Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.பி.எல்.ஏலம் நாளை

Featured Replies

ஐ.பி.எல்.ஏலம் நாளை

ஐ.பி.எல்.ஏலம் நாளை

February 5, 2016  11:20 am

Bookmark and Share
 
9–வது ஐ.பி.எல். போட்டி வருகிற ஏப்ரல் 9 ம் திகதி முதல் மே 23 ம் திகதி வரை இந்தியாவில் நடக்கிறது.

இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத், புதிய அணிகளான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் லயன்ஸ் (ராஜ்கோட்) ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

2 ஆண்டு தடை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவில்லை.

சென்னை அணியில் இருந்து தலைவர் டோனி, அஸ்வின், டுபிளசிலிஸ், ராஜஸ்தானில் இருந்து ஸ்டீவன் சுமித், ரகானே ஆகியோர் புனே அணிக்கும், ராஜ்கோட் அணிக்கு ரெய்னா, ஜடேஜா, மேக்குல்லம், பிராவோ (சென்னை), பலக்னெர் (ராஜஸ்தான்) ஆகியோர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புனே, ராஜ்கோட் அணிகளை தவிர மற்ற 6 அணிகள் 91 வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ளது. இதில் 37 வெளிநாட்டு வீரர்கள் அடங்கும்.

9–வது ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் நாளை பெங்களூரில் நடக்கிறது. 351 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். இதில் 230 இந்திய வீரர்கள் உள்ளனர். 121 பேர் வெளிநாட்டு வீரர்கள். 130 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள்.

ஒவ்வொரு அணியும் தலா ரூ.66 கோடியை வீரர்களுக்காக செலவு செய்ய வேண்டும். தக்க வைக்கப்பட்ட வீரர்களுக்காக அளிக்கப்பட்ட தொகையை கழித்து விட்டு மீதமுள்ள தொகையில் வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும்.

இதில் டெல்லி அதிக பட்சமாக ரூ.37.15 கோடி இருப்பு வைத்து உள்ளது. ஐதராபாத் ரூ.30.15 கோடி, பஞ்சாப் ரூ.23 கோடி, கொல்கத்தா ரூ.17.95 கோடி, மும்பை ரூ.14.40 கோடி, பெங்களூர் ரூ.21.62 கோடியும் இருப்பு வைத்து உள்ளன.

புனே, ராஜ்கோட் அணிகளிடம் தலா ரூ.27 கோடி இருப்பு உள்ளது.

61 வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர். இதில் முக்கியமானவர் யுவராஜ் சிங். அவரை கடந்த ஆண்டு டெல்லி அணி ரூ.16 கோடிக்கு எடுத்தது. ஆனால் யுவராஜ்சிங்கை தக்க வைக்கவில்லை. அவரது அடிப்படை தொகை ரூ.2 கோடியாகும்.

மேலும் இஷாந்த்சர்மா, கெவின் பீட்டர்சன், ஷேன் வாட்சன், ஆசிஷ் நெக்ரா, தினேஷ் கார்த்திக், தவல் குல்கர்னி, சஞ்சு சாம்சன், ஸ்டூவர்ட் பின்னி, மைக் ஹஸ்சி, கனே ரிச்சர்ட்சன், மிட்செல் மார்ஷ் ஆகிய 11 வீரர்களின் அடிப்படை தொகையும் ரூ. 2 கோடி.

யுவராஜ்சிங்கை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது 20 ஓவர் போட்டியில் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டதால் அவரது மவுசு கூடியுள்ளது. இதனால் அவர் மீது அனைவரின் எதிர்பார்ப்பும் உள்ளது.

சென்னை, ராஜஸ்தான் அணியில் இருந்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்தில் பங்கேற்கிறார்கள்.
 
 
 
 
 
  • தொடங்கியவர்

ஷேன் வாட்சன் ரூ.9.5 , யுவராஜ் சிங் ரூ.7 கோடிக்கு ஏலம்!

 

ரும் ஐ.பி.எல். சீசனில் யுவராஜ் சிங் ஹைதரபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த முறை அவரை ரூ.7 கோடி கொடுத்து ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

yuvi%20.jpg

கடந்த சீசனில் டெல்லி அணிக்காக ரூ. 16 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த யுவராஜ்சிங், அந்த அணியால் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த சீசனுக்கு அவரது தொடக்க விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களுருவில் நடந்த ஏலத்தில் யுவராஜ் சிங்கை ஹைதரபாத் அணி ரூ. 7 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அத்துடன் ஆஷிஸ் நெக்ராவை ரூ. 5.5 கோடிக்கும் ஏலம் எடுத்தது.

