Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்க்சியம் சாதியக்கட்டமைப்பை விளங்கிக் கொள்வது !!

Featured Replies

 

சாதியை விளக்கிக் கொள்வது என்றால் அரசியல் பொருளாதார கட்டமைப்பை விளங்கிக் கொள்வதன் ஊடாகவே சாத்தியமானதாகும்.. ஆனால் மக்களிடையே உள்ளஅகவுணர்வின் வெளிபாட்டுக் காரணத்தினை வெளிப்படுத்தாது. மனிதர்களின்அகவுணர்வை மாத்திரம் வெளிப்படுத்தும் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றது. சமூகத்தில் இருக்கும் தன்மைகள் என்பதை வைத்து சாதியத்தினை விளங்கிக் கொள்ள முடியாது. இவ்வாறு  அணுகுவது என்பது  தலித்தியம் போன்ற அடையாள அரசியல்செய்பவர்களுக்கு பயன்படும். ஆனால் சமூகமாற்றத்திற்காய் உழைப்பவர்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் பயன்படப்போவதில்லை. 

manual-scavenger.jpg

மார்க்சியம் சாதியத்தினை எவ்வாறு விளங்கிக் கொள்வது? சாதியத்திற்கும் பொருளாதாரஅமைப்பிற்கும் அதன் மேல் எழுந்த சிந்தனைக்கும் தொடர் இருக்கின்றதா இல்லையாஎன்பதில் இருந்து ஆராய்வது தான் பொருத்தமாக இருக்கும். மூன்று தத்துவக் கூறுகளைமுதலில் முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டும். மார்க்ஸ் இன் கண்டுபிடிப்புகள்என்பது முன்னைய சமூகத்தை விளங்கியதற்கு மாறுபட்டு சமூகத்தை புரிந்துகொள்ளவைக்கும் தத்துவப்பார்வையாகும். மார்க்சியம் என்பது அன்னியத் தத்துவம் என்று கொள்ளமுடியாது. காரணம் மனிதவரலாற்றில் அறிவொழிச்சின் படைப்பு என்பது முன்னைய சமூகத்தில் இருந்த அறிவை குவித்து தந்ததே மார்க்சியமாகவும் அது சர்வதேசியவாதமாகவும் உள்ளது. 
மார்க்சியத்தினை உள்ளதை உள்ளபடி சிதைக்காது மார்க்சிய அடிப்படையைமக்களிடத்தில்  முன்னேறிய பிரிவினரிடையே சென்றடைய வேண்டும் என்பதே ஒருமார்க்சியரின் கடமையாகும். ஆனால் கலாசாலையில் - thesis - ஒரு கோட்பாட்டைமுன்னிறுத்தி ஒப்படைப்புச் செய்வதைப் போல அல்லாது மூன்று கூறுகளை கவனத்தில்கொள்ளத் தயாராக இல்லாது, மூன்று கூறுகளை உதறிவிட்டு மார்க்சியதினைகேள்விகேட்க முடியற்சிக்க முடியாது.  மூன்று தத்துவக்கூறுக்கு அப்பால்  இருந்து ஒன்றை மட்டும் விலத்தி எடுத்து ஆய்விற்கு உட்படுத்தும் ஆய்வுமுறைகளே மற்றைய அணுகுமுறையாக இருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் மார்க்சியம் என்பது தனியே வர்க்க அணுகுமுறையை மாத்திரம் முதன்மைப்படுத்துவதாகவும் வர்க்கத்தை மாத்திரம் குறுக்கிவிடுவதால் போதாமை உள்ளதாக விமர்சிப்பவர்கள் உள்ளார்கள். 
மார்க்சின் படைப்புக்களில் இருந்தும் அதன் குறிப்புக்களில் இருந்தும் மார்க்சியமானிடவியல் அணுகுமுறையை "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்"என்ற நூலில் எங்கல்ஸ் இனால் படைக்கப்பட்டது. இங்கு இனக்குழும முறை அவர்களின்இரத்த உறவில் அமைந்த வாழ்வு முறையை விளக்கும் ஒரு புத்தகமாகவும் அடிப்படைப்புத்தகமாகவும் கொள்ள முடியும். மற்றைய முதலாளித்துவ- சமூக ஜனநாயகக் உலகக்கண்ணோட்டத்தைக் கொண்ட ஆய்வணுகுமுறைக்கு மாற்றாக மார்க்சிய லெனினியஅணுகுமுறைப் பார்வையை முன்வைக்கின்ற புத்தகமாகும். 
மார்க்சின் கண்டுபிடிப்பு என்பது மார்க்சியம்- லெனினியம்- மாவோயிசமான வளர்ந்துள்ளது.இன்று வளர்ந்துள்ள அனைத்து படிமுறைப் பாதைகளின் ஊடாகவே மார்க்சினை புரிந்துகொள்ளமுடியும். மார்க்சியமாகிய இயங்கியல்- வரலாற்றுப் பொருள்முதல்வாதம்- வர்க்கப்போராட்டத்தினை புரிந்து கொண்டால் இந்த சமூகத்தினை முழுமையாக ஆராயதுணைபுரகின்ற ஒரேயொரு அணுகுமுறை மார்க்சியம்லெனினிய மாவோயிசமே. இதற்றுஅப்பால் மண்ணுக்கேற்ற மார்க்சியம் ஒன்றில்லை. மூன்று தோற்றுவாய்களைநுணுக்கமாக அறிந்துக் கொள்வதன் ஊடாகவே புதிய கோட்பாட்டை படைக்கமுடியும்.
மார்க்சிய அணுகுமுறையை பேராசிரியர்கள் வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி, கோகேசவன் போன்றவர்கள் மார்க்சிய அணுகுமுறையைக் கொண்டே சமூக ஆய்வைமேற்கொண்டுள்ளார்கள். அந்த ஆய்வாளர்கள் கூட மார்க்சியம் மேற்கத்- அன்னியஅணுகுமுறை என்று கூறியதில்லை. இந்தியாவில் கடைக்கோடியில் இருந்துமார்க்சியத்தினை முறையாக விளங்கிக் கொண்டால் ஐரோப்பா என்ன எந்த நாட்டையும்ஆராய முடியும்.  மார்க்சிய புரிதல் பற்றிய பிரச்சனை என்பது மார்க்சிய முகாமில் ஒரு அம்சம் என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். 

மார்க்சியம் என்பதை மேலைநாட்டு த்துவம் என்று . குறுக்கிக் கொள்வதும் ஒன்றும்புதிதல்ல. மார்க்ஸ் எழுதியவற்றை ஏன் லெனின், ஸ்ராலின், மாவோ எழுத்துக்களைஇயங்கியல்- வரலாற்றுப் பொருள்முதல்வாதம்- வர்க்கப் போராட்டம் என்று மூன்றுதத்துவக் கூறுகளைக் கொண்டே நாம் படித்தறிந்து கொள்ள முடியும். இங்கு பெரியாரியம்-அம்பேக்கார் கூறியவற்றைக் கூட மேற்கண்ட மூன்று கூறுகளை கொண்டுதான்ஆராயமுடியும். அறிவொணாவாத்தை மார்க்சியமாக முன்வைப்பது மார்க்சியம் அல்ல. 
ஒவ்வொரு சமூகக் கட்டத்தினையும் கடந்து செல்வதற்கான வழிமுறைகள், போராட்ட யுக்திகள் என்பது ஒரு புரட்சிகர கட்சியின் வழிகாட்டல் ஊடாக வெற்றியடைக் கூடிய முறையில் செயற்படுத்த முடியும். அதற்கு கட்சியும் சரியான புரிதலை கொண்டிருக்க வேண்டும். இன்று கொம்யூனிஸ்ட் கட்சிகள் என்பவைகளே தவறான புரிதலையும், பெயருக்கு கொம்யூனிஸ்ட் கட்சிகளாகவும் நடைமுறையில் சமூக ஜனநாயகக் கோட்பாட்டைக் கொண்டதாகவே இருக்கின்றது.  
பொருளாதார அமைப்பும் அதன் சார்ந்த சிந்தனை முறையைத் தீர்மானிக்கின்றது.சிந்தனை, சின்னங்களை அகற்றும் போராட்டவடிவங்கள், அடையாளப் போராட்டங்கள்,தன்னியல்புப் போராட்டங்கள் என்பதை சமூகமயப்படுத்துவதில் இருந்து புரட்சிகரமாற்றத்தை நோக்கியதான பயணத்தில் இருந்துதான் சமூகமாற்றம் பற்றிச் சிந்திக்கவேண்டும். ஏனெனில் சிந்தனை புதிய பொருளாதார அமைப்பு உருவாகி அதன்பாலானசமூக உறவு தோன்றாதவரை முற்றுமுழுதாக சமூகத்தில் இருக்கும் சிந்தனைமுறையும் கருத்தியல் மாற்றம் அடைவதில்லை.

