Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேமுதிக தனித்துப்போட்டி என விஜயகாந்த் அறிவிப்பு: கூட்டணி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி!

Featured Replies

தேமுதிக தனித்துப்போட்டி என விஜயகாந்த் அறிவிப்பு: கூட்டணி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி!

 

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசியலில் இதுவரை நிலவி வந்த கூட்டணி குறித்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

இன்று சென்னை, ராயப்பேட்டையில் தே.மு.தி.க. மகளிரணி கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசுகையில், ''எனது கட்சியை வழி நடத்த ஊடகங்கள் எனக்கு சொல்லித்தர வேண்டாம். எனது கட்சியை நான் அருமையாக வழி நடத்தி செல்கிறேன். எனது கட்சியினர் அருமையாக இருக்கின்றனர். நான் தெளிவாக இருக்கிறேன்.

கூட்டணிக்காக பேரம் பேசுவதாக கூறுகிறார்கள். நான் யாரிடமும் பேரம் பேசவில்லை. பேரம் பேசவில்லை என்றால் கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டியதுதானே என கூறுகின்றனர். கூட்டணி குறித்து சொல்ல வேண்டுமா, இந்த தேர்தலை தே.மு.தி.க. தனியாகத்தான் சந்திக்கப் போகிறது.

இந்த தேர்தலில் நாங்கள் தனியாகத்தான் போட்டியிடப் போகிறோம். அனைத்து கட்சியினரும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். அவர்களுக்கு நான் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக தேமுதிக இளைஞரணி தலைவர் சுதீஷ் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது '' என்றார்.

'பேரம் என்றால் என்னவென்றே தெரியாது'

முன்னதாக, அக்கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''லஞ்சம், ஊழல் இல்லாத நல்ல ஆட்சியை தே.மு.தி.க. உறுதியாக உருவாக்கும். அனைவருக்கும் வேலை வழங்க தே.மு.தி.க. நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கான நல்லாட்சியை நாங்கள் உருவாக்குவோம்

vijakanathnga1%281%29.jpg

தி.மு.க. என்றால் தில்லுமுல்லு கட்சி. அ.தி.மு.க. என்றால், அனைத்திலும் தில்லுமுல்லு கட்சி. தி.மு.க., அ.தி.மு.க.வை தமிழகத்தைவிட்டு விரட்டும் நேரம் வந்து விட்டது. தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் தே.மு.தி.க. தேர்தல் கூட்டணி தொடர்பான நல்ல முடிவை விரைவில் விஜயகாந்த் அறிவிப்பார்

விஜயகாந்த் கூட்டணிக்காக பேரம் பேசுவதாக அனைத்து பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்படுகிறது. பேரம் என்றால் என்னவென்றே எங்களுக்கு தெரியாது. பேரம் என்ற வார்த்தைக்கே எங்களுக்கு அர்த்தமே தெரியாது.

விஜயகாந்த்தை பணம் கொடுத்து வாங்க முடியாது. அவர் மற்றவர்களுக்கு கொடுப்பாரே தவிர, யாரிடமும் கைநீட்டி பணம் வாங்க மாட்டார். அவர் நடிகராக இருக்கும்போது, இயக்குநரிடம் மட்டும் தனது சம்பளத்தை கைநீட்டி வாங்கியிருப்பார். இப்போது யாரிடமும் வாங்க மாட்டார்.

Premalatha02.jpg

அவரது தொண்டையில் டான்சில் பிரச்னை இருக்கிறது. அது பத்திரிகையாளர்களுக்கு தெரியுமா? எனவே, அவரது பேச்சு சற்று குளறுபடியாக இருக்கிறது. அதை வைத்து எப்படியெல்லாமே எழுதுகிறீர்கள். எம்.ஜி.ஆருக்கும் தொண்டையில் அடிபட்டு இருக்கும்போது, அவரது பேச்சு யாருக்கும் புரியவில்லை என்றார்கள். அதேபோல், கர்மவீரர் காமராஜரை படிக்கவில்லை என்றார்கள். ஆனால், இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பது யார்? கர்மவீரர் காமராஜரும், எம்.ஜி.ஆரும்தான். அதேபோல், கருப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த் பெயரும் கண்டிப்பாக நிலைத்து நிற்கும்.

