Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் - முஸ்லிம் உறவும் வடக்கு, கிழக்கு இணைப்பும்

Featured Replies

தமிழ் - முஸ்லிம் உறவும் வடக்கு, கிழக்கு இணைப்பும்

Untitled-2-6f972196ffae3f9ce3fc1c7dcfd9cc9f5e51f375.jpg

 

ஒரு பிள்ளை அழத் தொடங்­கிய பிற­குதான், அந்தப் பிள்­ளையின் தாய்க்கு அக்­கு­ழந்தை ஏதோ ஒரு தேவை­யுடன் இருக்­கின்­றது என்­பது புரி­கின்­றது. பிள்­ளைக்கு இப்­போ­தைக்கு எதுவும் கொடுக்கத் தேவை­யில்லை என்று நினைத்துக் கொண்­டி­ருந்த தாய், புதி­தாக தேவை­யொன்று உரு­வாகி இருப்­பதை உணர்வாள். “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்பார். சில பிள்­ளைகள் சொல்லும் அல்­லது அதற்­கான சைகையை காட்டும். வேறு சில பிள்­ளைகள் கடை­சி­மட்டும் என்­ன­வென்று சொல்­லாமல் அழு­து­கொண்டே இருக்கும்.

மூத்த பிள்­ளையை கண்­ணுற்ற, இளைய பிள்­ளையும் தனது பசியை வெளிப்­ப­டுத்த வேண்டு­மென்று நினைப்பான். ஆனால், தாய்க்கு புரி­யும்­ப­டி­யான கோரிக்­கையை முன்­வைக்க மாட்டான். பசிக்­குது என்ற தோர­ணையில் அழவும் மாட்டான். வெறு­மனே…. அங்­கு­மிங்கும் அப்­பிள்ளை ஓடித்­தி­ரியும், அதைப் பார்த்தால் பொறா­மையில், அல்­லது வீம்பில் அழுது கொண்­டி­ருப்­பது போல தெரியும். வேறு வழி­யில்­லாமல் ஏதா­வது ஒன்றை அருந்தக் கொடுத்­து­விட்டு, அல்­லது விளை­யாட்டுப் பொருட்­களை கையில் கொடுத்­து­விட்டு, தாய் போய்­விடக் கூடும்.

இப்­ப­டி­யான ஒரு இளைய குழந்­தையின் நிலை­யி­லேயே இலங்கை முஸ்லிம் சமூகம் இருக்­கின்­றது எனலாம். உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு, இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்டம் ஆகி­யவை ஊடாக நிறை­வேற்­றப்­பட வேண்­டிய பல தேவைகள் தமக்கு இருக்­கின்­றன என்­பது முஸ்­லிம்­க­ளுக்கு தெரியும். ஆனால், முஸ்லிம் அர­சியல் சூழலில் காணப்­படும் மக்கள் நலனை அன்றி வேறு­வி­ட­யங்­களை முன்­னி­றுத்தும் போக்கு, முஸ்­லிம்கள் தம்­மு­டைய அபி­லா­ஷை­களை ஒரு­மித்த குரலில் முன்­வைப்­ப­தற்கு தடை­யாக இருந்து வரு­வதை காணலாம். வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டவே வேண்­டு­மென தமிழ் தேசியம் கூறி­வ­ரு­கின்ற நிலையில், இணைக்­கப்­படக் கூடாது என்றும், இணைக்­கப்­பட்டால் முஸ்லிம் மாகாணம் அல்­லது தனி அலகு வேண்­டு­மென்றும் பல தரப்­பட்ட கருத்­துக்­க­ளுடன் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இருக்­கின்­றனர். பெரு­ம­ள­வான அர­சி­யல்­வா­திகள் வெளிப்­ப­டை­யாக எதையும் பேசாமல் பூட­க­மாக காரி­யங்­களைச் செய்­வ­தி­லேயே குறி­யாக இருப்­ப­தையும் காண முடி­கின்­றது. இதே­வேளை, அர­சாங்கம் தமது முடி­வு­களை சொல்­லாமல் தமி­ழர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடை­யி­லான கருத்து மோத­லுக்கு சிண்­டு­மு­டித்து விட்­டி­ருக்­கின்­றது எனலாம்.