பிற அணுகுமுறை-
கலாசாலையில் பாடநெறிகளுக்குள் அந்த பாடநெறிகளை கற்றுக் கொள்ளுகின்ற போதுஅணுமுறைகள் பற்றி பார்வை முக்கியமாக இருக்கின்றது. இந்த அணுமுறையூடாகபாடநெறியை கற்றுக் கொள்கின்றனர். (இந்த அணுகுமுறைகள் வர்க்கம் சார்ந்துஇருக்கின்றது ஒரு புறமிருக்க) இவர்கள் Sturcturalism, functionalism (Emil Durkheim), sturctural functionlism (Levi Struss) , conflict perspective, marxism. பின்நவீனத்துவம்,நவமார்க்சீசம் (அகநிலைவாத) என்று புதிய அணுமுறைகளை புகுத்துவது இன்றையகலாசாலை வட்டத்தில் கற்பிற்கப்படுவதுதாம்.
இந்த அணுகுமுறைகளை எழுத்தாளர்கள் என்ற சிறிய வட்டத்தினுள்ள புகுத்தப்படுகின்றது.கல்விசார் நிறுவனங்கள் இந்த பொருளாதார அமைப்பை நிலைநிறுத்தும் பொருட்டானகல்வித்திட்டங்களை உருவாக்கிக் கொள்கின்றது. இந்த பொருளாதார அமைப்பைநிலைநிறுத்தும் பொருட்டான ஊழியர்களை உருவாக்க வேண்டியது தேவையாகும். அறிவுசார் ஊழியர்களை மறுவுற்பத்தி செய்கின்ற போது உருவாக்கப்படும் அறிவுசார்பிரிவினர்கள் சமூகதளத்தில் தமது புலமைகளை வெளிப்டுத்த நுழைகின்றனர். இவர்களின்கல்வித் தகமை எல்லோரிடமும் இருப்பதில்லை (அறிவு வேறு) இவர்கள் கொண்டுள்ளபல்வேறு இசங்களை (ism) வைத்துக் கொண்டு தம்மை மற்றையவர்களை விடமேலான்மை கொண்டவர்களாக இருத்திக் கொள்கின்றார்கள்.
இவ்வாறான இசங்களின் (ism) அணுமுறையில் இருந்து வெளியாகும் எழுத்துக்களினால்ஏற்படும் மயக்க நிலை இந்தச் சமூகத்தில் உள்ள அறிவுசார் பிரிவினர்களில் உண்மையானமக்கள் நலம் கொண்டவர்களிடயே ஆழுமையையும் மயக்கத்தையும் உண்டுபண்ணுகின்றார்கள். இவ்வாறா அணுகுமுறை ஊடாக அதுவும் இல்லை இதுவும் இல்லைஎன்ற எண்ணப்போக்கை உருவாக்கிக் கொள்வதாகும். இங்கு முதலாளிய சமூக அமைப்பின் நலனே முன்னிறுத்தப்படுகின்றது. கல்விசார் நிறுவனங்கள் முதலாளித்துவபொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு உருவாக்கப்படும்கல்விமுறையாகும். 
ஆனால் கலாசாலையில் - thesis - ஒரு கோட்பாட்டை முன்னிறுத்தி ஒப்படைப்புச்செய்வதைப் போலவே தான் மார்க்ஸ் சாதி பற்றிப் பேசவில்லை என்பதாகும். இந்தக்கருத்து கலாசாலை கோட்பாட்டாக்க நெறியைப் பின்பற்றி வர்க்க முகாமை சிதைப்பதாகும்.

மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படைகள்-


இயக்கவியல் - பொருள்முதல்வாதம்
இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான ஒருதலைப்பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும். நிரந்தரமாக வளர்ச்சி பெற்ற வண்ணமுள்ள பருப் பொருளை நமக்கு பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின்சார்பு நிலையைவலியுறுத்தும் போதனையாகும். ரேடியம், மின்அணுக்கள் தனிமங்களில் ஒன்று மற்றொன்றாக மாறுவது -– இவை போன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புகளெல்லாம் .மார்க்ஸின் இயக்கவியல் பொருள்முதல் வாதமே சரியானது என்று வியக்கத்தக்க முறையில் உறுதிப்படுத்தியுள்ளன.இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் மார்க்ஸ் விரிவாக்கினார்.
பொருள்முதல் வாதம்தான் மார்க்சியத்தின் தத்துவ ஞானமாகும்.இதுவே முரணற்ற தத்துவ ஞானமாகும்.இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லபோதனைகளுக்கும் ஏற்புடயதாகும். பொருள்முதல்வாதத்தை மறுப்பதற்கும்,பலவீனப் படுத்துவதற்கும்,பழிப்பதற்கும் ஜனநாயகத்தின் எதிரிகள் முழு மூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவ ஞானக்கருத்து முதல் வாதத்தின் பல்வகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். கருத்துமுதல்வாதம் எதாவது ஒருவழியில் எப்பொழுதும் மதத்தை பாதுகாக்கவோ, ஆதரிக்கவோ செய்கிறது. மார்க்சின் வரலாற்றுத்துறைபொருள்முதல்வாதம், விஞ்ஞான சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகஅமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும்,அரசியலையும் பற்றிய கருத்துகளில்குழப்பமும் தான்தோன்றித்தனமும் ஆதிக்கம் செலுத்திவந்தன. இப்போது அவைபோய்,வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும்,உள்ளிணக்கமும் கொண்டவிஞ்ஞான தத்துவம் வந்துவிட்டது. ---தோழர் லெனின்

 
வர்க்கப் போராட்டம் ----
வர்க்கப் போரட்டத்தைப் பற்றிய போதனைதான் மார்க்சினுடைய போதனையின்முடிவாகும். நீதி மதம் அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதசொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும்.வாக்குறுதிகளுக்கும் பின்னே.ஏதாவது ஒருவர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதை மக்கள் கண்டு கொள்ள வேண்டும். பழைய ஏற்பாடுஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும், அழுகிப்போனதாகவும் தோன்றியபோதிலும் ஏதாவது ஒரு ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு,அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள்இதை உணராதவரையில் பழைய அமைப்புமுறையின் பாதுகாவலர்கள் அவர்களைஎன்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டே இருப்பார்கள். வர்க்கங்களின் எதிர்ப்பைதகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன..?  பழமையைத்துடைத்தெறியவும், புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில்தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்து தீரவேண்டிய கட்டாயத்தில்இருக்கின்றவையுமான சக்திகளை, நம்மை சூழ்ந்துள்ள இதே சமுதாயதிற்குள்ளேயே நாம்கண்டு பிடித்து,அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துதிரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ---தோழர் லெனின்


