Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடியும்போது நல்ல நல்ல விளையாட்டுக்கள்// சூடுபிடிக்கும் அரசியல் கள நகர்வுகள்

Featured Replies

விடியும்போது நல்ல நல்ல விளையாட்டுக்கள்

 

சூடு­பி­டிக்கும்  அர­சியல் கள  நகர்­வுகள்  

ரொபட் அன்டனி

 

 ""எலி­வென ஜாமெட்ட ஹொந்த ஹொந்த செல்லம்"" என்று சிங்­க­ளத்தில் கூறு­வார்கள். அதா­வது விடி­யும்­போது நல்ல நல்ல விளை­யாட்­டுக்கள் என்­பதே அதன் அர்த்­த­மாகும். தற்­போது எமது நாட்­டிலும் இவ்­வாறு நல்ல நல்ல அர­சியல் விளை­யாட்­டுக்­களை காண முடி­கின்­றது.

காரணம் நாட்டின் அர­சியல் நகர்­வுகள் பர­ப­ரப்­பா­கின்­றன. அர­சியல் காய் நகர்த்­தல்கள் சூடு பிடிக்­கி­ன்றன. அடுத்து அர­சி­யலில் என்ன நடக்­கப்­போ­கின்­றது? முன்னாள் வெளி விவ­கார அமைச்சர் ஜீ.எல். பீரி­ஸினால் ஆரம்­பிக்­கப்­பட்டு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ இணைந்­து­கொண்­டுள்ள சிறி­லங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வ­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ  பத­வி­யேற்­பாரா? அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சுதந்­திரக் கட்­சியின் சார்பில் யார் போட்­டி­யி­டுவார்? மஹிந்த அணி­யினர் தமது தரப்­பினர் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஒரு வேட்­பா­ளரை கள­மி­றக்­கு­வார்­களா?   

இவை அர­சியல் ஆர்­வ­லர்கள் அன்­றாடம் எழுப்­பிக்­கொண்­டி­ருக்கும் கேள்­வி­க ளாகும். தற்­போது இவற்றில் ஒரு கேள்­விக்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ பதி­ல­ளித்­துள்ளார். பஷில் ராஜ­பக் ஷ இவ்­வாறு விளக்­க­ம­ளித்­துள்ளார்.

அதா­வது ""மஹிந்த ராஜ­பக் ஷ என்ன கூறி­னாலும் அவரே எமக்கு முன்­னு­தா­ரணம். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போது இறுதி நாட்கள் வரையில் மைத்­தி­ரி­பால சிறி­சேன தான் கட்­சி­யி­லி­ருந்து விலகிச் செல்ல மாட்டேன் என்றே கூறி­யி­ருந்தார். ஆனால் இறு­தியில் விலகிச் சென்றார். அது­போன்று தான் மஹிந்­தவும் வருவார். இறு­தியில் அவர் எமது கட்­சியின் தலைமைப் பத­வியை ஏற்பார். வற்­பு­றுத்­தி­யேனும் அவரை கட்­சியில் சேர்த்­து­கொள்வோம். அவரை தலை­வ­ராக்­குவோம். எமது கட்­சி­யுடன் மன­த­ளவில் தற்­போதும் பெரும்­பா­லானோர் இணைந்­துக்­கொண்­டுள்­ளனர். ஆனால் அவர்கள் உட­ன­டி­யாக இணைந்­து­கொள்­வதில் சட்டச் சிக்­கல்கள் இருக்­கலாம். எனவே விரைவில் இணைந்­து­கொள்­வார்கள்.

எமது கட்­சிக்­கான தனித்­து­வத்தை கொண்டே நாங்கள் வருவோம். ஆனால் சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்த விழுந்த ஒரு விதை­யா­கவே இந்த கட்சி இருக்கும். இன்று இந்த நாட்டு மக்­க­ளுக்கு புதிய அர­சியல் கட்சி ஒன்றின் தேவை உள்­ளது. இந்த நாட்­டில 36 ஆயிரம் கிரா­மங்கள் உள்­ளன. அவற்றில் வாழும் மக்­கள் தற்­போது யார் ஆத­ரவு தரு­வார்கள் என்ற எதிர்­பார்ப்­புக்கள் எமக்கு உள்­ளன"" இவ்­வாறு பஷில் ராஜ­பக் ஷ குறிப்­பிட்­டுள்ளார்.

