Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ருத்ரகுமாரனின் கேள்விக்கு என்ன பதில்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ருத்ரகுமாரனின் கேள்விக்கு என்ன பதில்?

கலாநிதி சர்வேந்திரா
 
<p>ருத்ரகுமாரனின் கேள்விக்கு என்ன பதில்?</p>
 

 

புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகளில் ஒன்றான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது இரண்டாவது அரசவையின் நான்காவது நேரடி அமர்வை இம் மாதம் 4, 5, 6 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் நியுயோர்க் மாநகரில் நடத்தியிருக்கிறது. ஒரு தொகுதி அரசவை உறுப்பினர்கள் பிரித்தானியாவிலிருந்து நேரடி காணொளி இணைப்பின் மூலம் இம் அமர்வில் பங்கு பற்றியிருக்கின்றனர். இம் அமர்வை மக்கள் பார்க்கக்கூடிய வகையில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டிருக்கிறது. இம் அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் ஆரம்ப உரையினையும் நிறைவுரையினையும் ஆற்றியிருக்கிறார். அவரின் உரைகளின் சில பகுதிகள் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளன. அவரது உரைகளின் கவனத்தை ஈர்த்த பகுதிகளை மையம் கொண்டதாகவே இன்றைய பத்தி அமைகிறது. அவரது உரையின் முக்கிய பகுதிகளையும் இப் பத்தி உள்ளடக்கிறது.

புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழீழத் தனிநாடே நிரந்தரத் தீர்வாக அமைய முடியும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டு இயங்கும் அமைப்புகளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், மக்கள் அவைகள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் ஆகிய அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பல்வேறு நாடுகளிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கி வருகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்காக 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பல நாடுகளில் பலத்த போட்டி நிலவியது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலும் போட்டியின்றியே பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் அவையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை என அழைக்கிறது. இரண்டாவது தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது அரசவையின் நான்காவது நேரடி அமர்வே நியுயோர்க்கில் இடம்பெற்றது.

தமிழீழத் தனியரசைத் தீர்வாக முன்வைக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆறாவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு தமிழீழம் உள்ளடங்கலான தீர்வுமுறைகளைக் கொண்ட ஒரு மக்கள் வாக்கெடுப்பு அனைத்துலகச் சமூகத்தின் அனுசரணையுடன் தாயகத்திலும் தமிழ் டயஸ்பொறா மத்தியிலும் நடாத்தப்பட்டே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. தமிழீழம் என்ற நிலைப்பாட்டுக்கு அனைத்துலக அரசுகளின் ஆதரவு இல்லை என்பது நன்கு தெரிந்தும் ஏன் இவர்கள் இந்த முயற்சியினைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்புபவர்களும் தமிழ் டயாஸ்பொறா மத்தியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு பதிலளிக்கும் வகையிலோ என்னவோ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தனது ஆரம்ப உரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

«நாம் போடுவது எதிர்நீச்சல் என்பது எமக்குத் தெரியும். சில சமயங்களில் நாம் செல்லவேண்டிய இலக்கை அடைந்து கொள்வதற்கு எதிர்நீச்சல் போடவேண்டியதும் அவசியமாக இருக்கும். நீரோட்டத்துடன் செல்வது இலகுவாக இருக்கிறது என்பதற்காக அப் போக்கிலேயே இழுபட்டுச் செல்வோமானால் அது எம்மைத் தள்ளி விழுத்தி வீழ்ந்து கிடப்போமே தவிர நாம் செல்ல விரும்பிய இலக்கைச் சென்றடைய எம்மால் முடியாது. அனைத்துலக அரசுகளின் தற்போதய விருப்பத்துக்கு மாறாக தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் அதனை நோக்கிய செயற்பாடுகளையும்தான் நான் இங்கு எதிர்நீச்சல் எனக் கூறுகிறேன். மேலும் நான் இவ்வாறு கூறுவதன் அரத்தம் தலைமுறை தலைமுறையாக நாம் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கப் போகிறோம் என்பதல்ல. நாம் இப்போது போடும் எதிர்நீச்சல் காரணமாக அனைத்துலக அரசியலின் பிரதான நீரோட்டத்துடன் எமது இலட்சியத்தை விட்டுக் கொடுக்காது இணைந்து கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கையுடன்தான் நாம் இந்த எதிர்நீச்சலைப் போட்டுக் கொண்டிருக்கிறோம். எதிர்நீச்சல் போடும் காலம் மிகவும் கடுமையானது. மிகுந்த சக்தியை எதிர்பார்ப்பது. மிகுந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வேண்டி நிற்பது. எடுக்கும் முயற்சி அளவுக்கு முன்னேற்றத்தை தராது விடக்கூடியது. மிகுந்த களைப்பையும் தரக் கூடியது. இவற்றையெல்லாம் தாண்டி உரிய காலம் வரை எதிர்நீச்சலைத் தொடர்ந்து போடக்கூடிய ஆற்றலைப் பேண முடியும் போதே அங்கிருந்து வெற்றிக்கான வழி பிறக்கிறது.»