‘‘இப்போ புகழ்பெற்ற அடித்தளத்திற்கும் அதை விடக்குறையாத புகழ்பெற்றமேல்கட்டுக்கோப்பிற்கும் இடையிலான உறவைக்குறித்து மார்க்சும் ஏங்கெஸ்சும்கொண்டிருந்த கருத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்த நாம் விரும்பினால் அது பின்வரும்விதத்திலிருக்கும். 
1. 
உற்பத்திசக்திகளின் நிலை
2. அது நிர்ணயிக்கும் பொருளாதார உறவுகள்
3. குறிப்பிட்ட பொருளாதார அடித்தளத்தில் வளர்ச்சியுற்றிருக்கும் சமூக-அரசியல்அமைப்பு
4. ஓரளவிற்கு நேரடியாகப் பொருளாதாரத்தாலும் ஓரளவிற்கு அதன் அடிப்படையில்எழுந்திருக்கும் சமூக-அரசியல் முறையாலும் நிர்ணயிக்கப்படும் சமூக மனிதனின்மனப்பாங்கு, அந்த மனப்பாங்கின் தன்மைகளைப் பிரதிபலிக்கும் பலவிதமானசித்தாந்தங்கள்.
(பிளெஹனவ், பக். 109 மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சினைகள்)
உற்பத்தி சக்திகளினதும் உற்பத்தி உறவின் மீதுதான் பொருளாதார அடித்தளம்கட்டமைக்கப்படுகின்றது. இதன்மீதுதான் மேற்கட்டுமானங்களான சமயம் (மதங்கள்)குடும்பம், அரசு, சட்டம், அரசியல் எனப்படுகிறது.
உபரி உருவாக்கமானது பின்வருமாறு உருவாக்கம் பெறுகின்றது. ஒரு தொழிலாளிதன்னுடைய உற்பத்தி சக்தியினை விற்கின்றார். (யார் உற்பத்தி சாதனங்களை வைத்துக்கொள்வார்களோ அவர்களிடம்) தொழிலாளி குறிப்பிட்ட மணித்தியால உழைப்பைதன்னுடையதும், தனது குடும்பத்திற்கான பரிபாலனச் செலவிற்குப் பாவிக்கின்றார்கள்;.மீதி நேரத்தை கூலியில்லாமல் தொழிலாளிகள் உற்பத்தியில் ஈடுபடுகின்றார்கள்.தொழிலாளியினால் மேலதிக உழைப்புப் பெறப்பட்டதே உபரியாகும். இதனைமிகைவருமானம் என்றும் கூறலாம். இவ்வுபரி மூலமாக தொழிற்சாலையின் ஒருபகுதிஊழியர்களைத் தன்பக்கம் இழுக்கின்றது. மேலதிக வரும்படி அளித்தல் இதன் மூலம்தொழிற்சாலையின் நிர்வாகம், தலைமையை தன்னகத்தே உள்வாங்கிக் கொள்கிறது.இவர்களே மேட்டுக் குடியினராக உருவாக்கப்படுகின்றனர். உபரியின் வளர்ச்சியினால்ஏற்படுவதே வர்க்க பேதங்களாகும். 
லெனின் வர்க்கங்களைப் பற்றிக் கூறும் போது வர்க்கங்கள் என்பவை வரலாற்று வழியில்நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் வகிக்கும் இடத்தாலும் உற்பத்திசாதனங்களுடன் அவற்றிற்குள்ள உறவாலும் (மிகபெரும்பாலும் இது சட்டத்தால் நிலைநிறுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டிருக்கிறது) உழைப்பின் சமூக ஒருங்கமைப்பில்அவற்றிற்குள்ள பாத்திரத்தாலும், ஆகவே சமூகச் செல்வத்தின் அவற்றின் செயலாட்சிக்குஉட்பட்ட பங்கின் பரிமாணங்களாலும் இந்தப்பங்கை அவை சுவீகரித்துக் கொள்ளும்முறையிலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் போது மக்கள் பகுதிகளாகும்.வர்க்கங்களானவை சமூகப் பொருளாதாரத்தின் குறிப்பிட்ட ஒர் அமைப்பில் தாம் வகிக்கும்வெவ்வேறு இடங்களின் காரணியாய் ஒன்று மற்றொன்றின் உழைப்பைக் கைப்பற்றக்கொள்ள முடியும் படியான மக்கள் பகுதிகளாகும்‘‘  உபரியின் இன்னொரு பகுதி மூலதனத்திரட்சியாகின்றது. மூலதனத் திரட்சியானது உற்பத்தி சாதனங்களை கொள்வனவுசெய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இன்றைய நவீன உலகிலே மனித வலுவிற்குப்பதிலாக இயந்திரங்களை கொள்வனவு செய்யப்படுகின்றது. உபரியை உரிமையாகக்கொள்கின்ற வர்க்கமானது இன்னும் இன்னும் தனது சொத்தைத் திரட்டுகின்றது. இதன்காரணமாக சிறுவுடமையாளர்கள் பெரும் மூலதனத்திற்கு இரையாகின்றனர். 
உபரியில் ஒரு பகுதியை தொழிலாளி வர்க்கத்திடம் இருந்து பிரித்து கொஞ்சம் அதிகமாகசம்பளத்தை வழங்கி அதிகார வர்க்கத்தை உருவாக்கிக் கொள்கின்றது. இந்த அதிகாரவர்க்கமே உழைக்கும் வர்க்கத்தை அடக்குபவர்களாவும், கண்காணிப்பவர்களாவும்இருக்கின்றார்கள். பாதுகாப்பு நிறுவனத்தை ஆளும் வர்க்கமானது தன்னைப் பாதுகாக்கும்பொருட்டு வேலையில்லா இளைஞர்களை திரட்டி தன்பாதுகாப்பிற்காக இராணுவத்தைஉருவாக்கின்றது. அத்துடன் தொழிலாளர் வர்க்கத்தினை சிதைக்கும் பொருட்டுகருத்தியலை உருவாக்கின்றனர். 
உபரியின் விளைவாகத் தோன்றியதே வர்க்க பேதங்கள். வர்க்கத்திற்கு அடி அத்திவாரம்சொத்தாகும், சொத்து இல்லையெனில் வர்க்கம் இல்லை. வரலாறுகளும் வர்க்கத்தினால்உருவாகின்றதேயன்றி தனிமனிதர்களால் அல்ல. இதையே கம்யூனிசக் கட்சிஅறிக்கையில் 'இதுநாள் வரையிலான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப்போராட்டங்களது வரலாறேயாகும்  என கூறினார்கள். பழையவை அழிதலும் புதியவைஉருவாகலும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்திலும் ஒவ்வொருவர்க்கத்துக்கு எதிர் வர்க்கம் இருந்து கொண்டே தான் வருகின்றது. சாதியம்-


கருத்தியல்-
கருத்தியலை விதைப்பது என்பது பொருளாதார அமைப்பை அதனைத் தீர்மானிக்கின்றது.மனித வர்க்கத்தின் வளர்ச்சியின் ஊடாக உருவாக்கப்படும் சின்னங்கள், கட்டுக்கதைகள்,வரலாற்றுப் புனைவுகள், இயற்கையை கட்டுப்படுத்த முடியாத மனிதர் தனக்கு மேலாகஒரு சக்தி இருப்பதாக எண்ணுகின்ற எண்ணவோட்டம் போன்றவற்றால்கட்டமைக்கப்படுவதாகும். உழைப்பினை வழங்காது உருவாகும் மூளை உழைப்புப்பிரிவினரின் உருவாக்கம் என்பது அறிவு வர்க்கம் உருவாக்கப்படுகின்றது. முதலில்ஆண்பெண் பிள்ளைபெறும் நிலையே முதல் முதலாக தோன்றிய வேலைப்பிரிவினைஎன்றார் ஏங்கெல்ஸ். 
சாதியம் என்பது இறைக்கோட்பாடு, சமயக் கோட்பாடுகள் போல் கருத்தியலே அது அந்தபொருளாதார நியதிக்கு ஏற்ப பணிந்து செல் என்று போதிக்கின்றது. அந்தக் சமூகக்கட்டமைப்பினுள் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மற்றவர்களின் உழைப்பை வழங்காமலேமற்றவர்களின் உழைப்பை உறுஞ்சுவது மாத்திரம் அல்ல. மனிதர்களின் உழைப்பைபெறுவதற்காய் ஆண்டான் அடிமைகளாக தமது குடும்ப உற்பத்தி வட்டத்தினுள் சமூகஉறுப்பினர்களை வதைக்கின்ற பொருளாதாரச் சிந்தனையைக் கொண்டது.ஒடுக்கப்பட்டவர்களுக்கு கூலி கொடுக்காமலே அவர்களின் உழைப்பை உறுஞ்சும் சமூகஅமைப்பாகும். ஆண்டைகள் தமது ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பின் இருந்துபயன்பாட்டுப் பெறுமானத்தை பெருக்கிக் கொள்கின்றார்கள். இவ்வாறு பயன்பாட்டுப்பெறுமானத்தை பெருக்கிக் கொள்வதன் ஊடாக பரிவர்த்தனைக்கு அந்த உழைப்பைஉண்டாக்கி மூலதனத்தினை ஆண்டைகள் பெருக்கிக் கொள்கின்றார்கள். 
இதில் நகர்ப்புறமயமாதலில், முதலாளித்துவ உற்பத்தியில் சுதந்திரமானதொழிலாளர்களை உருவாக்கிக் கொள்கின்ற போதும் சாதியச் சிந்தனை தொடர்வதும்நடைபெறுகின்றது. 
இது கலாச்சாரப் புரட்சியுடனேயே சாத்தியமாகும். கலாச்சாரப் புரட்சிக்கு சாத்தியமானஉற்பத்தி உறவுதான் உள்ளதா?
சாதியம் என்பது உற்பத்தி சக்திக்கும் உற்பத்தி உறவு என்ற அடிக்கட்டுமாத்தின்  மேல் கட்டப்பட்டதே அனைத்து வடிவங்களாகும். சாதியச் சிந்தனையான பொருளாதார அமைப்புச் சார்ந்த சிந்தனை வடிவம் என்பது அன்றைய கால கட்டத்தின் பொருளாதார கட்டமைப்பிற்கு துணைசெய்கின்றது. ஆனால் சிந்தனை வடிவம் அடிக்கட்டுமானமாக காண்பது என்பது தவறானாகும்.  அவ்வாறு சிந்திப்பது அல்லது விளக்கம் கொடுப்பது மார்க்சியத்தினை விளங்கிக் கொள்வதில் உள்ள குறைபாடாகும். இவ்வாறே இரட்டைத்தேசியம் என்பதும் அடிக்கட்டுமானமாக  பார்ப்பது என்பது மார்க்சியத்தின் புரிதல் மீதான குறைபாடே அன்றி மார்க்சியத்தின் மீதான குறைபாடு அல்ல. இதில் தலித்தியம்- சாதியம் என்பதை தேசியமாக பார்ப்பது என்பது கூட தவறான அரசியல் பார்வையாகும். அதனை மார்க்சியமான நிரூபிக்க முயற்சி எடுக்கப்படும் அவல நிலை என்பது தொடரத் தான் செய்கின்றது. 
சாதிய அடையாளம், மதத்தின் அடையாளத்தினைக் கொண்டு சமூகத்தின் வளர்ச்சிப் போக்கை கணிப்பது மார்க்சியப் பார்வையல்ல. இது குறிப்பான தன்னியல்பான - அடையாள அரசியல் ஊடாக உருவாக்கப்பட்ட சிதைப்பு அரசியல் சிந்தனைவடிவமாகும். 


