Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"வரலாற்றுக் கடமைக்குத் தயாராகும் தமிழகம்"!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vaiko_in_.jpg

20060902002.jpg

சென்னையில் வைகோ தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பாரிய கண்டனப் பேரணி

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுலமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

ம.தி.மு.க.சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சென்னை மன்றோ சிலையில் இருந்து இந்த பேரணி புறப்பட்டது. பேரணிக்கு தலைமை தாங்கி ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ நடந்தே சென்றார். அவரை தொடர்ந்து ம.தி.மு.க.தொண்டர்கள் கையில் கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.

ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கறுப்புச் சேலை அணிந்த படி கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் கறுப்பு பாவாடை, கறுப்பு சட்டை அணிந்த படி ஊர்வலத்தில் பங்கு கொண்டனர்.

ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கும் கோர காட்சிகள் அடங்கிய படங்கள் ஒட்டிய தேர் ஒன்று ஊர்வலத்தில் முன்னதாக அணிவகுத்து சென்றது.

ஊர்வலம் செல்லும் வழியில் ஈழத் தமிழர் படுகொலையைச் சித்தரிக்கும் வகையிலான பதாகைகளும் அதில் "எங்கள் தமிழர் இரத்தம் ஈழத்தமிழர் சிந்தும் இரத்தம்" போன்ற எழுச்சிமிக்க வரிகளும் எழுதப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன.

ஊர்வலத்தில் வைகோவுடன் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன், ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன், துணை செயலாளர்கள் செஞ்சி இராமசந்திரன், நாசரேத் துரை, மல்லை சத்யா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கம்பம் இராமகிருஷ்ணன், வீர இளவரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியை வாழ்த்தி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசியதாவது:

செஞ்சோலை சிறார்களின் படுகொலையைக் கண்டித்து வைகோ தலைமையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. சென்னையைக் குலுக்கும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து உணர்ச்சிப் பெருக்கோடு இந்தப் பேரணியில் பங்கேற்றனர். ஈழத் தமிழர் பிரச்சனை புதுடில்லியில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை வைகோ அவர்கள் சந்தித்துப் பேசியிருக்கும் செய்தியானது தமிழகத் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

டில்லியில் நமது குரலை செவிசாய்க்க யாரும் இல்லை என்ற நிலைமையில் இந்தியப் பிரதமரை வைகோ நேரில் சந்தித்து தெரிவித்திருக்கும் செய்திகள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சரியான நடவடிக்கையாகும் என்றார் நெடுமாறன்.

இப்பேரணிக்கு தலைமை ஏற்று நடந்து சென்ற் வைகோ தனது கர்ஜனைக் குரலில் எழுப்பிய முழக்கங்கள்:

வெல்லட்டும்! வெல்லட்டும்!

ஈழத் தமிழர் வெல்லட்டும்

எங்கள் இரத்தம்! எங்கள் இரத்தம்!

ஈழத் தமிழர் சிந்தும் இரத்தம்

எங்கள் இரத்தம்! எங்கள் இரத்தம்!

காப்போம்! காப்போம்!

ஈழத் தமிழர்களைக் காப்போம்!

சிங்கள அரசே! கொலைகார அரசே!

சிங்கள அரசே! கொலைகார அரசே!

ஈழத் தமிழர்களைக் கொல்லாதே!

ஈழத் தமிழர்களைக் கொல்லாதே!

இந்திய அரசே! இந்திய அரசே!

இராணுவ உதவி செய்யாதே!

அழியட்டும்! அழியட்டும்!

சிங்கள இனவெறி அழியட்டும்!

இனவெறி அரசே! இனவெறி அரசே

கொலைகார அரசே! கொலைகார அரசே!

கொல்லாதே! கொல்லாதே!

ஈழத் தமிழரைக் கொல்லாதே!

மலரட்டும்! மலரட்டும்!

தமிழீழம் மலரட்டும்!

மலரட்டும்! மலரட்டும்

தமிழீழம் மலரட்டும்!

