மக்களையே தம் காலனித்துவ வெறிக்காக கூறுபோட்டு மோதவிட்டு அழித்ததே அமெரிக்க வல்லாதிக்க சக்தியின் பெருமையாக இருந்தது. இப்டியான இனப்படுகொலைகளை ஆசியாவின் பல பகுதிகளில் மேற்கத்தேய நாடுகள் நடத்தி முடித்தன. இதில் அமெரிக்காவின் பங்கு பாரியதாக இருந்துள்ளது.

‘எந்த இழப்பின் பின்னாலும் நாம் வியட்நாமிற்காகப் போராடுவதை நிறுத்தவில்லை. எமக்கு சுதந்திரத்தையும் விடுதலையையும் விட வேறெதுவும் முக்கியமானதாக இருக்கவில்லை.’ என்ற ஹோ சி மின்னின் புரட்சி வாசகத்தையே ஜெனரல் கியாப் மீண்டும் மீண்டும் எதிரொலித்தார்.

ஜெனரல் கியாப் வைத்திய சாலைக்குச் செல்லும் வரை சர்வதேச அரசியலை மிகவும் கூர்மையாகவும் அவதானமாகவும் அதானித்து வந்தார். 90களின் இறுதிப் பகுதிகளில் சர்வதேசத்தின் தலைவர்கள் பலர் இவர் வாழ்ந்த ஒரு இருண்ட பழைய வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுப்பதைப் பெருமையாகக் கருதினார்கள். போராடும் போது சர்வதேசங்களின் பார்வையில் கொம்யூனிசத் தீவிரவாதியாகத் தெரிந்த இவர் தனது அதீத சுதந்திரவேட்கையாலும் அறிவாலும் அடைந்த வெற்றியின் பின்னர் சர்வதேசக் கதாநாயன் ஆனார். ஆனால் வல்லாதிக்க அரசுளின் அடிவருடியாகித் தனது நாட்டு மக்களிற்கு எதிராகவே போராடிய மில்லியன் கணக்கான தெற்கு வியட்நாமியர்களிற்கு இவர் இறுதிவரை எதிரியாகவும் சிம்மசொப்பனமாகவுமே திகழ்ந்துள்ளார். இவர்களில் பலர் அமெரிக்கா வெளியேறிய போதே தாமும் வெளியேறிச் சொந்த நாட்டில் வாழ முடியாது அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். துரோகிகள் என்றுமே நிம்மதியாக இருந்ததில்லை என்பதை வரலாறு பலமுறை எமக்குப் பாடம் புகட்டி உள்ளது.

_70449536_70449535.jpg

ha%20noi%20vo%20nguyen%20giap%204.jpg

ha%20noi%20vo%20nguyen%20giap%207.jpg

ha%20noi%20vo%20nguyen%20giap%208.jpg

ha%20noi%20vo%20nguyen%20giap%206.jpg

1911ம் ஆண்டு ஓகஸ்ட் 25 அன்று மத்திய வியட்நாம் பகுதியான குவாங் பின் மாநிலத்தில் பிறந்த கியாப் சிறு வயதிலேயே அரசியல் வேலைகளில் ஈடுபட்டார். அதன் காரணமாகவே 1930 இல் பிரெஞ்சு தேசத்திற்கெதிரான புரட்சியைத் தலைமை தாங்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் ஹனோய் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.

ha%20noi%20vo%20nguyen%20giap%209.jpg

ha%20noi%20vo%20nguyen%20giap%2010.jpg

இவர் பிரெஞ்சுக் காவற்துறையினரிடமிருந்து தப்பி 1940 இல் தென்மேற்குச் சீனாவில் ஹோ சி மின்னைச் சந்தித்தார். அவர் ஆணையின் படி வியட்நாமின் தெற்குக் கிராமங்களில் வியட் மின் (Viet Minh) கரந்தடிப் படையணிக்காக வீரர்களைச் சேர்த்தார். இந்த விடுதலைப் படையே பின்னர் வியட் கொங் (Viet cong) என்ற புகழ்பெற்ற விடுதலை இராணுவமாக மாற்றம் பெற்றது. இந்தச் சமயத்தில் இவரது மனைவி பிரெஞ்சுக் காவற்துறையினரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

அவருக்கு என்ன நடந்தது. அடுத்த இதழில் பார்ப்போம்...

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/34342/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி அன்பு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.