கீழைத்தேயவாதம்- Orientalism 
மார்க்சிற்கு எதிராக கீழைத்தேயவாதம் முன்வைக்கப்பட்டது. அதாவது மார்க்ஸ்கீழத்தேசத்து மக்களை கீழானவர்களாக பார்த்தாக கலாசாலை ஆய்வுமுறைபடிப்பாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்கள் மார்க்சிய பின்னணி கொண்டவர்கள்அல்ல. 
‘‘
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி‘ ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் எதிர்காலத்தில்ஏற்படப் போகும் விளைவுகள்‘‘மார்க்ஸ் . 201 மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் நூல் திரட்டு தொகுதி3) என்ற பகுதிகளில் ஒர் நேர்மையான வரலாற்று ஆய்வாளரின் செயற்பாடே மிதமிஞ்சிக்கிடக்கின்றது. இந்தப் பகுதிகளில் மார்க்ஸ் நவீனமயமாதல், நகர்ப்புறமயமாதல்,தொழிற்சாலையில் உழைப்பை விற்கும் நிலை ஏற்படல், உள்கட்டுமான (infrastructure)வளர்ச்சி, சுதந்திரமான தொழிலாளர்களை எவ்வாறு உருவாக்குகின்றது, இப்படி பலவிடயங்களை எடுத்துக் கூறுகின்றார். இந்த நோக்கில் வரலாற்றில் எவ்வாறான சமூகத்தன்மை கொண்ட மக்கள் அங்கு இருக்கின்றனர் என்பது பற்றிய நிலையில் இருந்துஆய்வை முன்வைக்கின்றார். சமூகம் என்பது அதற்கே உரித்தான உலகப் பார்வையை,சமூக நீதி நெறியைக் கொண்டு இருந்ததே காரணமாகும். இதன் காரணமாக அவர்களுடையசிந்தனையும் அவர்கள் சமூக உறவும் உறவு முறைக்கு உள்ளடங்கப்பட்டதேயாகும். 
மார்க்ஸ் வரலாற்று ஓட்டத்தை சிறு கட்டுரை வடிவத்தில் எழுதியதால் எழுகின்ற புரிதல்பற்றிய பிரச்சினையும் முக்கியமாகும். எழுதியவற்றை புரிந்து கொள்ளுவதில் உள்ளசிரமத்தைப் பார்க்கின்ற போது மார்க்ஸ் என்ன உண்மையில் விளக்குகின்றார் என்பதைவிளங்கிக் கொள்வதற்கு நீண்ட தேடலின் அவசியமாகின்றது.
கொலனித்துவத்தின் மாற்றம் என்பது எமது தேசங்களில் சுதந்திரமான வளர்ச்சியைத்தடுத்து நிறுத்தியது என ஏங்கெல்ஸ் கூறுகின்றார். மார்க்சின் இச்சிந்தனைக்கு முனைப்பாகஇருந்த சிந்தனைக்கு வித்தாக பல உதாரணங்களைக் காணமுடியும். மார்க்ஸ்முதலாளித்துவ வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே புரட்சி ஏற்படும் என கூறினார். ஆனால்லெனின் முதலாளித்துவ புரட்சிக் கட்டத்தை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ்நிறைவேற்றிக் கொண்டு முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நாட்டில் புரட்சியைநிறைவேற்றினார். எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள்அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படவில்லை என்றமார்க்சின் சிந்தனையோட்டமே அடிப்படையாக இருந்தது. இவைகள் அறிந்து கொள்முடியாமல் எடுத்த எடுப்பிலேயே முடிவுக்கு வரும் அணுகுமுறை எவ்விதபிரயோசனத்தையும் தர மாட்டாது.
மார்க்ஸ் கருத்துக் கூறுவதற்கு முன்னர் 350 வருடங்களுக்கு முன்பாகவேகொலனித்துவதின் சுரண்டல் ஆரம்பிக்கப்பட்ட மிருகத்தனமாக கொள்ளைகளில்ஈடுபடதொடங்கி விட்டார்கள். சுரண்டலின் மூலம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, எமதுநாடுகளில் சுதந்திரமான வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னரே கொலனித்துவ வாதிகளினால்நிர்ப்பந்தமாக மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மாற்றம் ஏற்படுத்தப்பட்ட பின்னராக மக்களுக்குவிடுதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆராய்ச்சியில் இடையறாது மேற் கொண்டிருந்தார்.அந்த ஆராய்ச்சியல் எழுந்தவைகள் தான் இந்தக் கோட்பாடுகள். மாறாக தற்போதையஆய்வாளர்கள் போல் சடங்கு, சம்பிரதாயத்திற்காக அதன் வழி இருந்து எழுத்தில்ஈடுபட்டவர்கள் அல்ல.
ஆக இவ்வாறு கொலனித்துவத்தின் மிருகத்தனமான சுரண்டலின் ஊடாக மூலதனத்தைபெருக்கிக் கொண்ட கொலத்துவ நாடுகளை அம்பலப்படுத்தும் சிந்தனை சக்திமார்க்சியத்திற்கு இருந்திருக்கின்றது. மார்க்ஸ் எந்த அடிமைப்பட்டிருந்த நாட்டிற்கும்செல்லவில்லை. ஆகவே அடிமைகளின் வாழ்க்கையை எவ்வாறு உணர்ந்திருப்பார்?மார்க்ஸ் அடிமைச் சமூகத்தில் வாழவில்லை எவ்வாறு அடிமைச் சமூகத்தைப் பற்றிஎழுதமுடியும் என்று கேட்பது அறிவொணாவாதமாகும்.


கலாச்சாரப்புரட்சி
சிந்தனைமாற்றம் என்பது பொருளாதார அடித்தளத்தினைக் கொண்டே தீர்மானிக்கின்றது.முதலாளித்துவம் நிலமானியச் எச்சங்களையும் உள்ளடக்கியிருக்கின்றது. நிலமானியஅரசவம்ச முறையை ஏற்றுக் கொண்டு சமரசம் செய்து கொண்டிருப்பதை கவனத்தில்கொள்ளவேண்டும். கால்வின் லூதரின் சிந்தனைப் போக்கிற்கு எதிராக நிலைப்பாடுகொண்ட வர்த்திக்கான் தனது திருச்சபை ஊடாக நிலமானிய சிந்தனை வடிவத்தையும்,சமூக உறவையுமே விதைக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எனவேமுதலாளித்துவம் என்பது தமது சுரண்டலுக்கு ஏற்ப சிந்தனையை சுவீகரித்துக்கொள்கின்றது.
மார்க்ஸ் எதிர்பார்த்தது போல முதலாளித்துவம் ஏன் சாதியை உடைக்கவில்லை என்பதைமார்க்சிடம் தேடுவதுபோல லெனின்- மாவோவின் கலாச்சாரப் புரட்சியில் தேடுவதுசரியானதாக இருக்கும். 
கலாச்சாரப்புரட்சியை எவ்வாறு விளங்கிக் கொள்வதில் சிக்கல் தொடர்ந்தும் நீடித்துக்கொண்டிருக்கின்றது.
புரட்சியின் பின்னர் உருவாகிய புதிய உற்பத்தி உறவிற்கு ஏற்ப சமூக உறவுகளைகட்டியமைக்கும் நோக்குடன் வெளிப்பட்டதே கலாச்சாரப் புரட்சி.
கலாச்சாரப் புரட்சியின் பின்னரான தாக்கத்தையும் தவறுகளையும் தோழர் சண்(கம்யூனிசப் போராளியின் நினைவுகள், வில்லியம் கிண்டன் - சோசலிசத்தில் வர்க்கப்போராட்டம்- மாவோவின் பாத்திரம் போன்ற வரலாற்று ஆவணங்களின் ஊடாகவெளிப்படும் ஆய்வுமுடிவுகள் இயங்கியலுடன் இணைந்ததாக உள்ளது.
இவர்கள் உற்பத்தி சக்திக்கும் உற்பத்தி உறவிற்குமான உறவுகளில் இருந்துவெளிப்படுத்தும் ஆய்வுகள் சரியானதாக இருக்கின்றது. 
உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுவதும், அதனை தொடர்ந்து பாதுகாப்பதற்கு உழைக்கும்மக்களுக்கான மாற்றுச் சிந்தனையை உருவாக்கும் போராட்டமும் அவசியமாகின்றது.உலகின் முதல் கம்யூன் புரட்சியின் அனுபவத்தின் பின்னர் பழைய நிறுவனங்களைதொடர்ந்தும் நிலைகொள்ள வைப்பது புரட்சிக்கு பாதகமானது என ஏங்கெல்ஸ், மார்க்ஸ்ஆகியோர் வந்தடைந்தனர். இதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இதனைஅறிவுறுத்தியும் இருந்தனர். 
நாம் சிந்தனை மாற்றத்திற்கான போராட்டத்தினை ரஸ்யப் புரட்சியின் பின்னரும், சீனப்புரட்சியின் பின்னரா கலாச்சாரப் புரட்சி என்பன எம்முன்னால் உள்ள படிப்பினைகளாகும். 
இங்கு ஜனநாயக மத்தியத்துவம், அல்லது பாட்டாளிவர்க்கச் கலாச்சாரம் என்பதைநிலமானிய - முதலாளித்துவ எச்சத்தில் இருந்து வரையறுக்கப் போகின்றோமா அல்லதுபயன்பாட்டுப் பெறுமதியை மையம் கொண்ட உறவல்லாது உழைப்பதும், உடலுழைப்பைவளங்குவதும், பரஸ்பர ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற புதிய கலாச்சாரத்தைஉருவாக்கப் போகின்றோமா? புதிய சமூக உறவு எவ்வகையான ஜனநாயகவிழுமியங்களை கொண்டதாக .இருக்க முடியும் என்பது ஆய்விற்கு உரியதாகும். 

