Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரப்போகும் நாடாளுமன்றம் தேர்தலையொட்டிய அரசியல் - சாந்தி சச்சிதானந்தம்

Featured Replies

அதிகார பேராசை பிடித்து மகிந்த இராஜபக்சவும் அவருடைய கூஜா தூக்கிகளும் குட்டையைக் குழப்பிக் கொண்டேயிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவர்களுடைய திட்டங்களையெல்லாம் பொடிப்பொடியாக்குவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பவர் தீட்டக் கூடிய சதித் திட்டங்கள் பலவுண்டு. அதிலொன்றுதான் Giving a long enough rope to hang himself  என ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற முறையாகும். அதாவது நல்ல நீட்டான கயிறு திரித்துக்கொடுத்து அக்கயிறைக் கொண்டே ஒருவர் தன்னைத்தானே தூக்கிலிட வைப்பது என இதற்குப் பொருள்படும். மகிந்த இராஜபக்ச மெதமுலனவில் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திலும் கட்சித் தலைவர் தனது ஆதரவாளர்களையும் தனக்கு ஆதரவான அமைச்சர்களையும் மகிந்த ஆதரவாளர்களாக பாசாங்கு பண்ணி அனுப்பி வைப்பதிலிருந்து இது ஆரம்பிக்கின்றது.

தன்னிடம் வந்து சேருகின்ற மக்களையும் அரசியல்வாதிகளையும் பார்த்து விட்டு தனக்கு நிரம்ப ஆதரவு இருக்கின்றதென நம்பி மகிந்த ஆழத்தில் காலை விட்டு தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிpவிக்க வைப்பது அடுத்த கட்டமாகும். அறிவித்தலைத் தொடர்ந்து இதுவரை அவர் கூட்டத்தில் பங்குபற்றியவர்களை நிறுத்தி வைத்து அவரை நட்டாற்றில் கைவிடுவது மூன்றாம் கட்டமாகும். அறிவித்தலை வாபஸ் வாங்க வழியில்லாமல் அவர் ஐ.ம.சு.மு யில் வேட்பாளர் நியமனம் கேட்டு நிற்கும்போது இதோ தீர்மானம் எடுக்கின்றோம் எனக்கூறியே நாள் கடத்தி கடைசி நேரத்தில் கையை விரிப்பது நான்காவத கட்ட நடவடிக்கையாகும். இதைத்தான் ஜனாதிபதி சிரிசேன செய்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சம்பவங்கள்  அப்படித்தான் கோடு காட்டுகின்றன.

மகிந்த தான் தேர்தலில் போட்டியிட்டு அரசாங்கம் அமைக்கப்போவதாக அறிவித்த பின்னரான மெதமுலன கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தாலும்  எதிர்பார்த்த அளவு அமைச்சர்கள் சமுகம் தரவில்லை. மகிந்த ஆதரவாளர்களுக்கு வேட்பாளர் நியமனம் கொடுக்கப்பட மாட்டாது என கட்சிக்குள்ளிருந்து கசிந்து வந்த செய்தியும் இதற்கு ஓர் காரணமாக அமையலாம். இதனால், தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி என்னும் ஓர் சிறிய கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி மகிந்த தரப்பினர் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கை வாக்காளர்கள் தலைவர்களுக்கு விசுவாசிகளாக வாக்குகள் போடுவதைவிடவும் கட்சிக்கே விசுவாசமாக இரக்கமையே இதுவரை கண்டிருக்கின்றோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சி தலைமைப் பீடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரொருவருக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டபோது மிகுந்த மனக் கிலேசம் அடைந்த போதிலும் தமது கட்சி கேட்கின்றதேயென்னும் ஒரோ காரணத்திற்காக அதன் ஆதரவாளர்கள் சிரிசேனவிற்கு வாக்களித்ததை காணக்கூடியதாக இருந்தது. மகிந்த ஒரு புதிய கட்சியில் போட்டியிட நேர்ந்தால் எவ்வளவு தூரத்திற்கு ஸ்ரீலங்கா கட்சி ஆதரவாளர்கள் தமது கட்சியை விட்டு புதிய கட்சிக்கு வாக்களிப்பர் என்பதை தேர்தல் முடிவுகள்தான் கூற முடியும். இனிவருங்காலம் சுவாரசியமான காhலமாக இருக்கப் போகின்றது. .

தென்னிலங்கை அரசியல் இவ்வாறு போய்க்கொண்டிருக்க தமிழ் மக்களின் அரசியலோ  ஏதோவொரு குழப்பமான பாதையில் போய்க்கொண்டிருக்கின்றது. புதிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளர்ர்.  என்ன தீர்வு, யார் தரப்போகிறார்கள் என்கின்ற எங்களது கேள்விகளுக்கு, சமஸ்டித் தீர்வுதான் என உத்தரவாதம் தருகின்றார் சுமந்திரன். மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என அவர் விளக்கியிருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டில் ஒரு பாரிய பிரச்சினை தொக்கி நிற்கின்றது.