ருத்ரகுமாரனின் உரையின் இப் பகுதி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எத்தகைய மூலோபாயத்துடன் இயங்குகிறது என்பதனை வெளிப்படுத்துகிறது. தமது இந் நிலைப்பாட்டை தமது நிறைவுரையில் மேலும் ருத்திரகுமாரன் பின்வருமாறு விளக்குகிறார்.

« நாம் இவ்வாறு செயற்படுவதனைக் கனவுலகில் சஞ்சரிப்பதாக சிலர் கேலி செய்யக்கூடும். யதார்த்தம் புரியாதவர்களாக எம்மைச் சித்தரிக்கவும் கூடும். நாம் இலட்சியவழியில் நின்று எமது இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். நாம் இலட்சிய அரசியல் செய்ய விரும்புகிறோம். யதார்த்த அரசியல் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் எமது அடிப்படைகளைக் கைவிட்டுக் கீழ் நோக்கிக் கீழ் நோக்கிச் சென்று இறுதியில் சரணாகதி அரசியலில்தான் வந்து முடியும். நாம் யதார்த்தத்தினை எமது கனவுகளை நோக்கி வளைக்க முனைகிறோம். யதார்த்த அரசியல் கனவுகளை யதார்த்தம் நோக்கி இழுத்துச் சென்று இறுதியில் தோல்வியைத் தழுவும். மக்களையும் தோல்வியடைந்தவர்களாக மாற்றி விடும். இலட்சிய அரசியல் என்பது கனவுகளை உயிர்ப்பாக வைத்திருக்கும்வரை தோல்வியினைத் தழுவிக் கொள்வதில்லை. தனக்கு வாய்ப்பான சூழல் உருவாகும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யதார்த்தத்தை மேலும் கனவுகள் நோக்கி வளைத்துச் செல்லும். யதார்த்த அரசியல் தோல்வியினைத் தழுவும்போது இலட்சிய அரசியல் மேலும் வலுவடையும். தற்போதைய ஆட்சியாளர்களுடன் கூட்டமைப்புச் செய்யும் யதார்த்த அரசியல் தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாதவகையில் சிறிலங்காவின் சிங்கள பௌத்த அரசால் தோற்கடிக்கப்படும் என்றே நாம் கருதுகிறோம். இதனை நாம் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டியது என்ற மனவிருப்பில் இருந்து கூறவில்லை. வரலாற்றை வழிகாட்டியாகக் கொண்டு நாம் உணரக்கூடிய விடயங்களை ஒரு முன்னெச்சரிக்கையாகவும், இலட்சிய அரசியலைத் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதற்காகவுமே கூறுகிறோம்.»

தமது செயற்பாடுகளை இலட்சிய அரசியலாக விழிக்கும் ருத்ரகுமாரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது நடத்தி வரும் யதாரத்த அரசியல் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் தோற்கடிக்கப்படும் என்றும் எதிர்வு கூறுகிறார். தற்போதய ஆட்சியாளர்கள் இனவாதிகள் அல்ல என்று கூறுவர்களுக்கும் அவர்கள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் கூட்டமைப்புடன் இணைந்து காண்பார்கள் என முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கும் பதிலாகத் தனது நிறைவுரையின் இன்னொரு இடத்தில் ருத்ரகுமாரன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

