Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு தள்ளுவண்டிகளின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலாபம் திண்ணனூரான்

 

கொழும்பு புறக்கோட்டை வர்த்தக வீதிகளில் 'யோவ், யோவ்.வழி வழி.' என பெரும் சத்ததுடன் தள்ளு வண்டிகளில் மூடைகளை அடக்கி வைத்து வண்டியை  தள்ளிக் கொண்டு போவார்கள். மனிதனின் ஒவ்வொரு கண்டு பிடிப்புகளுக்கும் வரலாறு உள்ளது. அவ்வாறு இவ்வண்டிகளுக்கும் வரலாறு உள்ளது. இவ் வண்டி வியாபாரம் வியப்பானது. புதுமையானது. இது குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் தள்ளுவண்டி வியாபாரம் நடத்தி வரும் கணேஷ் தர்மலிங்கம்.

 

இத்தள்ளுவண்டித் தொழிலில் ஈடுபடும் நாட்டாமைகளுக்கு ஆரம்ப காலத்தில் நாடார் வர்த்தகர்களே கொழும்பில் வண்டிகளை நாளாந்த  வாடகைக்கு வழங்கிக் கொண்டு இருந்தனர். முன்னர்  இவ்வண்டிகளின் சக்கரங்கள் லண்டன் யுத்த டாங்கியின் சக்கரங்களை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அவைகள் இரும்பு சக்கரங்களாகும். 

 

மாட்டு வண்டில்களின் ஓட்டம் கொழும்பில் குறைவடைய, இத்தள்ளு வண்டிகளின் ஆதிக்கம்  தலையெடுக்க  ஆரம்பித்தது. பி. எஸ். நாடார், எம். றே. நாடார் இருவரின் வண்டில்களே கொழும்பில் ஆதிக்கம் செலுத்தின. 
அன்று ஒரு நாள் கூலி ஒரு ரூபாய் முதல் ஒன்று ஐம்பது வரை இருந்ததாக என் அம்மா சொல்வார். காலத்தின் சக்கரச் சூழல் சிக்கி எம். ஜே. நாடார் இந்தியா திரும்ப ஏற்பட்டது. என் அம்மா மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்த பணத்தில் எம். ஜே. வண்டிகளை விலை கொடுத்து வாங்கினார். என் அம்மா பெயர் ராஜம்மா. முதன் முதல் கொழும்பில் தள்ளு வண்டில்களுக்கு உரிமையாளராக விளங்கிய பெண் என் அம்மாதான். அது அவரின் பெரும் சாதனை. இது 1980 இல் இடம்பெற்றது. இப்போது இருக்கும் இதே சென்றல் வீதியிலேயே எனது அம்மா வண்டில் வாடகை வியாபாரத்தை நடத்தினார். எனது அம்மாவிடம் அன்று சுமார் 100 வண்டில்கள் இருந்தன' எனத் தெரிவித்தார் கணேஷ் தர்மலிங்கம். 

112DSC05848.jpg

இன்றும் வண்டில்களில் எம். ஜே. (ஆ.து) என்ற ஆங்கில அடையாள எழுந்து இருப்பதைக்  காணலாம். முருக ஜெயம் என்ற  சொற்களின் ஆங்கில முதல் எழுத்துக்களே எம். ஜே. ஆகும். இது எங்கள் வம்ச வண்டியின் அடையாளச் சின்னமாகும். எங்கள் அம்மா இவ்வண்டில்களோடு பகல் இரவாக மல்லுக்கட்டுவார். வாடகை வசூலிக்க வேண்டும். வண்டில்களின் திருத்த வேலைகளை செய்ய வேண்டும். விடிய மூன்றுமணிக்கு வண்டில்களை பெற்றுச் செல்வோர். இரவு 8 அல்லது 9 மணிக்கே திரும்ப கொண்டு வருவார்கள். இவ்வாறு வண்டி நிர்வாகத்தை அம்மா மேற்கொண்டார்
இத் தொழில் பெரும் சிக்கல் நிறைந்த தொழிலாகும். அம்மாவின் ஒரே இலட்சியம் குடும்பத்தை தலைநிமிர வைக்க வேண்டும் என்பதேயாகும். எனது அம்மா என்னைப் பொறுத்தவரை தியாகி நாங்கள் இதே சென்றல் வீதியில் தான் வாழ்ந்தோம். 