முதலாவதாக, என்ன தீர்வுகள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தமிழ் மக்களுக்குத் தெரியமலிருக்கும் பிரச்சினையாகும். சிங்கள களத்தில் அரசியல் அவை தெரிந்து விட்டால் பௌத்த தீவிரவாதக்குழுக்களுக்கு வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கொடுத்த மாதிரியாக இருக்கும் எனக் கருதுவது ஓரளவுக்கு சரிதான். ஆனால் அதற்காக, தமிழ் மக்களுக்கும் தெரியாத வண்ணம் இரகசியமாக இந்தத் தீர்வுகள் எட்டப்படுவது சரியா? சமஸ்டி ஆட்சி என்பது ஒரு திட்டமான முறையல்ல. அது அமுலில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் சூழ்நிலைகளுக்கேற்ப ஒவ்வொரு வித்தியாசமான முறையாக  அது செயற்படுத்தப்பட்டிருக்கின்றது. வெறும் நிர்வாகப் பகிர்வு நடைமுறையிலிருந்து சுயாதீன நாடாளுமன்றங்களின் இணைப்பு முறை வரை இதன் பரப்பெல்லை விரிந்திருக்கின்றது.

பொதுவாக, ஒரு சம~;டி அரசின் அம்சங்கள் ஆறாகும். இரண்டு படிநிலையிலுள்ள அரசுகள் தமது பொதுவான பிரஜைகளுடன் நேரடியாக செயற்படுவதற்கான வரைமுறைகளை ஏற்படுத்துதல். முதலாவது அம்சமாகும். சட்டவாக்கம், நிறைவேற்று அம்சங்கள், வரி வருமானத்தின் ஒதுக்கீடுகள் என்னும் ஆட்சியின் மூன்று முக்கிய அதிகாரங்கள் ஒரு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக இரு அரசாங்கங்களுக்கும் அவற்றின் சுயாதீனத் தன்மையைப் பேணும் வகையில் பிரித்துக் கொடுக்கப்படுதல் அடுத்த அம்சமாகும்.

 பிராந்திய மக்களின் அபிப்பிராயங்கள் தேசிய கொள்கைத் திட்ட வகுப்பில் பிரதிபலிக்கும் முகமாக, பிராந்திய பிரதிநிதித்துவம் மத்திய அரசில் இடம்பெறுவதற்கான பொறி முறைகளை ஏற்படுத்தல் மூன்றாவது அம்சமாகும்.. நாட்டின் அரசியலமைப்பச் சட்டத்தில் ஏற்படுத்தப்படும் எந்தத் திருத்தமும் பிராந்திய மக்களின் குறிpப்பிட்ட வீதமானோரின் ஒப்புதலின்றி நடைமுறைப்படுத்தப்பட முடியாத விதிகளை ஏற்படுத்தல் நான்காவது அம்சமாகும். இந்த அரசாங்கங்களுக்கிடையில் ஏற்படக்கூடிய பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நீதித்துறை வழியாகவோ அல்லது சர்வசன வாக்கெடுப்பு வழியாகவோ நடுவர் முறையை செயற்படுத்துதல் ஐந்தாவமு; அம்சமாகும்.

எங்கெங்;கு இரு அரசாங்கங்களினதும் அதிகாரங்கள் ஒன்று மற்றதன் மீது படியும் குழப்ப நிலை காணப்படுகின்றதோ அங்கேயெல்லாம் இந்த அரசாங்கங்களுக்கு பொதுவான பொறிமுறைககளை செயற்படுத்தி நிலைமையைத் தெளிவாக்குதல் ஆறாவது அம்சமாகும். எத்தனை சிக்கல்கள். இது வெறுமனே காணி பொலிஸ் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடமிருந்து கேட்டுப் பெறும் விசயமல்ல என்பது இதனைப் பார்த்தால் விளங்கும். decentralized Unions, Unions,Federations, Federacies, Confederations, Associated Sates, Condominiums, Leagues, Joint Functional Authorities,  இவையெல்லாம் கலந்த கலவையாட்சி, என சமஸ்டி அரசுகள் பலதரப்படும். இந்த ஒவ்வொரு முறையிலான அரசும் மேலே கூறப்பட்ட ஆறு அம்சங்களையும் ஏதொவொரு விதத்தில் உள்ளடக்கியiவையாக இருக்கும்.

