Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர்களுக்காக முஸ்லிம் அரசியல் நலிவடைகிறது

Featured Replies

தலை­வர்­க­ளுக்­காக முஸ்லிம் அர­சியல் நலி­வ­டை­கி­றது

slmc-and-acmc-6bc9ca77c8a50317b8aa9457e585894e2e7775d3.jpg

 

இலங்கை முஸ்­லிம்கள் தங்­க­ளது அர­சியல் நட­வ­டிக்­கை­களை மீள­மைத்துக் கொள்­ள­வேண்­டிய கட்­டா­யத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளனர் . முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளி­னதும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னதும் அர­சியல் இலா­பங்­களை மாத்­திரம் கணக்கில் கொண்டே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இத­னால்தான், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடும்­போக்கு இன­வா­தி­க­ளி­னாலும், அதி­கா­ரத்தில் உள்­ள­வர்­க­ளி­னாலும் மேற்கொள்­ளப்­ப­டு­கின்ற அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ளையும், பிற­செ­யற்­பா­டு­க­ளையும் தடுத்து நிறுத்­து­வ­தற்கு முடி­யாத அவ­லத்தில் முஸ்லிம் சமூகம் இருக்­கின்­றது. எனவே, முஸ்லிம் தலை­வர்கள் தங்­க­ளது அரசியலை சமூ­கத்­திற்­கான அர­சி­ய­லாக மாற்ற வேண்டும். அப்­போ­துதான் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களிலுள்ள முடிச்­சுக்­களை அவிழ்க்க முடியும்.

நாட்டில் யார் ஆட்சி செய்­தாலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் மாற்­றங்­களை காண முடி­யா­துள்­ளது. இதற்கு முஸ்லிம் சமூ­கம்தான் கார­ண­மாகும். முஸ்­லிம்கள் தமது அர­சியல் நட­வ­டிக்­கை­களை சமூகம் என்ற பொதுச் சிந்­த­னை­யி­லி­ருந்து விடு­பட்டு கட்சி, தலைமை, தனி­நபர் அர­சியல் என்ற வட்­டங்­க­ளுக்குள் மேற் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனை முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தங்­க­ளுக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

முஸ்லிம் சமூகம் இந்த வட்­டங்­க­ளுக்குள் ஆட்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தனால் தாங்கள் நேசிக்­கின்­ற­வர்­களை உத்­த­மர்­க­ளாகக் காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அண்­மையில் அர­சியல் தலைவர் ஒருவர் அரபு நாடொன்­றுக்கு விஜயம் செய்­தி­ருந்தார். தற்­போ­தைய நிலையில் இந்த விஜயம் அவ­சி­யம்­தானா என்று முஸ்­லிம்­களில் பெரும்­பான்­மை­யினர் விமர்­சனம் செய்­தி­ருந்­தார்கள்.

இதனை பொறுத்துக் கொள்­ளாத அவரின் நேசர்கள் ஓ.ஐ.சி. மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­கா­கத்தான் அவர் சென்­றுள்ளார். அவர் நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அநியா­யங்­களை எடுத்­து­ரைப்பார் என்று சமூக இணை­யத்­த­ளங்­களில் பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டார்கள். இதன் மூல­மாக தாம் விரும்பும் அர­சியல் தலை­வ­ருக்கு எதி­ராக எழுப்­பப்­படும் விமர்­ச­னங்­களை பொய்யைக் கூறி­யா­வது சரி­யா­ன­தென்று நிரூ­பிக்க முயற்சி செய்­கின்­றனர் என்­பது தெரி­கி­றது.

முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு அம்­பாறை மாவட்­டத்தில் அமோக ஆத­ர­வுள்­ளது. இம்­மா­வட்ட முஸ்­லிம்கள் இக்­கட்­சியின் பின்னால் அணி திரண்­டி­ருப்­பது முஸ்லிம் சமூ­கத்­திற்­காக என்­ப­தனை விடவும், கட்­சிக்­கா­கவும், கட்­சியின் தலை­வ­ருக்­கா­க­வும்தான். என்றே சொல்ல வேண்டும். கட்சி அர­சியல் முஸ்லிம் காங்­கி­ரஸில் காணப்­பட்­டாலும் பெரும்­பாலும் தலைவர் சந்­தோ­சப்­பட வேண்­டு­மென்று நினைத்துச் செயற்­ப­டு­கின்­ற­வர்­கள்தான் உயர்­பீ­டத்தில் அதிகம் பேர் உள்­ளனர். அதே­போன்று ஆத­ர­வா­ளர்­களும் இவ்­வா­றுதான் உள்­ளார்கள். அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் அர­சியல் நட­வ­டிக்­கை­களும் தலை­மைத்­துவம் சார்ந்­தா­கவே உள்­ளன. தலை­வரை திருப்­தி­ப­டுத்திக் கொண்டு உயர்­பீட உறுப்­பி­னர்கள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆதலால், இவ்­வி­ரு­கட்­சி­க­ளி­னதும் அர­சியல் நட­வ­டிக்­கைகள் கட்­சியின் தலைவர் சார்ந்த அர­சி­ய­லா­கவே இருக்­கின்­றது.

