Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்ரேலியாவுக்கு படகுகள் செல்லாத காலம் வருமா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Featured Replies

cocos-islands_CI.jpg

உலகக் கடலில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்லும் பல படகுகள் தத்தளிக்கும் செய்திகள் ஈழத்தில் உள்ள பல வீடுகளை நிலைகுலையச் செய்திருக்கின்றன. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடமில்லை என்று அவுஸ்ரேலியா சொல்லுகின்றது. ஈழத்திலிருந்து மாத்திரமல்ல ஈரான், ஆப்தானிஸ்தான்,ஈராக் போன்ற பல நாடுகளிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்ரேலியாவுக்குள் செல்ல முற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவுஸ்Nலிய அரசு தனது நாட்டின் கதவுகளை  இறுக மூடிய பொழுதும் உலகக் கடலில் நின்று அகதிகளின் கைகள் தட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆபத்திற்குள்ளும் துயரத்திற்குள்ளும் நின்று கதவை தட்டிக்கொண்டுஅடைக்கலம் கோருவது எவ்வளவு துயரமானது? அவர்கள் சொந்த நாட்டில் வாழ முடியாத நிலமையிலேயே வருகிறார்கள் என்கிற செய்திதான் இந்த உலகத்திற்கு வழங்கப்படுகிறது.

அகதிகளுடன் கடலில் தத்தளித்த அந்தப் படகு என்னவானது? அது மாயமாகிவட்டது என்று கைiயை விரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை இலங்கை அரசிடம் கையளித்ததாக சொல்லப்படுகின்ற அதேவேளை அந்தப் படகில் இருந்தவர்களை அவுஸ்ரேலியா ரகசியமாக வைத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. புகலிடம் தேடிச் சென்றவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் இப்போது என்ன ஆனார்கள் என்பது ஈழத்தின் பல வீடுகளை உலுக்கிக் கொண்டிருக்கிறது. 

சில மாதங்களின் முன்னர் அவஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச்சென்ற ஒரு குழந்தை படகு கவிழ்ந்து இறந்து போனது. அக் குழந்தையின் தந்தை அவுஸ்ரேலியாவின் பேர்த்நகரில் வசிக்கின்றார். அவரது குழந்தையும் மனைவியும் தாயகத்தில் இருந்தார்கள். தனது குழந்தைக்கு புகலிட அனுமதியை தந்தையார் பலமுறை கோரியும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை. இறுதியில் சட்ட விரோதமாக படகு முலம் அந்த நாட்டிற்கு அக் குழந்தை சென்ற பொழுதுதான் விபத்து இடம்பெற்றது. ஒரு ஈழக் குழந்தை உலகக் கடலில் தத்தளிப்பதுதான் இன்றைய ஈழத் தமிழரகளின் அரசியல் நிலை.

முதலில் புகலிடம் கோரிய படகு கவிழந்ததில் ஆட்கள் பலி என்ற செய்திதான் வெளிவந்தது. அவர்கள் எந்த நாட்டவர்கள் என்று தெரியவில்லை என்று அவஸ்ரேலியா சொன்னது. அப்பொழுது படகு கவிழ்ந்து இறந்திதில் ஒரு குழந்தையும் அடங்குகிறது என்றும் அந்தக் குழந்தை எந்த நாட்டுக் குழந்தை என்று தெரியாது என்றும் அந்நாட்டு அரசு சொல்லியது. இந்தச் செய்தி தாயகத்தில் பரவிய பொழுதே பெரும் சோகம் பீறிட்டது. அந்தக் குழந்தை யாராக இருக்கும் என்று மனம் துடித்தது. யாராக இருந்தால் என்ன ஒரு அகதியாக நாடற்ற குழந்தையாக அது செத்துப்போயிருக்கிறது என்று மனம் அந்தரித்த பொழுதுதான் அது ஒரு ஈழக் குழந்தை என்ற செய்தி நெஞ்சில் இடியாய் வந்தது.

