Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் அரசியலை புறக்கணித்தால் அது சமஷ்டி தீர்வினையே மென்மேலும் நியாயப்படுத்தும்

Featured Replies

728_content_jehan_perera.jpg
முதலமைச்சர் சீ.வி. வின்னேஸ்வரனால் தலைமை தாங்கப்படும் வட மாகாண சபையானது மத்திய அரசாங்கத்தை அரசியலமைப்பு சீர்திருத்தச் செய்முறையில் கவனம் செலுத்தி ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளது. 

அத்தீர்மானத்தில் வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் மீள ஒன்றிணைத்து ஒரே சமஷ்டி அலகாக்குமாறு விடுத்துள்ள அம்சம் முக்கியமானதாகும். 


ஆட்சி மொழியாக இருந்த ஆங்கிலத்தை நீக்கிவிட்டு "சிங்களம் மட்டுமே',  என்னும் சட்டம் 1956 ஆம் ஆண்டு  கொண்டுவரப்பட்டு சிங்களமே முழு நாட்டிற்குமான, உத்தியோகபூர்வமான மொழி என பிரகடனம் செய்யப்பட்ட நாள் முதலாக தமிழரசியலின் பிரதான நிலைப்பாடு சமஷ்டியாட்சியாக இருந்து வந்துள்ளது.

அக்காலகட்டத்தில் நாட்டின் குடித்தொகையில் ஏறத்தாழ 30 வீதமாயிருந்த  தமிழ் பேசும் அரசியல் மேற்படி மொழிச் சட்டத்தை எதிர்த்து, தமிழ் மொழியும் அரசின் உத்தியோகபூர்வமான மொழியாக இலங்கையில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தினைத் தொடர்ந்தும் தெரிவித்து வந்துள்ளது. சிங்கள மக்கள் தொகையே நாட்டில் முதன்மையாக இருந்ததால் சிங்களம் மட்டுமே  என்னும் சட்டம் இலகுவாக பாராளுமன்றத்தில் அப்போது நிறைவேற்றப்பட்டுவிட்டது.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களே  பெரும்பான்மை மக்களாக இருப்பதுடன், அவ்விரு மாகாணங்களிலும் அரசியல் ரீதியான பெரும்பான்மையினராக அவர்கள் இருப்பதுவும் சிங்கள தமிழ் முரண்பாட்டினைப் பொறுத்து சமஷ்டித் தீர்வுக்கான நியாயமாகத் தென்பட்டது.


முழு நாட்டிலும் வாழும் சிங்களவர்களுக்குக் கீழ் அடிபணிந்தவர்களாக இருக்காது, தமது பிரதேச ஐக்கியம் தொடர்பில் தாமே தீர்மானங்களைச் செய்துகொள்ளும் வகையில் நாட்டு நிர்வாகம் அமைவதனை அதன் வாயிலாக தமிழரசியல் எதிர்பார்த்தது.

அவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறுபான்மையினராக இருந்ததால் பெரும்பான்மையினரது தலைமைத்துவம் மேலோங்கியுள்ள மத்திய அரசாங்கத்தின் தன்னிச்சையானதும் ஒரு பக்கமானதுமான தீர்மானமாக தீர்மானங்களை மட்டுப்படுத்துவதற்கு சமஷ்டியாட்சி அமைப்பில் ஒரு அரசியல்  வழிமுறை ஏற்படலாம் என அவர்கள் கவரப்பட்டுள்ளனர்.

அதற்காக ஒரு பிரதேச அதிகார அமைப்பு தான் விரும்பிய எதனையும் செய்துகொள்ளலாம் என்பது அர்த்தமாகாது. ஆனால், அரசியலமைப்பினால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தான் நினைத்தவாறு தனிச்சையாக தனதாக்கிக்கொள்ளவும் முடியாது என்பதனைக் குறிப்பதாக உள்ளது.


அதேவேளையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதால் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு  அது சார்பற்றதாகிவிடலாம் என (முஸ்லிம் மக்கள் ) எண்ணுகிறார்கள்.மறுபுறத்தில் நீண்ட காலமாகவே சிங்கள அரசியலினாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி ஆட்சி தேசிய இறைமைக்குப் பாதகமானதாக இருக்கலாம் என்றும் அது நாட்டைக் கூறுபோட சாதகமாகி விடலாம் என்றும் நம்புகின்றனர்.

