Jump to content

வானம் பொழிகிறது.. வாட்டர் டேங்க் நிரம்புகிறது!: குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் ‘மழைநீர்’ வரதராஜன்


Recommended Posts

  • 361xNxwater_1913240g.jpg.pagespeed.ic.5z
    சன்ஷேடில் இருப்பது மழைநீரை வடிகட்டும் ஃபில்ட்டர்.
  •  
     

தண்ணீருக்காக மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். ஆனால், இயற்கை கொடையாய் கொடுக்கும் மழை நீரைச் சேமித்து 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன். இந்தக் காலத்துக்கு மிகமிக அவசியமான நபர்.

திருவாரூரைச் சேர்ந்தவர். பொதுப்பணித் துறையின் நீரியல் கோட்டத்திலும் நிலநீர் கோட்டத்திலும் 30 ஆண்டுகள் பொறியாளராக இருந்தவர். அதனால், மழைநீரின் அருமை புரிந்தவர். இவர் அமைத்துக் கொடுத்திருக்கும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் 2500-க்கும் அதிகமான இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. அதுபற்றி நம்மிடம் பேசுகிறார் வரதராஜன்..

தண்ணீர் தரத்தில் 120-வது இடம்

நம் உடம்புக்குத் தேவையான 18 மினரல்கள் தண்ணீரில் இருக்கு. இந்த 18 மினரல்களின் கூட்டு அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் குறைந்தபட்சம் 60 மில்லிகிராம், அதிகபட்சம் 500 மில்லிகிராம் இருக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நாம் பயன்படுத்தும் தண்ணீரில் மினரல்கள் இந்த விகிதத் தில் இருப்பதில்லை. 122 நாடு களின் தண்ணீர் பரிசோதனை செய்யப் பட்டது. தண்ணீர்த் தரத்தில் நம் நாடு 120-வது இடத்தில் இருப்பதாக ஐ.நா. சபை அறிக்கை தந்திருக்கிறது.

‘சுத்தமான’ நீரில்கூட மினரல் இல்லை

பாட்டில், ஆர்.ஓ. தண்ணீர் சுத்தமானது, சுகாதாரமானது என நினைக்கிறோம். அதில்கூட உப்பு அளவை குறைக்கிறார்களே தவிர, நம் உடம்புக்குத் தேவையான மினரல்கள் சரிவிகிதத்தில் இருப்ப தில்லை. அதனால்தான் நம் நாட்டில் வியாதிகள் பெருகுகிறது. எனக்கு 69 வயதாகிறது. இதுவரை ஆஸ்பத்திரிப் பக்கம் போனதில்லை. காரணம் மழைநீரைப் பயன்படுத்து வதுதான்.

நம் நாட்டில் ஆண்டுக்கு 42 நாள் மழைப் பொழிவு இருக்கிறது. மழை நீரை உரிய முறையில் சேமித்து வைத்தாலே போதும், குடிநீர்ப் பிரச்சினை வரவே வராது. 4 X 2 அடி சைஸில் ஃபைபர் தொட்டி ஒன்றை சன் ஷேடில் வைத்து அதற்குள் மணல், ஜல்லி, மரக்கரி போட்டு வைத்துவிட வேண்டும். இதுதான் மழைநீரை வடிகட்டும் ஃபில்ட்டர்.

மொட்டை மாடியில் விழும் மழைநீரை ஒரு குழாய் மூலம் ஃபில்ட்டரில் விட்டால் அசுத்தங்கள் வடிகட்டப்பட்டு கிரிஸ்டல் க்ளியரில் சுத்தமான தண்ணீர் கிடைத்துவிடும். மழை நீர் சேகரிப்பதற்காகவே கடைகளில் வெள்ளை நிறத் தொட்டிகள் கிடைக்கின்றன. தேவை யான கொள்ளளவுக்கு வாங்கி சமைய லறை லாஃப்டில் வைத்துவிட்டு ஃபில்ட்டருக்கும் இந்தத் தொட்டிக்கும் குழாய் இணைப்பு கொடுத்தால் போதும். வடிகட்டப்பட்ட மழைநீர் இந்த தொட்டியில் சேகரமாகும். சமையலறையில் தளத்துக்கு அடியில் பிரத்தியேகத் தொட்டி அமைத்தும் நீரைச் சேமிக்கலாம்.

10 ஆண்டுகளானாலும் கெடாது

வெளிக் காற்றும் வெப்பமும் உள்ளே செல்லாமல் இருந்தால் 10 ஆண்டுகளானாலும் இந்த தண்ணீர் கெட்டுப்போகாது. என் வீட்டில் 2005-ம் ஆண்டில் சேமித்த தண்ணீரைத்தான் இப்போது பயன்படுத்தி வருகிறேன். நான் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்தில் ரூ.11 லட்சம் வரை செலவழித்து சோதனை செய்து இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளேன்.