இதேவேளை, ஏனைய கட்­சி­களை ஆத­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­ற­வர்­களை எடுத்துக் கொண்டால், இவர்­களில் பெரும்­பான்­மை­யினர் குறிப்­பாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­க­ளுடன் அல்­லது தலை­வர்­க­ளுடன் உள்ள வெறுப்­புக்­க­ளினால் ஐ.தே.க. மற்றும் சுதந்­திரக் கட்­சி­களின் வேட்­பா­ளர்­களை தேர்­தல்­களில் ஆத­ரித்துக் வரு­கின்­றார்கள்.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே உள்ள முஸ்­லிம்­களில் பெரும்­பா­லானோர் பரம்­ப­ரை­யாக ஐ.தே.கவை ஆத­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இன்­னு­மொரு தொகை­யினர் இதே போன்று சுதந்­திரக் கட்­சியை ஆத­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்கள் இக்­கட்­சி­களின் அர­சியல் கொள்­கைகள், சிறு­பான்­மை­யினர் பற்­றிய கொள்கை, முஸ்­லிம்­களைப் பற்­றிய கொள்கை போன்ற எத­னையும் கவ­னத்திற் கொள்­வ­தில்லை.

இவ்­வாறு முஸ்­லிம்­களின் அர­சியல் பலம், சமூக நலன்­களை புறந்­தள்ளி சிதறிக் காணப்­ப­டு­கின்­றது. இதனால், முஸ்­லிம்­க­ளுக்கு நாட்டில் சம­கா­லத்திற் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் நெருக்­கு­வா­ரங்­களை தடுப்­ப­தற்கு முடி­யா­துள்­ளது. இதே வேளை, முஸ்­லிம்கள் கட்­சிகள், தலை­வர்கள், மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ரி­னதும் நட­வ­டிக்­கைகள் சமூ­கத்­திற்கு பொருத்­த­மற்ற வகையில் இருப்­பதால் பல்­வேறு தரப்­பி­னரும் அதி­ருப்­தி­யுடன் இருக்­கின்­றனர். கட்­சி­க­ளி­னதும், தலை­வர்­க­ளி­னதும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னதும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு தாங்­கள்தான் பொறுப்பு என்­ப­தனை முஸ்­லிம்கள் புரிந்துகொள்ளல் வேண்டும். சமூக அர­சி­யலை புறந்­தள்ளி கட்சி, தலைவர், தனி­நபர் அர­சி­யலை தெரிவு செய்து அதற்கு முழு மூச்­சாகப் பாடு­பட்­டதை மறந்து விடு­கின்­றார்கள். தேர்தல் காலங்­களில் முஸ்லிம் சமூ­கத்­திற்­கான திட்­டங்­களை கொண்­டி­ருக்க வேண்­டு­மென்று கட்­சி­க­ளையும், தலை­வர்­க­ளையும், வேட்­பா­ளர்­க­ளையும் கேட்டுக் கொள்­ள­வில்லை. எத­னையும் கேட்­காமல் வாக்­க­ளித்­த­மையால் வெற்றி பெற்­ற­வர்கள் அர­சாங்­கத்­திடம் சமூ­கத்­திற்கு தேவை­யா­ன­வற்றைக் கேட்­காது தங்­க­ளது முக­வ­ரியை அலங்­க­ரித்துக் கொள்­வ­தற்­கா­கவும், சொகு­சாக வாழ்­வ­தற்கும் அமைச்சர் பத­வி­க­ளையும், தம்­மோடு இருப்­ப­வர்­க­ளுக்கு திணைக்­களத் தலைவர் பத­வி­க­ளையும், இணைப்­பாளர் பத­வி­க­ளையும், உற­வி­னர்­களின் வரு­மா­னத்­திற்­கான பத­வி­க­ளையும் பெற்றுக் கொள்­கின்­றார்கள். இதனால், சமூ­கத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்த வேண்­டு­மென்று துணி­வுடன் குரல் கொடுப்­ப­தற்கு கூனிக்­கு­றுகி நிற்­கின்­றார்கள். இப்­ப­டி­யாக ஒவ்­வொரு அர­சாங்­கத்தின் காலத்­திலும் முஸ்­லிம்­களின் அர­சியல் மலி­னப்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டி­ருப்­பது மட்­டு­மல்­லாது, ஒவ்­வொரு ஆட்­சிக்­கா­லத்தின் பின்­னரும் முஸ்­லிம்­களின் அர­சியல் பலம் குன்றிக் கொண்­டி­ருப்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. ஆயினும், முஸ்லிம் சமூ­கத்தில் உள்ள வாக்­கா­ளர்­களின் போக்­கு­களில் மாற்­றங்­களை காண முடி­ய­வில்லை.

