Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகாந்த் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்:

அக்காமச்சான் வீடுஅலுவலகங்களிலும் சோதனை

ஜனவரி 23, 2007

சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்துக்கு சொந்தமான சென்னை வீடுகள், கட்டடங்கள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை சென்ட்ரல் தியேட்டர் எதிரே உள்ள விஜய்காந்தின் வீடு, அவரது அக்காவின் வீடு, அக்காவிற்கு சொந்தமான மருத்துவமனையிலும் ரெய்டு நடந்து வருகிறது.

மேலும் விஜய்காந்துக்கு நெருக்கமானவர்கள், பினாமிகள் என்று கருதப்படு÷õர் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. வருமானத்தை மீறி விஜய்காந்த் சொத்து குவித்துள்ளதாலும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாலும் இந்த சோதனைகள் நடப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய்காந்தின் வீட்டில் இன்று காலை 8 மணி முதல் சோதனை நடக்கிறது. அதே போல அவரது அலுவலகத்திலும் ரெய்ட் நடந்து வருகிறது.

விஜய்காந்தின் மச்சானும் படத் தயாரிப்பாளருமான சுதீசின் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. சாலிகிராமம் 100 அடி ரோட்டில் உள்ள சுதீசுக்கு சொந்தமான லீ கிளப் என்ற கேளிக்கை விடுதிபார் வளாகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதே போல உடுமலைபேட்டையில் முன்னாள் தேமுதிக மாவட்ட செயலாளர் கணேஷ்குமாரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது வீடு, அவர் நடத்தி வரும் புரபஷனெல் கூரியர் சர்வீஸ் நிறுவன அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடக்கிறது.

வருமானவரித் துறை கூடுதல் இயக்குனர் ஜெயராம் தலைமையில் 30 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை முதல் சோதனைகளில் ஈடுபட்டுள்ளது. இவர் மிக 'முக்கியமான' நபரின் பினாமி என்று கருதப்படுகிறது.

http://thatstamil.oneindia.in/

இது பொழுதுபோக்கு பிரிவில போடும் செய்தியா கறுப்பி அக்கா

அடுத்தவனின் கஸ்டம் உங்களுக்கு பொழுது போக்கோ :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது பொழுதுபோக்கு பிரிவில போடும் செய்தியா கறுப்பி அக்கா

அடுத்தவனின் கஸ்டம் உங்களுக்கு பொழுது போக்கோ :P

தவறாய் போட்டுவிட்டேனே ஈழவன் சார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த், ஜேப்பியார் வீடு, அலுவலகங்களில் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது ரசிகர்கள் தாக்குதல்: கார்கள் உடைப்பு

சென்னை, ஜன. 24: நடிகர் விஜயகாந்த், ஜேப்பியார் உட்பட இன்ஜினியரிங் கல்லூரி நடத்தும் 3 பேரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.

தனியார் பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு குறைந்த கட்டணம் வசூலித்ததாக கணக்கு காட்டுகின்றனர். கோடிக்கணக்கில் வசூலாகும் பணத்துக்கு அரசிடம் கணக்கு காட்டுவதில்லை என்ற புகார்கள் மத்திய அரசுக்கு வந்தன.

இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர், 2 கார்களில் சென்னை சாலிகிராமம் கண்ணபிரான் தெருவில் உள்ள நடிகர் விஜயகாந்த் வீட்டுக்கு நேற்று காலை 9.15 மணிக்குச் சென்றனர். சோதனை நடத்த வந்திருப்பதாக அதிகாரிகள் கூறியதும் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்தார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். விஜயகாந்தின் Ôஆண்டாள் அழகர்Õ கல்லூரியின் நிர்வாக அலுவலகம், கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் செயல்படுகிறது. கல்லூரி, அலுவலகம் மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் வீடு, காவேரி தெருவில் உள்ள சகோதரி வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

அதே நேரத்தில் நெய்வேலி அருகே உள்ள மேல்பாப்பனப்பட்டு கிராமத்தில் விஜயகாந்தின் உறவினர் பார்த்தசாரதி வீட்டிலும், புதுச்சேரி அருகே அரியூரில் விஜயகாந்துக்கு சொந்தமானதாக கூறப்படும் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது.

மதுரையில் விஜயகாந்தின் சகோதரி டாக்டர் விஜயலட்சுமியின் வீடு, மேல ரத வீதியில் உள்ள அவரது கிளினிக், அவரது கணவர் துரைராஜின் கிளினிக், புதுமாகாளிப்பட்டியில் உள்ள ரைஸ்மில், மேல ஆவணி மூல வீதியில் உள்ள ஆண்டாள் அழகர் பிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

விஜயகாந்த் வீட்டில் சோதனை நடத்தப்படுவது பற்றி, அவரது ரசிகர்களுக்கு ரசிகர் மன்ற தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி தகவல் கொடுத்தார்.

