Jump to content

உங்கள் இல்லத்து நிகழ்வுகளை வன்னிச் சிறுவர்களோடு கழித்திட


Recommended Posts

பதியப்பட்டது

வன்னியில் இருக்கும் உறவுகளோடு நம் குடும்பத்து நிகழ்வுகளை எப்படிக் கொண்டாடி மன நிறைவு கொள்ளலாம் என்று தனிப்பட்ட முறையில் எனக்குத் தனி மடலில் நண்பர்கள் பலர் இந்த இல்லங்கள் குறித்த விபரங்களைத் தனி மடலில் கேட்டிருந்தீர்கள்.
நம் வீட்டில் நிகழும் பிறந்த நாள், திருமணம், திருமண நாள் மற்றும் நினைவு நிகழ்வுகளை இவ்வண்ணம் நீங்கள் வன்னியில் இருக்கும் எம் குழந்தைகளோடு கொண்டாட விரும்பினால் இதோ செலவு மற்றும் மேலதிக தொடர்பு குறித்த விபரங்கள். 
நீங்கள் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலும், இவர்களுக்குப் பணம் அனுப்புவதன் மூலம் குறித்த நாள் நிகழ்வை அவர்கள் கொண்டாடுவார்கள். செலவுக்கான ரசீதும் அனுப்பி வைக்கப்படும்.
இதை உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.

காலைச் சாப்பாடு - இலங்கை ரூபா 15,000.00

மதியச் சாப்பாடு - இலங்கை ரூபா 25,000.00

இரவுச் சாப்பாடு - இலங்கை ரூபா 15,000.00

அன்பு இல்லம்: 30 சிறுவர்கள்

பாரதி இல்லம் 100 சிறுவர்கள்

செஞ்சோலை 200 சிறுவர்கள். (ஆண் மற்றும் பெண்)

செஞ்சோலை
Sencholai Children's Care Home
4, 5 Stage 2
Thiruvaiyaru
Kilinochi
Sri Lanka

Phone: 00 94 715 354 504

மேற்படி இல்லத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து 1 மணித்தியாலம் 15 நிமிடமளவில் சென்றடையலாம்.

பாரதி இல்லம் 
Bharathi Illam
Putharkuda
4th Ward 
Mulliyavalai
Mullaitivu
Sri Lanka

Phone: 0094 715354501

அன்பு இல்லம் 
Anpu Illam Children's Home
Muthuvinayagapuram 
Oddisuddan 
Mullaitivu
Sri Lanka

Phone: 00 94 715 535 4502

குறிப்பு: இந்த இல்லங்கள் தவிர இன்னும் தம் தாய், தந்தை உள்ளிட்ட உறவுகளை இறுதிப் போரில் தின்னக் கொடுத்து விட்ட ஏராளம் குழந்தைகள் வேறு இல்லங்களிலும் உள்ளனர்.
இங்கு நான் குறிப்பிட்ட அமைப்புகள் நண்பர் ஒருங்கிணைப்பில் என் போன்ற சக நண்பர்கள் தொடர்பில் இயங்கும் அமைப்புகள் என்பதால் உடனடித் தகவல்களைப் பகிர்கிறேன்.
வாய்ப்புக் கிடைப்பின் இது போன்ற இல்லங்களுக்கு நீங்கள் நேரடியாகச் சென்று பார்க்க வேண்டும், வருடத்தின் ஏதாவது ஒரு கொண்டாட்டத்தை இந்த உறவுகளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே நம் எல்லோர் அவாவும்.

FB

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு:  அவசர செய்தி! உயிர்காக்க விரைவாகப் பகிருங்கள்   நிலமை கடும் தீவிரமாகச் செல்கிறது. எலிக்காய்ச்சல் யாழ்ப்பாணத்தில் வெகு வேகமாகப் பரவுகின்றது.   பருத்தித்துறை வைத்தியசாலை மருத்துவ நிபுணர் வெளியிட்டுள்ள செய்தியில் ,    இதுவரை பருத்தித்துறை வைத்தியசாலையில் மட்டுமே 5 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து நோயாளிகள் நோய் தீவிரமாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   உங்களுக்கு காய்சல் , உடம்பு வலி , மூட்டு வலி , கண் சிவப்பாதல், சிறுநீர் கழிப்பது குறைதல், கண் சிவப்பாகுதல், வயிற்று வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.   சேற்று நிலங்களில் வேலை செய்தவர்கள், விவசாயிகள், மீனவர்கள் , அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நீரில் நடந்து திரிந்தவர்கள் பருத்தித்துறை சுகாதார பணிமனையை தொடர்புகொண்டு (MOH office) , நோய் வருவதற்கு முன்பான மாத்திரைகளை பயன்படுத்தி உங்களை உயிராபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை தடுப்பூசிகள் அல்ல , அன்டிபயட்டிக் மாத்திரைகள். தடுப்பூசிக்கு பயப்படுவார்கள் கூட அச்சப்படாமல் இதைப் பயன்படுத்தலாம்.   அவசரமாக பகிருங்கள். உங்களுக்குத் தெரிந்து மேலே சொன்னதுபோல தேங்கி நிற்கும் நீர் நிலைகளோடு தொடர்பு பட்டு ஆபத்தில் உள்ளவர்களை உடனடியாக சுகாதார பணிமனைக்கு ( MOH office) யிற்கு அழைத்துப் போங்கள்.   உங்களுக்குத் தெரிந்த எல்லோருக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள். நீங்களும் யாரோ ஒருவரை மரணத்தில் இருந்து காப்பாற்றலாம். இதை புறக்கணிக்காமல் பகிருங்கள்.   தகவல் மூலம் : செல்லத்துரை பிரசாந், பொது மருத்துவ நிபுணர் பருத்தி துறை ஆதார வைத்தியசாலை . பிரதி - சி.சிவச்சந்திரன் https://www.facebook.com/share/p/18UmzZibeV/
    • நெளிவு சுளிவு தெரிந்தவர்களிடம் கழுத்தைக் குடுக்க வேண்டும் ...... கண்டபடி யாரிடமும் குடுக்கக் கூடாது . ........ அதுக்கென்றே பிறந்த சிலர் இருக்கின்றார்கள் .....அவர்களை நாடவேண்டும் . ......!    
    • நேரம் கிடைத்தால்…. இஸ்லாமியர்களின்    தலைமயிர் வெட்டும் காணொளிகளை பாருங்கள். படு பயங்கரமாக தலையில் அடிப்பார்கள், திடீரென்று கழுத்தை  எதிர்பாராத கோணத்தில் திருப்புவார்கள், நெருப்பு கொழுத்துவது என்று ஒரே… பயங்கரமாக இருக்கும். “யூ ரியூப்பில்” பார்வையாளர்களை கவர்வதற்காக செய்கிறார்கள் போலுள்ளது. ஆனாலும்…. தலையை கொடுத்தவன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும்.  
    • இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை. அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார். இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்.  வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.