என்று முழக்கங்களை வைகோ எழுப்ப பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த அவரது தொண்டர்களும் முழக்கங்களை உரத்த குரலில் விண்ணதிர எழுப்பினர்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை ஊர்வலம் அடைந்ததும் அங்கு ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக இனம் தெரியாத ஒரு உணர்வு உருவாகி வருகிறது. இங்கு வந்திருக்கும் கூட்டம் வாக்கு கேட்கும் கூட்டம் அல்ல. அரசியலில் இலாபம் கிடைக்குமா? என்று வந்த கூட்டமும் அல்ல. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கூட்டம். நான் சாதாரணமானவன். நான் உயிரோடு இருக்கும் வரை தமிழ் இனத்திற்காக பாடுபடுவேன்.

தமிழ் ஈழம் மலர வேண்டும் என்று நாங்கள் பேசுவதால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக கருதுகிறார்கள். தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தமிழ் ஈழத்தில் பிச்சைக்காரர்கள் இல்லை, கற்பு ஒழுக்கம் உள்ளது என்று கூறியிருக்கிறார். இது என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நோட்டீஸ் அடிப்பதற்கு எந்த அச்சகமும் தயாராக இல்லை. துண்டுப்பிரசுரங்கள் அடிப்பதற்கு கூட தயக்கம் காட்டுகின்றனர்.

ஏன் இந்த மிரட்டல்? ஏன் இந்த அச்சுறுத்தல் என்று தெரியவில்லை. எந்த தடையும் உடைத்தெறிய எங்களால் முடியும். தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்கள் பற்றி பேச கூடாது என்பது தான் நோக்கமும், திட்டமும் ஆகும்.

அடக்குமுறைகளினால் அடங்கி ஒடுங்கி போய் விடுவோம் என்று நினைத்து விட வேண்டாம். அது ஒரு காலமும் நடக்காது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஏன் பேசக்கூடாது. பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.

இலங்கை பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். எப்படி பட்ட தீர்வு என்பதை தீர்மானிக்க வேண்டியது ஈழத்தமிழர்கள் தான். அவர்கள் தான் தீர்வு செய்ய வேண்டும்.

பேச்சு வார்த்தைதான் தீர்வு என்று சொல்ல முடியாது. தீர்வை கண்டு பிடிப்பதற்கான வழி முறை தான் பேச்சு வார்த்தை 50 ஆண்டுகளாக அவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் எல்லாம் அவர்களுக்கு தான் தெரியும்.

எனவே ஈழத்தமிழர்கள் தான் தீர்வு காண வேண்டும்.

தனி ஈழம் என்று உருவானால் தனி தமிழ்நாடு கேட்பார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.

வங்காளதேசத்தை இந்திரா காந்தி உருவாக்கி தந்தார். இதை போல் தமிழ் ஈழத்தை அவர் உருவாக்கி கொடுத்து இருந்தால் தமிழ் மக்கள் அவரை பராசக்தி என்று வர்ணித்து இருப்பார்கள்.

நான் கேட்கிறேன் வங்கதேசம் உருவாகியதே, மேற்கு வங்காளம் வங்க தேசத்தோடு இணைந்து விட்டதா?, கல்கத்தா டாக்காவுடன் இணைந்து விட்டதா?, கல்கத்தா டாக்காவுடன் இணைய வேண்டும் என்று பேசுகிறார்களா?

தேச பக்தி பற்றி யாரும் எங்களுக்கு சொல்லி கொடுக்க தேவையில்லை. இதற்காக சான்றிதழும் தரவேண்டும் என்ற அவசியமும் இல்லை.

தேசிய ஒருமைப்பாட்டில் எங்களுக்கு அக்கறை உண்டு.

இந்தியாவை நேசிக்கிறோம். இந்தியாவின் ஒற்றுமையை இறையாண்மையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். இதை நான் அச்சத்தால் சொல்லவில்லை. நாங்கள் மன அளவில் ஏற்றுக்கொண்ட கருத்து அது. இந்த நாட்டின் ஒருமைப்பாட்டில் எனக்கு அக்கறை உண்டு.