அவரும் அரசியலுக்கு வந்திட்டார். இனி என்ன இதெல்லாம் வழமை.

அரசியலுக்கு வந்தால் கலைஞருக்கு யாரையும் பிடிக்காது. நடிகனாகவே இருக்கவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரூ. 45 கோடி முதலீடுசிக்கலில் விஜய்காந்த்!

ஜனவரி 24, 2007

சென்னை: விஜய்காந்த் வீடுகள், உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் சில முக்கிய சொத்துக்களின் ஆவணங்கள், நகைகள், வங்கி லாக்கர் சாவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ரெய்டின்போது விஜயகாந்த்தின் சகலையான ராமச்சந்திரன் புதுச்சேரி அரியூரில் நடத்தி வரும் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி தொடர்பான ஆவணங்களும் வரித்துறையினரிடம் சிக்கின.

அதி நவீன வசதிகளுடன் கூடியதாக இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இதில் சகலை எவ்வளவு பணம் முதலீடு செய்துள்ளார், விஜயகாந்த்துக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது இக் கல்லூரியில் ரூ. 45 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

சகலை ராமச்சந்திரனிடம் இந்தப் பணம் ஏது என்று வருமான வரித்துறையினர் கேட்டபோது, ரூ. 35 கோடியை வங்கிகளில் கடனாக பெற்றதாக தெரிவித்தார். மீதப் பணம் ரூ. 11 கோடிக்கு கணக்கு சொல்ல முடியாமல் தவித்தார்.

எந்தெந்த வங்கிகளில் ரூ. 35 கோடியை கடன் வாங்கினீர்கள் என்று கேட்டதற்கும் அவரிடம் சரியான பதில் இல்லை.

இதனால் இந்த ரூ. 45 கோடி பண விவகாரத்தில் விஜய்காந்த் தரப்பு சிக்கலில் மாட்டக் கூடும் எனத் தெரிகிறது.

மேலும் சென்னையில் விஜய்காந்தின் மச்சான் சுதீஷ் நிர்வகித்து வரும் லீக் கிளப் கேளிக்கை விடுதி இந்த ராமச்சந்திரனின் பெயரில் தான் உள்ளது. இந்த கிளப்பில் உறுப்பினராக கட்டணம் ரூ. 1 லட்சமாகும். ஆக, இந்த கிளப் உண்மையிலேயே யாருடையது? அதற்கான முதலீடு யாருடையது என்ற பின்னணியை ஆராயும் வேலையிலும் வருமான வரித்துறை இறங்கியுள்ளது.

http://thatstamil.oneindia.in

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிப.சிஸ்டாலின் கொடும்பாவிகள் எரிப்பு

ஜனவரி 24, 2007

சென்னை: விஜயகாந்தின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை எரித்து மாநிலம் முழுவதும் தேமுதிகவினர் போராட்டம் நடத்தினர்.

விஜயகாந்த்தின் சென்னை, மதுரை வீடுகள், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று வருமான வரி சோதனை நடந்தது.

இது தேமுதிகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் தூண்டுதலின் பே>ல்தான் வருமான வரி சோதனை நடந்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் கருணாநிதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

விஜய்காந்த் வீட்டருகே கருணாநிதி கொடும்பாவியை எரிக்க முயன்றவர்களை போலீஸாõர் தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர்.

ஆனால் தொண்டர்கள் கலையாமல் போக மாட்டோம், வேண்டுமானால் கைது செய்யுங்கள் என்று கூறினர். இதையடுத்து 300க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். அனைவரும் வளசரவாக்கம் முருகப்பா திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு விருகம்பாக்கம் காவல் நிலையம் சென்ற விஜயகாந்த், கைது செய்யப்பட்டிருந்த தேமுதிக நிர்வாகிகள் நான்கு பேரை சொந்த ஜாமீனில் விடுவித்து அழைத்துச் சென்றார்.

திருப்பூ>ல் பல்வேறு இடங்கலில் தொண்டர்கள் போராட்டம் நடத்தி கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களின் கொடும்பாவியையும் எரிக்க முயன்றனர். ஆனால் போலீஸார் வந்தபோது கொடும்பாவியை மறைத்து விட்டனர்.