கடந்த 2016.11.18 வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய நீதி அமைச்சர் விஜேதாச­ ரா­ஜ­பக் ஷ இலங்கை முஸ்­லிம்­களில் 32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பி­லுள்­ள­தாகத் தெரி­வித்தார். அத்­தோடு, வெளி­நா­டு­க­ளி­ருந்து இலங்­கைக்கு வருகை தரும் முஸ்லிம் விரி­வு­ரை­யா­ளர்கள் சர்­வ­தேச முஸ்லிம் பாட­சா­லை­களில் தீவி­ர­வா­தத்தை போதிப்­பா­கவும் தெரி­வித்­துள்ளார். நீதி அமைச்­சரின் இக்­க­ருத்­துக்­களை பாரா­ளு­மன்­றத்தில் எந்­த­வொரு முஸ்லிம் பிர­தி­நி­தியும், கட்­சியின் தலை­வரும் ஆட்­சே­பிக்­க­வில்லை. மௌன­மா­கவே இருந்­தார்கள்.

முஸ்லிம் மக்கள் மத்­தி­யிலும், முஸ்லிம் அமைப்­புக்­க­ளி­டை­யேயும் நீதி அமைச்­ச­ருக்கு எதி­ராக எழுந்த விமர்­ச­னங்­களின் பின்­னர்தான் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் ஒரு சிலர் வாய் திறந்­தார்கள். அதன் பின்னர் நடை­பெற்ற பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் தமது ஆட்­சே­ப­னை­களை முன்வைத்­தார்கள்.

இதேவேளை, நீதி அமைச்­சரின் பாரா­ளு­மன்ற உரை­யா­னது கடும்­போக்கு இன­வா­தி­களை உற்­சா­கப்­ப­டுத்­தி­ய­தா­கவே இருந்­த­தா­கவும், கண்டி பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்கள் நடை­பெற்­றன எனவும் மசூரா சபை வெளி­யிட்­டுள்ள கடித்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது..

இதற்கு முன்னர் அமைச்சர் தயா­க­மகே பொத்­துவில், கல்­முனை பிர­தே­சங்கள் பௌத்­தர்­க­ளுக்­கு­ரி­யது என்ற கருத்தை முன் வைத்­தி­ருந்தார். ஆதலால், கடந்த ஆட்­சியில் அமைச்­சர்கள் பௌத்த கடும்­போக்­கா­ளர்­க­ளுக்கு இரை தேடிக் கொடுத்­த­வர்­களைப் போன்­ற­வர்கள் இன்­றைய ஆட்­சி­யிலும் உள்­ளார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை பொறுப்­பற்ற வகையில் முன் வைத்­துள்ள இரு அமைச்­சர்­களும் ஐ.தே.கவின் உறுப்­பி­னர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஐ.தே.க ஆட்­சியை பிடிப்­பதில் பல தட­வைகள் சறுக்­கி­யுள்­ளது. இம்­முறை சிறு­பான்­மை­யி­னரின் அமோக ஆத­ர­வுடன் ஆட்­சியைப் பிடித்துக் கொண்­ட­வர்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக உள்ள முஸ்­லிம்­களின் மனங்­களை நோக­டித்து, பௌத்த கடும்­போக்­கா­ளர்­களை சந்­தோ­சப்­ப­டுத்தும் வகையில் கருத்­துக்­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இந்த பௌத்த கடும்­போக்­கா­ளர்கள் ஐ.தே.கவின் ஆட்சி அமையக் கூடா­தென்­பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்­ட­வர்கள் என்­பது குறிப்­பி­ட­தக்­கது.

இதே வேளை, முஸ்லிம் அர­சியல் தலைவர் ஒருவர் மாணிக்­க­மடு மாயக்­கல்­லி­ம­லையில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டாலும் முஸ்­லிம்கள் மத­மாற மாட்­டார்கள் என்று கூறி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது பொறுப்­பற்ற கருத்­தா­க­வுள்­ளது. முஸ்­லிம்கள் விட­யத்தில் அர­சாங்­கத்தில் உள்ள ஒரு சில அமைச்­சர்­களும், முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் பொறுப்­பற்ற வகையில் கருத்­துக்­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்லிம் சமூ­கத்தை கிள்ளுக் கீரை­யாக மதிப்­பீடு செய்­வ­தனை அனு­ம­திக்க முடி­யாது. முஸ்­லிம்­களை இந்­நி­லைக்கு பின்­னுக்குத் தள்ளிக் கொண்டு நிறுத்­தி­யுள்­ள­வர்­க­ளையும் மன்­னிக்­கவும் முடி­யாது.