அடிப்­படை புரிதல்

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு அல்­லது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் இணைப்பு விவ­காரம் என்று வரு­கின்ற போது, தமி­ழர்­களைப் போலவே முஸ்­லிம்­களும் சில அடிப்­படை விட­யங்­களை முதலில் புரிந்­து­கொள்ள வேண்டும். முத­லா­வ­தாக இது ஒரு ஜன­நா­யகப் பொறி­மு­றை­யாகும். ஜன­நா­யக அடிப்­ப­டையில் இது­பற்­றிய எந்­த­வொரு நிலைப்­பாட்டை எடுப்­ப­தற்கும் தமி­ழர்கள், முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டு­மன்றி சிங்­கள மக்­க­ளுக்கும் உரிமை இருக்­கின்­றது. அந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் பிரிந்­தி­ருக்க வேண்டும் என்றே பெரும்­பா­லான முஸ்­லிம்கள் நினைக்­கின்­றனர். இவ்­விரு மாகா­ணங்­க­ளையும் இணைப்­ப­தற்­கான காரணம் என்ன? அவ்­வாறு இணைத்தால் எவ்­வா­றான இமா­லயப் பலன்கள் இரு இனங்­க­ளுக்கும் கிடைக்கும்? என்­பதை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சொல்­லாத நிலையில், அவ்­வி­ணைப்பு இடம்­பெ­றக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்டை எடுப்­ப­தற்கு முஸ்­லிம்­க­ளுக்கு ஆயிரம் கார­ணங்கள் இருக்­கின்­றன. இவ்­விரு மாகா­ணங்­களும் இணைந்­தி­ருந்­த­போது முஸ்­லிம்கள் பெற்ற அனு­ப­வத்தை வைத்து இவ்­வி­ட­யத்தை அவர்கள் நோக்­கு­கின்­றனர். ஆனாலும், வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்ற தமி­ழர்­களின் ஜன­நா­யக விருப்­பத்தை முஸ்­லிம்கள் கேலிக்­குள்­ளாக்க முடி­யாது.

1987ஆம் ஆண்டின் இலங்­கை-­ – இந்­திய ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இவ்­விரு மாகா­ணங்­களும் ஒன்­றாக இணைக்­கப்­பட்­டன. இக்­கா­லப்­ப­கு­தி­யி­லேயே முஸ்­லிம்கள், தமிழ் ஆயுத இயக்­கங்­க­ளினால் பாரிய அழி­வு­களைச் சந்­திக்க நேர்ந்­தது. ஒரு சிறு­பான்மை இனத்­திற்­காக போரா­டி­ய­வர்­களின் துப்­பாக்­கிகள் இன்­னு­மொரு சிறு­பான்மை மக்­களின் முது­கு­களை நோக்கித் திரும்­பி­யி­ருந்­தன என்­ப­துதான், தமிழ் -– முஸ்லிம் உறவு விரி­சலின் தொடக்­கப்­புள்ளி ஆகும். அப்­போ­தி­லி­ருந்து ஏற்­பட்ட பரஸ்­பர நம்­பிக்­கை­யீ­னங்கள் இன்­று­வ­ரையும் முற்­றாகக் களை­யப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான பின்­ன­ணி­யிலும் கூட தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் கிரா­மப்­பு­றங்­க­ளிலும் நக­ரங்­க­ளிலும் இரண்­டறக் கலந்தே வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர். சாதா­ரண மக்­க­ளி­டையே எந்த விரி­சலும் பெரி­ய­ளவில் ஏற்­ப­ட­வில்லை. ஆனால், யார் யாரெல்லாம் இவ்­விரு சகோ­தர இனங்­களும் முரண்­பட வேண்டும் என்றும், அதில் தாம் இலாபம் தேட வேண்­டு­மென்றும் அன்று நினைத்­தார்­களோ அவர்­களே இன்று இன உறவு பற்றி பேசு­கின்­றனர். இதை பார்த்தால் அழு­வதா சிரிப்­பதா என்று தெரி­ய­வில்லை. வடக்கும், கிழக்கும் இணைந்­து­விட்டால் தமி­ழர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் நல்­லு­றவு ஏற்­படும் என்ற கருத்து ஆய்­வுக்­கு­ரி­யது. ஏனெனில், இவ்­விரு மாகா­ணங்­களும் இணை­வதால் இரு தரப்பு அர­சி­ய­லுக்கும் இடையில் ஒரு இணக்­கப்­பாடு ஏற்­ப­டுமே தவிர, சாமான்ய மக்­க­ளுக்கு இடையில் உள்ள அவ­நம்­பிக்­கைகள் நீங்­கி­விடும் என்று அறு­தி­யாகக் கூற­மு­டி­யாது. அர­சி­யல்­வா­திகள் ஒருக்­காலும் இன­நல்­லு­றவை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பாட்­டா­ளர்­க­ளாக இருந்­ததும் இல்லை. இன்று தமி­ழர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் இருக்­கின்ற அந்­நி­யோன்யம் அர­சி­யல்­வா­தி­களால் வளர்க்­கப்­பட்­ட­தென்றும் கூற முடி­யாது.