ஜெயலலிதா அமைச்சரவையில் முதுகெலும்பு இழந்து வாழ்ந்த அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து வெகு விரைவில் ‘எம்.ஜி.ஆர் அ.தி.மு.க’ என்று புதுக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகத் தகவல் வந்துள்ளது'' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/60363-dmdk-will-contest-in-election-alone-vijayakanth.art

  • தொடங்கியவர்

Breaking Now

கூட்டணிக்கு அழைத்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார் வி்ஜயகாந்த்

தேமுதிக தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு திருமாவளவன் வரவேற்பு

7 பேர் கொண்ட குழு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் - விஜயகாந்த் அறிவிப்பு

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த மூத்த தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தார் பிரேமலதா

வைகோ, ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசனுக்கும் நன்றி - பிரேமலதா

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழிசை, பொன். ராதாகிருஷ்ணனுக்கும் பிரேமலதா நன்றி

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக ஆட்சியமைக்கும் - பிரேமலதா
 

Read more at: http://tamil.oneindia.com/

 

 

 

பாலில் விழத் தவறிய பழம்!
 
 சென்னை: பழம் கனிந்து விட்டது. பாலில் விழும் நிலையில் உள்ளது. எப்போது விழும் என்பது மட்டுமே தெரிய வேண்டியுள்ளது என்று தி்முக தலைவர் கருணாநிதி, தேமுதிக கூட்டணி குறித்துக் கூறியிருந்தார். ஆனால் கருணாநிதி எதிர்பார்த்தது போல பழம் பாலில் விழாமல் போய் விட்டது.
 
தேமுதிக கூட்டணி தொடர்பாக பெரும் குழப்ப நிலை நிலவி வந்தது. தேமுதிகவும் இந்த குழப்பத்தை உள்ளூர ரசித்து வந்தது. இதையே இன்று பிரேமலதா விஜயகாந்த் பேசியபோதும் கூட கடந்த 3 மாதமாக ஒட்டுமொத்த தமிழகமும் தத்தளித்தது என்று கூறி வெளிப்படுத்தினார்.
Where the Banana has gone?
 இந்த நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், பழம் கனிந்து வருகிறது பாலில் வந்து விழும் நிலையில் உள்ளது என்று கூறியிருந்தார். இதுகுறித்து உடனடியாக கருத்து தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நச்சு கலந்த பாலில் பழம் விழுந்து பயனில்லை என்று கூறியிருந்தார்.
 
 
பாஜக தலைவர் தமிழிசையோ, பாலில் விழுகிறது, கீழே விழுகிறதோ அதுகுறித்து எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் தனித்துப் போட்டியிடவும் தயார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று தனித்துப் போட்டி என்று கூறி அத்தனை பேரையும் (அரசியல் கட்சித் தலைவர்களை) ஏமாற்றி விட்டார் விஜயகாந்த். மொத்தத்தில் பழம் எங்கேயும் விழாமல் போய் விட்டது...!

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/where-the-banana-has-gone-248713.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் பேசவரலாம்: பிரேமலதா
 
 
சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் அறிவித்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வந்து பேசலாம் என அழைப்பு விடுத்துள்ளார். அதாவது விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையலாம் என்பதை பிரேமலதா சுட்டிக் காட்டியுள்ளார்.
Premalatha invites other parties
 
சென்னையில் இன்று நடைபெற்ற தேமுதிக மகளிரணி மாநாட்டின் இறுதியில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று திட்டவட்டமாக அறிவித்தார். 
 
அவர் அறிவித்துவிட்டு அமர்ந்த பின்னர் மைக் பிடித்த பிரேமலதா, விஜயகாந்த்தை முதல்வராக ஏற்கும் கட்சிகள் வந்து பேசலாம்; திமுக, அதிமுகவுக்கு மாற்றம் தேவை என கருதும் கட்சிகள் பேசலாம் என்றார். ஆக தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் அறிவித்த போதும் விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையக் கூடும் என்பதை சூசகமாக அவரது மனைவி பிரேமலதா தெரிவித்திருக்கிறார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/premalatha-invites-other-parties-248715.html
  • தொடங்கியவர்
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் விரட்டும் நேரம் வந்து விட்டது.. பிரேமலதா ஆவேசம்
 
 
 
சென்னை: சென்னை: திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தமிழகத்தை விட்டு விரட்டும் நேரம் வந்துவிட்டது என தேமுதி மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியின் மகளிரணி மாநாட்டில் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒ.எம்.சி. மைதானத்தில் தே.மு.தி.க. சார்பில் மகளிரணி மாநாடு இன்று மாலை நடந்தது.
 