இந்த சம்பவம் இடம்பெறும் முன்னதாக சில நாட்களின் முன்பு புகலிடம் தேடி அவுஸ்ரேலியா சென்ற ஒரு படகு விபத்திற்கு உள்ளானது. அப்பொழுது இறந்தவர்களின் சடலங்கள் கடலில் மிதந்தன. உயிருடன் உள்ளவர்களை மீட்ட அவுஸ்ரேலிய அரசு இறந்தவர்களின் சடலங்களை கடலில் மிதக்க விடுவது என்ற முடிவை எடுத்தது. ஆப்கானிய அகதிகளின் உடல்களே அப்படி அனாதைப் பிணங்களாக உலகக் கடலில் மிதந்தன. எந்த நாட்டு அகதி என்றாலும் கடலில் சடலங்களை மீட்காது கைவிட்டமை பாரிய தவறு என்றும் அதற்கு எதிராக ஆவேசப்படுவேன் என்றும் ஈழத் தமிழர் ஒருவர் தெரிவித்தார். நிலத்திலும் பெரிது கடல் என்பார்கள். நிலமற்றவர்கள் உலக் கடலில் சமாதியாகின்றார்கள். ஈழத் தமிழர்கள் மட்டுமன்றி உலக அகதிகள் பலரும் இப்படித்தான் சமாதியாகின்றார்கள்.

எனது பள்ளி நண்பன் ஒருவன் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல வேண்டும் என்று பல வகையிலும் முயற்சி செய்து கொண்டிருந்தான். இரண்டு தடவைகள் செல்ல முற்பட்ட பொழுது அவன் சென்ற படகு பிடிபட்டுவிட்டது. நான் தமிழகத்திற்கு வருவதற்கு முன்பாக அவன் மூன்றாவது தடவையும் அவஸ்ரேலியா செல்ல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தான். எனக்கு அவன் மட்டுமல்ல யார் எமது நாட்டை விட்டுச்சென்றாலும் பெரும் இழப்பாக வலிக்கும். நான் மீண்டும் தாயகத்திற்கு செல்லுவதற்கு சில நாட்களின் முன்னர் இன்னொரு பள்ளி நண்பன் முகப்புத்தகம் வழியாக அவன் மூன்றாவது தடவையும் அவஸ்ரேலியாவுக்குச் சென்றுவிட்டான் என்றான். அவுஸ்ரேலியா செல்வதன் மூலம் அவனுக்குப் பாதுகாப்பும் பணமும் கிடைக்கும். ஆனால் எமது மண் ஒரு குடிமகனை இழந்துவிடும்.

நான் மீண்டும் தாயகம் வந்துவிட்டேன். ஒருநாள் ஒரு அழைப்பு. அந்த நண்பன் மீண்டும் பிடிபட்டிருந்தான். கொழும்பில் உள்ள சிறைச்சாலையில் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தான். விரைவில் விடுதலையாகி வருவதாகவும் சொன்னான். சிறையிலிருந்து சாப்பிடச் செல்லும் சின்ன இடைவெளியில் யாரோ சிங்கள அதிகாரியிடம் அதிக பணம் கொடுத்து அவன் அப்படித் தொலைபேசியால் தொடர்புகொண்டான். இந்தச் செய்தி நிச்சமாக எனக்கு மகிழ்ச்சி அளித்தது.

அவனை யார் பிடித்தார்கள்? எப்படி அகப்பட்டான்? இப்பொழுது இலங்கையின் எந்த ஒரு பாகத்திலிருந்தும் கடல் வழியாக செல்வதாக இருந்தால் இலங்கை இராணுவத்தின் அனுமதியில்லாமல் செல்ல முடியாது. சட்டவிரோத படகோட்டிகள் இலங்கை அரச இராணுவத்தின் பெரும்தலைகளுக்கும் பணத்தை கொடுத்துதான் தமது படகுகளை எடுத்துக் கொண்டு செல்கின்றார்கள். இப்படி பல தடவைகள் பணம் கட்டிக் கட்டி பிடிபட்டவர்களும் உள்ளார்கள்.

