Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோ ராமசாமி பரப்பும் அவதூறுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோ ராமசாமி பரப்பும் அவதூறுகள்! by Suvanapriyan (http://suvanappiriyan.blogspot.com)

கேள்வி : பௌத்த - சமண சமயங்களை இந்து மதம் வீழ்த்தியதற்கும், இஸ்லாம் கிறித்தவ சமயங்கள் இந்து மதத்தை வீழ்த்துவதற்கும் என்ன வித்தியாசம்?

சோ பதில் : இந்து மதம் - பௌத்த, சமண மதங்களை வாதம் செய்து வீழ்த்தியது. இஸ்லாம்,கிறிஸ்தவ சமயங்கள் மதமாற்றம் செய்து இந்து மதத்தை வீழ்த்துகின்றன.

துக்ளக் - 26.10.2005

மக்களை மடையர்களாக கருதி மனம் போன படி கருத்துக் கூறி உண்மைகளை உருக்குலைத்து, பொய்மைகளைப் புகழேணியில் ஏற்றலாம் என்பது சோ கண்டு வரும் சொப்பனம்.

பௌத்த சமண சமயங்களை இந்து மதம் வாதத்தால் வீழ்த்தியது என்பது உண்மையின் கலப்பு ஒரு சதவீதம் கூட இல்லாத இமாலயப் பொய். எவரும் சொல்லத் துணியாத பொய்.

இந்து மதம் பௌத்த சமண சமயங்களோடு அறிவுப் பூர்வமாக, நளினமான முறையில் த்ததுவ அடிப்படையில் விவாதம் செய்து மேற்படி மதங்களைப் பொய்ப்பித்தது போலவும்: இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களில் தத்துவ வறட்சி இருப்பதால், அறிவு பூர்வமான விவாதங்கள் மூலம் பிற மதத்தினரை ஈர்க்காமல் ஆசை காட்டி மதம் மாற்றம் செய்வது போலவும் ஒரு போலிச் சித்திரத்தைத் தீட்டுகிறது துக்ளக் சோவின் துடுக்குப் பேனா...

இந்து மதத்தின் கொள்கை எது? என்று கேட்டால் துக்ளக் சோவால் பதில் கூற முடியுமா? அப்படியே அவர் பதில் சொன்னாலும் அதை எல்லா பிரிவு இந்துக்களும் ஏற்பார்களா?

இந்து மதம் என்ற பெயரே பிற் காலத்தில் வைக்கப் பட்ட பெயர்தான். வைதீக மதங்களான சைவம் வைணவம் ஆகியவற்றோடு சிறு தெய்வ வழிபாடுகளையும் சேர்த்து ஒரு தொகுப்பாக்கி 'இந்து மதம்' எனப் பிற்காலத்தில் ஒரு பொதுப் பெயர் சூட்டப் பட்டது.

பௌத்தத்தையும் சமணத்தையும் இந்து மதம் வாதங்களின் மூலம் வீழ்த்தியது என்பதில் அணுவளவும் உண்மையில்லை என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உள்ளன.

இந்து மதம் சமணத்தையும் பௌத்தத்தையும் வன்முறையின் முலம் அழித்ததை மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் தமது 'சமணமும் - தமிழும்' என்ற நூலில் வரலாற்று ஆதாரங்களோடு விளக்கியுள்ளார்.

தமிழகத்தில் ஏராளமான பௌத்த ஊர்கள், பக்தி இயக்கம் பரப்பிய வன்முறையால் அழிக்கப் பட்டுள்ளதை மிகத் துல்லியமான ஆதாரங்களோடு புலவர் ஜெ. ஆனந்த ராசன் தமது 'பௌத்தமும், பழந் தமிழ்க் குடி மக்களும்' என்ற நூலில் விளக்கியுள்ளார்.

குருவிக் கரம்பை வேலு எழுதிய 'சிந்து முதல் குமரி வரை' என்ற நூலும் ஆரியர்களின் அடாவடிகளை விவரிக்கிறது.

நாகப் பட்டினத்தில் இருந்த மிகப் பெரிய புத்த விகாரத்தில் தஙகத்தாலான புத்தர் சிலை இருந்துள்ளது.இதனை வைணவப் பிரிவைச் சேர்ந்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இரவோடிரவாகச் சூறையாடினார். அப்படி சூறையாடிய தங்க புத்தர் சிலையையும் ஆபரணங்களையும் எடுத்துச் செல்லும் போது வழியிலேயே பொழுது விடிந்து விட்டது. ஆகவே பொருள்களை ஓரிடத்தில் பதுக்கி வைத்தனர். அந்த ஊர் தான் இப்போது சிக்கலுக்கும்- மஞ்சக் கொல்லைக்கும் இடைப் பட்ட 'பொரவச் சேரி' என்றழைக்கப் படும் முஸ்லிம் ஊராகும். பொருள் வைத்த சேரி - பொரவச்சேரி என மருவி விட்டது.

நாகை புத்த கோவிலை சூறையாடிய பணத்தில்தான் ஸ்ரீரங்கம் கோவில் புணரமைக்கப் பட்டது என்பதை 'குரு பரம்பரைப் பிரவாகம்' என்ற வைணவ நூலும் குறிப்பிடுகிறது.

காஞ்சிபுரத்தில் வன்முறைகள்

பௌத்த நகரமாகத் திகழ்ந்த காஞ்சிபுரத்தில் வன்முறையால் பௌத்த அடையாளங்கள் அடியோடு அழிக்கப் பட்டுள்ளன. காஞ்சிபுரத்தின் கச்சீஸ்வர் கோவில், கைலாச நாதர் கோவில் ஆகியவை பௌத்த கோவில்களாக முன்பு இருந்தவை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

காஞ்சியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகச் சக்ரவர்த்தி எழுப்பிய பிரம்மாண்டமான புத்த தூபி இருந்ததாக கி.பி ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வருகை புரிந்த சீனப் பயணி யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார்.