 

எங்களை ஒரு நாளும் பசியில் உறங்க வைக்கவில்லை. நான் தலை தூக்க ஆரம்பித்ததும் 1984இல் இதே இடத்தில் பழைய நாவல்கள் சிறுகதைப் புத்தகங்களை கொள்முதல் செய்து கோவை புத்தக நிலையம் என்ற நாமத்தில் வர்த்தகத்தை ஆரம்பித்தேன். இன்றும் அதே தொழிலை செய்கின்றேன். இந்த வீதி முழுவதும் காணப்படுவது எங்களின் வண்டில்களாகும். 

 

இந்த ஒவ்வொரு வண்டியின் சக்கரத்தினுள்ளும் எனது அம்மாவின் வியர்வைத் துளிகள் இருக்கலாம். அவ்வாறு கடுமையாக உழைக்கும் பெண்ணே என் அம்மா. அவர் காலமானதும் எனது தம்பி செல்வம் (குமார்) வண்டில்களை பொறுப்பெடுத்தார். இவர் பெரியளவில் வண்டில் தொழிலை ஆரம்பித்து இன்று வண்டி வர்த்தகராகிவிட்டார். இவர் பாடசாலை காலத்தில் சாரணர் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். இவரின் வண்டில் வர்த்தகம் பெரிதாகியமை குறித்த தகவல்களi சாரணர் இயக்கத்தினர் எப்படியோ தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளனர். 

112DSC05861.jpg

இவ்வாறான நிலையில் சாரணர் இயக்கத்தின் வைபவம் ஒன்றின்போது பிரதம அதிதியாக இணைந்துக் கொண்ட பிரிகேடியர் ஒருவர்,  'சாரணர் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் இன்று பலருக்கு வாழ்வு கொடுத்து வருகின்றனர். இவர் பலர் தள்ளு வண்டிகளை வாடகைக்கு விடுவதால் பலர் இவ்வண்டியின் மூலமாக உழைத்து குடும்பத்தை பராமரித்து வருகின்றனர். இவரின் எமது சேவையானது பெரும் சமூகசேவையாகும். இவரால் எமது இயக்கத்திற்கு பெரும் பெருமை சேர்கிறது. எனவும் பாராட்டியுள்ளார்' எனவும் கணேஷ் தர்மலிங்கம் தெரிவித்தார். 

 

'இன்று வண்டில்கள் அனைத்தும் காலத்துக்கு ஏற்றவகையில் மாற்றங்களை அடைந்துள்ளன. பலகைகளினால் நிர்மாணிக்கப்பட்டு இரும்பு சில்லுகளுடன் ஒடிய இவ்வண்டிகள் இன்றும் முழு இரும்புகளை கொண்ட வண்டிகளாக தயாரிக்கப்பட்டுள்ளன. இரும்பு சில்லுகள் அப்புறப்படுத்தப்பட்டு கார் வாகனங்களுக்கு பொருத்தப்படும் டயர் போடப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

 

இவ்வாறான வண்டில்கள் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர் போன்ற பெரும் நகரங்களில் காணப்படுகின்றன. அவ்வண்டில்கள் கொஞ்சம் உயரமாகவும் அகலமாகவும் காணப்படும். எங்களின் வண்டில்கள் நீண்டு அகலம் குறைவாகவும் பாவிப்பவருக்கு ஏற்றவகையில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வளவுக்கும் எனது தம்பி குமாரே காரணமாகும். 

