Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் தொடரும் அச்சமூட்டும் சம்பவங்கள்

Featured Replies

யாழ்ப்­பா­ணத்தில் தொடரும் அச்­ச­மூட்டும் சம்­ப­வங்கள்

 

யாழ்ப்­பா­ணத்தில் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் இரண்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பலி­யான சம்­பவம் குறித்து விசா­ரணை நடத்­தப்­பட்டு வரும் வேளையில் அங்கு மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஊட்டும் சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

கடந்த 20 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை நள்­ளி­ரவு மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இந்த சம்­ப­வத்தில் இரண்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பலி­யா­ன­தை­ய­டுத்து யாழ். குடா­நாட்டில் பெரும் பதற்­ற­நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த நிலையில் கடந்த 23 ஆம்­ தி­கதி ஞாயிற்­றுக்­கி­ழமை சுன்­னாகம் நகரின் மத்­தியில் மூன்று மோட்டார் சைக்­கிள்களில் வாள்கள், கம்­பி­க­ளுடன் வந்த ஆறுபேர் கொண்ட கும்பல் புடவைக் கடை­யொன்­றினுள் புகுந்து அட்­டகாசம் செய்­த­துடன் கடைக்கு வெளியே சிவில் உடையில் நின்ற இரண்டு பொலிஸார் மீதும் வாள் வெட்டுத் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­தது.

பட்­டப்­ப­கலில் சுன்­னாகம் நகரின் மத்­தியில் மூன்று மோட்டார் சைக்­கிள்களில் வந்த இந்தக் கும்பல் வாள் வெட்டுத் தாக்­கு­தலை நடத்திச் சென்­றமை பெரும் அச்­சத்தை உரு­வாக்­கி­யி­ருந்­தது. யாழ்ப்­பா­ணத்தில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் படு­கொ­லையையடுத்து பதற்றம் நிலவி வந்த சூழ்­நி­லையில் துணி­க­ர­மாக வாள்­க­ளுடன் வந்து நகரின் மத்­தியில் இந்தக் கும்பல் தாக்­குதல் நடத்தி சென்­ற­மை­யா­னது பல சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

மாண­வர்­களின் படு­கொ­லையையடுத்து ஏற்­பட்­டி­ருந்த பதற்­றத்தை மேலும் அதி­க­ரிக்­கும் வகை­யி­லேயே இந்த தாக்­குதல் சம்­பவம் அமைந்­தி­ருந்­தது. இந்த தாக்­கு­தலையடுத்து இரு தினங்­க­ளுக்குப் பின்னர் குறித்த தாக்­கு­தலை தாமே ­மேற்­கொண்­ட­தாக ஆவா ­குழு உரிமை கோரி­யி­ருந்­தது. இது குறித்த துண்­டுப்­பி­ர­சு­ரங்கள் இலக்கத் தக­டற்ற மோட்டார் சைக்­கிளில் வந்த குழு­வி­னரால் யாழ். நக­ரி­லுள்ள பத்­தி­ரி­கைக் ­கா­ரி­யா­ல­யங்கள் மற்றும் சில பாட­சா­லை­க­ளுக்கு அருகில் வீசப்பட்­டி­ருந்­தன.

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் படு­கொ­லைக்கு பழி­வாங்கும் வகை­யி­லேயே பொலிஸார் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக அதில் உரிமை கோரப்­பட்­டி­ருந்­தது. உண்­மை­யி­லேயே சுன்­னா­கத்தில் நடத்­தப்­பட்ட தாக்­குதல் பொலி­ஸாரை இலக்­கு­வைத்து நடத்­தப்­ப­ட­வில்­லை­யென்றும் சிவில் உடையில் பொலிஸார் நின்­ற­மை­யினால் அவர்கள் யார் என்று தெரி­யாத நிலை­யி­லேயே தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தா­கவும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்­னா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வா­றான நிலையில் மாண­வர்­களின் படு­கொ­லைக்கு பழி­வாங்கும் வகையில் தாங்­களே பொலிஸார் மீது வாள் வெட்டுத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக ஆவா குழு எனும் பெயரில் வெளி­யி­டப்­பட்ட துண்­டுப்­பி­ர­சு­ரங்­களின் பின்­ன­ணியில் ஏதோ ஒரு மறை­முக சக்தி செயற்­ப­டு­கின்­றமை தெளி­வா­கின்­றது.