ஈழத்தமிழர்கள் என்பது வேறு, விடுதலைப் புலிகள் வேறு என்பது தவறு. ஈழத்தமிழர்களை காக்கின்ற அரணே விடுதலைப் புலிகள் தான்.

விடுதலைப் புலிகளை நாங்கள் ஆதரிக்கின்றோம். இதில் நாங்கள் வன்முறையை ஏவி விடவில்லை. தமிழ்நாட்டை நாங்கள் வன்முறை களமாக்க விரும்பவில்லை. உச்ச நீதிமன்றத்தில் பெற்றிருக்கின்ற கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலேயே ஈழ மக்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.

இதை தான் வேளச்சேரி மணிமாறன் பேசினார். நான் குறிப்பிட்டது போல புரட்சிகவிஞர் உணர்ச்சியோடு பேசினார். புரட்சி கவிஞருடைய உணர்ச்சிகளை சொன்னால் நீங்கள் சிறையில் பிடித்து போட்டு விடுவீர்களா? அங்கு வாழும் தமிழர்களுக்காக நாங்கள் ஆயுதம் ஏந்துவோம். அங்கே போய் ஆயுதம் ஏந்துவோம் என்று பேசினார். உணர்ச்சியின் அடிப்படையில் பாரதிதாசன் பாட்டை பாடினாலே நீங்கள் சிறையில் போடுவீர்களா?

நாங்கள் எந்த விதத்திலும் வன்முறைக்கு வித்திட்டவர்கள் அல்ல. வன்முறை மீது காதல் கொண்டவர்களும் அல்ல.

காட்டிக் கொடுக்கிற 5 ஆம் படை துரோகியும் மண்ணின் விடுதலைக்காக போராடுகின்ற ஒரு வீரப்படையின் ஒப்பற்ற தலைவரும் சகோதரர்களா?.

எங்களைப் பொறுத்த வரையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்த மக்களை பாதுகாப்பதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். 5 லட்சம் தமிழர்கள் யாழ்பாணத்தில் தவிக்கிறார்கள். போர் தான் தீர்வா? பேச்சுவார்த்தை தான் தீர்வா? சிங்கள அரசின் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.

சிங்கள அரசுக்கு பாகிஸ்தான் இராணுவ உதவி போய் கொண்டு இருக்கிறது. திருகோணமலை வட்டாரத்தில் அமெரிக்க படைகளை கால் வைக்க விடமாட்டேன் என்று இந்திராகாந்தி கூறினார் அல்லவா? அதை போல இந்திய அரசுக்கு கேடு விளைவிக்கின்ற எங்கள் பூகோள அரசியல் நலன்களுக்கு கேடு விளைவிக்கின்ற வகையில் பாகிஸ்தான் இங்கே உள்ளே நுழையக்கூடாது.

பாகிஸ்தான் ஆயுதக் கப்பல்கள் இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க சிங்கள தேசத்திற்கு செல்ல கூடாது என்ற நிலைப்பாட்டை எடுங்கள். இந்த நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இதை கேட்கிறோம். அப்படி ஒரு முடிவுக்கு வாருங்கள். தமிழர்கள் என்றும் உங்களுக்கு துணை நிற்பார்கள்.

இலங்கையில் உருவாகிற தமிழ் ஈழம் இந்தியா அரசுக்கு அரணாக இருக்கும். சிங்களவர்கள் என்றும் நமக்கு கேடு தான் செய்து இருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் இந்தியாவின் அணுகுமுறை வரவேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருப்போம்.

இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் தான் தீர்வு என்பது நாங்கள் 1995 இல் திருச்சி மாநாட்டில் எடுத்த முடிவு அதில் எந்த மாற்றமும் இல்லை. கடைசியாக தீர்வு என்பது தனி ஈழமாக தான் அமையும் என்றார் வைகோ.

தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்வர் கலைஞரே! வரலாற்றுக் கடமையாற்ற முன் வருக! - பழ. நெடுமாறன்

தமிழர் வரலாற்றில் நெருக்கடி மிகுந்த காலகட்டம் பிறந்துள்ளது. சர்வதேசச் சமுதாயத்தின் வேண்டுகோளை ஏற்று மூன்றாண்டு காலத்திற்கு மேலாக அமைதிகாத்து மறுபடியும் மறுபடியும் பேச்சுவார்த்தைக்குச் சென்ற புலிகள் வஞ்சிக்கப்பட்டனர். சிங்களப் பேரினவாத வல்லரக்கரின் வஞ்சனை செஞ்சோலைச் சிறார்களின் பிணக்குவியலில் வெளிப்பட்டுள்ளது. மனிதநேயம் கொண்ட அனைவரும் பதறித்துடிக்கின்றனர்.

உலகத்தமிழர்களின் கோபமும் கொதிப்பும் பலவடிவங்களில் வெளியாகிக் கொண்டுள்ளது.

தமிழகம் ஓருருவாய் பேருருவாய் கிளர்ந்தெழுந்துள்ளது. சிற்றூர்கள் முதல் பெருநகரங்கள் வரை மக்கள் போராட்டங்கள் வெடிந்தெழுந்துள்ளன. உலகநாடுகளில் வாழும் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன.

தாயகமண்ணில் பெரும்பகுதியை மீட்டுவிட்ட விடுதலைப்புலிகள் எஞ்சிய பகுதியையும் மீட்கும் போரில் ஈடுபட்டுள்ளனர். செஞ்சோலைச் சிறார்கள் சிந்திய இரத்தத்தின் சிவப்பு வேங்கைகளின் விழிகளில் வெளிப்பட்டு களத்தில் வீறுகொண்டு போராடவைத்துள்ளது.

களத்தில் புலிகளின் வீறுகொண்ட பாய்ச்சலுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியாத சிங்கள வீரர்கள் பின்வாங்கி ஓடுகின்றனர். சிங்களப்பேரினவாத அரசு தோல்வியால் வெறிகொண்டு அப்பாவி தமிழ்மக்களைக் கொன்று குவிக்கிறது.

சிங்கள ,ராணுவம் விமானங்கள் பாகிஸ்தான் விமானிகளால் ஓட்டப்பட்டு தமிழர்கள் வாழும் பகுதிகளில் நெருப்புமழை பொழியப்படுகிறது. அமெரிக்க வல்லாதிக்க அரசு கொடுத்த ஆயுதங்கள் பாகிஸ்தான் மூலமாக ,லங்கைக்குக் கப்பல் கப்பலாக வந்திறங்குகின்றன.

ஆனால் தமிழர்களைக் கொன்றுகுவிக்க கொலை ஆயுதங்களை வாரி வழங்கும் அமெரிக்க அரசு அதை மறைக்க அங்குள்ள அப்பாவித் தமிழர்களைக் கைது செய்து புலிகளுக்கு ஆயுதம் வாங்க முற்பட்டார்கள் எனப் பொய்வழக்குத் தொடுத்துள்ளது.

ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்ய அமெரிக்காவோ, பாகிஸ்தானோ ஆயுதங்கள் வழங்குவதை ,ங்குள்ள பார்ப்பண பத்திரிகைகள் கண்டிக்கவில்லை மாறாக ,ந்தியா ஆயுதம் வழங்கத் தயங்கியதால்தான் ,லங்கை வேறுநாடுகளை நாடிச்செல்ல நேரிட்டது. எனவே இந்தியாவே ஆயுதங்களை அளிக்கவேண்டும் எனப்பொருந்தாவாதம் புரிந்து இந்திய அரசுக்குத்தூபம் போடுகின்றன. பரம்பரைத்தமிழ்ப் பகைவர்கள் சிங்களவெறியர்களுடன் கைகோர்க்கத் தயங்கவில்லை.

