Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

Featured Replies

நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம்  வாக்குமூலம் வாங்கிய அதிகாரியான தியாகராஜன். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை நான் சரியாக பதியவில்லை என்று தான் தவறு செய்துவிட்டேன் என்று சொல்கிறார்.

இவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான K.T.தாமஸ் இந்த தீர்ப்பை தவறு என உணர்கிறேன் என்று சொல்கிறார்.
இந்த வழக்கை தடா சட்டத்தின் படி விசாரித்த போலிஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜெபமணி மோகன்ராஜ் தவறு செய்தவர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆனால் அநியாயமாக இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.                                                                   

இவ் மூவருக்கும் தூக்கு தண்டணை கொடுத்தது தவறு என முன்னாள் நீதிபதிளே பல முறை சொன்ன பின்னும் 22ஆண்டுகள் தனிமை சிறைக்கு பின்னும் இவர்களை  தூக்கில் கயிற்றில் நிறுத்தி வைத்திருப்பது  நியாயமா?
இராஜிவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகளான சுப்ரமணிய சுவாமி மற்றும் சந்திராசாமி அகியோரை இதுவரை விசாரிக்க கூட செய்யாமல் பொய் குற்றசாட்டின் பேரில் மூன்று அப்பாவி தமிழர்களை தூக்கு கயிற்றில் நிறுத்தி வைத்திருப்பது நியாயமா?

இராஜிவ் காந்தியை பெல்ட்பாம் வைத்து கொன்றார்கள்.ஆனால் பெல்ட்பாம் எங்கே தயாரிக்கப்பட்டது என்று இதுவரை கண்டுபிடிக்க படவில்லை என்று வழக்கை விசாரித்த சி.பி.ஜ அதிகாரி இராகோத்தமன் அவர்களே  சென்னபின் பெல்ட்பாம்க்கு 10 ருபாய் பேட்டரி வாங்கி கொடுத்தார் என்று திரு.பேரறிவாளனை தூக்கிலேற்றுவது நியாயமா?

தடா சட்டத்தில் இந்த வழக்கை விசாரித்தது செல்லாது என்று அறிவித்த நீதிமன்றம்.அதே சட்டத்தின்படி பெற்ற வாக்குமுலத்தின் அடிப்படையில் தூக்குதண்டனை அளித்திருப்பது நியாயமா?

இராஜிவ் காந்தி கொலையை விசாரிக்க தொடங்கப்பட்ட வர்மா கமிசன் பாதியில் ஏன் கலைக்கப்பட்டது? பல்நோக்கு விசாரணை குழு இன்னும் விசாரணையை ஏன் முடிக்கவில்லை?சுப்ரமணிய சுவாமி மற்றும் சந்திராசாமியை விசாரிக்கவேண்டும் என்று சொன்ன ஜெயின் கமிசன் அறிக்கை ஏன் மூடிமறைக்கப்பட்டது?இப்படி விடைதெரியா நியாயமான கேள்விகள் ஆயிரமிருக்க இந்த மூன்று அப்பாவி தமிழர்களை தூக்கு என்ற பெயரில் கொலை செய்வது எந்த வகையில் தமிழர்களே நியாயம்?
தூக்கு தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் நடக்கும் படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.வி.ஆர். கிருஷ்ணய்யர்.செய்த குற்றத்திற்க்கு வழங்கும் தூக்கு தண்டணையே படுகொலையெனில் செய்யாத குற்றத்திற்க்கு வழங்கப்படும் தூக்கு தண்டணையை என்னவென்று சொல்லுவது?

இப்படி பல்வேறு குழப்பங்களும் குளறுபடிகளும் உள்ள இந்த வழக்கை  மேல்முறையீடு செய்யும் வசதி கூட இந்த மூவருக்கும் வழங்கப்படவில்லை. இராஜிவ் காந்தி சாவு என்று சொல்லி சொல்லியே இந்த காங்கிரஸ் அரசு ஈழத்தமிழர்கள் ஒருலட்சத்திநாற்பதினாயிரம் பேரை பழிவாங்கியது.அது மட்டுமில்லாமல் கொலைகாரன் இராசபக்சேவிற்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறது.கொலைகாரனுக்கு வரவேற்பு நிரபராதி தமிழர்களுக்கு 22ஆண்டுகளுக்கு பிறகு தூக்கு தண்டணை என்பது என்னவகை நியாயம் ?
உண்மை குற்றவாளிகளை விடுத்து நிரபராதி தமிழர்களை தூக்கில் ஏற்றுவதை தமிழர்கள் நாம் பார்க்கவேண்டுமா? இலங்கையில் தமிழர்கள் சாகும் போது அமைதி காத்தோம் ஒரு லட்சம் தமிழர்களை இழந்தோம்.மீண்டும் அமைதிகாத்து இந்த மூன்று நம் சகோதர்களையும்  இழக்க வேண்டுமா?

நீதிக்காக போராடாத இனம் ஒரு மனித இனமா…
போராடுவோம் தமிழர்களே, இந்த நான்கு தமிழர்கள் மற்றும் பொய் குற்றசாட்டின் அடிப்படையில் தூக்கை எதிர்நோக்கி கர்நாடக சிறையிலிருக்கும் ஞானபிரகாசம், சைமன்,பிலேவேந்திரன் மற்றும் மீசை மாதையன் போன்றோரையும் விடுலை செய்ய வேண்டும் என்று மே17  இயக்கம் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று 15.12.2013 அன்று காலை 10மணிக்கு நடத்தியது.


கோரிக்கைகள்:
 

  • ராஜீவ் கொலை என்ற பெயரில் 22 ஆண்டுகளாக தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டுள்ள நிரபராதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தனை உடனடியாக விடுதலை செய்

 

  • நேர்மையற்ற விசாரணையான ராஜிவ் வழக்கில் ஆயுள் சிரைவாசிகளான ராபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியவர்களை விடுதலை செய்

 

  • 22 ஆண்டுகால பொய் வழக்கு சிறைக்கு நட்ட ஈடு வழங்கு

 

  • வீரப்பன் கூட்டாளிகள் என்ற பொய் குற்றச்சாட்டில் தூக்கு மேடையில் நிற்கும் சைமன்,பிலவேந்திரன், ஞானப்பிரகாசம்,மீசை மாதையனை விடுதலை செய்

இதில் தமிழக முசுலீம் முன்னேற்ற கழகத் தோழர் குணங்குடி ஹனீபா, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி தோழர் குடந்தை அரசன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு, SDPI,தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம்,தமிழர் விடுதலை கழகம்,இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமியர் இயக்கம்,தமிழர் எழுச்சி இயக்கம்,வழக்கறிஞர் அங்கயற்கண்ணி,தோழர் ரேவதி நாகராசன், GTO, மரண தண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்,பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு, தமிழ்நாடு மாணவர் மற்றும் இளைஞர் கழகம் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.

 




















http://may17movementnews.blogspot.in/2013/12/blog-post_19.html


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=5-2jNRpw1yI


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=T3rhMW5koOM

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ValJDm6GI0E

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZpMD-auglD4

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QtiFLg-Q-d4

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=rP2dHfnqPAI

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hFva-z2eaxQ

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=MC6cuknsJUo

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=FeGfFWAE0Uw

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=mihB14eb9OY

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.