அத்துடன் சமஸ்டி அரசுகளின் உருவங்களும் வேறு வேறானவையாகும். உதாரணமாக, மலேசியாவானது 13 மாநில அரசுகரளக் கொண்டிருக்கும் அதே வேளையில் ஆர்ஜென்டீனாவில் 23 மாகாண அரசுகள், 5 பிராந்தியங்கள்,1 சமஸ்டி மாவட்டம், 1 தேசிய சமஸ்தானம் (territory)  ஆகியவற்றைக் கொண்டியங்குகின்றது. இதன் ஒவ்வொரு அலகுகளும் வித்தியாசமான அதிகாரங்களைக் கொண்டவையாக இருப்பதைக் காணலாம். இவ்வாறு சமஸ்டி ஆட்சி நடைமுறையில் இருக்கின்ற ஒவ்வொரு நாட்டினதும் நாட்டாட்சிப் பரப்பெல்லையும் வித்தியாசமான அமைப்புக்களைக் கொண்டியங்குகின்றன.

நம் நாட்டிலும் முஸ்லிம் மக்கள்  சிதறி வாழுகின்ற தன்மையினால் இது போன்ற ஏற்பாடுகளை சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தனி உரிமைகளையும் கூட்டு உரிமைகளையும் பாதுகாத்தல், ஒற்றுமை உருவாக்கும் அதே சமயம் ஒரு சமூகத்தின் பன்முகத்தன்மையையும் பேணுதல், சமஸ்டி அரசினது ஒவ்வொரு அலகும் வௌ;வேறான பரிமானம் சனத்தொகை ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் கூட அவற்றின் மத்தியில் சமத்துவத்தினைப் பேணுதல் போன்ற கொள்கைகளின் அடிப்படைகளில்  இந்த ஒவ்வொரு அம்சமும் தீர்மானிக்கப்படுகின்றன.

கூட்டமைப்பு சொல்வது போல எமக்குத் தரப்படப்போகின்ற சமஸ்டி ஆட்சி முறையானது இதில் எந்த வகையை உள்ளடக்கப்போகின்றது? அதனைத் தீர்மானிக்கப் போவது கூட்டமைப்பின் தலைமைப்பீடமும் சிங்கள அரசாங்கமுமா?. இதனைத் தீர்மானிப்பதில்  மக்களுக்கு எந்தப் பங்கும் இல்லையா? பரந்துபட்ட மக்களினதும் குறிப்பாக சிறுபான்மை இனத்தவர்களதும் ஆலோசனைகளையும் ஒப்புதலையும் பெறாமல் சிங்களத் தலைமைத்துவம் அரசியலமைப்புச் சட்டம் வரைந்துள்ளது என அவர்கள் மீது குற்றம் சாட்டும் நாம் இதே தவறை விடலாமா?

கூட்டமைப்பு உண்மையில் செய்யவேண்டியது யாதெனில், தாம் தெரிவு செய்யும் சமஸ்டி முறையின் நகலை மக்களின் பார்வைக்கு வைப்பதூன். முதலில் இதனைத் தமது கட்சித் தொண்டர்களுக்கு விளக்க வேண்டும். பின்பு வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவாக தமது கட்சித் தொண்டர்கள் மூலம் மக்களைச் சந்தித்து அவர்கள் முன் இதனை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஒவ்வொரு சந்திப்பும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டதாகவும், மக்களின் அபிப்பிராயங்கள் தொகுக்கப்படும் விதத்திலும் அமையவேண்டும். இந்த முறைவழியானது இருவழிப் போக்காக இருக்கும்.

அரசியலமைப்புச் சட்டத்தினையும் சமஸ்டி ஆட்சி முறை பற்றியும் மக்கள் மத்தியில் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படும் அதே நேரத்தில் அவர்களின் அபிப்பிராயங்களையும் உணர்வுகளையும் கட்சி பெறும் வகையில் இது இருக்கும். எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நிகழும் தருணத்தில், தமிழ் மக்கள் முன்மொழிந்த அம்சங்களில் ஏதாவது நிராகரிக்கப்படுமேயானால் 9கட்டாயம் நடக்கப்போகின்றது) அதற்கு எதிராக இந்த மக்களை அணிதிரட்டுவது இலகுவாக இருக்கும். மக்களின் இந்த கூட்டு நடவடிக்கை மூலமாக சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் அதன் மூலமாக ஸ்ரீலங்கா அரசின் மீதான அவற்றின் அழுத்தத்தினையும் நாம் ஏற்படுத்த முடியும். இவையொன்றையும் செய்யாது விட்டோமானால், இதைக் கேட்டோம் அதைத் தரவில்லையென உதட்டைப் பிதுக்கி அறிக்கைகளை வெளியிடும் பணியினைத்தான் எமது அரசியல்வாதிகள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கப் போகிறார்கள்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121631/language/ta-IN/article.aspx

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.