தமிழீழ விடுதலைப் போரின் இறுதிக்கட்டம் பிறந்துள்ள இந்த வேளையில் தமிழர்கள் ஒவ்வொருவரும் அதற்குத்துணையாக நிற்க வேண்டிய அவசியமும் அவசரமும் நேர்ந்துள்ளது.

நமது வாழ்நாளில் நமது கண்ணெதிரில் நடைபெறும் தமிழீழ விடுதலைப் போரில் நமது பங்களிப்பு என்னவென்பதை வரலாறு பதிவுசெய்யும் என்பதில் ஐயமில்லை. அதைப்போலவே தமிழராகப் பிறந்தும் துரோகம் செய்தவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

வரலாற்றுக்கடமை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏற்படும்போது அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது வரலாற்றில் என்றும் மறைவதில்லை.

கிட்லரின் நாசிசமும், முசோலினியின் பாசிசமும் உலகைக்கவ்விப் பிடிக்கத்திட்டமிட்டு உலகளாவிய போரைத் தொடங்கிய போது ஸ்டாலின், சர்ச்சில், ரூஸ்வெல்ட் ஆகிய மூவரும் ஒன்றுபட்டு நின்று தங்களின் வரலாற்றுக்கடமையை நிறைவு செய்து உலகைக் காப்பாற்றினார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் அமெரிக்க முகாம் - சோவியத் முகாம் என ,ரண்டாகப் பிரிந்து மூன்றாம் உலகப் போருக்கு வித்திட்ட வேளையில் புதிதாக சுதந்திரம் பெற்ற இளம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் செய்வது இன்னதென அறியாமல் தத்தளித்தன. அப்வேளையில் இரு அணிகளையும் சாராத மூன்றாவது முகாமை உருவாக்கி உலகப் போரை மூளவிடாமல் தடுத்த வரலாற்றுக் கடமையை இந்தியப் பிரதமர் நேரு செய்தார்.

நேருவிற்குப் பிறகு ,ந்தியா சிதறுண்டு போகும் என்ற அரசியல் ஆருடங்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் முதலில் லால் பகதூரையும், அடுத்து இந்திராவையும் சனநாயக முறையில் பிரதமர்களாக்கி வரலாற்றுக் கடமையை காமராசர் நிறைவு செய்தார்.

பாகிஸ்தான் இராணுவப் பேயாட்சியில் இருந்து விடுதலை பெற வங்க மக்கள் போராடிய போது அவர்களுக்கு உறுதுணையாக நின்று வங்க தேசம் தோன்றுவதற்கான வரலாற்றுக் கடமையை நிறைவேற்றினார் இந்திரா காந்தி.

கியூபா விடுதலைப் போராட்டத்தில் பிடல் காஸ்ட்ரோவின் தோளோடு தோள் நின்று போராடி சுதந்திர கியூபாவை உருவாக்கி வரலாற்றுக் கடமையை நிறைவு செய்த சேகுவேரா வரலாறாகவே இன்னமும் நிற்கிறார். வரலாற்றுக் கடமை என்பது எல்லோருக்கும் எப்போதும் ஏற்பட்டுவிடுவதில்லை. அபூர்வமாக சில நேரங்களில் உருவாகிறது. அதை உணர்ந்து கடமையைச் செய்பவர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள். ஸ்டாலின், நேரு, இந்திரா, சேகுவேரா ஆகியோர் அப்படித்தான் வரலாற்று நாயகர்களானார்கள்.

அத்தகைய வரலாற்றுக் கடமை இப்போது தமிழக முதல்வர் கலைஞரை எதிர்நோக்கியுள்ளது.

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழக முதல்வரின் பங்கு என்பது மகத்தானது. மறைந்த எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது தனது பங்களிப்பினை செவ்வனே செய்தார். அப்போராட்டத்திற்கு நிதி உதவி உட்பட பல வகையிலும் பேருதவி புரிந்தார். ஆனால் கால வெள்ளம் அவரை அடித்துச் சென்றுவிட்டது.