இன்­றைய ஆட்­சியின் ஆரம்ப காலத்தில் பௌத்த கடும்­போக்­கு­வா­திகள் அமை­தி­யா­கவே இருந்­தார்கள். தமது கருத்­துக்­களை அடக்­கியே வாசித்­தார்கள். அமைச்­சர்­களும் சிறு­பான்­மை­யி­னரின் உணர்­வு­களை மதிக்கும் வகையில் நடந்து கொண்­டார்கள். ஆனால், கடந்த ஓரிரு மாதங்­க­ளாக அவர்கள் நாட்டின் பல பாகங்­க­ளிலும் கிளர்;தெழுந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஓரிரு அமைச்­சர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கருத்­துக்­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இது போல நாள­டைவில் கருத்துச் சுதந்­தி­ரமும் இல்­லாமல் போய்­வி­டுமா என்று தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே அபிப்­பி­ராயம் ஏற்­ப­டு­வது தவிர்க்க முடி­யா­தாகும். ஆயினும், அர­சாங்கம் இன­ரீ­தி­யான தீவிரப் போக்கை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருப்­பது சிறு­பான்­மை­யி­ன­ரி­டையே ஆறு­தலை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே இருக்­கின்­றது.

அந்த வகையில் இன­மோ­தல்­க­ளுக்கு எதி­ராக விசேட பொலிஸ் பிரிவு ஒன்று பொலிஸ் தலை­மை­ய­கத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதில் சிறு­பான்­மை­யினர் நம்­பிக்கை கொள்­வது என்­பது இதன் நட­வ­டிக்­கை­களைப் பொறுத்தே அமையும். ஏனேனில், ஒரு இனத்தை குறித்து வைத்து கோஷம் போடுதல், ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொள்­ளுதல், சேதங்­களை ஏற்­ப­டுத்தல், மதச் சுதந்­தி­ரத்தில் தடை­களை ஏற்­ப­டுத்­துதல் போன்­ற­வற்­றினை தடுப்­ப­தற்கு நாட்டில் போது­மான சட்­டங்கள் உள்­ளன.

ஆனால், அவற்றை பௌத்த கடும்­போக்­கு­வா­தி­க­ளுக்கு எதி­ராக பிர­யோ­கிப்­பதில் பொலிஸார் தயக்கம் காட்­டியே வந்­துள்­ளார்கள். பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு பொது மக்­க­ளுக்கு முன்­னி­லையில் அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்ட போதிலும் பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கு முடி­ய­வில்லை. ஆதலால், இன­மோ­தல்­க­ளுக்கு எதி­ராக விசேட பொலிஸ் பிரிவு எற்­ப­டுத்­தி­யி­ருந்­தாலும் அப்­பி­ரிவின் கைககள் கட்­டப்­பட்­ட­தா­கவோ, பார­பட்சம் காட்­டா­த­தா­கவோ இருக்க வேண்டும்.

 இப்­பி­ரிவு அமைக்­கப்­பட்­டதன் பின்­னரும் இன்­றைய நிலையே தொட­ரு­மாயின் பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களின் கைகள் இன்னும் அகல விரி­வனை தடுக்க முடி­யாது போய்­விடும்.

இதே வேளை, அர­சாங்­கத்தின் பேச்­சாளர் அமைச்சர் ராஜி­த­சே­னா­ரத்ன , நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்ஷ முஸ்­லிம்கள் குறித்து பாரா­ளு­மன்­றத்தில் முன் வைத்த கருத்­துக்கள் முற்­றிலும் தவ­றான தக­வ­லாகும் அதன்­படி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ முன் வைத்த தக­வ­லா­னது அவ­ரு­டைய தனிப்­பட்ட தக­வ­லாகும்.

 அது அர­சாங்­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ கருத்­தல்ல என்று தெரி­வித்­துள்ளார். பாரா­ளு­மன்­றத்தில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவர் வெளி­யிடும் தக­வல்கள் அவரின் தனிப்­பட்ட கருத்து என்று சொல்ல முடி­யாது. கடந்த அர­சாங்­கத்­திலும் ஒரு சில அமைச்­சர்கள் விரும்­பத்­த­காத கருத்­துக்­களை தெரி­வித்து அது தமது தனிப்­பட்ட கருத்து என்றே தெரி­வித்­தார்கள். அதே பாணி­லேயே இன்­றைய அர­சாங்­கத்தின் பேச்­சா­ளரும் தெரி­வித்­துள்ளார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-27#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.