ஆகவே, தமிழ் -– முஸ்லிம் உறவு என்­பது உரு­வாக வேண்­டி­யது, அடி­மட்­டத்தில் இருந்­தாகும். அயல்­வீட்டில் வாழ்­கின்ற தமி­ழனும் முஸ்­லிமும் பேசிக் கொள்­ளாத வரையில், அவர்­க­ளுக்கு இடையில் சம­ர­சமும் உரை­யா­டல்­களும் விருத்­தி­பெ­றாத வரையில், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கும் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கும் இடையில் எத்­தனை பேச்­சுக்கள் நடந்­தாலும், இன­நல்­லு­றவு விருத்­தி­ய­டை­யாது. எனவே, இன­நல்­லி­ணக்­கத்தின் ஒரு­கூ­றாக இவ்­வி­ணைப்பை பார்க்­க­லாமே தவிர, இதனால் உறவு பலப்­படும் என்­பதை ஏற்றுக் கொள்ள முடி­யாது. ஆனால், வடக்கு – கிழக்கு இணைக்­கப்­பட்டால் சிறு­பான்­மை­யி­னரின் ஒன்­று­தி­ரண்ட அர­சியல் பலம் அதி­க­ரிக்கும்.

சாத்­தியத் தன்மை

ஏதா­வது ஒரு அடிப்­ப­டையில் தீர்வுத் திட்டம் முன்­வைக்­கப்­படப் போகின்­றது என்ற நம்­பிக்கை, நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வரு­கையின் பின் அதி­க­ரித்­துள்­ளது. ஆனாலும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் இணைப்பு சாத்­தி­யமற்­றது என்றும், நேரத்தை வீணாக் கும் பேச்சு என்றும் பெரு­ம­ள­வானோர் கரு­து­கின்­றனர். அதற்குக் கார­ணங்­களும் உள்­ளன.

அதா­வது, சிங்­கள மக்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ஒரு நாட்டில் சிங்­கள கடும்­போக்கு சக்­திகள் இன்னும் இயங்கிக் கொண்டே இருக்­கின்­றன. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­வுக்­கான ஆத­ரவும் குறைந்த மாதிரி தெரி­ய­வில்லை. இப்­ப­டி­யி­ருக்­கையில், வடக்­கையும் கிழக்­கையும் இணைக்க நல்­லாட்சி அர­சாங்கம் முயற்சி செய்­யு­மாக இருந்தால், இவ்­வி­வ­கா­ரத்தை பல­ம­டங்­காக ஊதிப் பெருப்­பிப்­ப­தற்கு எதி­ர­ணியும் கடும்­போக்கு சக்­தி­களும் முயற்சி செய்­யலாம். இது அர­சாங்­கத்தின் பலத்தில் பல அதிர்­வு­களை ஏற்­ப­டுத்­தலாம். அத்­தோடு, இவ்­வி­ணைப்பு பற்­றிய சட்ட ரீதி­யான நடை­மு­றை­களும் பாரிய நடை­முறைச் சிக்­கலை எதிர்­நோக்க வாய்ப்­பி­ருக்­கின்­றது. இவ்­வா­றான பல கார­ணங்­களால் இவ்­வி­ணைப்பு இடம்­பெற மாட்­டாது என சிலர் திட­மாக நம்­பு­கின்­றனர்.  