 

இந்நிலையில் எனது அப்பாவும் நீண்ட நெடுநாள் 1975களில் வண்டில் தொழிலை செய்தவர். ஐம்பது வண்டிகளை வைத்திருந்தார். இவரின் வண்டில்களில் எம். எஸ்.  என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டு இருக்கும். இது எம. சைவம் என்ற வாசகத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. எனது அப்பாவும் ஒரு காலத்தில் வண்டி இழுத்தவர். அவரும் வண்டித் தொழிலாளியாக வாழ்ந்தவர். பின்னர் வண்டி முதலாளியாகி மாறினார். அத்தொழிலை எம் அம்மா பெரியளவில் தண்ணீர் உற்றி வளர்ந்து விட  எனது தம்பிகள் அதை விருட்சமாக்கி விட்டனர். எங்களின் முழுக் குடும்பமும் வண்டிகளோடு வாழப்பழகிக் கொண்டது. 

 

இன்று கொழும்பில் புறக்கோட்டை வர்த்தக மையத்திற்குள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டாமை தொழிலாளர்கள் இக் கரத்தை எனப்படும் தள்ளு வண்டிகள் மூலமாக தங்களின் தொழிலை மேற்கொள்கின்றனர'; என பல்வேறு தகவல்களை எமக்கு வழங்கினார் கணேஷ்.

112DSC05850.jpg

இத்தொழில் பார்வைக்கு சாதாரணமாக பலருக்குத் தெரியும். வாடகைக்கு விடும் வண்டில்களை திரும்பும் பெறுவது. வாடகை பணத்தை வசூலிப்பது, திருத்த வேலைகளை செய்வது என பல சிக்கல்கள் இத்தொழிலுக்குள் உள்ளன. எல்லாத் தொழில்களும் பார்ப்போரின் பார்வைக்கு மிக இலகுவாகத் தெரியும் அத்தொழிலுக்குள் முடங்கியிருக்கும் அச்சம் இடையூறுகள், இழப்புக்கள், ஏமாற்றம், குற்றம் குறைகள், தாழ்வு மனப்பான்மை, துணிவு, தோல்விகள், பதற்றம், பலவீனம், பொறாமை, வெறுப்பு என்பன பலருக்குத் தெரியாத விடயங்களாகும். ஒவ்வொரு தொழிலுக்குள்ளும் இவ்வானா விதி முறைகள் மறைந்திருக்கின்றன. இவ்வாறான  விதிமுறைகள் வண்டித் தொழிலும் உள்ளன. 

எனது தம்பி இத்தொழிலை மேம்படுத்து வதற்காக பெரும் தியாகத்தை புரிந்துள்ளார். நாள் தோறும் அதிகாலை இரண்டரை மணிக்கு தனது தொழிலை ஆரம்பிப்பார். இரவு 12 மணி வரை தூக்கத்தை தொலைந்து வண்டி தொழிலை பார்வையிடுவதே இவரின் கடமையாகி விட்டது. 

 

எனது மற்றுமொரு தம்பியான ரவி மகேஷ்வரன் இத் தொழிலின் மறுபக்கமாக செயல்படுகிறார். இவரது கடமை முறையாக வாடகை பணத்தை தராதவர்களிடம் வாடகைப் பணத்தை வசூலிப்பது, காணாமல் போகும் வண்டிகளை தேடிக் கண்டுப் பிடிப்பது, வீதிகளில் முறையாக வண்டிகளை நாட்டமைகள் கொண்டுச் செல்லாமல் போக்குவரத்து விதிமுறைகளுக்கு மாறாக சென்று, பொலிஸாரால் பொலிஸ் நிலையம் கொண்டுச் செல்லுகையில் அதை மீட்டெடுப்பது. உட்பட இத்தொழில் பிரச்சினைகளை கையாள்வது இவரின் பெரிய பணியாகும். எனது அம்மாவின் ஊக்கமும் அவரின் மறைவின் தாக்கமுமே எனது தம்பிகளை இத்தொழிலில் பெருமையுடன் ஈடுபட வைத்தது. 

