Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போயஸ் கார்டன் ஜெ., வீட்டுக்கு விரைந்த தீபா..!

Featured Replies

போயஸ் கார்டன் ஜெ., வீட்டுக்கு விரைந்த தீபா..!

 
 

deepa

போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு ஜெ.தீபா வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனிப்பேரவை தொடங்கி நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான 'வேதா இல்லம்' தனக்குதான் சொந்தம் என தீபா கூறிவந்தார். இந்நிலையில், இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தார் தீபா. ஆனால், அங்கிருந்த தனியார் நிறுவன செக்யூரிட்டிகள் தீபாவை உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், 'தினகரன் ஆதரவாளர்கள் தங்களை 'வேதா இல்ல'த்துக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கின்றனர். எங்களை உள்ளே செல்லவிடாமல் அவர்கள் தடுக்கின்றனர்', என தீபா ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். இதுகுறித்து பேட்டியளித்த தீபா, 'என் சகோதரர் தீபக் அழைத்ததாலேயே போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தேன். ஜெயலலிதா படத்திற்கு பூஜை செய்வதற்காக தீபக்தான் என்னை அழைத்தார்', என கூறியுள்ளார். போயஸ் கார்டன் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/91947-jayalalitha-nephew-deepa-visits-poes-garden-house.html

  • தொடங்கியவர்

ஜெ., வீட்டு வாசலில் காத்திருக்கும் தீபா.. கணவர் மாதவனும் வந்ததால் பரபரப்பு!

 
 

madhavan

இன்று காலை திடீரென ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தார் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா. தினகரன் ஆதரவாளர்கள் தங்களை உள்ளே விட மறுக்கின்றனர் என தீபா ஆதரவாளர்கள் புகார் கூறினர். மேலும், இதுகுறித்து பேட்டியளித்த தீபா, 'என் சகோதரர் தீபக் அழைத்ததாலேயே போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தேன். ஜெயலலிதா படத்திற்கு பூஜை செய்வதற்காக தீபக்தான் என்னை அழைத்தார். அவர் உள்ளேதான் இருக்கிறார். அவரை வெளியே வரச்சொல்லுங்கள்.. நான் இங்கிருந்து செல்கிறேன்', என கூறியுள்ளார். உடனடியாக போயஸ் கார்டன் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

deepa

செய்தியாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், போயஸ் கார்டன் பகுதிக்கு வந்தார் தீபாவின் கணவர் மாதவன். தீபாவுடன் ஏற்பட்ட பிரச்னையால் தனிக்கட்சி தொடங்கிஇருந்தார் இவர். இந்நிலையில், இன்று காலை தீபா போயஸ் கார்டன் வந்த விவரம் தெரிந்து மாதவனும் அங்கு வந்துசேர்ந்தார். இருபிரிவினரின் ஆதரவாளர்கள் அங்கு குவிந்ததால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தனியார் தொலைகாட்சி ஒன்றின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை, போயஸ் கார்டன் இல்லத்தில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த பாதுகாவலர்கள் தாக்கியதால் பிரச்னை வெடித்துள்ளது. போயஸ் கார்டன் வேதா இல்லத்தின் வாயிலிலேயே தீபா காத்துக்கொண்டிருக்கிறார்.

http://www.vikatan.com/news/tamilnadu/91952-deepa-waiting-in-front-of-jayalalithas-house.html

  • தொடங்கியவர்

'சசிகலாவுடன் சேர்ந்து என் அத்தை ஜெயலலிதாவை கொன்றுவிட்டார் தீபக்' - தீபா அதிரடி குற்றச்சாட்டு

 
 

போயஸ் கார்டன் வீட்டிற்கு இன்று திடீரென வந்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. நீண்ட நேரம் அவர் வாயிலிலேயே காத்திருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் தீபா. அப்போது பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

deepa

அவர் பேசியதாவது, 'என் சகோதரர் தீபக் அழைத்ததாலேயே நான் இன்று காலை போயஸ் கார்டன் 'வேதா இல்ல'த்துக்கு வந்தேன். ஜெ., புகைப்படத்துக்கு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி தீபக் என்னை அழைத்தார். ஆனால், இன்று காலை நான் இங்கு வந்தபோது, கார்டன் இல்ல பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டேன். பின் அவர்கள் என்னையும், என்னுடன் வந்தவரையும் தாக்கினர். நான் அடித்து துரத்திவிடப்பட்டேன். இதை வீடியோ எடுத்த தனியார் தொலைகாட்சி செய்தியாளரையும் அவர்கள் தாக்கினர்.

deepa

சசிகலாவுடன் சேர்ந்துக்கொண்டு என் சகோதரர் தீபக் சூழ்ச்சி செய்கிறார். திட்டமிட்டே இன்று நான் வரவழைக்கப்பட்டேன். சசியுடன் சேர்ந்துக்கொண்டு என் அத்தை ஜெயலலிதாவை கொன்றுவிட்டார் தீபக். என்னையும், என் கணவரையும் கொல்ல சதி நடக்கிறது. பணத்திற்காக சசிகலாவுடன் கூட்டுசேர்ந்து என் அத்தையை கொன்றுவிட்டார் தீபக். என்னை தாக்கியவரை அடையாளம் காட்டத்தயார். இதுகுறித்து பிரதமரை சந்தித்து நான் புகார் அளிப்பேன்' என ஆவேசமாக பேட்டியளித்தார் தீபா. அப்போது, அவரின் கணவர் மாதவனும் உடனிருந்தார். 

deepa

ஆனால், இதைமறுத்துள்ள தீபாவின் சகோதரர் தீபக், 'எந்த பிரச்னையும் நடக்கவில்லை. நான் தீபாவை அழைத்தேன். அவர் வந்து ஜெ., படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு சென்றார்', என மிகவும் ஆசுவாசமாக பேசினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/91956-deepa-slams-her-brother-deepak.html

  • தொடங்கியவர்

சென்னை போயஸ் கார்டன் வீடு முன்... பரபரப்பு!