பிற மார்க்கி வீரர்களான கெவின் பீட்டர்சன் ரூ.3.5 கோடிக்கும் இஷாந்த் சர்மாவை  ரூ. 3.8 கோடிக்கு புனே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. குஜராத் லயன்ஸ் அணி டேல் ஸ்டெயின் மற்றும் ட்வைன் ஸ்மித் ஆகியோரை தலா ரூ. 2.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

அதே வேளையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனை ரூ.  9.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த ஐ.பி.எல். ஏலத்தில் அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் ஷேன் வாட்சன்தான்.

http://www.vikatan.com/news/sports/58630-yuvraj-goes-to-hyderabad-for-rs-crore.art

  • தொடங்கியவர்

ரூ4.5 கோடிக்கு வாங்கிய புனே : ஐ.பி.எல். ஏலத்தில் ஆடாமலேயே ஜெயிச்ச தமிழன்!

 

ரு சர்வதேச போட்டியில் கூட களம் இறங்காத தமிழகத்தை சேர்ந்த முருகன் அஸ்வின் என்ற இளம் வீரரை,  புனே அணி ரூ. 4.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 

murugan%20.jpg

வரும் 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களுருவில்  நடைபெற்றது. இதில் அடையாளமே தெரியாத முருகன் அஸ்வின் என்ற தமிழக வீரரை,  சுமார் நாலரை கோடிக்கு புனே அணி ஏலம் எடுத்துள்ளது. அருமையான லெக் ஸ்பின்னரான இவரை அடையாளம் கண்டு ஏலத்தில் எடுத்ததாகவும்,  வரும் ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரராக முருகன் வலம் வருவார்'' என்றும் அந்த அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டு பிறந்த முருகன் அஸ்வினுக்கு தற்போது 25 வயதாகிறது. தமிழ்நாடு அணியில் இடம் பெற்றிருந்தார். அருமையாக லெக் பிரேக் வீசக் கூடியவர். வலது கை பேட்ஸ்மேனும் கூட. கடந்த 2012-ம் ஆண்டு முதல் தமிழக அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த ஐ.பி.எல். ஏலத்தை பொறுத்தவரை மார்ட்டின் குப்தில் போன்ற பல நட்சத்திர வீரர்கள் கூட ஏலம் எடுக்கப்படாத நிலையில், முருகன் அஸ்வினை இவ்வளவு தொகை கொடுத்து புனே அணி வாங்கியது பிற அணிகளையும் வியக்க வைத்துள்ளது. முருகன் அஸ்வினின் குடும்பத்தினர் சென்னையில்தான் வசித்து வருகின்றனர். அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

http://www.vikatan.com/news/sports/58655-murugan-ashwin-sold-for-rs-45-crore.art

  • தொடங்கியவர்
இந்தியாவின் காஸ்ட்லி வீரர் பவன் நேகி.. சிஎஸ்கே வீரரை ரூ.8.5 கோடிக்கு வாங்கியது டெல்லி
 
IPL auction: Pawan Negi trumps Yuvi as costliest Indian
 
பெங்களூர்: இன்று நடைபெற்ற ஐபிஎல் 9வது சீசனுக்கான ஏலத்தில், பவன் நேகி ரூ.8.5 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், நடப்பு சீசனில், இந்திய வீரர்களிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். டெல்லியை சேர்ந்த பவன் நேகி, கடந்த 2 ஐபிஎல் சீசன்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில், இன்றைய ஏலத்தில், டெல்லி அணியால் ரூ.8.5 கோடி விலைக்கு வாங்கப்பட்டுள்ளார். இதன் மூலம், 9வது சீசன் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
 
 
 காலையில் நடந்த ஏலத்தின்போது, யுவராஜ்சிங்கை ரூ.7 கோடிக்கு ஹைதராபாத் அணி, வாங்கியிருந்தது. எனவே நேகியை டெல்லி வாங்கும்வரையில், யுவராஜ்சிங்தான் காஸ்ட்லி வீரராக இருந்து வந்தார். ஆனால் பிற்பகலில் பவன் நேகி, அந்த பட்டத்தை யுவராஜிடமிருந்து பறித்துவிட்டார். பவன் நேகிக்கு ரூ.30 லட்சம் மட்டுமே அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆயினும், புனே மற்றும் டெல்லி அணிகள் போட்டி போட்டுக்கொண்டே இருந்ததால் ஏலத்தொகை அதிகரித்துவிட்டது. இன்றைய ஏலத்தில், ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் ரூ.9.5 கோடிக்கு பெங்களூர் அணியால் வாங்கப்பட்டதுதான், நடப்பு சீசனில், நடைபெற்ற விலைமதிப்புமிக்க கொள்முதல்.
 
