Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் டயாஸ்பொறாவை சிறிலங்கன் டயாஸ்பொறாவாக்கி அரசுடன் இணைக்கும் முயற்சி வெற்றியடையுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் டயாஸ்பொறாவை சிறிலங்கன் டயாஸ்பொறாவாக்கி அரசுடன் இணைக்கும் முயற்சி வெற்றியடையுமா?

கலாநிதி சர்வேந்திரா

<p>தமிழ் டயாஸ்பொறாவை சிறிலங்கன் டயாஸ்பொறாவாக்கி அரசுடன் இணைக்கும் முயற்சி வெற்றியடையுமா?</p>
 

 

புலம்பெயர் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசை தமது சொந்த அரசாகக் கருதுகிறார்களா? இக் கேள்வி தாயக மக்களுக்கும் பொருந்தும். ஆனால் தாயகத்தில் வாழும் மக்கள் சிறிலங்கா அரச கட்டமைப்புக்குள்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தாம் தாம் வாழும் நாடுகளின் அரச கட்டமைப்புக்குள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு தமது தாய்நாட்டின் அரசுடன் கொண்டிருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து தெரிவுகள் உண்டு. இதனால்தான் இக் கேள்வி இங்கு புலம்பெயர் மக்கள் குறித்து முன்வைக்கப்படுகிறது.

டயாஸ்பொறா தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட Gabriel Sheffer எனும் அறிஞர் புலம்பெயர் மக்கள் தமது தாய்நாட்டின் அரசுடன் கொண்டிருக்கும் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு அரசுடன் இணைக்கப்பட்ட டயாஸ்பொறா (state-linked diaspora), அரசற்ற டயாஸ்பொறா (stateless diaspora) என இருவகையாக வகைப்படுத்தினார்.

தழிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியுடன், குறிப்பாக 1983 ஆம் ஆண்டின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினரின் இராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கு சிறிலங்கா ஓர் எதிரி அரசாக இருந்தது. இவ் அரசுடன் தொடர்புகைளப் பேணுவனை புலம்பெயர் தமிழ் மக்கள் பொதுவாகத் தவிர்த்து வந்தனர். திருமணம், கடவுச் சீட்டு போன்ற விடயங்களுக்காக சிறிலங்கா தூதுவராலயத்துடன் தொடர்புகொள்ள வேண்டி ஏற்பட்டாலும் அது ஓடும் புளியம்பழமும் போன்றதொரு தொடர்பாகவே இருந்தது.  தமது சொந்த அரசாக சிறிலங்கா அரசைக் கருதாத ஒரு சூழலில் ஈழத் தமிழர் டயாஸ்பொறா சிறிலங்கா அரசுடன் இணைக்கப்பட்ட டயாஸ்பொறாவாகவே அமையவில்லை. இதனால் புலம்பெயர் தமிழ் மக்கள் அரசற்ற டயாஸ்பொறாவாக வகைப்படுத்தும் நிலையில்தான் இருந்தனர்.

காலப்போக்கில், விடுதலைப்புலிகள் தமது நடைமுறை அரசினை (defacto state) அமைத்திருந்த காலத்தில் பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டிருந்த நடைமுறையரசினையே தமது அரசாகக் கருதிச் செயற்பட்டனர். புலம்பெயர் ஈழத் தமிழ் சமூகம் விடுதலைப்புலிகள் அமைப்புடன் கொண்டிருந்த உறவுகளை, தொடர்புகளை தமது அரசுடன் கொண்டிருந்த தொடர்புகளாக அர்த்தப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

அரசுடன் இணைக்கப்பட்ட டயாஸ்பொறாக்கள் தமது அரசுடன் கூடுதலான தொடர்புகளைக் கொண்டிருப்பதால் தமது தாய்நாட்டின் மேம்பாட்டுக்காக ஆற்றக்கூடிய பங்களிப்பு அவர்களுக்கு கூடுதலாக இருக்கும் என்றும் கருதப்பட்டது. நமது சூழலில் நாம் இதனைப் பார்க்கும்போது சமாதான காலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பால் மேம்பாட்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டபோது நமது புலம்பெயர் தமிழ் மக்கள் அதில் ஆர்வமுடன் பங்கு பற்றியதனை இதற்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். இந்த ஆர்வத்தினையும் முனைப்பினையும் புலம்பெயர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினையும் அவர்கள் கட்டியெழுப்பிருந்த நடைமுறையரசினையும் தமது அரசாகக் கருதிக் கொண்டார்கள் என்பதற்கான ஓர் அறிகுறியாகவும் கொள்ள முடியும்.