 
 
2. மார்க்சியம் அன்னியப்பட்ட தத்துவமா?
மார்க்சீயமே முழுமையான குறைதீர்க்கும் காரணி எனக்  கூறிக் கொண்டே மார்க்ஸ் தனது ஆய்வின் ஊடாக கண்டடைந்த உண்மைகளை ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் அடக்கிக் கொள்ளும் சிந்தனைப் போக்கு ஆபத்தானது. 
மார்க்சியம் என்பதை என்னவென்று புரிதலை ஏற்படுத்த வேண்டியது ஒரு கடமையாக இருக்கின்ற போது மார்க்சிய அணுகுமுறை (சமூக விஞ்ஞானத்தின்) ஊடாக  சமூகத்தினை விளங்க வைப்பதும் கடமையாகும். மார்க்ஸ் வாழ்ந்த ஐரோப்பிய சூழல் என்பதில் இருந்து இன்று ஏகாதிபத்தியக் காலகட்டத்தில் வாழ்கின்றோம். ஏகாதிபத்தியக் காலத்தில் வாழ்ந்தாலும்  தொடர்ச்சியான சிந்தனை முறை சமூகத்தில் கடத்தப்பட்டடே வந்துள்ளது. இந்தச் சிந்தனைகளை விளங்க வைப்பது முக்கியமான கடமையாக இருக்கின்றது.
சமூக வளர்ச்சிப் போக்கில் முற்போக்கு கட்டத்தை தாண்டி வந்தாலும் அரசியல்- பொருளாதார- கருத்தியலாக்கம் என்பது சமூகத்தினை பின்னோக்கிச் செல்லும் வகையில் தான் இருக்கின்றது. இது சோவியத் உடைவில் இருந்து தொடங்கி ஆப்கான் மண்ணில் உயர்ந்த நிலையில் இருந்த பெண்கள் மதவடிப்படைவாத சமூக உறவில் மாற்றத்திற்கு உள்ளாக்கியதும், எவ்வாறு அதனை மறுவுற்பத்தி செய்கின்றார்கள் என்ற நிலையில் இருந்து கருத்துருவாக்கமும் அது எவ்வாறு சமூக மயப்படுத்தப்படுகின்றது என்பதை வரலாற்று ரீதியாக அறியவேண்டும். 
இவ்வாறே ஆண்டாண்டு காலமாக சாதியம் என்பது தொடர்ச்சியாக மறுவுற்பத்தி செய்யப்பட்டு வருவதையும் குறிப்பாக மனிதரே மனித மலத்தை அள்ளும் நிலையை தொடர்வதும் இந்தியச் சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
முழுமையாக முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து ஏகாதிபத்தியகட்டத்தில் வாழவில்லை என்பதற்காய் மார்க்சிசம் முழுமையானது இல்லை என்று கூறமுடியுமா? இவ்வாறே சாதியச் சமூகத்தில் வாழவில்லை சாதியத்தின் தோற்றம் பற்றி எழுதவில்லை என்பதற்காய் மார்க்சிசம் போதாமை உள்ளது என்பது நமது சிந்தனைவளர்ச்சியில் உள்ள குறைபாடாகும். மாறாக மார்க்சியத்திலும் அதன் அணுகுமுறையிலும் உள்ள குறைபாடு என்பது அர்த்தமற்றதாகும்.
முன்னைய கட்டுரையில் இவை பற்றி விபரித்திருந்த போதிலும் தொடர்ந்தும் ஒரு அன்பர் தமது- நமது அறியமையை மார்க்சியத்தின் மீதான குறைபாடாக வெளிப்படுத்திக் கொண்டு வருக்கின்றது மாத்திரம் அல்ல. மற்றவர்களை முத்திரை குத்துவதின் ஊடாக தமது குறைபாட்டை மடைமாற்றிக் கொண்டிருப்பது தனிப்பட்ட சிலர் தோழர்களை பாதிப்பதில்லை. இது சமூகத்தில் உள்ள மற்றைய இளந்தலைமுறையையும், ஆவலர்களையும்  துரத்திவிடுவதில்  தான் வந்து முடிகின்றது.
சமூகத்தை பொறுத்தவரை மார்க்சியத்தின் எதிரிகளே அதிகம் ஆகவே நாம் பொறுப்புடன் விவாதிக்கவும் கருத்துக்கள் கூறவும் வேண்டும். பல புதிய விடயங்களாகவும், வரைவிலக்கிணங்கள் அதிகமாகவும் இருக்கின்றது. இதனை சமூக வரலாற்று விஞ்ஞான அடிப்படையில் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மார்க்சிய மூன்று தத்துவக் கூறுகளைக் கொண்டே நாம் படித்தறிந்து கொள்ள முடியும். அதற்கு அப்பால்  இருந்து அணுகும் போக்கு கருத்துமுதல்வாதமாகும்.
இங்கு கருத்துமுதல்வாதம் என்பதும் சிந்தனைப் போக்குத்தான். இந்தச் சிந்தனைப் போக்கு எந்த வர்க்கத்தை பாதுகாக்கின்றது என்பது முக்கியமானதாகும். உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான போக்கை வலியுறுத்துவது  வரலாற்றுப் பொருள்முதல்வாதம். அதற்கு மாற்றாக இருப்பதுதான் கருத்துமுதல்வாதம்.
ஆண்டாண்டு காலமான மனித இனம் சேகரித்த அறிவை. நாம் சில வருடங்களில் சிலமாதங்களில் இன்று சில மணிநேரத்தில் அதனை அறிந்து கொண்டு எல்லோரையும் விடமேதாவியாகவும் எல்லாம் தெரிந்த புத்தியீவியாகவும் இவ்வுலகத்திற்கு பறைசாற்றமுன்படும் மாந்தர்களிடையே நாமும் வாழ்கின்றோம்.
நாம் பெற்ற அறிவிற்கு நாம் சொந்தக் காரர்கள் அல்ல. 
அறிவு குவியபப் பெற்ற உலகில் வாழ்கின்ற நாம் தொழில் நுட்பத்தின் காரணமாக எம்முன்னோரை விட அறிவு உள்ளவர்களாக எம்மால் நடமாட முடிகின்றது.
இதுதான் இன்றைய உலக நிலை.
மார்க்சீயம் உச்சரித்தவர்களை எல்லாம் மார்க்சீயவாதிகள் என்று பிரகடனப்படுத்தும்உலகில் இன்னும் எத்தனையோ பேர் வருவார்கள். எம்மைப் போன்றவர்கள் குட்டிமுதலாளிய சிந்தனைக்கு உட்பட்டவர்களாக இருக்க முடியும். ஆனால் பெரும்புரடசியாளர்கள் என்றும் தம்பட்டப் அடிப்பது தான் இதுவரை வரலாறு.
இங்கு அறிவியல் எழுச்சியில் கியூம், காண்ட், கெகல், ஃபாயபார்க் என்போர் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் தத்துவ அறிஞர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை."என்னுடைய இயக்கவியல் முறை ஹெகலிய முறையில்  இருந்து வேறுபட்டு இருப்பதுமட்டும் அல்லாமல், நேரடியாகவே அதற்கு எதிரிடையானது ".(பார்க்க: மூலதனம்,
முதல் தொகுதி, இரண்டாவது ஜெர்மன் பதிப்பின் பின்னுரை,
1873, 
ஜனவரி 24)  இவர்களின் வளர்ச்சியில் இருந்து விஞ்ஞான சோசலிசத்தினை படைத்தவர்தான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகும். இவர்களைத் தொடர்ந்து லெனின், ஸ்ராலின், மாவோ என மார்க்கியம் வளர்ச்சியடைந்துள்ளது.
வளர்ச்சிப் போக்கில் ஆராயாது கலைசாலை  கோட்பாட்டிற்கு ஏற்ப எழுதும் போக்கில் அமைந்த மார்க்சின் மீதான கீழத்தேயவாதம் என்ற கோட்பாடுகள் என்பது கொச்சைப்படுத்துவதாகும்.
 