சோவியத் ரூசியாவில் அரசியலமைப்பில் சமஷ்டி ஏற்பாடு ஏற்பட்டமையே பின்னர் அது பிரிந்து சென்றமைக்கான காரணம் என்ற அச்சம் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இவ்வாறே கிழக்கு ஐரோப்பாவிலும், பல ஆபிரிக்க நாடுகளிலும் இவ்வாறான பிரிவினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிங்கள மக்களிடையே இடதுசாரி சிந்தனை கொண்ட சிறிய அரசியல் கட்சிகளும் 
சிறியளவினரான தாராள சிந்தனை கொண்ட தரப்பினரையும் தவிர்த்து ஏனைய சிங்கள மக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட பிரிவினரிடம் இலங்கையின் இனப் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வுக்கு சாதகமான நிலைப்பாடு இல்லாது இருக்கின்றது.


உறவுகளை பரிசீலனை செய்தல்


சமஷ்டித் தீர்வுக்கு எதிரான உணர்வுகளைக் கொண்ட சிங்கள அரசியலின் உணர்வுகளில் தமிழீழப் புலிகள் 2002 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சு வார்தைகளின் போது அரசாங்கத்துடன் யுத்த நிறுத்தத்திற்குச் சம்மதித்த போதே ஒரு மாற்றமிக்க புறநடையான சிந்தனை ஏற்பட்டிருந்தது. அப்போது யுத்தம் மிகவும் கடுமையாக இடம்பெற்றுக்கொண்டிருந்ததாலும், அதனால் அரசாங்கத்திற்கு இக்கட்டான நிலைமைகள் ஏற்பட்டிருந்ததாலும், அரசாங்கமும் வேறு வழியின்றி திறந்த மனதுடன் செயற்பட வேண்டியதாயிற்று.

அரசாங்கத்தின் தரப்பிலும் புலிகளின் அரசியல் பிரிவின் தரப்பிலும் சமாதானம் பொருட்டு சமரசம் ஏற்பட தயார் நிலை காணப்பட்டபோதிலும் புலிகளின் இராணுவப் பிரிவு இதற்கு முழுமனதுடன் ஒத்துழைப்பு வழங்கவில்லை.இன்றைய  நிலையில்  2009 ஆம் ஆண்டு அரசாங்கம்  அடைந்த இராணுவ வெற்றியோடு சமாதானத்திற்காக சமரசம் செய்துகொள்ளும் தேவை சிங்கள அரசியலுக்கும் தேவையானதாக இல்லாதிருக்கிறது. இருந்தபோதிலும்கூட வடமாகாண சபையின் அரசியலமைப்பு சபைக்கான பிரேரணையிலிருந்து தமிழரசியலில் சமஷ்டியாட்சிக்கான தொலைநோக்கு தொடர்ந்தும் நிலவுகின்றது என்றே தென்படுகிறது.


அதே நேரத்தில் சமஷ்டித் தீர்வுக்கான தமிழ் மக்களது நிலைப்பாடு மென்மேலும் வலிமையடைந்துகொண்டே வருகின்றது என்பதனையே வரலாறு உறுதியாகக் கூறிவருகிறது. அதற்கு தமிழரசியலைப்  பொறுத்து  எப்போதும் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதில் மத்திய அரசாங்கத்திடம் அத்துமீறல்களும் உதாசீனமுமே காணப்படுகின்றன. என்ற உணர்வே காரணாகும். சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றம் செய்த "சிங்களம் மட்டுமே' என்ற சட்டம் நிறைவேற்றப்பட்ட காலத்தோடுதான் சமஷ்டிக்கான முதல் உந்துதலும் தூண்டுதலும் ஏற்பட்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து எப்போதெல்லாம் தமிழ் மற்றும் சிங்களத் தரப்பிலான அனுமானங்களில் வேறுபாடுகள் நிலவினவோ  உதாரணமாக கோட்டாமுறை கொண்டு வந்து பல்கலைக்கழக அனுமதியில் தமிழ் மாணவர்கள் அனுமதிப்பில் பாதிப்பினை ஏற்படுத்தினரோ  அப்போது முதலாக பாராளுமன்றத்தில் தமிழரசியலை சிங்களப் பெரும்பான்மையினர் நிராகரித்தே வந்துள்ளனர்.

அதனை ஒத்தவாறே 1972 ஆம் ஆண்டிலும் பின்னர் 1978 ஆம் ஆண்டிலும் அரசியலமைப்புத் திட்டத்தைத் தயாரித்தவர்களிடம் தமிழ்க் கட்சிகள் சமர்ப்பித்த பிரேரணைகளும் முற்றாக நிராகரிக்கப்பட்டு வந்துள்ளன. தமிழ் மக்களது இத்தகைய நிலைமையால் அதாவது எங்கெங்கெல்லாம் சிங்கள தமிழ் தொடர்பான பிரச்சினைகளில் சிக்கல்கள் ஏற்பட்டபோதெல்லாம், தமிழ் மக்கள் தரப்பில் நியாயம் நிலவிய போதிலும் அவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்த ஒரே காரணத்தினால் அவர்கள் தோல்வியுற்றே வந்திருக்கின்றனர்.