மே 2009 ஆம் ஆண்டின் பின்னர் விடுதலைப்புலிகளின் நடைமுறையரசு சிறிலங்கா அரசால் அழிக்கப்பட்ட பின்னர் புலம்பெயர் தமிழ் மக்கள் மீண்டும் ஓர் அரசற்ற டயாஸ்பொறாவாக ஆக்கப்பட்டனர். மகிந்த இராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், மேம்பாட்டுத் திட்டங்களில் பங்குபற்ற முன்வருமாறு சிறிலங்கா அரசு புலம்பெயர்ந்த தமிழ் மக்களை நோக்கி அழைப்பு விடுத்த போதும் அரசுடன் இணைந்து செயற்படுவதில் புலம்பெயர் தமிழ் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. ஈழத் தமிழர் புலம்பெயர் சமூகம் சிறிலங்கா அரசுடன் இணைக்கப்பட்ட டயாஸ்பொறாவாக அமையவில்லை என்பதன் வெளிப்பாடாக இது கொள்ளப்படலாம்.

இதனால் ஈழத் தமிழ் மக்கள் நாடு கடந்த சமூகமாக வாழும் வாழ்வு அரசுடன் பெரிதும் தொடர்புபடாத தன்மையினையே கொண்டிருக்கிறது. தாயகப் பயணம் மேற்கொள்கின்ற போதும் இயன்றவுக்கு குறைந்த தொடர்புகளையே புலம்பெயர் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசுடன் கொண்டுள்ளனர். இவர்களின் தொடர்பு கூடுதலாக அவர்களது குடும்பங்களை மையம் கொண்டுள்ளது. இருந்தபோதும் குடும்பப்பரப்பைத் தாண்டி - தேசம், பிரதேசம், கிராமம், பாடசாலை, கோவில் போன்ற தளங்களிலும் நாடு கடந்த ரீதியிலான பிணைப்புக்கள் மக்கள் மத்தியில் வலுவாக உள்ளன.

இவ்வாறு குடும்பங்களை அடிப்படையாகக் கொண்ட நாடு கடந்த வாழ்வை நேர்கோட்டு நாடு கடந்த நிலை (Linear transnationalism) என José Itzigsohn, Silvia Giorguli-Saucedo என்ற இரு அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இவர்கள் தமது ஆய்வின் அடிப்படையில் நாடு கடந்த வாழ்வுமுறையினை மூன்று வகையாகப் பகுத்தனர். இதில் முதலாவது வகையாக இந்த குடும்பங்களை அடிப்படையாகக் கொண்ட நேர்கோட்டு நாடு கடந்த வாழ்வுமுறை அமைகிறது.

<p>தமிழ் டயாஸ்பொறாவை சிறிலங்கன் டயாஸ்பொறாவாக்கி அரசுடன் இணைக்கும் முயற்சி வெற்றியடையுமா?</p>

இந்த குடும்பங்களின் அடிப்படையில் அமைந்த நாடு கடந்த வாழ்வுமுறையின் அடிப்படையில் தாய்நாட்டிலும் புலத்திலும் உள்ள குடும்பங்களுக்கிடையிலான உறவுகள் வலுவாக இருக்கும்போது நாடு கடந்த தொடர்புகள் வலுவானதாகவும், இந்த உறவுகள் வலுவிழக்கும்போது நாடு கடந்த தொடர்புகள் வலுவிழக்கும் எனவும் சுட்டப்படுகிறது.

இரண்டாவது வகையாக இவ் அறிஞர்கள் வகைப்படுத்தியது பொருளாதார நிலை சார்ந்து எழும் நாடு கடந்த வாழ்வு முறையாக அமைகிறது. இது வளங்களை (resources) அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. இதனை வளங்களில் தங்கிய நாடு கடந்த வாழ்வுமுறை (Resource- dependent transnationalism) என இவர்கள் அழைக்கின்றனர்.

இது நாடு கடந்த வாழ்வுக்கும் மக்கள் கொண்டிருக்கக்கூடிய வளங்களுக்குமிடையே உள்ள தொடர்புகளை எடுத்துக் கூறுகிறது. இந்த அணுகுமுறையின் அடிப்படையில், நாடு கடந்த வாழ்வு முறையினை அணுகும்போது, வளம் பெருகும்போது நாடு கடந்தரீதியிலான தொடர்புகள் அதிகரிக்கும். வளங்கள் குறைவாக இருக்கும் போது நாடுகடந்த ரீதியிலான தொடர்புகள் குறைவாக இருக்கும். நாடு கடந்த ரீதியில் முதலீடுகளை மேற்கொள்ளல், நாடு கடந்த ரீதியில் வியாபாரங்களை மேற்கொள்ளல் போன்றவை இந்த வளங்களின் அடிப்படையில் அமைந்த நாடு கடந்த வாழ்வுமுறைக்கு உதாரணங்களாக அமைகின்றன.