இதனால் போலீஸார் கொடும்பாவி இல்லை என்று நிம்மதி அடைந்தனர். ஆனால் திடீரென ஒரு மாருதி காரில் கொண்டு வரப்பட்ட கொடும்பாவிகளை சடாரென சாலையில் போட்டு கொளுத்தியதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கொடும்பாவியை அவர்களிடமிருந்து பிடுங்க ÷ பாலீஸார் முயன்றனர். அப்போது சப்இன்ஸ்பெக்டர் பொன்னுத்தாய் தீயில் சிக்கினார். அவரது முகம், கழுத்து, கையில் தீக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து 136 பேரை போலீஸார் கைது செய்தனர். அனைவரும் பின்னர் சௌடேஸ்வரி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களில் 10 பேரைத் தவிர மற்றவர்களை போலீஸார் இரவில் விட்டு விட்டனர். மற்றவர்கள் மீது உருவப் பொம்மையை எரித்தது, அதைத் தடுக்க முயன்ற போலீசாருக்கு காயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பி>வுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர கோவையில் 500 பேரும், அவினாசியில் 38 பேர், ஊட்டியில் 50 பேர், திண்டிவனத்தில் 4 பேர், மயிலத்தில் 14 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விருத்தாச்சலத்தில் தேமுதிகவினர் கூடி கருணாநிதியின் கொடும்பாவியை எரித்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விருத்தாச்சலத்தில் தேமுதிகவினருக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் குதித்ததால் அங்கு மோதல் மூளும் சூழ்நிலை உருவானது. பின்னர் போலீசாரின் கோரிக்கையை ஏற்று திமுகவினர் கலைந்து சென்றதால் பிரச்சினை தணிந்தது.

ஆரணியில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்திய 23 பேர் கைதானார்கள். கள்ளக்குறிச்சியில் 100 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கருணாநிதி கொடும்பாவியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நெல்லையிலும் தேமுதிகவினர் பல்வேறு இடங்களில் மறியல் செய்தனர். கொடும்பாவியை எ>த்ததாக பலர் கைதாகினர். கன்னியாகுமரி மாவட்ட தேமுதிகவினர் முதல்வர் கருணாநிதியைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

இதேபோல திருச்சி, நாகர்கோவில், துறையூர், உப்பிலியாபுரம், ஈரோடு, தாராபுரம், பவானி, கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், நாமக்ல், செந்துரை, மணப்பாறை, துவரங்குறிச்சி என பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இரண்டு பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. தாதக்காப்பட்டியில் அரசு நகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக தேமுதிக கிளைச் செயலாளர் நல்லதம்பியை போலீஸார் கைது செய்தனர்.

http://thatstamil.oneindia.in

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் வீட்டில் சிக்கியது என்ன?*வருமான வரித்துறை அறிவிப்பு

சென்னை: நேற்று முன்தினம் தே.மு.தி.மு.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் கல்லுõரி உரிமையாளர் ஜேப்பியார் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்து வருமான வரித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. விஜயகாந்த் வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆவணங்கள் ஏதும் இல்லை என்றும், வருமான வரிக் கணக்கு செலுத்தியதற்கான ஆவணங்களும் இல்லை என்றும் வருமான வரித் துறை கூறியுள்ளது.

தமிழகம் முழுவதும் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து வருமான வரித் துறை கூடுதல் இயக்குனர் (மதுரை) செல்வகணேஷ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கை: திரைப்பட நடிகர் மற்றும் கல்வி நிறுவன உரிமையாளர்கள் இருவரின் வீடுகள் மற்றும் அலுவலகங் களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 23ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, கோவை, புதுவை, கடலுõர், மதுரை என மொத்தம் 14 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப் பட்டது. அதே போல் கணக் கெடுப்புப் பிரிவு 133 ஏ பிரிவின் படி 17 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 55 அதிகாரிகள் உட்பட மொத்தம் 400 பேர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். வருமான வரி சோதனை நடத்தப்பட்ட நடிகர் மற்றும் அவரது மனைவி பெயரில் முறையே ரூ.2.50 கோடி பெறுமானமுள்ள சொத்துக்கள் மற்றும் ரூ. 2.35 கோடி பெறுமானமுள்ள சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களுக்கு கடந்த ஐந்தாண்டுகளில் அவர்கள் வரி செலுத்தியதற்கான எவ்வித ஆவணங்களும் இல்லை. அதே போல் நடிகரின் சகோதரி வீட்டில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை "சீல்' வைக்கப்பட்டுள்ளன.

நடிகரின் உறவினர், மருத்துவக் கல்லுõரி கட்டுவதற்காக ரூ.45 கோடி முதலீடு செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், ஒன்பது கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாமல் உள்ளது. அது தொடர்பாக அவர் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. அதே போல் வங்கிகள் வழங்கிய கடன் உதவி விவரம், எந்த முகாந்திரத் தில் கடன் உதவி செய்யப் பட்டது என்பதற்கான ஆதாரங்கள் ஆகியவை குறித்து எதுவும் தெளிவாக விளக்கப்படவில்லை. தனி யார் நிறுவனங்களுக்கு ரூ.1.72 கோடி கொடுத்ததற்கான எவ்வித ஆவணங்களும் தரப்படவில்லை. கல்வி நிறுவன உரிமையாளர் ஒருவர் மற்றும் அவரது உறவினர் ஒருவரின் வீடுகளிலிருந்து கணக் கில் காட்டப்படாத நகைகள் "சீல்' வைக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ. 54.22 லட்சம்.