இங்கு ஒரு விட­யத்தை கவ­னிக்க வேண்டும். அது என்­ன­வென்றால், இலங்­கையின் தீர்­வுத்­திட்ட விவ­கா­ரத்தில் சர்­வ­தேசம் பிர­தான பங்கு வகிக்­கின்­றது. உல­க­ளா­விய அனு­ப­வங்­களின் அடிப்­ப­டையில், சர்­வ­தேச தலை­யீட்­டு­ட­னான தீர்வுப் பொதிகள் மிகவும் நுட்­ப­மான முறையில் தயா­ரிக்­கப்­பட்டு அதன் இறுதி வடி­வமே மேசையில் முன்­வைக்­கப்­படும். அப்­போது ஏற்­ப­டக்­கூ­டிய சாத்­தி­ய­மான சவால்கள் எல்­லா­வற்­றையும் முறி­ய­டிப்­ப­தற்­கான மாற்­று­வ­ழிகள் முன்­னமே அடை­யாளம் காணப்­பட்­டி­ருக்கும். இந்த அடிப்­ப­டை­யி­லான ஒரு தீர்­வுத்­திட்­டமே இலங்­கையில் முன்­வைக்­கப்­ப­டலாம் என்று ஊகிக்க முடி­கின்­றது. ஆயினும், வேறு நாடு­களைக் காட்­டிலும் இலங்­கையில் அதிக சிக்­கல்கள், சவால்கள் இருப்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை.

தமிழ்த் தேசிய அர­சி­யல்­வா­திகள் இதை­யெல்லாம் அறி­யா­த­வர்­க­ளாக வடக்கு, கிழக்கு இணைப்பை வலி­யு­றுத்­து­கின்­றார்கள் என்று யாரா­வது நினைத்தால் அது முட்­டாள்­த­ன­மான நினைப்­பாகும். உண்­மையில் சாதக பாத­கங்­களை நன்­றாக அறிந்து வைத்­துக்­கொண்டே, சர்­வ­தே­சத்தின் பேரா­த­ர­வு­டனும் புலம்­பெயர் சக்­தி­களின் பக்­க­ப­லத்­து­டனும் இணைந்த வட­கி­ழக்கில் ஒரு தீர்வை பெறு­வதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உறு­தி­யாக இருக்­கின்­றது. யாருக்கு என்ன நடந்­தாலும் தமது சமூ­கத்­திற்­காக முன்­னிற்­கின்ற தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் பண்­பு­களை, முஸ்லிம் அர­சி­யலில் காண முடி­ய­வில்லை.

முஸ்­லிம்­களின் பங்கு

இனப் பிரச்­சி­னையால் பிர­தா­ன­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தமி­ழர்கள் என்­றாலும், முஸ்­லிம்­களும் குறிப்­பி­டத்­தக்க இழப்­புக்­களை சந்­தித்­தி­ருக்­கின்­றார்கள். இத்­த­னைக்கும் முஸ்­லிம்கள் தனி­நாடு கோரி போரா­டி­ய­வர்­களும் அல்லர். எனவே, தீர்­வுத்­திட்டம் வரு­கின்ற போது வடக்கு, கிழக்கில் வாழ்­கின்ற இரு பிர­தான இனங்­களும் ஏற்­றுக்­கொள்ளும் தீர்­வையே முன்­வைக்க வேண்டும். அதுவே வெற்­றி­க­ர­மா­ன­தா­கவும் அமையும். தமி­ழர்கள், முஸ்­லிம்­களை புறக்­க­ணித்து ஏதா­வது ஒரு தீர்வைத் திணிப்­பார்­க­ளாயின் அதனால் மேற்­கு­றிப்­பிட்ட நல்­லி­ணக்கம் ஏற்­ப­ட­மாட்­டாது. மாறாக, இன்னும் நம்­பிக்­கை­யீ­னங்­களும் முரண்­பா­டு­க­ளுமே உரு­வாகும். மாகா­ணங்­களை இணைத்­து­விட்டு, தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் மனதால் பிரிந்து வாழ நேரலாம். இதனை தமிழ் அர­சி­யல்­வா­திகள் ஓர­ள­வுக்கு இப்­போது உணர்ந்து வரு­கின்­றனர். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வில் முஸ்­லிம்­க­ளுக்­கான உப தீர்வும் வழங்­கப்­பட்டு, அவர்­களும் திருப்­திப்­பட வேண்டும் என்­பதை பகி­ரங்­க­மாக ஒத்துக் கொள்­வதை அண்­மைக்­கா­லங்­களில் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

