Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுப்பு மூலை: லாபம் தேசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்பு மூலை: லாபம் தேசியம்

நந்தி முனி

மேலுலகத்தில் ஒரு மதுக் கடையில் சிவராமும் லசந்த விக்கிரமதுங்கவும் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக்கொண்டார்கள். நாட்டில் ஜெனிவாக் காய்ச்சல் உச்சத்தில் நிற்கும் ஒரு காலத்தில் சந்திக்க நேர்ந்தது, அதுவும் மதுச்சாலையில் அப்பிடியொரு கொம்பனி கிடைத்தது. இருவருக்குமே ஆனந்தம்தான்.

சிவராம்: இருங்கோ லசந்த. என்ன குடிங்கிறீங்கள்.

லசந்த: நீங்கள் என்னத்துக்கு ஓடர் பண்ணினனீங்களோ அதையே குடிப்பம், அதையே சாப்பிடுவம். குடிக்கிறதவிட எதக் கதைக்கப்போறம் எண்டதுதான் இஞ்ச முக்கியம். அதுவும் இந்த நாட்களில.

சிவராம்: உண்மைதான்...

லசந்த: அப்ப சொல்லுங்கோ உங்கட பக்கம் என்ன புதினம்?

சிவராம்: புதினமென்ன? ஊடகங்கள் தாற புதினத்தவிடவும் ஊடகங்கள் தான் புதினமாகிற்று.

லசந்த: அதென்ன ஊடகங்கள்தான் புதினம்?

சிவராம்: கேள்விப்பட்டிருப்பீங்கள் தானே, யாழ்ப்பாணத்தில கிட்டடியில ஒரு இணையம் தொடங்கியிருக்கு. அது ஒரு ஊடக நிகழ்வு எண்டதவிடவும் அரசியல் நிகழ்வப்போலத்தான் இருந்தது. எல்லாக் கட்சியளும் ஒரு நிகழ்வில ஒன்றாக் கூடியிருந்தது யாழ்ப்பாணத்தில ஒரு புதினம்தான்.

லசந்த: ஓமோம் கேள்விப்பட்டனான்.

சிவராம்: அது மட்டுமில்ல. டெய்லி மிரர் பேப்பர் தமிழில வரத் தொடங்கிட்டுது. புலம்பெயர்ந்த தமிழர்கள் கொஞ்சப் பேர் சேர்ந்து கொழும்பில இருந்து ஏதோ ஒரு ஊடகம் தொடங்கப்போயினமாம். ஏற்கனவே, கிளிநொச்சி எம்.பி. ஒரு பேப்பரைத் தொடங்கி அதுவும் நிண்டு போயிற்று. அவர் இப்பிடி தொடங்கி நிப்பாட்டினது இது ரண்டாவது பேப்பர். இதவிட மன்னாரில இருந்து ஒரு அரசியல்வாதியும் பேப்பர் நடாத்துறார். கிறவுண்ட் வியூஸ் இணையத் தளமும் மாற்றம் எண்ட பேரில தமிழில ஒரு இணையத்தளத்த தொடங்கியிருக்கு.

லசந்த: ஓ... அப்பிடியே! எனக்கெண்டா விளங்கேல்ல... நாட்டில ஊடகத் தொழில்தான் அதிகம் ஆபத்தானது எண்டு தெரியுது. ஆனா தமிழர்கள் மத்தியில எப்பிடி இவ்வளவு தொகையா புதுசு புதுசா ஊடகங்கள் முளைக்கிது.

சிவராம்: உண்மைதான் லசந்த. இது ஒரு பெரிய முரண். ஊடகத் தொழில் ஆபத்தெண்டு தெரிஞ்சும் ஏனிப்பிடி எல்லாரும் அதில கொண்டுபோய் முதலீடு செய்யினம் எண்டது.

லசந்த: நல்ல லாபம் வருகுதோ.