மொக்குகள் மோடுகள் என்ற
மார்க்சும் எங்கல்சும் ஜெர்மானியர்கள். மார்க்சியம் ஐரோப்பாவில் பிறந்த தத்துவம்.மார்க்சுக்கும் ஏங்கல்சுக்கும், பிரதானமாக, ஐரோப்பாவே உலகம். ஐரோப்பாவுக்குக் கிழக்கேஉள்ள கீழ்த்திசை உலகம் பற்றி அவர்களுக்குத் தெரியாது என்பது கீழத்தேயவாதத்தின் மையச் சிந்தனையாகும். இங்கு இனக்குழும முறையும் அவர்களின் வாழ்வியல் என்பது கிறிஸ்தவத்தின் ஊடாகவே பெறப்பட்டதாகும்.
பிறயினத்தார்- தாம் மற்றவர்கள்-  போன்றவையும் கறுப்பு- வெள்ளை என்ற பாகுபாட்டுச் சிந்தனை என்பது விவிலியத்தின் ஊடாக தொடரப்பட்டு வருகின்றது. 1970- 73 இடைப்பபட்ட காலத்தில் விடுமுறையில் யாழ்வந்தபோது கடற்கடையில் உலாவந்த சுவாமியாரைக் கண்ட பொதுமனிதர் முழங்காலில் இருந்து ஆசீர்வாதம் பெற்றார். அவரைத் தொடர்ந்து நானும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன். இந்த முறை பிற்பட்ட காலத்தில் கண்டதாகவோ, நான் அவ்வாறு செய்தை கண்டதில்லை. இந்தவித போக்கு சமூகத்தில் இருந்திருக்கின்றது. இந்த வேளையில் மனிதர்களின் வாழ்வியலில் ஏற்படுகின்ற சிந்தனை மாற்றத்தின் ஊடாக அவைகள் இல்லாததொழிந்துள்ளது.
இவ்வாறா செயற்பாடுகளின் பின்னால் உள்ள சிந்தனைவடிவமான (Petrinism - The beliefs or tendencies attributed to the apostle Peter; according to the Tübingen school of theology, the doctrine that Christianity is a phase or development of Judaism, supposed to have been advocated by the followers of Peter: opposed to Paulinism. See Paulinism, and Tübingen school (under school). பேட்ரனிசம்- பாதுகாவலர்  (the body of theological doctrine taught by, or attributed to, the apostle Peter.) என்பது தம்மை அறிவார்ந்தவராகவும் மற்றவர்களைஒன்றும் தெரியாதவராகவும் நடத்துவதாகும்.
இதேபோல கடல்தொழிலாளர்களுக்கு அணுக்கழிவைப் பற்றி என்ன தெரியும் அல்லது பார்ப்பணர் தான் விஞ்ஞானியாக முடியும் என்ற சிந்தனைப் போக்கையும் கொள்ள முடியும். இங்கு கருத்தியல்மேலாதிக்கவாதம் என்பது ஒரு பொருளாரச் சிந்தனையுடன் தொடர்பு பட்டதாகும்.
மார்க்சிற்கு எதிராக கீழைத்தேயவாதம் முன்வைக்கப்பட்டது. அதாவது மார்க்ஸ்கீழத்தேசத்து மக்களை கீழானவர்களாக பார்த்தாக கலாசாலை ஆய்வுமுறைபடிப்பாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்கள் மார்க்சிய பின்னணி கொண்டவர்கள்அல்ல. 
‘‘
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி‘ ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் எதிர்காலத்தில்ஏற்படப் போகும் விளைவுகள்‘‘மார்க்ஸ் . 201 மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் நூல் திரட்டு தொகுதி 3)என்ற பகுதிகளில் ஒர் நேர்மையான வரலாற்று ஆய்வாளரின் செயற்பாடே மிதமிஞ்சிக்கிடக்கின்றது. இந்தப் பகுதிகளில் மார்க்ஸ் நவீனமயமாதல், நகர்ப்புறமயமாதல்,தொழிற்சாலையில் உழைப்பை விற்கும் நிலை ஏற்படல், உள்கட்டுமான (infrastructure)வளர்ச்சி, சுதந்திரமான தொழிலாளர்களை எவ்வாறு உருவாக்குகின்றது, இப்படி பலவிடயங்களை எடுத்துக் கூறுகின்றார். இந்த நோக்கில் வரலாற்றில் எவ்வாறான சமூகத்தன்மை கொண்ட மக்கள் அங்கு இருக்கின்றனர் என்பது பற்றிய நிலையில் இருந்துஆய்வை முன்வைக்கின்றார். சமூகம் என்பது அதற்கே உரித்தான உலகப் பார்வையை,சமூக நீதி நெறியைக் கொண்டு இருந்ததே காரணமாகும். இதன் காரணமாக அவர்களுடையசிந்தனையும் அவர்கள் சமூக உறவும் உறவு முறைக்கு உள்ளடங்கப்பட்டதேயாகும்.
இங்கு மார்க்சின் சிந்தனைவடிவத்தினை குறிக்கி தட்டையாகப் பார்க்கும் பார்வையானது மார்க்சினை உயர்த்தியே சிதைக்கின்றதையே அவதானிக்கலாம்.
 