அந்த வகையில், ஜீ.எல்.பீரிஸ் ஆரம்­பித்­துள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வ­ராக விரைவில் மஹிந்த ராஜ­பக் ஷ வருவார் என்­பது குறிப்­பி­டத்­தக்க வகையில் உறு­தி­யா­கின்­றது. ஆனால், எப்­போது எவ்­வாறு அவர் புதிய கட்­சியின் தலை­மைத்­து­வத்தை பொறுப்­பேற்பார் என்­பது தெ ளிவில்­லாமல் இருக்­கின்­றது.  

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பொறுத்­த­வ­ரையில் மஹிந்த அணி­யி­னரின் புதிய கட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட செயற்­பாடு தொடர்பில் சற்று குழப்­பத்தில் இருப்­ப­தா­கவே தெரி­கி­றது. இது­வ­ரையில் இந்த விடயம் குறித்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் எந்த வித­மான கருத்­தையும் தெரி­விக்­க­வில்லை.

மாறாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை விட்டு வெளியேறிச் செல்­ல­மாட்டார் என்றும் அவர் கட்­சியை ஒரு­போதும் பிளவு படுத்த மாட்டார் என்­றுமே கூறி­வ­ரு­கின்­றனர். இது தொடர்பில் கடந்த வியா­ழக்­கி­ழமை கருத்து வெளியிட்­டி­ருந்த சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் அமைச்­ச­ரு­மான விஜித் விஜி­த­முனி சொய்சா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் எந்தப் போட்­டி­களும் இல்லை என்று குறிப்­பிட்­டுள்ளார்.

"நாட்டின் அர­சியல் நகர்­வுகள் பர­ப­ரப்­ பா­கின்­றன.அர­சியல் காய் நகர்த்­தல்கள் சூடு பிடிக்­கி­ன்­றன. அடுத்து அர­சி­யலில் என்ன நடக்­கப்­போ­கின்­றது? முன்னாள் வெளிவிவ ­கார அமைச்சர் ஜீ.எல்.பீரி­ஸினால் ஆரம்­பிக் ­கப்­பட்டு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­ பக் ஷ இணைந்­து ­கொண்­டுள்ள ஸ்ரீ­ லங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை ­வ­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பத­வி­யேற் ­பாரா? அடுத்த ஜனா ­தி­பதி வேட்­பா­ள­ராக சுதந்­திரக் கட்­சியின் சார்பில் யார் போட்­ டி­யி­டுவார்? மஹிந்த அணி­யினர் தமது தரப்­பினர் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒரு வேட்­பா­ளரை கள­மி­றக்­கு­வார்­களா?  "

அத்­துடன் ""ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி என்ற பெயரில் தாமரை மொட்டு சின்­னத்தில் புதிய கட்சி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் இது இலங்­கையில் உள்ள 73 கட்­சி­களில் ஒன்­றா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது. ஒரு­சிலர் ஒன்­றி­ணைந்து புதிய கட்­சியை உரு­வாக்­கு­வதால் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­படப் போவ­தில்லை. இலங்கை அர­சியல் வர­லாற்றில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் கட்­சிகள் உரு­வா­கின. 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்து பிர­பல்­ய­மான பலர் வெளி­யேறி புதிய கட்­சியை உரு­வாக்­கினர். ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலும் அவ்­வாறு நடந்­தது. ஆனால் பிர­தான கட்­சிகள் எவையும் வீழ்ச்சி காண­வில்லை. ஆகவே இப்­போது தாமரை மொட்டு உரு­வாக்­கப்­பட்­டாலும் அது மல­ராது"" என்றும் சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்தர் விஜித் விஜி­த­முனி சொய்சா சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இவ்­வாறு பார்க்­கும்­போது சுதந்­திரக் கட்­சி­யினர் மஹிந்த அணி­யி­னரின் புதிய கட்சி காய் நகர்த்தல் தொடர்பில் சற்று கரி­சனை செலுத்­து­வ­தா­கவே காணப்­ப­டு­கி­றது. தற்­போ­தைய நிலை­மையில் மஹிந்த அணி­யினர் புதிய கட்­சியை ஆரம்­பித்துக் கொண்டு செல்­வ­தா­னது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கே சவா­லாக அமையும் என்­பது சந்­தே­க­மில்லை.