இத்தகைய பின்னணியிலேயே வடமாகாண சபை மீண்டும் ஒருமுறை தமக்கு சமஷ்டித் தீர்வே  வேண்டும் என்று தீர்மானித்துக் கருத்து வெளியிட்டிருப்பதோடு, வடமாகாண சபையிலும் கிழக்கு மாகாண சபையிலும் தமிழரசியலின் தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் அவர்கள் எப்போதும் சச்சரவிட வேண்டிய நிலைமையும் உருவாகியுள்ளமை கவனிக்கத்தக்க ஒரு நிலைவரமாக வளர்ந்துள்ளது.

மூன்று தசாப்த கால யுத்தத்தில் வீடுகளை இழந்த கிழக்கு, வடக்கு மாகாண மக்களுக்கு அரசாங்கம் வீடுகளை நிர்மாணிப்பது பற்றிய தீர்மானம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. அடுத்த நான்கு வருடங்களில் 65,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் இதுவாகும். கடந்த நான்கு வருடங்களில் இந்திய அரசாங்கத்தினால் பெரும்பாலான வீடுகளும் ஐரோப்பிய யூனியன், அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளால் ஒரு சிறிய  அளவிலுமாக நிர்மாணிக்கப்பட்ட 70,000 வீடுகளுக்கு மேலதிகமாக  இந்த 65,000 வீடுகள் திட்டம் அமையப் போகிறது.

தமது வீடுகளையும் வாழ்க்கையையும் போரின்போது இழந்து விட்ட மக்களுக்கு இழப்பீடு செய்யும் வகையில் வீடுகளைக் கட்டி கொடுக்க அரசாங்கம்  முனையும்போது  அது அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும்மிடையிலான உறவுகளைப் பரிசீலிக்கும் ஒரு சோதனையாக மாறி வருவது  கவலைக்குரியதும். அர்த்தமற்றதுமான நடவடிக்கையாகும்.


கூடிய செலவு கொண்ட திட்டம்


அரசாங்கம் இப்போது பிரேரித்திருக்கின்ற வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் முன்னதாகவே  தயாரிக்கப்பட்ட (முன்னிணைவு வீடுகள்)  என்னும் (கணூஞுஞூச்ஞணூடிஞிச்tஞுஞீ) நிர்மாண முறையாகும். இப்பிரேரணை வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பிரநிதிகளுடன் எதுவித கலந்தாலோசனையும் செய்யப்படாத ஒரு திட்டமாகக் காணப்படுகிறது.

வட மாகாண சபையும் அதன் முதலமைச்சரும் மாத்திரமின்றி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ்க் கூட்டமைப்புப் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் ஒன்றாகவே இணைந்து அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள உருக்கினாலான வீடுகளை போரினால் பாதிக்கப்பட்டதும் நாட்டின் மிக மோசமான வெப்ப கால நிலை கொண்டதுமான பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு வழங்குவதற்கு முற்றாக மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு பகுதிகளின் இயல்பான வெப்ப காலநிலை சூழலில் உருக்கினாலான வீடுகளை நிர்மாணிப்பது சாதகமற்றது என எதிர்ப்புக்குள்ளாவது பற்றி ஆச்சரியமடைய வேண்டியதில்லை. அதுமாத்திரமின்றி பூகோள வெப்பமயமாக்கலின் கோரப்பிடியினால் முழு நாடும் பிரதேசமும் பாதிக்கப்பட்டுள்ள கால ட்டத்தில் அதற்கு சாதகமற்ற ஒரு அடிப்படை மூலப்பொருளால் மக்கள் வாழப்போகும் வீட்டை நிர்மாணிப்பதன் பொருத்தமற்ற தன்மையைப் பலரும் விமர்சிக்கவும் கூடியதாயுள்ளது.

வடக்கு,கிழக்கு மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டமைக்காக அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நோக்கில் மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும் ஒரு பெரிய நடவடிக்கை இவ்வாறான கருத்து மாறுபாடுகளுடன் முரண்பாடுகளுக்கிலக்காவது வருந்தத்தக்கதொன்றாகும்.