ஆனால், முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் அவர்­க­ளது அர­சியல் தலை­மை­களும் ஒட்­டு­மொத்­த­மான முஸ்லிம் மக்­களின் நிலைப்­பாடு என்ன என்­பதை சாரம்­ச­மாக இன்னும் பொதுத்­த­ளத்தில் எடுத்­து­ரைக்­க­வில்லை. மக்­களின் கருத்­த­றி­யாது, த.தே.கூ.தலை­வரும் மு.கா. தலை­வரும் இந்த மக்­க­ளுக்கு என்ன தேவை என்­பதை தீர்­மா­னிக்க முடி­யாது. இது ஒரு ஜன­நா­யக செயன்­முறை என்­பதால் அடி­மட்­டத்தில் (மக்­க­ளிடம்) இருந்து மேல் நோக்­கியே (அர­சி­யல்­வா­திகள் வரை) இந்த அபி­லா­ஷைகள் கொண்டு செல்­லப்­பட வேண்டும். ஆனால் அந்த இயல்பை முஸ்­லிம்­க­ளி­டத்தில் காண முடி­ய­வில்லை. அது­மட்­டு­மன்றி தமது நிலைப்­பா­டு­களில் நிலை­யற்­ற­வர்­க­ளா­கவும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இருக்­கின்­றனர்.

இவ்­வி­வ­கா­ரத்தில் மு.கா.வுக்கு பெரும் பொறுப்­பி­ருக்­கின்­றது. பிர­தான முஸ்லிம் கட்­சி­யான மு.கா. அப் பொறுப்பை சரி­யாக நிறை­வேற்­று­கின்­றதா என்­பது சந்­தே­க­மா­கவே இருக்­கின்­றது. வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­படக் கூடாது என்று பெரு­ம­ள­வான முஸ்லிம் மக்கள் கரு­து­கின்ற நிலையில், மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் இணைப்­புக்கு சாத­க­மான நிலைப்­பாட்­டுடன் இருக்­கின்றார் என்ற அபிப்­பி­ராயம் பர­வ­லாக முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. ஹக்கீம் இன்னும் தனது உறு­தி­யான நிலைப்­பாட்டை தெளி­வா­கவும் பகி­ரங்­க­மா­கவும் அறி­விக்­கா­மையே இதற்கு காரணம் எனலாம். ஆரம்­பத்தில் “சேதாரம் இல்­லாத விட்டுக் கொடுப்­புக்குத் தயார்” என்று கூறி­யி­ருந்த அவர் பின்னர், “விட­யங்­களை பகி­ரங்­க­மாக போட்­டு­டைத்து விடக் கூடாது” என்று சொல்­லி­யி­ருந்தார். மக்கள் மத்­தியில் விமர்­ச­னங்கள் அதி­க­ரித்­தி­ருத்த பிற்­பாடு, “வடக்கு கிழக்கை இணைப்­ப­தற்கு மு.கா.தலைமை இணங்­கி­விட்­டது என்­பதில் எவ்­வித உண்­மையும் இல்லை” என்று ஒரு முக்­கிய கருத்தை கூறி­யுள்ளார். இருப்­பினும், இணைந்த அல்­லது பிரிந்த வடக்கு, கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு என்ன தேவை என்­பதை ரவூப் ஹக்கீம் பகி­ரங்­க­மாக முன்­வைக்­க­வில்லை. வட­கி­ழக்கில் நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் மாகா­ணத்­தையா, முஸ்லிம் அல­கையா மு.கா. கோரு­கின்­றது என்று குறிப்­பி­டவும் இல்லை என்­பது கவ­னிப்­பிற்­கு­ரி­யது.