இடது கை சுழற்பந்து வீச்சாளரும், லோவர்-ஆர்டர் பேட்ஸ்மேனுமான நேகி, 56 டி20 போட்டிகளில் விளையாடி, சராசரியாக 19.16 ரன்கள் சேகரித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 134.92 ஆகும். போலவே, 46 விக்கெட்டுகளையும் நேகி வீழ்த்தியுள்ளார். உலக கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அந்த அணியிலும், பவன் நேகி இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், ஐபிஎல் தொடரிலும், பவன் நேகிக்கு, ஜாக்பாட் அடித்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-auction-pawan-negi-trumps-yuvi-as-costliest-indian-246190.html
  • தொடங்கியவர்
இரண்டே இரண்டு போட்டி.. ரூ.4.2 கோடிக்கு ஏலம்.. ஒரே நாளில் ஹீரோவான வெஸ்ட் இண்டீஸ் வீரர்
 
Carlos Brathwaite bought by Delhi Daredevils at a whopping Rs 4.2 crore
 
பெங்களூர்: வெஸ்ட் இண்டீசின் சார்லஸ் பிரத்வைட் இன்று நடைபெற்ற 9வது ஐபிஎல் ஏலத்தில் உருவான திடீர் கதாநாயகன். வெறும் இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய சார்லசை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டா போட்டி போட்ட நிலையில், ரூ.4.20 கோடிக்கு டெல்லி அவரை ஏலத்தில் எடுத்தது, உலக கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு, சார்லசை ஒரே நாளில் பெரிய ஹீரோவாக மாற்றிவிட்டத
 
வெஸ்ட் இண்டீசின் சார்லஸ் பிரத்வைட் 2 டெஸ்ட் போட்டிகளிலும், 7 ஒருநாள், 2 டி20 சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ளார். இதுதவிர 37 முதல்தர கிரிக்கெட் போட்டிகள், 26 ஏ-பிரிவு கிரிக்கெட் ஆட்டங்கள், 37 டி20 போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர் சார்லஸ். டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ரன் 69. ஒருநாள் போட்டிகளில் 18 அதிகபட்ச ரன்னாகும். சர்வதேச டி20 போட்டிகளில் நிலைமை இன்னும் மோசம். அவர் இரு போட்டிகளிலும், தலா 1 ரன்தான் எடுத்துள்ளார். முதல்தர மற்றும் ஏ-பிரிவு கிரிக்கெட் ஆட்டங்களில் மட்டுமே அவர் சதம் கடந்துள்ளளார்.
 
 
பிறவகை டி20 போட்டிகளிலிலும் கூட அதிகபட்ச ரன் 36 மட்டுமே. ஆல்-ரவுண்டரான சார்லஸ், டி20 போட்டிகளில் 1 விக்கெட்டையும், ஒருநாள் போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். இவரது ஆல்-ரவுண்டர் திறமையை மதித்துதான் அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க போட்டா போட்டி போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
 வீரர்களுக்கு சம்பளம் கூட தராமல் இம்சை செய்யும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஒரு வீரருக்கு ரூ.4.2 கோடி என்பது பெரிய தொகைதான். ஏலத்தில் எடுத்த தகவல் தெரியவந்ததுமே, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்து டிவிட் செய்துள்ளார் சார்லஸ். ஐபிஎல் தொடரில் ஆடப்போவது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சார்லஸ் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/carlos-brathwaite-bought-delhi-daredevils-at-whopping-rs-4-2-246176.html
  • தொடங்கியவர்
வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக தொகைக்கு ஏலம்போன சென்னை மாஜி வீரர் மோகித் ஷர்மா!
 
 
பெங்களூர்: நடப்பு சீசன் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளார் மோகித் ஷர்மா. சர்வதே வீரர்கள் பலரை ஏலத்தில் எடுத்த அணிகள் தயாராக இல்லாத நிலையில், சென்னைக்காக விளையாடி வந்த மோகித் ஷர்மாவை ரூ.6.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 9-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது.

IPL auction: KXIP get Mohit Sharma for 6.5 Crore

 பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், ஆல்-ரவுண்டருக்கான ஏலம் முடிந்ததும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் தவல் குர்கர்ணியை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் லயன்ஸ் அணி ஏலம் எடுத்த நிலையில், கனே ரிச்சர்ட்சனை ஏலம் எடுக்க ஆளில்லாதது ஆச்சரியம் தந்தது. இந்தியாவின் பிரவீன் குமாரை ரூ.3.5 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்த நிலையில், நியூசிலாந்தின் டிம் சவுத்தியை ரூ.2.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

 

இந்தியாவின் டிண்டாவை ஏலம் எடுக்க எந்த அணியும் தயாராக இல்லை. அடுத்ததாக, சிஎஸ்கே அணிக்காக ஆடிவந்த மோகித் ஷர்மாவை ஏலம் எடுக்க அணிகள் நடுவே கடும் போட்டி நிலவியது. பிரீத்தி ஜிந்திவின், பஞ்சாப் அணி, மோகித் ஷர்மாவை ரூ.6.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அசத்தியது. இன்றைய ஏலத்தில், பஞ்சாப் அணி ஏலம் எடுத்த முதல் வீரர் மோகித் ஷர்மா என்பது சிறப்பு. அதேநேரம் ஜேம்ஸ் பட்டின்சனை ஏலம் எடுக்க ஆளில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.