விஞ்ஞான சோசலிசம்-
மார்க்சின் ஆய்வு முடிவு விஞ்ஞானசோசலிசமாகும் ஹகல் போன்ற கருத்துமுதல்வாத இயங்கியலை தலைகீழாக கொண்டு வெளிப்படுத்தியதே இயங்கியல் பொருள்முதல்வாதமாகும். இத்துடன் இவரின் முடிவு விஞ்ஞான அரசியல் பொருளாதாரமாகவும் உபரியின் ஊடாக சொத்துப்படைத்தவர்கள் உருவாகின்றார் என்று வெளிப்படுத்தினார்.
அதேவேளை பொருள்முதல்வாதம் என்பது இந்தியாவில் இல்லை என்று கூறுகின்றது தவறானதாகும். இங்கு வாசிப்பு முறை என்பது இந்த சமூகத்தில் இருக்கின்ற சிந்தனையேதீர்மானிக்கின்றது. அதேவேளை மீள்வாசிப்பு என்பது அன்றைய சமுதாய ஓட்டத்தில்இருந்து வாசிப்பது எவ்வாறு என்பது ஒரு பயிற்சி தேவை என்பது மறுப்பதற்கு இல்லை.பரிணாம வளர்ச்சியை புல்லாகிப் பூண்டாகி, புழுவாகி, மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி,பாம்பாகி, கல்லாய், மனிதராய் வந்தது என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில்கூறுகின்றார். பெண்களுக்கு இயற்கையிலே கூந்தலில் மணம் இல்லை என்ற விவாதத்தைநோக்கும் போது அறிவியல் ரீதியான சிந்திக்கும் நிலை இருந்துள்ளதை அவதானிக்கமுடியும். மனிதர்களின் செயற்பாடுகளே ஒரு விளைவைத் தீர்மானிக்கின்றது என்றகருத்தை (இயற்கையாக மனம் உண்டாகாது) முன்வைத்ததை அவதானிக்க முடிகின்றது.புராண இதிசாசம் சொல்லும் அணுபற்றிய (அணுக்குண்டு, விமானம் இருந்தது என்று கருதுவது தவறு) சிந்தனை, பொருள்முதல்வாதச் கூறுகளை ஆராய்ந்து படிப்பது என்பதில்கூட நம்மிடம் பயிற்சி இல்லை என்பதும் உண்மைதான்.
தமிழ் சமூகத்தில் உள்ள  பொருள்முதல்வாதச் சிந்தனையைப் பற்றி எவரும் ஆராயமுயற்சிக்கவில்லை என்று கருதுகின்றார்  பேராசிரியர் நா. வானமாமலை.  தமிழ்இலக்கியத்தில் பொருள்முதல்முதல்வாதச் - உலோகாயதத்தை சிந்தனையைஆராய்ந்துள்ளார். பேராசிரியரின் தமிழ் இலக்கியப் பரப்பில் செய்ததையே அவர் சொல்லில்இங்கு தரப்படுகின்றது.
தமிழில் உள்ள பௌத்த சமய நூல்களான மணிமேகலை, நீலகேசரியில் உலகாயதம்விவரிக்கப்பட்டுள்ளது. “ஒன்று பொருள்முதல்வாதம், மற்றொன்று கருந்து முதல்வாதம்,இவற்றையே உலகாயதம், ஆன்மீகவாதம் என்றும் கூறலாம். இவையிரண்டும்நேர்முரணான கண்ணோட்டங்கள். இப்பிரபஞ்சத்திற்கு அடிப்படையாது? பிரபஞ்சத்தின்பொருள்கள் சக்திகள், உயிர்கள் இவையாவும் எதன் அடிப்படையில் தோன்றின?இக்கேள்விக்கு இருவிடைகளை தத்துவங்களில் காணலாம். பிறுபாடுகளாலும்நிலைபெறுகொண்டு இயங்குகின்றன. பிரபஞ்ச வாழ்க்கையின் அடிப்படை பொருளே(matter), என்ற கண்ணோட்டம் உலகாயதம் அல்லது பொருள்முதல்வாதம் எனப்படும்” (148வெ. கிருஸ்ணமூர்த்தி ஆய்வு வட்ட வெளியீடு 6
 தம்மால் முடியும் என்ற நம்பிக்கை, மனித சக்தியில் நம்பிக்கை முதலிய கருத்துக்கள்இச்சமுதாயத்தின் உலகக் கண்ணோட்டமாயிருந்தன.” (157) இனக்குழுத்தின் காலத்தில்இயற்கை மீதான பயம் என்பது தன்னை வெல்ல முடியாத சக்தி என்பதினால் ஆகும். எப்போஇயற்கையை தன்னால் கண்டுப்படுத்த முடியும் என்ற சக்தி பெற்றபின்னர். மனிதர்கள் தான்உருவாக்கியவற்றிற்கே அடிமையாகிப் போனார்கள். பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்தபொருள்முதல்வாதக் கருத்தானது வீரயுகத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. இந்தக்காலத்தில் இனக்குழும முறையின் சிதைவையும், நிலப்பிரபுத்துவ சமூகத்தின்தொடர்ச்சியை சுட்டி நிற்கின்ற காலத்தைய பொருள்முதல்வாதத்தினை முன்னிலைஉலகாயதம் (proto materialism) என்று வரையறைத்துக் கொள்கின்றார்.
தமிழ் இலக்கியத்தின் சுவையை பக்தி இலக்கியங்களை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது.அந்த இலக்கியங்களில் உள்ள இலக்கண வளம் போன்றவை மதம் சார்ந்த சிந்தனையைபறைசாற்றுகின்றது என்ற காரணத்திற்காக ஒதுக்கிக் கொள்ள முடியாது. ஆனால் அந்தஇலக்கியத்தில் உள்ள பொருள்முதல்வாதச் சிந்தனையை முன்கொண்டு வருவது கூடபெரும் சவாலே. தமிழ் சமூகத்தில் பொருள்முதல்வாதம் இருந்துள்ளதை நாம் அன்னியதேசத்தவர்களின் ஆய்வின் ஊடாக அறிய முடிகின்ற அலவம் இருக்கின்றது. இதில்பேராசிரியர் நா.வானமாமலை தொடங்கி வைத்த ஆய்வு முறை முன்னோக்கிச்செல்லவேண்டும் என்றால் இயங்கியல்- வரலாற்று பொருள்முதல்வாதத்தில் நீண்டபரீட்சையம் எவ்வளவு முக்கியமே தமிழ் இலக்கிய வரலாற்றைப் பற்றிய பரீட்சையும்அவசியமாகும்.
இங்கு தமிழ் பரப்பில் வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை இருந்துள்ளது. அவை கொச்சைப் – அல்லது முன்னிலை பொருள்முதவாதமாக கருத முடிகின்றது. இவற்றிற்கு மாற்றாக விஞ்ஞான  சமூகவியல் பார்வையைத் தந்தவர்தான் மார்க்ஸ். ஆக பொருள்முதல்வாதம் - மார்க்சியம் என்பது அன்னியச் சிந்தனை என்பது தவறானதாகும்.  மனிதகுலம் சேமித்த அறிவின் திரட்சியென்பது விஞ்ஞான வகைப்பட்டதாக உருவாகிய சிந்தனை மறுப்பதாகும். மனித குலத்தின் சிந்தனை என்பது உலகம்பூராகவும் பரவிபுதிய அறிவியற் கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது. இவ்வாறு உருவாகிய சிந்தனை வடிவங்கள் மனித வர்க்கத்தின் வளர்ச்சிக்குத் துணையாக இருக்கின்றது.
”” மார்க்சியம் ஐரோப்பாவில் பிறந்த தத்துவம். ஐரோப்பாவில் சாதி கிடையாது. எனவேமார்க்சியம் சாதியைப் பற்றி அறிந்து இருக்கவில்லை. இது இயல்பானதே. எந்த ஒருதத்துவமும் பிரதேச எல்லைகளை மீறி, பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்துச்சிக்கல்களுக்கும் தயார் 
நிலையிலான தீர்வுகளை (READYMADE SOLUTIONS) வழங்கும்  என்ற எதிர்பார்ப்பேஅறிவியலற்றது (UNSCIENTIFIC).”” மேற்கண்ட கூற்றுக்கு மாறாக மார்க்சிய அணுகுமுறை ஊடாக  பேராசிரியர் வானமாமலை அவர்கள்  மேற்கொண்டுள்ளார்.
இங்கு மார்க்சிய அணுமுறையைப் பயன்படுத்தி விஞ்ஞானரீதியாக ஆராய்வது எவ்வாறு என்பதை நாம் தான் பயிற்சி எடுக்க வேண்டும். மார்க்சியம் தயார் நிலையில்  தீர்வு வழங்குவதில்லை.
 
 நமக்கான கோட்பாடு
நமது நாடுகளுக்கான கோட்பாட்டை இயங்கியல் ரீதியாக ஆய்வதன் ஊடாகவே உருவாக்கிக் கொள்ளமுடியும்.  கல்விசார் நிலையில் பலஅணுகுறைக் கோட்பாடுகள் உள்ளது போல் மார்க்சிய அணுகுமுறை ஊடாக இந்தச் சமூகத்தை ஆராய்ந்து நமக்கான கோட்பாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இங்கு  ”மார்க்சின் தத்துவத்தை நாங்கள் முற்றும் முடிவான ஒன்றாய்மீறவொண்ணாத ஒன்றாய்க் கருதவில்லை. மாறாக, அது சோசலிஸ்டுகளுக்குரிய விஞ்ஞானத்தின்  அடிக்கல்லை மட்டுமே கொடுத்திருக்கிறது. சோசலிஸ்டுகள்வாழ்க்கையுடன்  சேர்ந்து நடைபோட விரும்பினால் இந்த விஞ்ஞானத்தை எல்லாத்திசையிலும் வளர்த்துச் செல்வது அவசியம் என்பதைநாம் ஐயமற அறிவோம்.மார்க்ஸின் தத்துவத்தை தன்னிச்சையாக முறையில்  அவை விரிவுபட வளர்த்திடுவதுமுக்கியமாய் ருஷ்ய சோஷலிஸ்டுகளுக்கு மிக்கதொரு தேவையாகுமெனக்கருதுகின்றோம். ஏனெனில் இந்தத் தத்துவம் பொதுவான வழிகாட்டும்கோட்பாடுகளையே அளித்திருக்திடுகிறது, தனிப்பட்ட முறையில் அவைபிரான்சிலிருந்து வேறு விதமாய்  இங்கிலாந்திலும், ஜேர்மனியிலிருந்து வேறுவிதமாய் பிரான்சிலும், ருஷ்யாவிலிருந்து வேறு விதமாய் ஜேர்மனியிலும்கையாயளப்படுகிறவை.” (பக்54 லெனின் நூல் திரட்டு!)
 