சிவராம்: அப்பிடியும் சொல்லேலாது. யாழ்ப்பாணத்தில இப்ப நாலு தினசரி வருதுகு. கொழும்பில இருந்தும் ரெண்டு தமிழ் பேப்பர்கள் வருகுது. வவுனியாவில இருந்து ஒரு பேப்பர் வருகுது. மன்னாரில இருந்து ஒரு பேப்பர் வருகுது. அதோட யாழ்ப்பாணத்தில ரெண்டு ரீ.வி.யள் இருக்கு. கேபிள் ரீ.வியில ஏகப்பட்ட சனல்கள் வருகுது...வசதியான வீடுகளில சொந்தமா டிஷ் கனெக்ஷன் இருக்கு. இதவிட ஏகப்பட்ட இணையத்தளங்கள் இருக்கு, அநேகமா ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் ஏதோவொரு ஊடகம் இருக்கு. கிட்டடியிலும் ஒரு இணையத்தளம் கைமாறியிருக்கு.

லசந்த: அப்பிடியே. யாரிட்ட இருந்து யாருக்கு கைமாறினது?

சிவராம்: அது முதலில யாழ்ப்பாணத்து பாலியல் கிசுகிசுக்களைத்தான் அதிகம் பிரசுரித்த ஒரு இணையம். யாழ்ப்பாணத்தில அதுக்குத்தான் வாசகரும் அதிகம் எண்டொரு கேள்வி. இப்ப அத ஒரு அரச கட்சிப் பிரமுகர் வாங்கிட்டாராம்.

லசந்த: யாரது?

சிவராம்: வடமாகாண சபையில இருக்கிற அரசாங்கக் கட்சிப் பிரமுகர் ஒருவராம்.

லசந்த: ஓ... அப்பிடியே... அது நல்ல ஐடியாத் தான். ஒரு ஊடகத்தை புதுசா தொடங்கிறத விடவும் ஏற்கனவே, ஓடிக்கொண்டிருக்கிற ஒண்டை விலைக்கு வாங்கிறது... அது சரி ஏன் இப்பிடி எல்லாரும் விழுந்தடிச்சு ஊடகங்களத் தொடங்கினம்?

சிவராம்: நிலத்தப் பிடிச்சாச்சு. இனி மனங்களையும் பிடிப்பம் எண்டுதான்.

லசந்த: அப்பிடி பிடிக்கேலுமே?

சிவராம்: எல்லாரும் அப்பிடி நம்பினம். தேசிய வாதியளும் நம்பினம். எதிர் தேசியவாதியளும் நம்பினம். நடிப்புத் சுதேசியளும் நம்பினம். குட்டி யாழ்ப்பாணத்தில ரெண்டு பிறஸ் கிளப் இருக்குதெண்டா பாருங்கோவன். ஒரு பிறஸ் கிளப்பில தேசியவாதியள் கூடுதலா இருக்கினம். இன்னொண்டில அரசாங்கத்துக்கு நெருக்கமானவை இருக்கினம்.

லசந்த: எனக்குகொரு சந்தேகம் சிவராம்..

சிவராம்: கேளுங்கோ.

லசந்த: தமிழ்ச் சனம் இதுகள் எல்லாத்தையும் வாசிக்குதே? பாக்குதே?.

சிவராம்: வாசிக்கிறபடியால்தானே ஊடகங்கள் புதுசு புதுச வருகுது.

லசந்த: அப்பிடியெண்டால், தமிழ்ச் சனத்துக்கு இப்ப நல்லா அரசியல் விளங்கவேணும் என்ன?

சிவராம்: அங்கதான் பிரச்சினை இருக்கு... ஊடக முதலாளிக்குத் தேவை குருட்டு வாசகர்தான். விழிப்படைஞ்ச வாசகரில்ல. ஏனெண்டா எல்லா ஊடக முதலாளியளும் தேர்தல குறி வைச்சுத்தான் ஊடகம் நடாத்தினம். வாக்கு வங்கியைப் பெரிசாக்கிறதுதான் அவயின்ர நோக்கம். இது கிட்டத்தட்ட சினிமா நட்சத்திரங்கள் ரசிகர் மன்றங்களை கட்டியெழுப்புறது மாதிரித்தான். விளங்குதோ விளங்கேல்லயோ தேசியம் கதைச்சாச் சரி.

