Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி தொண்டமான் நகர் வயிரவர் கோயில்காணி கரைச்சி பிரதேசசெயலகத்தால் மீண்டும் தாரைவார்ப்பு

Featured Replies

மக்கள் விசனம் கவனீயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை:-

V1_CI.JPG
மக்கள் விசனம் கவனீயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை:-
 
கிளிநொச்சி தொண்டமான் நகர் வயிரவர் கோயில்காணி கரைச்சி பிரதேசசெயலகத்தால் மீண்டும்  தாரைவார்ப்பு-
 
கிளிநொச்சி தொண்டமான் நகர் உதிரவேங்கை வயிரவர் ஆலயத்துக்கு சொந்தமான காணியை கடந்த ஆண்டு தென்னிலங்கையை சேர்ந்த தனியார் கம்பனி ஒன்றுக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேசசெயலகம் கையளிக்க முற்பட்டு இருந்தது.
 
 
இந்த நிலையில் தொண்டமான்நகர் மக்கள் மற்றும் பா.உறுப்பினர் ச.சிறீதரன் பிரதேசசபை உறுப்பினர்கள் தலையிட்டு சட்ட நடவடிக்கையை மேற்கொண்டதன் அடிப்படையில் கடந்த ஆண்டு கிளிநொச்சி நீதிமன்றால் காணி கோயிலுக்கு சொந்தமானதாக தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
 
 
தற்போது சில நாட்களுக்கு முன் குறிப்பிட்ட தென்னிலங்கை சேர்ந்த பணமுதளை கோயில் காணிஎன தீர்ப்பளிக்கப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து மீண்டும் காணி அபகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் அக்கிராமத்து மக்கள் மீண்டும் இது தொடர்பாக விசனமும் கவலையும் அடைந்துள்ளதுடன் இது தொடர்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
 
கிளிநொச்சி தொண்டமான் நகர் கிராமம் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துவருகின்றது. குறிப்பாக சனசமூகநிலையம் முன்பள்ளி மாதர்கிராம அபிவிருத்தி சங்கம் ஆரம்ப சுகாதார நிலையம் ஞானவைரவர் விளையாட்டுக்கழகம் போன்றவற்றை நடத்துவதற்கான கட்டடிடங்களை அமைப்பதற்கு ஒரு பொதுக்காணி இல்லாத நிலையில் தொண்டமான்நகரில் உள்ள ஒரு பொதுக்காணியை தென்னிலங்கையை சேர்ந்த ஒருவருக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேசசெயலகம் வழங்கியுள்ளது மக்கள் பிரநிதிகளுக்கும் பொது அமைப்புக்களுக்கும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
இந்த நிலையில் தொண்டமான் நகர் மற்றும் அயற்கிராமங்களின் மக்கள் பொது அமைப்புகள் இந்த அடாவடித்தனத்தையும் நீதிமன்ற அவமதிப்பையும் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு அபகரிக்கப்படும் காணிக்கு அருகிலேயே நடத்த தீர்மானித்துள்ளன.
 
 
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சகல கிராமங்களின் பிரதிநிதிகளையும் மற்றும் கரைச்சி பிரதேசபை உறுப்பினர்கள் வடமாகாணசபை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளை கலந்துகொண்டு இக்காணியை தொண்டமான்நகர் மக்களுக்கு பெற்றுத்தர ஆவன செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
 
கிளிநொச்சியில் சொந்தமாக காணி இல்லாத நிலையில் எத்தனையோ ஏழை மக்கள் வீட்டுத்திட்டங்களையும் வசதிகளையும் இழந்தும் காணிதருவதாக கூறி யூனியன்குளம் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று  அமர்த்தப்பட்டு சொல்லொணா துன்பங்ளை சுமந்துவரும் நிலையில் கிளிநொச்சி நகரில் பொதுக்காணி ஒன்று தென்னிலங்கை சார்ந்த ஒருவருக்கு கிளிநொச்சி அரசநிர்வாகிகளால் வழங்கப்படுவது மாபெரும் மனிதாபிமான துரோகம் என்றே கருதப்படுகின்றது. 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.