சென்னையில் மட்டுமே 142 இடங்களில் என் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தமிழக அளவில் 567 பேர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

லாப நோக்கின்றி சேவை நோக்கில் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை அமைத்துக் கொடுத்து வருகிறேன். ‘இதை அமைக்க மொத்தமாக ஆர்டர் கொடுத்தால் எவ்வளவு கமிஷன் கிடைக்கும்?’ என்று அரசியல்வாதிகள் சிலர் பேரம் பேசினார்கள். இயற்கையின் கொடையை வைத்து இடைத்தரகர்கள் சம்பாதிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் மறுத்துவிட்டேன் என்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/article6046177.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்    தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறைகள் ஏற்படின் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது, இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ”ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்" என்றும் அமைச்சர் தெரிவித்தார். [எ]     https://newuthayan.com/article/தேவை_ஏற்பட்டால்_ஊரடங்குச்_சட்டம்_அமுல்படுத்தப்படும்
    • தீவிர தமிழ் தேசியவாதம் என்ற போர வையில  சிங்கள இனவாதத்துக்கு சமமாக தமிழ் இனவாதம் பேசும் தரப்புகள  ஶ்ரீலங்காவில் ஒரு கடும் இனவாத ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்றே எப்போதும் எதிர் பார்கிறார்கள். அதன் மூலமே தமது தமது வியாபாரம் செல்வ செழிப்புடன் நடைபெறும் என்றே  எப்போதும் நினைக்கிறார்கள்.  அந்த வகையில் ஐரோப்பாவில் இருக்கும் கடும் தமிழ் இனவாதியின் முகநூல் பதிவு  இப்படி கூறுகிறது.  அனுர வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகப் பிந்திய செய்திகள் சொல்கின்றன. மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால் இதுவரை தமிழர் தேசம் சந்திக்காத பாசிச இன ஒடுக்குதல்களை ஜேவிபியிடமிருந்து எதிர்பார்க்கலாம். அதற்கு வரலாற்றில் ஏகப்பட்ட சாட்சியங்களும் இருக்கின்றன. ஜே ஆர், சந்திரிக்கா, மகிந்த, கோத்தாவை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு பாசிசம் முறுக்கேறிய ஒரு இயக்கம்தான் ஜேவிபி. எமக்கும் இதுதான் தேவை. ஏனெனில் மைத்ரி, ரணில் போன்றவர்களை வைத்து  தமிழ்த் தேசக் கோட்பாட்டிற்கு உள்ளக / வெளியக சக்திகளால் வைக்கப்பட்ட செக் இதன் வழி தகர்க்கப்பட்டிருக்கிறது. நாளையிலிருந்து தமிழீழம்  நம்பிக்கையுடன் தனது புதிய பாய்ச்சலை தொடங்கும். வெல்வோம் ❤️ வென்றே தீருவோம் 🔥 இவரை போன்ற  சுயநலமிகளின் சிந்தனை தான் தமிழினத்தை இன்றைய  அதல பாதாள அவல நிலைக்களுள் கொண்டு வந்திருக்கிறது.  இவரின் எதிர்பார்ப்பை வெல்லப் போகும் ஜனதிபதி நிறைவேற்ற கூடாது என்பதே தமிழர்  எதிர்பார்பபு. 
    • பிற்பகல் இரண்டு மணியளவில் வாக்கு நிலவரம்: யாழ்ப்பாணத்தில் பலர் நித்திரை அல்லது கஜே கோஸ்டியின் வேண்டுகோளின்படி பகிஸ்கரிக்கின்றார்கள் போலிருக்கு!   Kurunegala – 65% Kegalle – 65% Gampaha – 62% Galle – 61% Puttalam – 57% Nuwara Eliya – 70% Matara – 64% Rathnapura – 60% Colombo – 60% Kalutara – 60% Mannar – 60% Badulla – 56 % Trincomalee – 54% Monaragala – 65% Hambantota – 60% Vanni – 58% Jaffna – 49% Ampara – 60% Anuradhapura – 70% Mullathivu – 57% Kilinochchi – 56% Kandy – 65%   https://www.newswire.lk/2024/09/21/presidential-election-2024-voter-percentage-as-of-noon/
    • வாக்குச் சீட்டு பொதிகளுடன் நபர் ஒருவர் கைது! சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு பொதி யின் எடை மூன்று கிலோ 325 கிராம் எனவும் மற்றைய பொதியின் எடை மூன்று கிலோ 495 கிராம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் சம்பூர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1400439
    • இன்றைய உலகில், மதத்தை வைத்து பிழைப்பவர்களும் அதை விற்று பிழைப்பவர்களுமுண்டு. மதத்தின் புனிதம், மனித நேயம் எல்லாம் மரணித்து வெகுகாலமாகிவிட்டது. இந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிக்குமார் கிறிஸ்தவர்களை சாடியிருக்கிறார். ஒன்று இவர்களின் லாப நோக்கு அல்லது நிர்வாக திறன் இன்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள தயாரில்லை. அங்கே முழங்கினால் இங்கே சச்சியர் வீட்டில் அடை மழைபெய்யும். கிறிஸ்தவர்களை வாங்கு வாங்கென்று வாங்குவார். ஆனால் தமிழக அரசு, இது ஒரு ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டு என்றும் இவர்கள் கூறும் நிலையத்தில் கோவில் பிரசாதம் (லட்டு) செய்ய பொருட்கள் கொள்வனவு செய்வதில்லையென்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.