காரணம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்தர் ஒரு­வரே தாமரை சின்­னத்­தி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியை ஆரம்­பித்­துள்ளார். அதில் தற்­போது மஹிந்த குடும்­பத்தை சேர்ந்த ஒருவர் அங்­கத்­த­வ­ரா­கி­விட்டார். எனவே, இது அனைத்துப் பக்­கத்­திலும் சுதந்­திரக் கட்­சியில் தாக்கம் செலுத்தும்.

எவ்­வா­றெ­னினும் ஜனா­தி­ப­தியும் சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன சுதந்­திரக் கட்­சியை பலப்­ப­டுத்தி அடுத்த முறை தனித்து ஆட்சி அமைக்கும் நோக்கில் பல்­வேறு வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கிறார்.

குறிப்­பாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்கு வங்­கியை அதி­க­ரித்துக் கொள்ளும் நோக்கில் ஜனா­தி­பதி பாடு­பட்டு வரு­கிறார் என்று கூறலாம். தமிழ் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவைப் பெறு­வதில் தற்­போது சுதந்­திரக் கட்­சிக்கும் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் இடையில் ஒரு பனிப்போர் நில­வு­கி­றது என்றே கூற­மு­டியும்.

அந்த அள­வுக்கு இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் தமிழ் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை பெறு­வதில் போட்டி நில­வு­கி­றது. அந்த வகையில் தற்­போது மஹிந்த தரப்­பினர் புதிய கட்­சியை ஆரம்­பித்து முன்­னெ­டுத்துச் செல்­வ­தா­னது ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எந்த வகை­யிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தாது. மாறாக அந்தக் கட்சி மேலும் பல­ம­டையும் நிலை­மையே காணப்­ப­டு­கி­றது. சுதந்­திரக் கட்சி பிள­வ­டை­வ­தி­லேயே ஐக்­கிய தேசியக் கட்­சியின் வெற்றி தங்­கி­யுள்­ளது.

எனவே சுதந்­திரக் கட்­சி­யினர் எவ்­வா­றா­வது மஹிந்த ராஜ­ப­க் ஷவை சுதந்­திரக் கட்­சிக்­குள்­ளேயே வைத்துக் கொள்­வ­தற்கு தற்­போது முயற்­சிப்­பார்கள் என்­பது தெளி­வா­கின்­றது. இந்த நிலை­மையை அறிந்­த­தால்தான் கடந்த காலங்­களில் மஹிந்த அணி­யினர் தனித்து கூட்­டங்­களை நடத்­தி­ய­போதும் சுதந்­திரக் கட்­சியின் கூட்­டங்­க­ளுக்கு வரா­ம­லி­ருந்­த­போதும் அவர்­க­ளுக்கு எதி­ராக கட்­சி­யினர் எவ்­வி­த­மான ஒழுக்­காற்று நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் இருந்­தனர். பல்­வேறு தட­வைகள் இவ்­வாறு மஹிந்த அணி­யி­லுள்ள சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மென பரந்­த­ளவில் எதிர்­பார்க்­கப்­பட்ட போதும் இறு­தி­வரை அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வில்லை.

எவ்­வா­றெ­னினும் மஹிந்த அணி­யினர் புதிய கட்­சியை ஆரம்­பிப்­பதை சுதந்­திரக் கட்­சி­யினால் தடுக்க முடியாமல் போயுள்­ளது. தற்­போ­தைய நிலை­மையில் தேசிய அர­சாங்­கத்தில் இடம்­பெறும் சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளியே வந்து தனித்­து­வ­மாக இயங்­கினால் சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­ப­தற்கு தயா­ரென மஹிந்த அணி­யினர் கூறி­வ­ரு­கின்­றனர்.

ஆனால், எக்­கா­ரணம் கொண்டும் தற்­போ­தைய சூழலில் சுதந்­திர கட்சி­யினர் தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளியே வரு­வ­தற்­கான சாத்­தியம் இல்லை. ஆனால், இன்னும் இரண்டு வரு­டங்­க­ளுக்குப் பின்னர் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்­திரக் கட்­சி­யினர் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளியே­று­வ­தற்­கான சாத்­தியம் காணப்­ப­டு­கி­றது.