எமது நகரங்களில் இன்று அவுஸ்ரேலிய அரசு ஒரு பெரிய விளம்பரத்தை வைத்திருக்கிறது. பெரியளவிலான கட்டவுட். இருட்டான கபட்சியில் ஒரு சட்ட விரோத ஆட்கடத்தல்காரர் பணத்தை எண்ணிக்கொண்டு ஆசை வார்த்தை கூறுகிறான். அருகில் ஒரு கடதாசிப் படகு வரை அதன் மேல் குறுக்கும் மறுக்குமானக புள்ளடி இடப்பட்டிருக்கிறது. சட்ட விரோத புகலிட கோரிக்கையாளர்களுக்கு இனி இடமில்லை. ஆட்கடத்தல்கார்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். இங்கு வேலையும் இல்லை என்று அந்த விளம்பரம் சொல்லுகிறது. புகைத்தல் உடல் நலத்தை பாதிக்கும் என்று எங்கு பார்த்தாலும் நினைவுபடுத்தப்படுவதுபோல இலங்கையின் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் எல்லாம் இந்த விளம்பரத்தை மீண்டும் மீண்டும் வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

இதைப் பார்த்த பிறகும் எங்கள் மண்ணிலிருந்து படகுகள் செல்லு;ம் எண்ணிக்கையில் குறைவில்லை. முல்லைத்தீவிலும் திருகோண மலையிலும் சில இடங்களில் கிராமங்களுடன் மக்கள் சென்று விட்டார்கள். அவுஸ்ரேலியா போய் நல்லா இருங்க. நல்லா உழைங்க!! அங்க போய் ஈழம் கேளுங்க!!! என்று அவர்களை அனுப்புவதில் ஊக்கப்படுவத்துபவர்கள் இலங்கைப் படைத்துறையினர். அவர்களில் ஒரு பகுதியினர் அனுப்பும் படகுகளை மற்றப் பகுதியினர் கைப்பற்றுகின்றனர். போரின் பிறகும் இருந்த காணியை, நகை நாட்டுக்களை, சொத்துக்களை விற்ற பணம்  எல்லாம் இப்படி ம:Pண்டும் மீண்டும் படையினரைப்போய்ச் சேருகின்றன.

கிளிநொச்சி முறிப்பில் இருந்த எனது நண்பன் ஒருவன் புலிகள் இயக்கத்தில் இருந்தான். அவன் தடுப்பில் இருந்து வந்த பொழுதும் அவனை படையினர் அடிக்கடி வந்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள். இதனால் அவனது அம்மா பெரும் கலக்கம் கொண்டார். அவனுக்கு ஆபத்து என்று சொல்லி அவன் கண்காத இடமென்றாலும் உயிருடன் இருக்கட்டும் என்று அவுஸ்ரேலியா அனுப்ப திட்டமிட்டார். அவன் போராளியாக இருக்கும்பொழுது ஒருநாள் விடுமுறையில் வந்தான். அவனுக்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் என்னையும் ஏற்றிக்கொண்டு வன்னி முழுதும் திரிந்தான். அவனுக்கு அன்று பெரும் சந்தோசம். அதற்கு இரண்டு நாட்களின் பின்னர் போனவனை யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகளாகிவிடட நிலையில் அன்றொருநாள் பேரூந்துக்குள் கண்டென்.