சைவ வன்முறைகள்

சீர்காழி அருகே ஆறாயிரம் சமணர்களை கழுமரத்தில் ஏற்றி கொடுமையாக கொலை செய்த பெருமை சைவத்திற்கு உண்டு.

சோ குறிப்பிடும் இந்து மத வாதம் எப்படிப் பட்டதென அறிந்தால் மிரண்டு போக வேண்டும். சமணர்களோடு சைவர்கள் அனல் வாதம், புனல்வாதம் என இருவகை வாதங்களை நிகழ்த்துவார்கள்.'உண்மைக்கு அழிவில்லை' எனக் கூறும் சைவர்கள் சமண நூல்களை தீயிலிடச் சொல்வார்கள். எல்லா நூலும் தீயில் எரியும் சமண நூலும் எரியும். தீயில் எரிந்து போனதால் சமணம் உண்மையல்ல எனத் தீர்ப்பாகும். சைவர்கள் தங்கள் நூல்களைத் தீயில் போடுவதில்லை. இது அனல்வாதம்.

காட்டாற்று வெள்ளத்தில் புத்தகங்களை வீச வேண்டும். எது எதிர் நீச்சல் போட்டுக் கரையேறுகிறதோ அது சத்தியம். இது புனல் வாதம். சமண நூல்களை எரிவார்கள். அவை ஆற்றோடு போய் விடும். அவை பொய்யானவை என உறுதியாகி விடும். சைவம் சமணம் இவற்றிற்கிடையேயான வாதத்தில் சமணம் பொய்யானது என நிரூபணமாகி விட்டதால் சைவத்தைப் பரிசோதிக்க அவசியமில்லை. வாதத்தில் தோல்வியடைந்த சமணர்கள் கழுமரத்தில் (கூர்மையான ஈட்டி) ஏற்றிக் கொல்லப் படுவார்கள்.

சிவத் தொண்டர்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறை விளக்கும் பெரிய புராணம்:

'வாதில் அமணர் வலி தொலைய வண் கழுவில் தைத்த மறையோன்'

சமணர்களை வாதத்தில் வென்று, அவர்களை கழுமரத்தில் ஏற்றிக் கொன்ற மறையோன் திருஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகிறது.

கழுத்தை அறுக்கக் கட்டளையிடும் கவிதை

சமணர்களையும், பௌத்தர்களையும் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யுமாறு ஒரு பக்தி இலக்கியப் பாடல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்ற வைணவ நூலில் திருவரங்கப் பதிகம் என்ற பகுதியின் 879 ஆம் பாடலைப் பாருங்கள்.

'வெறுப்பொடு சமணர், முண்டர்

விதியில் சாக்கியர் நின்பால்

பொறுப்பரி யங்கள் பேசில்

போவதே நோய தாகிக்

குறிப்பெனக் கடையு மாஇல்

கூடுமேல் தலையை ஆங்கே

அறுப்பதே கருமம் கண்டாய்

அரங்கமா நகருளானே'

'வெறுக்கத் தக்க சமணர்களும், பௌத்தர்களும் உன்னிடம் வந்து பொறுப்பற்ற செய்திகளைப் பேசினால் அவர்களின் தலைகளை அறுத்து விடுவதே நல்லது. அரங்கமா நகரில் உள்ளவனே அது உன் கடமை'

- இது ஆன்மீக வாதமா? இல்லை பயங்கர வாதமா?

தேவாரத்தில் 360 க்கும் மேற்பட்ட பாடல்கள் பௌத்த, சமண சமயத்தவரை மிகக் கீழ்த்தரமாக வர்ணிக்கின்றன.

இவை யாவும் இன்றைய தலை முறைக்குத் தெரியாது என்ற நம்பிக்கையில் பவுத்த,சமண சமயங்களை இந்து மதம் வாதத்தால் வீழ்த்தியது என்கிறார் சோ.

வைதீக மதம் வாதம் செய்ததா? அல்லது பிற மதத்தினரை வதம் செய்ததா? என்பதை வரலாற்றெங்கிலும் காண முடிகிறது.

இஸ்லாமும், கிறித்தவமும் இந்துக்களை மதம் மாற்றுகின்றன எனக் கூக்குரலிடும் சோ, ஏன் மக்கள் மதம் மாறுகிறார்கள் என்பதை சிந்திக்கட்டும்.

-மக்கள் உரிமை - 24-18-2005 (This article was written by Suvanapriyan)

Edited by ilango3112

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறையவே விவாதங்கள் நடைபெறும் இவ்வேளையில் எனது குறுக்கீடிற்கு மன்னிக்க!

- எந்தவொரு செயற்பாட்டையும் ஏன்? எதற்கு? எப்படி? ஆகவும் ஒருவரால் முன்வைக்கப்படும் எண்ணக்கருத்தை யார், யாருக்கு, எதைச் சொல்கிறார்கள் ஆகவும் அலசிப்பார்க்கும் திறந்த வாசிப்பையும் தேடலையும் கொண்டவர்கள் குழப்பமடைவதில்லை.

- இன்றைய நமது சூழலில் உலகளாவிய தமிழ்பேசும் மக்கள் கூச்சமில்லாது ஒன்றுபடுவதற்கு உரிய எண்ணக்கருக்கள், நூல்கள், காரணிகள், நிகழ்வுகள் போன்றவற்றின் தேடல் அவசியமானது.

- நம்மவரைக்கூறுபோடும் அல்லது துண்டாடும் சிந்தனைகளைக் கருக்களை சற்று தவிர்க்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.