Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

ஜேர்மனிய அணுசக்திப் பரிசோதனையின் போது அதி வெப்பமான ஹீலியம் பிளாஸ்மா வாயு தோற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜேர்­ம­னிய அணு­சக்திப் பரி­சோ­த­னையின் போது அதி வெப்­ப­மான ஹீலியம் பிளாஸ்மா வாயு தோற்றம்

Published by Gnanaprabu on 2015-12-15 09:49:39

ஜேர்­ம­னிய அணு­சக்தி பரி­சோ­த­னையின் போது விசே­ட­மான அதி வெப்­ப­மான வாயு ஒன்று தோன்­றி­யுள்­ள­தாக விஞ்­ஞா­னிகள் அறி­வித்­துள்­ளனர்.

மேற்­படி வாயு­வா­னது புதிய தூய மற்றும் மலி­வான சக்­தி­யொன்றைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான நம்­பிக்­கையைத் தரு­வ­தாக உள்­ள­தாக விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.

1.jpg

ஐதான முகில் போன்ற ஏற்­ற­முள்ள துணிக்­கை­களைக் கொண்ட இந்த ஹீலியம் பிளாஸ்மா வாயு­வா­னது ஒரு செக்­கனில் பத்தில் ஒரு பங்கு நேரத்­துக்கு மட்­டுமே நீடித்­துள்­ளது. இதன்­போது சுமார் ஒரு மில்­லியன் பாகை செல்­சியஸ் வெப்­ப­நிலை தோன்­றி­யுள்­ளது.

சூரிய சக்­தியைப் பிர­தி­நி­தித்­துவம் செய்­யக்­கூ­டிய உறு­தி­யான அணு­சக்திப் பிறப்­பாக்க உப­க­ர­ணங்­களை உரு­வாக்கும் முயற்­சியில் உல­க­மெங்­கு­முள்ள பௌதி­க­வி­ய­லா­ளர்கள் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்ற நிலை­யி­லேயே இந்த சாதனை சக்திப் பிறப்­பாக்கம் இடம்­பெற்­றுள்­ளது.

வட கிழக்கு ஜேர்­ம­னியில் கிரெய்ப்ஸ் வால்ட் எனும் இடத்தில் வென்­டல்ஸ்­டெயின் 7–-எக்ஸ் என்­ற­ழைக்­கப்­படும் இயந்­தி­ரத்­தி­லேயே இவ்­வாறு அதி­க­ள­வான வெப்ப சக்தி பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

மக்ஸ் பிளாங் நிறு­வ­கத்தால் செயற்­ப­டுத்­தப்­படும் இந்த அணு­சக்தித் திட்டம் 9 வரு­டங்­க­ளுக்கு முன் 720 மில்­லியன் ஸ்ரேலிங் பவு­ணுக்கும் அதி­க­மான செலவில் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

2.jpg

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பிர­தான அணு­சக்தி திட்­ட­மாக பிரான்ஸின் கடா­ராச்சி எனும் இடத்­தி­லுள்ள இதெர் விளங்­கு­கி­றது. ஆனால் மேற்படி சர்ச்­சைக்­கு­ரிய திட்டம் 2020 ஆம் ஆண்டு வரை சக்­திப்­பி­றப்­பாக்க நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவதற்கான சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்த திட்டத்திற்கு ஏற்கனவே 10 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணம் செலவி டப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/1037

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.