இவ்­வா­றான தாக்­குதல் நடை­பெற்று சில தினங்­களின் பின்னர் கடந்த செவ்­வாய்க்­கிழமை இரவு யாழ்ப்­பாணம் ஆனைக்­கோட்­டைப்­ப­கு­தியில் இலக்கத் தக­டற்ற ஜீப் வண்­டியில் வந்த இனந்­தெ­ரி­யாத கும்­ப­லொன்று அங்கு கூடி நின்ற இளை­ஞர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளது. ஆனைக்­கோட்டை ஆலடி வைரவர் ஆல­யத்­திற்கு அண்­மையில் இந்த சம்­பவம் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. குறித்த மூன்று இளை­ஞர்­க­ளையும் முழங்­காலில் மண்­டி­யிட வைத்து அவர்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. தாக்­கு­தலை அடுத்து குறித்த மூன்று இளை­ஞர்­க­ளி­னதும் மோட்டார் சைக்­கிள்­களின் சாவி­களை தாக்­குதல் நடத்­தியோர் எடுத்துச் சென்­றி­ருக்­கின்­றனர்.

தாக்­கு­த­லுக்­குள்­ளான மூன்று இளை­ஞர்­களும் யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­துடன் தாக்­குதல் நடத்­தியோர் மோட்டார் சைக்­கிள்கள் மீதும் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். இவர்கள் இரும்புக் கம்­பி­க­ளி­னா­லேயே தாக்­குதல் நடத்­தி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்தச் சம்­ப­வ­மா­னது யாழ். குடா­நாட்டில் மேலும் பதற்­றத்தை அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது. இரு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் படு­கொலையை அடுத்து யாழ். குடா­நாட்டில் அச்சத்தின் மத்­தியில் மக்கள் வாழ்ந்து வரு­கையில் இனந்­தெ­ரி­யாத இந்தக் கும்­பல்­களின் தாக்­கு­தல்­க­ளா­னது மேலும் அச்­சத்தை அதி­க­ரிப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

யாழ். குடா­நாட்டில் அண்­மைக்­கா­ல­மா­கவே வாள் வெட்டுச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­தி­ருந்­தன. மோட்டார் சைக்­கிள்­களில் வரும் கும்பல் வாள் வெட்டுத் தாக்கு­தலை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்­தது. தற்­போதும் இத்­த­கைய கும்­பலின் செயற்­பா­டா­னது அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது. இரா­ணு­வமும் பொலி­ஸாரும் குடா­நாட்டில் குவிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இத்­த­கைய மோட்டார் சைக்கிள் கும்­ப­லானது சுதந்­தி­ர­மாக திரிந்து குற்­றச்­செ­யல்­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­மை­யா­னது பலத்த சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இந்தக் கும்பலின் செயற்­பாட்­டிற்கு இரா­ணுவ புல­னாய்வுத் துறையின் ஒத்­து­ழைப்பு கிடைத்­தி­ருக்­க­லாமோ என்ற சந்­தே­கமும் இதன் பின்­ன­ணியில் படைத்­த­ரப்­பினர் செயற்­ப­டு­கின்­றனர் என்ற கேள்­வியும் குடா­நாட்டு மக்கள் மத்­தி­யிலும் வட­ப­குதி அரசி­யல்­வா­திகள் மத்­தி­யிலும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த விடயம் குறித்து நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த செய்­தி­யாளர் மாநாட்டில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்­னா­யக்க கலந்து கொண்­டி­ருந்தார். அவ­ரிடம் செய்­தி­யாளர் ஒருவர் வடக்கில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் இயங்கும் மோட்டார் சைக்கிள் கும்பலின் பின்­ன­ணியில் இரா­ணுவ உள­வுப்­பி­ரிவு இயங்­கு­கின்­றது என குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்­றதே என்று கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