காரணம் அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் சுதந்­திரக் கட்சி தனித்து போட்­டி­யிட்டு ஆட்சி அமைக்க வேண்­டு­மானால் தேர்தல் நடக்­கும்­போது சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­பது கட்­சிக்கு பாத­க­மான தன்­மை­யையே ஏற்­ப­டுத்தும். மாறாக பாரா­ளு­மன்ற தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு ஒரு வரு­டத்­திற்கு முன்னர் சுசந்­திரக் கட்­சி­யினர் அர­சி­லி­ருந்து வெளி­யே­று­வது தேர்தல் பிர­சா­ரத்­திற்கு சாத­க­மாக அமை­யலாம்.

ஆனால், தற்­போ­தைய நிலை­மையில் அது சாத்­தி­ய­மில்லை. ஏனெனில் இன்னும் மூன்­றரை வரு­டங்­க­ளுக்கு பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் சாத்­தி­ய­மில்லை. அதனால் சுதந்­திரக் கட்­சி­யினர் அர­சி­லி­ருந்து வெளி யே­று­வதும் சாத்­தி­ய­மற்­றது. அப்­படிப் பார்க்­கும்­போது மஹிந்த அணி­யினர் சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பதும் சாத்­தி­ய­மற்­ற­தா­கவே இருக்­கி­றது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே மஹிந்த அணி­யி­னரின் புதிய கட்சி பிர­வே­ச­மா­னது எவ்­வா­றான தாக்­கத்தை அர­சியல் களத்தில் ஏற்­ப­டுத்தும் என்­பதை அவ­தா­னிக்க வேண்­டி­யுள்­ளது. இலங்­கையின் அர­சியல் வர­லாற்றை பொறுத்­த­வ­ரையில் பிர­தான கட்­சி­க­ளி­லி­ருந்து விலகிச் சென்று புதிய கட்­சியை ஆரம்­பித்து வெற்றி பெற்ற பதி­வுகள் பெரி­தாக இல்லை.

1956 ஆம் ஆண்டு அப்­போ­தைய ஐக்­கிய தேசிய கட்­சி­யி­லி­ருந்து பண்­டா­ரா­நா­யக்க விலகி சென்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை ஆரம்­பித்தார். அதன் பின்னர் ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இலங்­கையின் இரு­பெரும் அர­சியல் துரு­வங்­க­ளாக உரு­வெ­டுத்­தன. அந்த சூழலில் ஐக்­கிய தேசியக் கட்­சியை விடுத்து பிர­தான கட்­சிகள் எதுவும் இல்­லா­த­தினால் சுதந்­திரக் கட்சி என்ற புதிய கட்­சியின் உரு­வாக்கம் 1956ஆம் ஆண்டு சாத்­தி­ய­மா­ன­துடன் வெற்றியும் பெற்­றது.

ஆனால், அதன்­பின்னர் நாட்டில் உரு­வாக்­கப்­பட்ட புதிய கட்­சிகள் அதா­வது பிர­தான கட்­சி­க­ளி­லி­ருந்து பிரிந்து உரு­வாக்­கப்­பட்ட புதிய கட்­சிகள் சோபிக்­க­வில்லை என்­பதே உண்­மை­யாகும். குறிப்­பாக ஐக்­கிய தேசிய கட்­சி­யி­லி­ருந்த பிர­ப­ல­மா­ன­வர்கள் கட்­சி­யி­லி­ருந்து விலகி புதிய கட்­சியை ஆரம்­பித்­த­போதும் அது சோபிக்­க­வில்லை. மாறாக பின்னர் அனை­வரும் பிர­தான கட்­சி­க­ளி­லேயே இணைந்து கொண்­டனர்.

அத்­துடன் சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து பல்­வேறு கட்­டங்­களில் பலர் வெளி­யேறி புதிய கட்­சி­களை ஆரம்­பித்­த­போதும் அந்த முயற்­சியும் கூட வெற்­றி­க­ர­மாக அமை­ய­வில்லை. அதற்கு அண்­மைய உதா­ர­ண­மாக சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து மங்­கள சம­ர­வீர மற்றும் ஸ்ரீபதி சூரி­யா­ரச்சி ஆகியோர் 2007ஆம் ஆண்டு நீக்­கப்­பட்ட பின்னர் அவர்கள் புதிய கட்­சியை ஆரம்­பித்­த­மையை கூறலாம்.