எனக்கு பின் ஆசனத்தில் இருந்தவனை முதலில் நான்தான் எதேர்ச்சையாகக் கண்டன். பேரூந்துக்குள் கொஞ்சம் பதுங்கிப் பதுங்கியே பேசினான். இடையில் தேநீர் குடிப்பதற்காக இறங்கிய பொழுதுதான் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லுவதற்காகவே இப்பொழுது போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனுடன் நான் சரியாக பேச முடியவில்லை. பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இடையில் நான் அசந்து தூங்கிவட்டடேன். கண் முழித்துப் பார்த்ததும் முதலில் பார்த்தது அவனது இருக்கையைத்தான். அவனைக் காணவில்லை. இருக்கை வெறுமையாக இருந்தது. அந்த நண்பன் போய்விட்டான். இப்படி எத்தனை எத்தனை நண்பர்கள் நாட்டை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு நண்பனை விளையாட்டு மைதானத்தில் வைத்துச் சந்தித்தேன். அவன் தற்பொழுது போராளித் தடுப்புமுhமிலிருந்து வந்திருந்தான். விளையாட்டு மைதானத்தில் பழைய நண்பர்கள் யாருமில்லை. சில இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தாலும் மைதானம் வெறுமையாகத்தான் இருந்தது. கொஞ்சம் விரக்கியோடுதான் நீ மட்டும் ஏன் அவுஸ்ரேலியா போகவில்லை என்று கேட்டேன். நானும் போயிருவன்,போகஏதும் வேணுமே என்றான். ஆனால் நமது நண்பர்கள் பலரை விசாரித்த பொழுது அவன் கைளில் இருந்த விரல்களை எல்லாம் மடித்து எல்லோரும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள் என்றான். இப்பொழுது இருப்பவர்கள் சிலர்தான். எல்லா இளைஞர்களும் மண்ணை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த பின்னர் நாட்டில் வாழ என்ன இருக்கிறது? என்ற உளவியல் அனைவரிடமும் உள்ளது. போராட்டம் வாழும் நம்பிக்கையை எதிரகால நம்பிகiயை உருவாக்கியது. ஆனால் முள்ளிவாய்க்கால் யுத்தம் இன அழிப்பின் முடிவல்ல தொடக்கம் என்பதனால் அழிவிலிருந்து தப்பிக்கொள்ள நாட்டை விட்டு வெளியேற நினைக்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலின் பின்னர் தொடர்ச்சியாக அழிக்கப்படும்பொழுது அதிலிருந்து தப்பித்து உயிரைப் பாத்துகாத்து இனத்தை பாகாத்தலும் ஒரு வகையில் போராட்டம்தான். அதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் புலம்பெயர்ந்து செல்லுபவர்களில் ஒரு சிலர்தான் வெளிநாட்டுக் கவர்ச்சியால் செல்லுகிறார்க்ள. ஏனைய பலர் அச்சுறுத்தலால் புலம்பெயர்கிறார்கள். பலர் போரில் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை முன்னேற்றச் செல்லுகிறார்கள். அப்படிச் செல்லாவிட்டால் அவர்களின் குடும்பமும் வழ்க்கையும் அழிந்துவிடும்.

எமது தாயகத்தில் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் குறைந்து கொண்டே வருகிறது. இன்று வாக்களிக்கிற பிள்ளைகள் மட்டுமல்ல நாளைய அரசியலைத் தீர்மானிப்பவர்களே புலம்பெயர்ந்து கொண்டிருக்கும் நிலையில்hன் சிங்களர்கள் கொண்டு வந்து குடியேற்றப்படுகின்றார்கள். இதுதான் எங்கள் நிலத்தை பாதிக்கப்போகிறது. எமது குடிப்பரம்பலை அது பாதிக்கும். சிங்கள அரசுகள் சிங்கள மக்களை எமது தாயகத்தில் குடியேற்றி நாளை எதையும் செய்யக்கூடிய நிலையை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இதனாலேயே தாயகத்தில் தொடர்ந்து மக்களை அரசு நெருக்கடிக்கு உள்ளாக்கின்றது.

இந்த நெருக்கடிகளின் மூலம் இங்கு வாழ முடியாது என்கிற பொழுது வெளிநாடு செல்லட்டும். அப்பொழுது உள்நாட்டில் ஈழ வேண்டும் என்றோ, உரிமை வேண்டும் என்றோ சொல்ல யாரும் இருக்க மாட்டர்கள் என்று இலங்கை அரசு கருதுகிறது. குறிப்பாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறுபடியும் ஆயுதப்போராட்டத்தை தோற்றுவிக்க முடியும் என்பதனால் அவர்களை துரத்திவிட வேண்டும் என்று திட்டமிடுகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூலம் மாத்திரம் ஈழத் தமிழர்களை அழித்து விட முடியாது அவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது என்று கருதுகிற அரசின் தொடரும் இன அழிப்புத்தான் இப்படியான நெருக்கடிகள்.