«நாம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் நிதானமாகவும் எச்சரிக்கையுடனும்  செயற்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். மிகுந்த சூழ்ச்சியுடன் சிறிலங்காவின் தற்போதய ஆட்சியாளர்கள் செயற்படுகிறார்கள் என்பதனைக் கவனத்திற் கொள்ள வேண்டும். ஏதோ முன்னர் இருந்த மகிந்த இராஜபக்சவும் அவரது கூட்டாளிகளும்தான் இனவாதிகள் என்பது போலவும் தாங்கள் இனவாதமற்ற தூய்மையானவர்கள் போலவும் ஒரு சித்திரத்தைக் கட்டி எழுப்பப் பார்க்கிறார்கள். முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பானவர். முள்ளிவாய்க்கால் வெற்றியை மகிழ்வுடன் கொண்டாடியவர். தனது நடவடிக்கைக்காகத் தமிழ் மக்களிடம் இன்றுவரை அவர் மன்னிப்புக் கோரியதும் கிடையாது. இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சூழ்ச்சிகளின் அடிப்படையில் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தி அழிப்பவர். ஆட்சியின் பிதாமகர் சந்திரிகாவின் கைகளிலும் தமிழ் மக்களின் இரத்தம் ஒழுகிக் கொண்டிருக்கிறது.

<p>ருத்ரகுமாரனின் கேள்விக்கு என்ன பதில்?</p>

அதையும் விட எமது பிரச்சினை தனிநபர்களால் ஆனதல்ல. சிறிலங்காவின் சிங்கள இனவாத அரசே எமது பிரதான பிரச்சினை. இந்த அரசைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களின் அரசியலே எமது பிரச்சினை. ஆட்சியாளர்கள் மாறினாலும் அரச கட்டமைப்பில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஏற்படுவதற்கு சிங்கள பௌத்த இனவாதம் இடமளிக்கப் போவதுமில்லை. இந்த இனவாத அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரையும் நாம் இனவாதிகளாகவே பார்க்க முடியும். இங்கு ஒருவர் தனிப்பட்டரீதியில் நல்லவர் என்பதோ அல்லது எளிமையாளவர் என்பதோ பொருட்டு அல்ல. சிங்கள மக்களின் மேலாண்மையின் கீழ் தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் சிறிலங்கா அரச கட்டமைப்பு சொல்லும் நீதி. அது அநீதியானது. இனவாத அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டது. இவ் அரச கட்டமைப்பை நாம் நிராகரிக்கிறோம். ஒரு தேசம் என்ற வகையில் எமது அரசியல் தலைவிதியை நாமே தீர்மானிக்கும் உரித்துடையவர்கள். அந்த உரிமைக்காகவே நாம் இன்றுவரை போராடுகிறாம்.

சிங்கள ஆட்சியாளர்கள் தமக்குத் தேவை ஏற்படும் போது தமிழ்த் தலைவர்களை அரவணைப்பதும் பின்னர் ஏமாற்றித் தூக்கி எறிவதும் வரலாறு முழுதும் நடைபெற்று வந்துள்ளது. இத்தகைய ஏமாற்றுவித்தையில் தற்போதய ஆட்சியாளர்களும் தேர்ச்சி பெற்றவர்கள். போர்க்கைதிகள் விடயத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையை தற்போதய ஆட்சியாளர்கள் பல தடவைகள் ஏமாற்றி விட்டனர். இன்றுவரை இவ் விடயத்தில் ஒரு தீர்வைக்காண இவ் ஆட்சிமாற்றத்தின் ஒரு தூணாக இருந்த கூட்டமைப்புத் தலைமையால் முடியவில்லை. கூட்டமைப்பை ஆட்சிமாற்றத்துக்கு உதவுமாறு கோரிய அனைத்துலக சமூகமோ அரசுகளோ இவ் விடயத்தில் தலையிட்டு ஒரு தீர்வைப் பெற்றுத் தர முயலவில்லை. போர்க் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரித் தமிழ்ப் பாடசாலை மாணவன் செந்தூரன் தனது உயிரை அழித்திருக்கிறான். நாம் ஏமாற்றப்பட்டதாகக் கூட்டமைப்புத் தலைமைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் முறையிடும் நிலை தோன்றியிருக்கிறது. புதிய ஆட்சியாளர்கள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் எனத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்து மக்கள் ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை அரசியல் கைதிகள் விடயத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது.

இத்தகைய ஆட்சியாளர்கள் ஊடாகத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்பதனை எந்த அடிப்படையில் கூட்டமைப்புத் தலைமையால் இனியும் மக்களிடம் கோர முடியும்? தமிழ் மக்களும் எத்தனை தூரம் அதனை நம்பிப் பயணிக்க முடியும்?»

ருத்ரகுமாரன் எழுப்பியுள்ள இக் கேள்வி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழமாகக் கவனத்திற் கொள்ள வேண்டிய கேள்வி என்பது மட்டுமல்ல மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கேள்வியும் ஆகும்.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=7fd0fe0d-8bfb-407f-aba2-6b9d448e082d

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.