ஆனால், அவர்­களும் கட்­சியும் இறு­தியில் கலைக்­கப்­பட்­ட­தாக முடிவை கண்­டது. இறு­தி­யாக மங்­கள சம­ர­வீர பிர­தான கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணைந்து கொண்டார். இவ்­வாறு பிர­தான கட்­சி­க­ளுடன் சிறிய கட்­சிகள் இணைந்து பய­ணங்­களை முன்­னெ­டுக்­கும்­போது அவை வெற்­றி­ய­டை­கின்­றன. ஆனால், சிறிய கட்­சிகள் அல்­லது புதிய கட்­சிகள் தனித்துப் பய­ணிக்­கும்­போது அவை அந்­த­ளவு தூரம் வெற்­றியை பெற்றுக் கொடுத்­த­தாக அமை­ய­வில்லை.

தற்­போ­தைய அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவும் ஜன­நா­யக கட்சி என்ற பெயரில் கட்சி ஒன்­றை ஆரம்­பித்து செயற்­பட்டு வந்தார். தற்­போது அவரும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து கொண்­டுள்ளார். எனவே, இவ்­வா­றான அர­சியல் பின்­ன­ணியை கொண்ட சூழலில் மஹிந்த ராஜ­பக் ஷ தரப்­பினர் பிள்­ளையார் சுளி போட்­டுள்ள புதிய அர­சியல் கட்­சி­யா­னது எந்­த­ளவு தூரம் வெற்றி அடையும் என்­பது பொறுத்­தி­ருந்து பார்க்­கப்­ப­ட­வேண்­டிய விடயம்.

மஹிந்த அணி­யினர் ஆரம்­பத்­தி­லி­ருந்து புதிய கட்சி ஒன்றை ஆரம்­பிப்­பது தொடர்பில் தக­வல்கள் கசிந்­து­வந்­தன. ஆனால் கட்­சியை ஆரம்­பிப்­பதில் அந்­த­ளவு அவ­ச­ரத்தை காட்­ட­வில்லை. எனினும் தற்­போ­தைய அர­சியல் கள நிலை­மையை அவ­தா­னித்த மஹிந்த அணி­யினர் புதிய கட்­சியை ஆரம்­பித்­து­விட்­டனர்.

ஆனால் அது எந்­த­ள­வுக்கு வெற்­றி­க­ர­மாக அமையும் என்­பது பொறுத்­தி­ருந்து பார்க்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும். ஆனால் இந்த கட்சி ஆரம்­பிக்கும் செயற்­பா­டா­னது எந்­த­ளவு தூரம் அர­சியல் களத்தில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­ப­த­னையே அர­சியல் ஆர்­வ­லர்கள் எதிர்­பார்த்­துள்­ளனர்.

காரணம் தற்போதுதான் மஹிந்த அணியின் ஒரு பிரமுகர் புதிய ஸ்ரீலங்காபொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ளார். இதன் பின்னர் படிப்படியாக மஹிந்த அணியினர் புதிய கட்சியில் இணைந்துகொள்வார்கள். உடனடியாக அனைவரும் இணைந்து கொள்ளாமல் படிப்படியாக இணைந்துகொள்ளும் நிலைமை உருவாக் கப்படலாம். அதனூடாக ஒரு அரசியல் ஆர்வத்தை தூண்ட முயற்சிக்கலாம்.

எது எப்படியிருப்பினும் தேர்தல் என்று ஒன்று வரும்போது மக்கள் எடுக்கும் தீர்மானத்திலேயே அனைத்து விடயங்களும் தங்கியுள்ளன. மக்கள் எவ்வாறான முடிவை எடுப்பார்கள் என்பதனை பொறுத்தே நிலைமைகள் மாற்றமடையும். எனவே அரசியலில் காணப்படும் பரபரப்பு நிலையானது அடுத்துவரும் தேர்தல்களிலேயே தீர்க்கமானதாக அமையும்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-11-19#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.