இன்னொரு கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து இதுவரை ரூ.11 கோடி காசோலை வாயிலாக வங்கியிலிருந்து எடுத்துள்ளார். ஒரு நாள் அதிக பட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை எடுத்துள்ளார். இது தொடர்பாக கல்வி நிறுவன உரிமையாளர் எவ்வித தன்னிலை விளக்கமும் தரவில்லை. எதற்காக இவ் வளவு பணம் எடுக்கப்பட்டது என்பது குறித்தும் எதுவும் கூறவில்லை. இன்னொரு கல்வி நிறுவன உரிமையாளர் கருப்புப் பணமாக வைத்திருந்த எட்டு கோடி ரூபாய் "சீல்' வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று வங்கி லாக்கர்கள் தொடர்பான ஆவணங்கள் கைப் பற்றப்பட்டுள்ளன. வங்கியில் போடப்பட்டுள்ள பணமும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் தொடர்ந்து வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

தமிழக முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் முரளி வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக பத்திரிகைகளில் வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம் பான செய்திகள். இவ்வாறு செல்வகணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ரெய்டு நடத்தப்பட்ட இடங்களின் உரிமையாளர்கள் விஜயகாந்த், ஜேப்பியார் மற்றும் கனகராஜ் ஆகியோர் பெயர் ஏதும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5 வருடமாய் சொத்து வரியே கட்டாத விஜயகாந்த்!

ஜனவரி 25, 2007

சென்னை: தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த சொத்துக் கணக்கிற்கும், வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்த சொத்துக் கணக்குக்கும் ஏராளமான முரண்பாடுகள் இருந்ததால்தான் நடிகர் விஜயகாந்த் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதில் அரசியல் இல்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் விளக்கம் தந்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனைக்கு கருணாநிதி தான் காரணம் என விஜய்கந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/

ஆனால், விஜய்காந்தின் சொத்துக்களுக்கு கணக்கு, வழக்கே இல்லை என ரெய்ட் நடத்திய வருமான வரித்துறை கூறியுள்ளது.

இந் நிலையில் விஜயகாந்த் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கினார். இவர்தான் ரெய்டு போன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பழனிமாணிக்கம் கூறுகையில், சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்த் அப்போது தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த சொத்து விவரங்களுக்கும், வருமான வரித்துறையிடம் கொடுத்துள்ள விவரங்களுக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன.

விஜய்காந்த் பெயரில் ரூ. 2.5 கோடிக்கும், அவரது மனைவி பிரேமலதா பெயரில் ரூ. 2.35 கோடிக்கும் தனியாக சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் வரியையே கட்டவில்லை. இதுகுறித்து வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுவையில் உள்ள விஜயகாந்த் உறவினருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூ>யில் ரூ. 35 கோடி அளவுக்கு வங்கியிலிருந்து கடன் வாங்கியதாக கூறினர். ஆனால் எந்த வங்கி, எவ்வளவு வாங்கினார்கள், எப்போது வாங்கினர் என்பதற்குரிய கணக்குகளும் முறையாக இல்லை.

இந்த வருமான வரி சோதனை முழுக்க முழுக்க விஜயகாந்த்தின் சொத்துக் கணக்கில் நிலவிய முரண்பாடுகள் தொடர்பாகத்தான் நடந்தது. இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆதாரம் கிடைத்தால் எந்த அரசியல்வாதியின் மீதும் நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை தயங்காது.

மேலும் கடந்த இரு ஆண்டுகளாக ஒவ்வொரு படத்திலும் தனக்கு தலா ரூ. 5லட்சம் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விஜய்காந்த் கூறியிருக்கிறார்.

தொழிலதிபர் ஜேப்பியார் சமீபத்தில் வங்கியிலிருந்து ரூ. 11 கோடி பணத்தை எடுத்துள்ளார். அதை அவர் என்ன செய்தார், எங்கு முதலீடு செய்தார் என்பதற்கு கணக்கு இல்லை. எனவேதான் அவரது இருப்பிடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது என்றார் பழனிமாணிக்கம்.

இதற்கிடையே கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விஜய்காந்துக்கு ஜேப்பியார் ரூ. 10 கோடி கொடுத்ததாகவும், ஜெயா கல்லூரியின் நிறுவனர் கனகராஜ் ரூ. 1 கோடி கொடுத்ததாகவும் நக்கீரன் தெரிவிக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.