அவர் பெயரைச் சொல்லி பதவிக்கு வந்த செல்வி செயலலிதா தமிழீழப் போராட்டத்திற்கு முற்றிலும் எதிரானவராகவே செயல்பட்டார். தமிழ்நாட்டில் ஆதரவாக இயங்கியவர்களை ஒடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு தமிழினப் பகைவராகவே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார்.

தற்போது முதல்வராகியுள்ள கலைஞர் கருணாநிதியின் காலத்தில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய உலகத் தமிழர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தமிழர்களின் நீண்ட, நெடிய வரலாற்றில் மிக முக்கியமாக காலகட்டம் இது உலகத்தில் தமிழருக்கென்று ஒரு தனிநாடாக தமிழீழம் மலர பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகளும், தமிழர்களும் உயிர்த்தியாகம் உட்பட எண்ணற்ற தியாகங்கள் புரிந்து தமிழீழ மண்ணை சிவந்த மண்ணாக்கியுள்ளனர்.

தமிழீழம் மலரவிடாமல் தடுக்கப் போராடும் சிங்களப் பேரினவாதிகளுக்கு ஏகாதிபத்திய நாடுகள் துணை நிற்கின்றன.

தன்னந்தனியாகப் போராடும் தமிழீழ மக்களுக்குத் துணை நிற்க வேண்டிய கடமை தாய்த்தமிழகத்திற்கும் அதன் முதல்வர் கலைஞருக்கும் உண்டு.என்றும் ,ல்லாத வகையில் முதல்வர் கலைஞருக்கு மத்திய அரசிலும் அளவு கடந்த செல்வாக்கு உள்ளது. காங்கிரசுத் தலைமையிலான கூட்டணியில் மதிப்பு மிக்க மூத்தத் தலைவராக அவர் விளங்குகிறார். தமிழக மக்களும் தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவாக அணி திரண்டுள்ளனர்.

இப்போது ,ல்லையேல் எப்போதும் ,ல்லை என்ற நிலை பிறந்துள்ளது. எனவே இந்த நல்ல வாய்ப்பினையும், காலம் அளித்துள்ள பதவியையும் பயன்படுத்திக் கொண்டு வரலாறு அளித்துள்ள கடமையைச் செய்ய முன் வருமாறு முதல்வர் கலைஞரை வேண்டிக் கொள்கிறோம்.

முதல்வர் கலைஞர் குறைந்தபட்சமாக தனது தலைமையில் அனைத்துக் கட்சித் தூதுக் குழு ஒன்றை அழைத்துக் கொண்டு தில்லி சென்று பிரதமரைச் சந்தித்துக் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கச் செய்ய வேண்டும்.

1. இந்திய அரசு இலங்கையுடன் எத்தகைய பாதுகாப்பு உடன்பாடும் செய்து கொள்ளக் கூடாது.

2. இந்திய அரசு இலங்கைக்கு எத்தகைய ஆயுத உதவியோ, ,ராணுவப் பயிற்சியோ அளிக்கக் கூடாது

3. இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றை இந்திய விமான நிலையங்களிலோ, துறைமுகங்களிலோ அனுமதிக்கக் கூடாது.

4. நார்வே நாட்டின் சமரச முயற்சியின் பேரில் இருதரப்பும் சம்மதித்துக் கையெழுத்திட்ட உடன்பாட்டை நிறைவேற்றும்படி இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

5. இருதரப்புப் பேச்சு வார்த்தை முடிந்து இறுதி உடன்பாடு ஏற்படும் காலம் வரையில் இலங்கை வட-கிழக்கு மாநிலத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு தமிழர் பொறுப்பில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்கும்படி இந்திய அரசை வலியுறுத்தும் வரலாற்றுக் கடமையைச் செய்ய முதல்வர் கலைஞர் முன்வர வேண்டும். இது உலகத் தமிழர்களின் ஒரு மனதான வேண்டுகோள் ஆகும்.

இதுபோதும் சிங்களவனுக்கு பீதியை கிளப்ப......!

மகிந்தர் ரஸ்யாவுக்கும், சீனாவுக்கும் போய்வரவேண்டி இருக்கும்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.