மூன்றாவதாக, நாடு கடந்த வாழ்வுமறைக்கு தூண்டியாக அமையும் காரணியாக புலத்தில் வாழும் நாடுகளில் எதிர்மறையாகக் கிடைக்கும் அனுபவங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. இதனை 'எதிர்வினை நாடு கடந்த வாழ்வுநிலை' (Reactive Transnationalism) என இவ் அறிஞர்கள் அழைக்கின்றனர்.

புலத்தில் வாழ்வோர் தமது வாழ்க்கையினை புலத்தில் வெற்றியாக அமைத்துக் கொள்ளத் தேவையான தகைமைகளை வளர்த்து, தமது வாழ்வினை வெற்றியாக அமைத்துக் கொள்ள முடியாது தவிக்கும் போது, அல்லது புலத்தில் நிலவக்கூடிய இனவாதம் மற்றும் அதனால் ஏற்படும் புறக்கணிப்பு, அவமதிப்பினை உணரும்போது - தமது தாய்நாட்டுடன் அல்லது தாய்நாட்டுடன் தொடர்புபட்ட விடயங்களில் கூடுதலான கவனத்தைக் கொடுக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்ற அவதானிப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட கருத்தாக இது அமைகிறது.

புலம்பெயர் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தாயகத்தில் உள்ள குடுப்பத்தினருடனான தொடர்பு பலவீனம் அடைந்து வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் புலம்பெயர்ந்தமையுயும் இயற்கை அடைந்தமையும் இதற்கு முக்கிய காரணங்கள். தம்மிடம் உள்ள வளத்தினைத் தாயகம் நோக்கித் திருப்புவுதற்கான ஆர்வம் அவர்களுக்கு உண்டு. ஆனால் அதற்கேற்ற சூழல் இன்னும் உருவாகவில்லை. புலம்பெயர் வாழ்வில் தோல்வி அடைந்த இனந்தவர்களாகத் தாயகம் நோக்கிச் சிந்திப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களே. ஆனால் புலம்பெயர் வாழ்க்கைச் சூழலை அந்நியத்தன்மையுடன் பலர் உணர்கின்றனர். இது தாயகம் குறித்த நினைவுகளையும் ஏக்கத்தையும் பலருக்கு ஏற்படுத்துகிறது.

இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மைத்திரி - ரணில் அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் மக்களை சிறிலங்கா அரசுடன் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காகத் தமிழ் டயாஸ்பொறா என்ற தனித்துவ அடையளத்தை நீக்கம் செய்து, தமிழ் - சிங்கள - முஸ்லீம் - பறங்கிய - புலம் பெயர் சமூகத்தினர் அனைவரையும் சிறிலங்கன் டயாஸ்பொறா என்ற ஒரு பொது அடையளத்தின் ஊடாக இணைக்கும் திட்டமொன்றை புதிய சிறிலங்கா அரசாங்கம் வகுத்துள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் சிறிலங்கன் டயாஸ்பொறாவுக்கான விழாவொன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது. புலம்பெயர் தமிழ் மக்களை தமிழ் டயாஸ்பொறாவென்ற தனித்துவமான அடையாளத்துடன் அணுக சிறிலங்கா அரசு தயாராக இல்லை. தமிழ் டயாஸ்பொறா என்ற தனித்துவமான அடையளத்தை இல்லாதொழிப்பது தமிழ் டயாஸ்பொறா முன்னெடுத்துவரும் அரசியல்ரீதியான போராட்டங்களைப் பலவீனப்படுத்துவதற்கு அவசியம் என சிறிலங்கா அரசு கருதகிறது. முன்னைய மகிந்த இராஜபக்ச அரசாங்கம் தமிழ் டயாஸ்பொறாவுக்கள் ஊடுருவ எடுத்த முயற்சிகள் வெற்றியடையவில்லை. புதிய ஆட்சியாளர்கள் தமது முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரனையும் உலகத் தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரனையும் இணைத்தவாறு தமது முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தமிழ் டயாஸ்பொறாவினை சிறிலங்கன் டயாஸ்பொறாவாக மாற்றி சிறிலங்கா அரசுடன் இணைக்கும் இவர்களின் முயற்சி வெற்றியடையுமா? இதற்கான பதிலைக் காலம்தான் தர வேண்டும்.

 

 
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.