 

எமது பெற்றோர் தலவாக்கலையிலிருந்து திருமணம் முடித்து வெறுங்கைகளுடன் கொழும்புக்கு வந்தவர்கள். முதலில் கதிரேசன் வீதியில் தங்கி பெரும் கஷ்டங்களையும் சோகங்களையும் சுமைதாங்கியைப் போல் ஏற்றுக் கொண்டு வாழப் பழகிக் கொண்டனர். எனது அம்மா பெரும் திறமைசாலி தொழில்களை வழி நடத்துவதில் கைதேர்ந்தவர் குளிர் காலத்தில் எறும்புகள் சிறுக சிறுக உணவுகளை சேகரித்து பொர்ந்துகளுக்குள் சேகரித்து வைத்துக் கொள்வதுப் போல் பல்வேறு தொழில்களை செய்து சிறுக சிறுக பணத்தை சேமித்து அவர் வண்டித் தொழிலை ஆரம்பித்தார். இதே சென்றல் வீதியில் தான் அம்மாவும், அப்பாவும் இத்தொழிலை மேற்கொண்டு இருந்தார். அம்மா வெறுங்கையோடு கொழும்பு வந்தார். அவர் இறக்கும் வரை வெறுங்கையோடு வாழவில்லை. அவர் இறக்கம் தருவாயில் எங்களை வெறுங்கையோடு விட்டு விட்டுச் செல்லவும் இல்லை' என்றார் கணேஷ் தர்மலிங்கம். 

எம்மோடு மீண்டும் அவரே பேச்சைத் தொடுத்தார். எவ்வாறு நீங்கள் பழைய புத்தக வியாபாரத்தில் ஈடுபட்டீர்கள்? எனக் கேட்டோம். 

 

'எனது சிறுவயதிலிருந்தே கவிதைகள் மீது ஒரு காதல் இருந்தது. அம்மாவோடு வண்டில்களை தள்ளி வீதிகளில் ஒரம்கட்டும் போதெல்லாம் வண்டிகளின் இரும்பு சில்லுகள் கிரீச் கிரீச் சத்தம் என்னை கவிதை எழுதும் படி மிரட்டும் எனது கவிதை கற்பனைக்கு உயிர் கொடுக்கும். அம்மா வண்டில் வியாபாரம் நடத்துகையில் மறுபக்கத்தில் நான் நாவல் சிறுகதைகளின் பழைய புத்தகங்களை கொள்முதல் செய்து விற்பனைக்கு விட்டேன். அதிலும் வருமானம் கிடைந்தது. கோவை புத்தக நிலையம் என பெயரிட்டேன்.

 குறுகிய காலத்தில் பலர் என்னைத் தேடி புத்தகம் கொள்முதல் செய்ய வருகைத் தந்னதர். பழைய புத்தகங்களின் இருப்பு பெருகப் பெபருக பலரின் அறிமுகம் கிடைத்தது. பல தரப்பிரனரும் என்னை நாடி பழைய புத்தகங்களை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகல் எனக்கும் ஆர்வம் பெருகியது.  கிடைக்கப்பெறாத பல தமிழ் சிங்கள நூல்கள் என்னிடம் உள்ளன. இது பல அறிஞர்கள் கூடும் இடமாகிவிட்டது. 

112DSC05856.jpg

திருக்குறளுக்கு அடுத்து பெருமை வாய்ந்த நீதி நூலான நாலடியார் நூல் என்னிடம் உள்ளது. இது 1893 இல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இதற்கு இன்று 121 வயதாகின்றது. நாலடியாரின் சிறப்பு கருதியே வண பிதா. ஜி.யூ போப்  இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அவர் மொழி பெயர்த்த ஆங்கில மொழி பெயர்ப்பு 'வுhந யேடயனலையச' என்னிடம் உள்ளதுட. இந்நூல் இன்று கிடைப்பது மிக அரிதாகும். (எம்மிடம் அந்நூலை காட்டினார்). 

 

'இது போன்றே புத்திரக்கித்த மகா தேரர் 1900 ஆண்டு எழுதிய ஜனலங்கார என்ற கவிதை நூலும் எங்கும் கிடைப்பது அரிதாகும். அந்நூலும் என்னிடம் உள்ளது. இவ்வாறான பல நூல்கள் விலைமதிபற்றவை. எனது நிறுவனத்தில் உள்ளது' என்கிறார் கணேஷ் தர்மலிங்கம்.

 

(படங்கள் கே.பி.பி.புஷ்பராஜா) 

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=112&display=0#sthash.kasTZhMx.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.