இதற்கு அவர் எந்­த­வி­த­மான பதி­ல்க­ளையும் அளிக்­காமல் செய்­தி­யாளர் மாநாட்­டி­லி­ருந்து எழுந்து செல்ல முயன்­றுள்ளார். இவ்­வாறு அமைச்சர் எழுந்து சென்­ற­போது கேள்­விக்­கான பதிலை ஆம் என்று எடுத்துக் கொள்­வதா? அல்­லது இல்லை என்று எடுத்­துக்­கொள்­வதா என ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீண்டும் கேள்வி எழுப்­பி­ய­போது நான் ஒன்றும் கூற­வில்­லையே என்று தெரி­வித்த அமைச்சர் செய்­தி­யாளர் மாநாட்­டி­லி­ருந்து எழுந்து சென்­று­விட்டார்.

உண்­மை­யி­லேயே யாழப்­பா­ணத்தில் இயங்­கி­வரும் மோட்டார் சைக்கிள் வாள் வெட்­டுக்­கும்பலின் பின்­ன­ணியில் இருப்­ப­வர்கள் யார் என்ற கேள்வி தற்­போது வட­ப­குதி மக்கள் மத்­தியில் எழுந்­தி­ருக்­கின்­றது. அத்­த­கைய கேள்­விக்கு அர­சாங்­க­மா­னது உரிய பதிலை வழங்­காமல் நழு­விச்­சென்­றுள்­ளமை மக்­களின் சந்­தே­கத்தை மேலும் அதி­க­ரிப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

தற்­போ­தைய நிலையில் வடக்கில் இடம்­பெற்று வரும் இத்­த­கைய குற்­றச்­செ­யல்­களின் பின்­ன­ணியில் யார் உள்­ளனர் என்ற கேள்­வியை வட­ப­குதி மக்கள் எழுப்பி வரும் நிலையில் தென்­ப­கு­தியை சேர்ந்த இன­வாத சக்­திகள் வடக்கில் விடு­த­லைப்­பு­லி­களின் செயற்­பா­டுகள் மீண்டும் ஆரம்­பித்­துள்­ளை­மையையே தற்­போ­தைய சம்­ப­வங்கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன என்று தெரி­வித்து வரு­கின்­றன.

வடக்கில் நடக்கும் குற்றச் செயல்­களின் பின்­ன­ணியில் விடு­தலைப் புலி­களின் முன்னாள் உறுப்­பி­னர்கள் உள்­ளனர். வடக்­கிலும், கிழக்­கிலும் அமை­தி­யின்மை நில­வவும் இவர்­களின் தூண்­டு­தல்­களே கார­ண­மாக உள்­ளன. நாட்டின் அமை­தியை சீர்­கு­லைத்து மீண்டும் மோச­மான நிலை­மை­யினை ஏற்­ப­டுத்­தவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர் என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் பேச்­சாளர் நிஷாந்த சிறி­வர்­ண­சிங்க குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

'ஆவா, பாவா' போன்ற குழுக்­களின் பின்­ன­ணியில் புலி­களின் உறுப்­பி­னர்கள் உள்ளனர். அவர்கள் மூலமாகவே இவ்வாறான பாதாள உலகக் கோஷ்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

வடக்கில் இயங்கும் இத்தகைய குழுக்களின் பின்னணியில் இராணுவத்தினரின் செயற்பாடு இருக்குமோ என்று வடக்கில் சந்தேகம் நிலவுகின்ற நிலையில் தெற்கில் இனவாதிகள் இந்தக் கும்பலின் பின்னணியில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் செயற்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இந்த நிலையில் அரசாங்கமானது இத்தகைய சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலளிக்காமல் விட்டுள்ளமையானது மேலும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.

இத்தகைய சந்தேக நிலைமைகளை போக்குவதற்கு அரசாங்கமானது யாழ். குடாநாட்டில் இயங்கும் கும்பல்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதே ஒரே வழி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-28#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.