மறு­பு­றத்தில், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் றிசாட் பதி­யுதீன் “வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­படக் கூடாது என்றும், அவ்­வா­றான நிலை ஏற்­பட்டால் பத­வி­களைத் துறந்­து­விட்டு வீதி­களில் இறங்கிப் போரா­டுவோம்” என்றும் பகி­ரங்­க­மாக சொல்­லி­யி­ருக்­கின்றார். இதே­நேரம், வடக்கும் கிழக்கும் தனித்­தனி மாகா­ணங்­க­ளா­கவே இருக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல்­கொ­டுத்து வந்த தேசிய காங்­கிரஸ் தலைவர் அதா­வுல்லா, மீண்டும் இவ்­விரு மாகா­ணங்­களும் இணை­யக்­கூ­டாது என்­பதை மேடை போட்டு சொல்லிக் கொண்­டி­ருக்­கின்றார். தெளி­வாக நிலைப்­பா­டு­களை அறி­விப்­பது நல்­லதே. ஆயினும், வடக்கும் கிழக்கும் தனித்­தனி மாகா­ணங்­க­ளாக இருந்தால் எல்லாப் பிரச்­சி­னை­களும் தீர்ந்­து­வி­டுமா என்ற கேள்­விக்கும் இங்கு விடை காண வேண்­டி­யுள்­ளது. எதிர்ப்­பு­களை பொருட்­ப­டுத்­தாது வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­பட்டால் அதற்குள் என்ன தீர்வு வேண்டும் என்­பதை றிசாட், அதா­வுல்லா போன்றோர் சொல்ல வேண்டும். அவ்­வாறே, பிரிந்­தி­ருந்தால் என்ன தீர்வு வேண்டும் என்­பதை ஹக்கீம் சொல்ல வேண்டும். கிழக்கு தனித்­தி­ருந்தால் சிங்­க­ள­ம­ய­மாகும் சாத்­தி­ய­முள்­ளதா? என்ற கோணத்திலும் சிந்திப்பது அவசியம்.

மிக முக்கியமாக, மாற்று அரசியல் கலாசார அமைப்பாக அறியப்பட்ட நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என்னவென்று மக்கள் அங்கலாய்க்கின்றனர். இம் முன்னணி வட மாகாண சபை தேர்தலில் த.தே.கூட்டமைப்புடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டு போட்டியிட்டது. இதன்படி த.தே.கூட்டமைப்பில் அதன் உறுப்பினர் ஒருவர் மாகாண சபை உறுப்பினராக பதவி வகிக்கின்றார். புதுவிதமான அரசியல் இயக்கமாக செயற்படும் என மக்கள் எதிர்பார்க்கும் இம் முன்னணியானது த.தே.கூட்டமைப்புடனும் மு.கா.வுடனும் சமகாலத்தில் உறவை கொண்டிருக்கின்றது. ஆனால் இன்னும் வடக்கு, கிழக்கு இணைப்பு அல்லது முஸ்லிம்களின் நிலைப்பாடு என்னவென்பது பற்றி பேசவில்லையே என்பது ஒரு குறைபாடாக இருக்கின்றது. ஏனைய அரசியல் கட்சியில் இருந்தும் தாம் வேறுபட்டவர்கள் என்பதை காட்டுவதற்காகவாவது நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டியிருக்கின்றது.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆகவே, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகள் தமக்கிடையே பேசி உத்தேச தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை பொதுமக்களும் சர்வதேசமும் அரசாங்கமும் தமிழ் தரப்பும் தெளிவாக காணும்விதத்தில் வெளிப்படையாக முன்னிலைப்படுத்த வேண்டும். நிலைதடுமாறும் நிலைப்பாடுகளோடும் மௌனத்தோடும் இருப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.

அழுத பிள்ளைதான் பால்குடிக்கும் என்பார்கள் !

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-16#page-9

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.