 
இதில் கலந்து கொண்ட மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: தேமுதிக மகளிரணி மாநாட்டில் அதிக அளவில் பெண்கள் கலந்துகொள்ள வந்ததே தேமுதிவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் திட்டங்கள் அனைத்தும் அறிவிப்புகளாகவே உள்ளன. அனைத்து திட்டங்களும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் செயல்படுத்தபடுவதில்லை. செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதே சென்னையின் வெள்ளத்திற்கு காரணம். வெள்ளம் ஏற்பட்டபோது சென்னை முடங்கிப் போனதற்கு அதிமுக அரசு தான் காரணம்.
 
 
அதிமுக அரசின் நிர்வாகத் திறமை இன்மையால் ஆயிரக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்தனர். வெள்ள நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. மத்திய அரசு வழங்கிய 2 ஆயிரம் கோடி நிவாரணத் தொகையில் இருந்தே மாநில அரசு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கியுது. இலவச பொருட்கள் தருவதாக கூறுபவர்களிடம் தன்மானத்தை இழக்காதீர்கள். இலவச பொருட்களை வாங்க பெண்கள் முண்டியடித்துச் செல்வது வருத்தம் அளிக்கிறது.என்று பிரேமலதா கூறினார்.
 
மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் மாற்றம் ஏற்பட அனைத்து மக்களும் தயாராக இருக்க வேண்டும். வரும் தேர்தலில் அதிமுக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். தமிழகம் கடனில் தத்தளிப்பதுதான் அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனை. ராஜிவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விவகாரத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் நாடகம் ஆடுகின்றன. தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் ஊழல் ஆட்சி நடத்தியுள்ளன. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தமிழகத்தை விட்டு விரட்டும் நேரம் வந்துவிட்டது. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmdk-womens-conference-chennai-248710.html
  • தொடங்கியவர்

விஜயகாந்தின் தனித்து போட்டி அறிவிப்பு... தலைவர்களின் கருத்துக்கள்!

 

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் தனித்து போட்டி என்ற அறிவிப்பு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ala.jpgசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தே.மு.தி.க. மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு கட்சியின் தலைவர்களும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அழகிரி...

தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்ற விஜயகாந்தின் முடிவு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறும்போது, ''தி.மு.க.வில் ஸ்டாலின் உள்ளவரை கூட்டணிக்கு விஜயகாந்த் வரமாட்டார். தனித்து போட்டி என்ற விஜயகாந்தின் அறிவிப்பு, தி.மு.க.விற்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது" என்று தெரிவித்து உள்ளார்..

sou.jpgதமிழிசை...

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவிக்கும்போது, ''விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்த முயற்சிக்கு இது தோல்வி அல்ல. அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என முயற்சி செய்தோம்.

கூட்டணி அமையாவிட்டாலும் 234 தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்கும். அந்த துணிச்சல் பா.ஜ.க.வுக்கு இருக்கிறது. தனித்துப் போட்டியிடுவதன் மூலம் அவரவர் பலத்தை காட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றார்.

திருமாவளவன்...

tiru.jpgதனித்து போட்டியிடும் தே.மு.தி.க. அறிவிப்பை வரவேற்பதாக திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ''வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்தை அழைத்தோம்.

தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடுவது ஜனநாயகத்தை பலப்படுத்துவதாக அமையும். இதன் மூலம் மக்கள் தாங்கள் விரும்பும் ஆட்சியை ஏற்படுத்துவார்கள்" என்றார்.

இதேபோல் விஜயகாந்தின் தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

anbu%281%29.jpgஅன்புமனி...

பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமனி ராமதாஸ் இது குறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தனித்துப் போட்டி என்ற விஜயகாந்த் அறிவிப்பு நம்பகத்தன்மை அற்றது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்துப் போட்டி என அறிவித்து இருந்தார் விஜயகாந்த். கடைசி நேரத்தில் பா.ஜ.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தார்" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/60372-vijayakanth-announcement-and-leaders-comments.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.