சாதியும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவமும்
மலத்தை கையால் அள்ளுவதை நிறுத்த முடியுமா என்றால் முடியும். அதற்கு இன்றைய நவீன வடிகால்லமைப்பு, கழிவுகளை மறுசுலர்ச்சிக்கு உள்ளாக்கும் நிலையம், அனைத்தையும் சுத்தீகரிப்பு நிலையத்தின் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கான அரச திட்டம் என்பது இல்லை என்பதே உண்மை. இவற்றைச் செய்யாது ஏகாதிபத்திய பொருளாதார நலனுக்கு ஏற்ற வகையாக உட்கட்டுமானம், கட்டமைப்பில் மறுசீரமைப்பு, வளங்களை  பணத்திற்குரிய பண்டமாக்கல், தனியார் மயமாக்கலின் ஊடாக அரச நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைகின்றது.
நாட்டைச் சுற்றமாக வைப்பது என்பது தெருவில் இருக்கின்ற குப்பைகளை கூட்டி விடுவது என்பது வெறும் அடையாள அரசியல் பூச்சேயன்றி அது பெரும் மாற்றத்தைக் கொடுப்பதில்லை. ஆனால் மாற்றத்தைக் கொடுக்கக் கூடியது என்றால் அடிப்படையில் திட்டமிட்ட சுகாதார அமைப்பு முறை அவசியமாகும். இதன் ஊடாக மலத்தினை அள்ளும் மக்களை விடுவிக்க முடியும். அந்த மக்களை நவீன தொழிற்நுட்பத்தினை, திட்டமிட்ட கழிவகற்றல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் கோசத்தினை முன்னிறுத்த வேண்டும்.
இவ்வாறான கட்டமைப்பை உருவாக்கக் வேண்டிய தேவையை மக்களின் ஊடாக அரசை நிர்ப்பந்திக்க  வேண்டும். ஆனால்  இதற்கான போராட்டத்தினைக் கூட பரந்துபட்ட ரீதியாக முன்னெடுப்பதில் சாதியத்தினை  எதிர்ப்பவர்கள் அடையாள அரசியலான தலித்தியத்தில்  மாத்திரம் கவனம் செலுத்துகின்றனர். தலித்தியவாதிகள் தமது வர்க்கத்தவர்களின், தமது பிரிவினரின் தேவையுடன் திருப்தி கொள்கின்றனர்.
அரச இயந்திரத்தினை அசைக்கும் போராட்டம் என்பது தனியே ஒரு பிரிவு ஒடுக்கப்பட்டவர்கள் மாத்திரம் போராடினால் மாத்திரம் போதாது அனைத்து ஒடுக்கப்படும் பிரிவினரும் சேர்ந்தே போராடி வேண்டும்.
இங்கு  கழிவுளை அகற்றும் முறையை நவீனப்படுத்துவது ஊடாக மக்களை அந்த தாழ்வான நிலையில் இருந்து மீட்க வேண்டும். அதனைச் செய்யாது சாதிய எதிர்ப்பு, இடவொதுக்கீடு என்று அடையாள அரசியலில் மாத்திரம் கவனத்தை குவிப்பதால் உயர்ந்த உற்பத்தி சக்திகளை (அறிவார்ந்த உழைப்பாளிகளை, தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள) உருவாக்கிக் கொள்ள முடியாது.
ஒடுக்கப்படும் மக்களை  இழிநிலையில் இருந்து விடுவிப்பது தனியே அடையாள அரசியல் செய்துவிடாது.
உற்பத்தி முறையில் மாற்றம்  ஏற்பட வேண்டும். இன்று நீலிக்கண்ணீர்வடிக்கும் சமூகஅமைப்பில் ஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். முதலாளித்துவ உற்பத்திக்குரிய உட்கட்டுமான அமைப்பு என்பதும் அவசியமாகின்றது. முதலாளித்துவ உற்பத்தியை ஏற்றுக் கொண்டு இன்றைய அரசுகள் தனியார்மயமாக்கல், வளங்களை பணப்பண்டமாக்கல், உட்கட்டுமானங்களை நிதிமூலதனத்திற்கு சாதகமாக மட்டுமே அமைந்திருக்க வழிவகைக்கின்றனர். ஆனால் உழைக்கும் மக்களின் நலன்பேனும் உட்கட்டுமானம் என்பது அவசியமானதாகும். இதுவே நவீன சுத்தீகரிப்பு, கழிவுமுறை வடிவங்களாகும்.
 
உற்பத்தி முறைக்கும் சிந்தனைக்கும் இடையேயான உறவு-
உற்பத்தி முறைக்கும் சிந்தனைக்கும் இடையேயான உறவை அறிந்து கொள்வது அவசியமானதாகும். பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல்,அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வுஅவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூகவாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது. சாதியத்தினை இல்லாதொழிக்க இடையூறாக இருப்பது நிலமானிய எச்சமேயாகும். இங்கு முதலாளித்துவம்- ஏகாதிப்பத்தியம் என்ற கட்டத்தில் வாழ்கின்ற போதும் பழைய உற்பத்தி உறவே மறுபடியும் மறுவுற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
இனக்குழும வாழ்வு முறையில் அமைந்த சமூக உறவின் எச்சங்கள் நிலப்பிரபுத்துவத்தில் தொடர்கின்றது. அதேபோல முதலாளித்துவத்தில் ஏன் ஏகாதிபத்தியத்திலும் நிலப்பிரபுத்துவ சமூக உறவு தொடர்ச்சியாகத் தான் இருக்கின்றது. இன்றையக்கு மேற்கு தேசங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்றால் அவர்களின் வாழ்வு முறையில் இருக்கின்ற சமூகப் பண்புகள் முழுமையான தனித்துவவாத பண்பு கொண்டதாக இல்லை.
மேற்குநாடுகளில் கிறிஸ்தவ மதபீடத்தின் ஊடாக நிலமானியம் அழுத்தமாக பாதுகாக்கப்படுகின்றது. கால்வின், லூதரின் மதத்தை தனிமனிதத் தெரிவாக முன்வைத்தார்கள். இவர்களின் சிந்தனை முதலாளித்துவ  உற்பத்தி முறைக்கு ஆதரவாகவும் (உழவர்களுக்கும் வணிகர்களுக்கும் இடம்பெற்ற போரே பக்தி இலக்கியம் என்பர் அதுபோல அடிமைகளை விடுவித்த லிங்கனின் செயல் என்பது முதலாளித்துவ  உற்பத்தி முறைக்கு ஏற்றதாகும்)
‘‘ஆனால் ஒப்பந்தங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்றால் தம்மையும் தமது செய்கைகளையும் உடமைகளையும் சுதந்திரமாகக் கையாளக் கூடிய நபர்கள் ஒருவருக்கு ஒருவர் சமத்துவ நிலையில் உள்ள நபர்கள் முதலில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ‘‘சுதந்திரமான‘‘ ‘‘சமத்துவமான‘‘ மனிதர்களைப் படைப்பதே முதலாளித்துவ உற்பத்தியின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் இது அரை உணர்வுள்ள முறையில், மதவேடத்தில் நடைபெற்றாலும் லூதர் மற்றும் கால்வினுடைய மதச் சீர்திருத்த காலத்தில் இருந்து இது கோட்பாடாக உறுதிப்பட்டது.‘‘ (ப 130 கு.அ.த தோற்றம்) இவ்வாறு தத்துவப் போக்கு இருந்த போதிலும் முற்றாக கால்வினுடைய சிந்தனைப் போக்கு நிலப்பிரபுத்துவத்தின் சிந்தனை வடிவத்தை முற்றாக அழிக்கவில்லை. 
முதலாளித்துவ வளர்ச்சி என்பது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் முழுமையடையவில்லை. முதலாளித்துவம் என்பது மார்க்ஸ் எதிர்பார்த்தது போலவே பழைய உற்பத்தியில் இருந்து விடுதலைபெறுவார் என எண்ணிக் கொண்டார். 
இங்கு பழைய உற்பத்திமுறையில் அமைந்த நிறுவனக் கட்டமைப்பு மாற்றாக புதிய கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்று பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் முடிவிற்கு வந்தனர்.
மேற் கண்டது போல சாதியத்தினை ஒழிப்பதற்கு உட்கட்டுமானம் மாத்திரம் துணைபுரியாது. மார்க்ஸ்
 
·         கழிவை மறுசுழர்ச்சிக்கு உட்படுத்தும் போது மனித வலு ஒரு குறிப்பிட்ட மனித வலு அவசியமாகும்.
·         மலக்கழிவு – வடிகால் இவற்றினை நவீனமயப்படுத்தினால் மனிதர்கள் எவரும் தமது கையாள் அள்ளும் நிலைமுற்று முழுதாக  இல்லாதாக்கலாம்.  இங்கு இயந்திரங்களை கையாள்வதற்கே மனிதர்கள் அவசியப்படுகின்றது.
இவ்வாறு நவீனமயப்படுத்தத் தூண்டுதவற்கான போராட்டங்களையும் போராட்டத்திற்கான முனைப்பையும் செய்யமுடியவில்லை.  இங்கு மார்க்ஸ் கணித்த  மேற்கட்டுமானத்தில் ஏன் மாற்றத்தை உண்டு பண்ணும் அல்லவா?
இறுதியாக
சாதீயம் தொடர்ச்சியாக உயிர்வாழ்வதற்கான பொருளாதார அடிப்படை என்பதை அறிவது மாத்திரம் அல்ல. மாறான அதனை மாற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதிலும் குறிப்பாக முதலாளித்துவ பொருளுற்பத்தி காலத்திலும் செய்ய முடியும். அதற்கான வேலைமுறைகள் என்பதும் அவசியமாகின்றது. இந்த பொருளாதார அமைப்பில் கூட பல சீர்திருத்தத்தினை கொண்டுவர முடியும். மனிதர்களை கையால் அகற்றும் கொடிய நிலையை குறைந்தபட்சம் தீர்க்க முடியும். இதனைச் செய்யாததுமட்டுமல்ல இதற்கான வேலைத்திட்டத்தின் பற்றாக்குறையை நிறையவே காணமுடிகின்றது.
ஆட்சியில் அதிகாரம், சலுகைக்காக போராடும் அடையாள அரசியலை மேற்கொள்ளும் அமைப்புகள் ஏன் இந்த மாற்றத்தை கோரி போராட வில்லை. 1980களில் இருந்து தலித்திய கட்சிகள் என அடையாள அரசியலை மேற்கொள்ளும் அமைப்புகள் வடிகால்லமைப்பு, கழிவு, மலத்தினை அகற்றல்  நவீனமயப்படுத்தப் போராடும் முறையில் எந்த வேலைத்திட்டத்தினையும் முன்வைக்காது. தனியே ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள பிரபுகுலத்தவர் (வசதிபடைத்தவர்) நலன் பேணும் அமைப்புகளாகவே இருக்கின்றது.
 
வேலன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.