இலங்கையின் முன்னணி பொறியியல் பல்கலைக்கழகமான மொரட்டுவைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசியர்கள் குழுவொன்று இவ்வீட்டுத் திட்ட நிர்மாணம் தொடர்பான தொழில்நுட்ப விமர்சனத்தை உறுதிசெய்துள்ளது. அவர்கள் திட்டவட்டமாக அத்திட்டத்தின் பல குறைபாடுகள் பற்றி கூறியுள்ளனர். உருக்கினாலான வீடுகள் கட்டித் துண்டுகளால் ஆன (புளக்)சுவர்களைவிட சிறந்தனவல்ல.

அத்துடன், உருக்கிலான இவ்வீட்டுத் திட்டத்தின் அடித்தளம் திருப்தியற்றது. கூரைகளுக்குப் போதிய ஆதாரமில்லை. உருக்குப் பாளங்களுக்கு மேல்பூச்சுகள் இருந்தாலும் துருப்பிடிக்கக கூடிய வாய்ப்புள்ளமை (கல்சியம் கலந்த நீர்,காற்று, பாறை என்பன சூழலில் இன்னும் அதிகம்), வீட்டினுள்  போதிய காற்றுச் சுற்றோட்ட வாய்ப்பின்மை, புகைபோக்கிகள் இல்லாமை, வீட்டுக்குத் விஸ்தரிக்க அல்லது திருத்த போதிய உள்ளார்ந்த திறன்னின்மை, குறைந்த / நீடித்த பாவனைக்கான தகுதியின்னை, இவற்றால் வீட்டை தாம் உரிமை கொண்டாடுவதற்கான உணர்வில் மக்களிடம் ஏற்படக் கூடிய மனத்தாக்கம் உள்ளூர் பொருளாதாரத்தை வளர்க்கப் போதிய வாய்ப்பின்மையும் தொழில் வாய்ப்பின்மையும் செலவினம் இரண்டு பங்குகளாக உள்ளமை என்பன கூறப்பட்ட குறைபாடுகளாகும்.

மேற்படி அவதானங்களைப் பேராசிரியர் பிரியான் டயஸ், கலாநிதி ரங்கிக ஹல் வத்துற மற்றும் கட்டிட வடிவமைப்பாளர் வருண டி சில்வா என்போர் தமது  ஏப்ரல் 2016 திகதியிட்ட  "ஆரம்பக் கட்ட அவதானங்கள்', என்னும் ஒரு அறிக்கையின் மூலம் கூறியிருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் கட்டித் துண்டுகளினாலான சுவர்களினாலான வீட்டு நிர்மாணங்களுடன் உருக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படுதனுடனான "ஒரு ஒப்பீடு பற்றிய ஆரம்ப நிலை அறிக்கை' என்னும் அறிக்கையே இது தொடர்பான அறிக்கையாகும்.


 இத்தகை ஒரு திட்டவட்டமான, எமது கண் முன்னால் சாட்சியமளிக்கும் நன்கு அங்கீகரிக்கப்பட்ட நம் நாட்டு நிபுணர்களுடைய கருத்துகள் இலகுவில் அசட்டை செய்யக் கூடியவையல்ல. அரசாங்கம் கூறும் பிரதான விளக்கம், இக்குறித்த வீடுகள் நிர்மாணத் திட்டத்திற்கு ஒரு வர்த்தக / வியாபார ஏற்பாட்டின் மூலம் நிதியுதவி கிடைக்கின்றது என்பதும், நிதி வழங்கும் நாடுகளான இந்திய வீட்டு வசதித் திட்டம் மற்றும் நிதி வழங்குபவர்கள் வீடுகள் கட்ட ஒரு வீட்டுக்கு ஐந்தரை முதல் ஆறு இலட்சம் ரூபா மட்டுமே வழங்குகின்றனர் என்பதும், உருக்கு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் இருப்பதியொரு (21) இலட்சம் செலவானாலும் அதில் கணினி, கம்பியில்லா இணையத் தொடர்பு போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால் அவ்வசதிகளுக்கான செலவினம் மொத்தச் செலவில் மிகச் சிறிய பகுதியே என்பது குறித்தும் கருத்துக் கூறப்படுகிறது.