புகலிடக்கோரிக்கையாளர்கள் நீச்சல் தடாகங்களைப் பயன்படுத்த முடியாது என்று அவஸ்ரேலியா சொல்லியிருக்கிறது. அகதியாய் செல்பவர்களுக்கு நீச்சல் தாடாகங்களா வேண்டும்? ஆனாலும் இந்த மாதிரியான அவமானங்களை எல்லாம் சுமப்பது தவிர்க்க முடியாதது. ஏனெனில் அகதி. அவுஸ்ரேலிய முகாங்களில் எமது மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு இலங்கையில் மாத்திரமல்ல உலகம் எங்கிலும் மனிதாபிமானம் மறுக்கப்படுகிறது. ஐ.நாவின் அகதிகள் சட்டத்திற்கு விரோதமாகவே நடக்கிறது. ஈழத்தில் இருந்த முள்வேலி முகாhங்கள்போல இப்பொழுது ஈழ முகாங்கள் அங்கும் விரிந்திருக்கிறது. படகுகளின் வழியே சென்றவர்கள் விமானங்களின் வழியே திருப்பி அனுப்பப்டுகிறார்கள். அவுஸ்ரேலிய முகாங்களிலிருந்து வந்ததவர்கள் கொழும்பின் விசாரணை முகாங்களில் அடைக்கப்படுகிறார்கள்.

உயிர் ஆபத்தால் இலங்கை அரச படைகளிடமிருந்து தப்பி அதே படைகளுக்கு பணம் கொடுத்து அவுஸ்ரேலியா சென்ற ஒருவன் மீண்டும் அந்நாட்டு அரசால் இலங்கை அரச படைகளிடம் ஒப்படைக்கப்புடுவது என்பதும்அவன் கடலில் மூழ்கி சாவதும் ஒன்றே!

அவுஸ்ரேலிய முகாம் ஒன்றிலிருந்து ஒரு நண்பன் முகப்புத்தகத்தில் உரையாடினான். ஒவ்வொரு நண்பரகளும் இந்த மண்ணை விட்டு போகும்பொழுது எதையெதையோ இழப்பதுபோலத் தோன்றும். நண்பர் கூட்டமாய் மீண்டும் எம் நகரில் சுற்ற வேண்டும். எம் நிலத்தில் மகிழ்ந்து வாழ வேண்டும் என்பது வாழ்வின் கனவல்லவா? யாரும் இல்லாத வாழ்வில் என்ன இருக்கிறது. அவனின் பயணம், எதிர்கொண்;ட துயரங்கள்,  இப்பொழுது ஒரு அகதிமுகாமில் தங்கியிருப்பது குறித்து பேசிக் கொண்டிருந்தான். நீ எப்பொழுது எங்கள் மண்ணுக்கு திரும்புவாய் என்று கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அவனாகவே சொன்னான் மச்சான் எப்படா எங்கடா நாட்டுக்கு வருவன் என்டிருக்குது. கெதிய வரவேணுமடா... என்று சொன்னான்.

இன்னும் படகுகள் ஈழத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இன்னும் பலர் புறப்படத் தயராகிக் கொண்டே இருக்கிறார்கள். உலகக் கடலில் படகுகள் தத்தளித்துக் கொண்டிருக்கும்போதும் படகு மாயம்ஆனபோதும் புறப்பட நினைத்தவர்கள் தங்கள் பயணத்தை நிறுத்திக் கொள்ளாதது ஏன்? எங்கள் மண்ணை விட்டு வெளியேறாத ஒரு காலம் வருமா? எங்கள் மண்ணில் நாங்கள் மகிழ்வோடு வாழும் காலம் வருமா? இங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகுகள் செல்லாத ஒரு காலம் வருமா?

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109101/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.