லசந்த: அப்ப ஊடக முதலாளியள் பொக்கற்றை நிரப்பவும், வாக்குப் பெட்டியை நிரப்பவும்தான் ஊடகம் நடத்தினம் எண்டுறியள்.

சிவராம்: சரியாச் சொன்னீங்கள். தமிழர்கள் மத்தியில ஊடக முதலாளிகளே அதிகமிருக்கினம். ஊடகப் போராளிகள் வெகு குறைவு. உந்த ஊடக முதலாளிகள் யாரெண்டது எதிர்த்தரப்புக்கும் தெரியும். அதாலதான் இண்டைக்கு வரையிலும் அவங்கள் ஒரு ஊடக முதலாளியக் கூட குறிவைக்கேல்ல.

லசந்த. ஓ.. அடக் கடவுளே! எவ்வளவு கொடுமையான உண்மை?

சிவராம்: சாகிறதும், அடிவாங்குறதும், பிடிபடுறதும் நாட்டவிட்டு ஓடுறதும் அடிமட்ட ஊடக ஊழியர்கள் தான். ஊடக முதலாளியளுக்கு மேல் மட்டத் தொடர்பிருக்கு, மேல்மட்ட உறவிருக்கு. வெளிநாட்டுத் தூதரகங்களின்ர அனுசரணை இருக்கு... காசு காசைச் சேருது. பலம் பலத்தை சேருது. அவயளுக்குப் பாதுகாப்பு இருக்கு... அடி மட்ட ஊழியர்களும் குருட்டு வாசகர்களும் தான் பாவம்.

லசந்த: அப்ப தேசியம் எண்டது தமிழ் ஊடகத்துறையில ஒரு லாபகரமான பண்டம் எண்டு சொல்லுறியள்.

சிவராம்: ஓமோம்... பொறி பறக்க தேசியம் எழுதினா வாசகப் பரப்புக் கூடும். வாசகப் பரப்புக் கூடினா விற்பன பெருகும். ஒருபுறம் முதலாளிக்கு காசு சேரும். இன்னொரு புறம் வாக்குச் சேரும். நாட்டில இப்ப அரசியல்வாதியளா இருக்கிற தமிழ் மீடியக்காறர் எத்தின பேர் எண்டு பாருங்கோ...

லசந்த: ஓமோம்... நாடாளுமன்றத்தில இப்ப மூண்டு பேர் இருக்கினம். தெற்கில இருந்து ஒருவர். கிழக்கில இருந்து ஒருவர். வடக்கில இருந்து ஒருவர்.

சிவராம்: லசந்த நீங்கள் கொழும்பில Sea street , Armour street பக்கத்தில தமிழ் கடயளுக்குள்ள போயிருக்கிறீங்களா? அங்கயெல்லாம் கல்லாப்பெட்டிக்கு மேல சாமிப்படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். அந்தச் சுவரில சாமிப்படங்களுக்குக் கீழ சந்தனத்தால ''லாபம் சிவமயம்'' எண்டு எழுதியிருக்கும். அப்பிடித்தான் இப்ப எங்கட சில ஊடகங்களும் தங்கட இலட்சிய வாசகங்கள "லாபம் தேசியம்" எண்டு மாத்தினா பொருத்தமாய் இருக்கும்.

லசந்த: போதும் சிவராம். கேக்கத் தலையிடிக்குது. இன்னொரு போத்தலுக்கு ஓடர் பண்ணுங்கோ நாங்கள் மீடியாவைப் பற்றியும் கதைக்கவேண்டாம். ஜெனிவாவைப் பற்றியும் கதைக்க வேண்டாம். கிரிக்கெட்டைப் பற்றிக் கதைப்பம்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=5772fb89-8789-4285-a877-d397e827550f

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.