(ஆயிரக்கணக்கான  கணினி, கம்பியில்லாத இணையத் தொடர்புகளை பெரும் தரமிக்கதானாலும் 75,000/= செலவில் அதாவது ஒரு இலட்சத்திற்கும் குறைந்த செலவிலேயே செய்து விடலாம் எனப்படுகிறது.) எனவே அரசாங்கம் இந்த 65,000 வீடுகளுக்கான ஒரு பில்லியன் ஐ.அ. டொலர்களை கடனாக 10 வருடங்களில் செலுத்த நேரிடும். இதுவும் கடந்த அரசாங்கத்தினால்  வெளிநாட்டுக் கடன்களை அடிப்படையில் செய்யப்பட்ட, அதிகளவில் செலவழிக்கப்பட்ட வெள்ளை யானைகள் என்றும் அவ்வாறான கடன்களைத் திருப்பிச் செலுத்த உத்தரவாதமளித்தால் பெருமளவில் அவை கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

(சாதாரண மொழியில் கூறுவதானால் கிந்து வட்டிக்கு இலங்கையில்கூட இந்தளவு பணத்தை வட்டி முதலாளிகளிடமே பெற்றுக்கொள்ளலாமாம்?!!)
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்ட வகையிலான, இவ்வீட்டுத் திட்டம் தொடர்பாக பல பிரச்சினைகள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற எதிரணித் தலைவருமான ஆர். சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தனது கரிசனங்கள் மற்றும் அவதானங்கள் பற்றிக் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.  

இதில் அவர் கூறிய  கரிசனங்களில் இவ்வாறு பெரியதோர் வீட்டுத் திட்டம் ஒரு நிறுவனத்திற்கு மட்டும் வழங்கப்பட்டத்தில் கேள்விப் பத்திரங்களை நிர்வகிக்கும் செய்முறையில் பெரும் தவறிழைக்கப்பட்டுள்ளதாக அதாவது கேள்விப்பத்திரம் கோரப்படுவதற்கு முன்பதாகவே அந்நிறுவனத்திற்கு கட்டிடம் கட்டும் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறும் குற்றச்சாட்டடும் ஒன்றாகும். அது முதலாவது குற்றச்சாட்டாகும். இரண்டாவது, உருக்கு மூலப் பொருட்களினாலான வீடுகள் நீண்டகால பாவனைக்குதவாது.

ஏனெனில், அடிப்படைப் பொருட்கள் (உருக்கு) துருப்பிடிக்க ஆரம்பித்துவிடலாம் என்றும் குற்றச்சாட்டும் அதிருப்தியுமாகும். மூன்றாவதாக உலோகத்திலான வீடு கட்டும் மூலப் பொருட்களைவிட சம்பிரதாயனமான செங்கல்/ சிமெந்து புளக் கல் மற்றும் காரைப் பூச்சுடனான வீடுகளே அப்பிரதேசத்திற்குப் பொருத்தமானவை. நான்காவது அதவாது பிரச்சினை, தேசிய நிதி நிலைமை தொடர்பில் மிக முக்கியமானதாகும்.

ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள 70,000 வீடுகளுக்கு தலா ஒன்றிற்கு ஏற்பட்ட செலவுகளைவிட இவ்வுருக்கு வீடுகள் இரண்டு அல்லது மூன்று மடங்கிற்கு அதிகமான செலவினத்தைக் கொண்டதவையாகும். அவ்வீடுகளும் இவ்வீடுகளின் பல்வேறு முக்கிய பண்புகளில் ஒத்த தன்மை கொண்டனவாகும்.  இவ்வாறான திட்டவட்டமாக வடமாகாண சபையும் தமிழர் கூட்டமைப்பும் விடுக்கும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை அசட்டை செய்வது என்பது அவர்களது சமஷ்டிக் கோரிக்கையை இன்னும் வலுப்படுத்துவதாகவே அமையும்.


உலோகப் பொருட்களிலான வீட்டு வசதித் திட்டம் என்பது வடக்கு, கிழக்கு மாகாண மக்கள்மீது திணிக்கும் மத்திய அதிகார சபைகளின் திறமையற்ற, தன்னிச்சையான, ஒரு தலைபட்சமான தீர்மானமாகக் காணப்படுகிறது. மத்தியப்படுத்தப்பட்ட ஒரு ஆட்சி அமைப்பில் ஏற்படுகின்ற தவறுகளுக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இவ்வாறான தவறுகள் அப்பிரதேச மக்களின் நலன்களை பாதிப்பது மாத்திரமின்றி தேசிய நலன்களையும் பாதிப்புக்குள்ளாக்கக் கூடியமையினை சமஷ்டி முறை ஆட்சியினாலேயே நிவர்த்தி செய்ய முடியும் என்பதும் ஒரு அரசியல் சித்தாந்தமாகும்

http://www.thinakkural.lk/article.php?article/zyvkuvyjb78739988f9153ac18206xcpmj4fd966ea302dd9ab9bae15qnjem#sthash.d7gMp929.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.