 
 
 
Tamil_News_large_1788436_318_219.jpg
 

சென்னை:ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்குள் நேற்று நுழைய முயன்ற அவரது அண்ணன் மகள் தீபாவை, சசிகலா ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தினர்.

அதேநேரத்தில் ''ஜெயலலிதாவை, சசிகலாவும், என் தம்பி தீபக்கும் சேர்ந்து சதி செய்து, பணத்திற்காக கொலை செய்து விட்டனர்,'' என தீபா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளதும், சர்ச்சையை கிளப்பியுள்ளது.சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு, சசிகலா குடும்பத்தினர் வசம் உள்ளது. 'போயஸ் கார்டன் வீடு, எங்களுக்கே சொந்தம்' என ஜெ., அண்ணன் மகன் தீபக் அறிவித்தார்.

அவரின் சகோதரியான தீபாவும், ஜெ., வீட்டுக்கு சொந்தம் கொண்டாடினார். 'எங்கள் அனுமதியின்றி, போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற முடியாது' என்றும் போர்க்கொடி உயர்த்தினார்.இந்நிலையில் நேற்று காலை 10:15 மணியளவில் தீபா தன் ஆதரவாளர்களுடன் போயஸ் கார்டன் சென்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தீபா சென்ற காரை மடக்கினர். உடனே, தீபா, 'தம்பி தீபக் அழைத்ததால் வந்தேன்' என்றார்.
இதையடுத்து, அவரை வீட்டு வளாகத்திற்குள் போலீசார் அனுமதித்தனர். அங்கிருந்த ஜெ., உருவப் படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்திய தீபா, திடீரென வீட்டிற்குள் செல்ல முயன்றார்.

ஆனால், அங்கிருந்த சசிகலாவின் தனியார் நிறுவன பாதுகாவலர்கள், தீபாவை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்தத் தகவல் அறிந்து, அங்கு ஓடி வந்த தீபக், 'வீட்டை விட்டு வெளியே போ...' என, சகோதரி தீபாவிடம் கூறினார்.

அப்போது, தீபாவுக்கும், தீபக்கிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.திடீரென தீபக் காரில் ஏறி சென்றார். அவரது காரை தீபா ஆதரவாளர்கள் வழி மறித்து தாக்கினர். பின், பாதுகாப்பு போலீசார், தீபக்கிற்கு பாதுகாப்பு கொடுத்து, அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், தீபாவின் கணவர் மாதவன் பேட்ரிக்கும் அங்கு வந்து சேர்ந்தார்.

இருவரும், தங்களை வீட்டிற்குள் அனுமதிக்கக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த சசிகலா ஆதரவாளர்கள், தீபாவையும், அவரது கணவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவத்தை வீடியோ எடுக்கச் சென்ற கேமரா மேன்களும் தாக்கப்பட்டனர்.இதையடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்திய தீபா உள்ளிட்டோரை, போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்த சம்பவத்தால், போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின், நிருபர்களிடம் தீபா கூறியதாவது:

என் அத்தையின் வீட்டை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது; திட்டமிட்டு என்னை, இங்கு வரவழைத்து விட்டனர்; என் தம்பி தீபக் தான், என்னை அழைத்தார். நான் வந்த போது சாலையில் போலீசார் ஒன்றும் செய்யவில்லை. வீட்டிற்குள் சென்ற போது, அங்கு குண்டர்களும், ஊழியர் ராஜம்மாளும் இருந்தனர்.குண்டர்கள் என்னை தாக்கினர்; அப்போது, வீடியோ எடுத்த, மீடியாக்காரர்கள் இருவரையும் அவர்கள் தாக்கினர். பயத்தில், என் கணவரை அழைத்தேன்.

சசிகலாவும், என் தம்பி தீபக்கும் சேர்ந்து, சதி செய்து, பணத்திற்காக என் அத்தையை கொன்று விட்டனர். இந்த விஷயத்தில், தீபக்கிற்கும் தண்டனை வழங்க வேண்டும். நான்கு நாட்களாக, போலீசார் மூலமாக எனக்கு, பல்வேறு தொந்தரவுகள் கொடுத்து வந்தனர்.

'தினகரன் பற்றி ஏன் பேசுகிறாய்' என, கேட்டனர். என் கணவரை கொலை செய்ய பார்க்கின்றனர். எனக்கும், என் கணவர் உயிருக்கும் ஆபத்து உள்ளது. நடந்த சம்பவம் பற்றி பிரதமரிடம் புகார் செய்வேன்; இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என, பிரதமரிடம் முறையிடுவேன், என்றார்.
 

 

தீபக்கை திட்டி தீர்த்த தீபா


போயஸ் கார்டன் வீட்டின் முன் தீபா - தீபக் இடையே நடந்த பரபரப்பான வாக்குவாத காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அதில் தீபக்கை பார்த்து, 'பொறுக்கி, ராஸ்கல்' என தீபா திட்டுகிறார். போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளியே வந்த வாலிபர் ஒருவரை அடையாளம் காட்டிய தீபா, 'இவர் தான் என்னை உள்ளே விடாமல் தடுத்தார்' என கூறும் காட்சியும், அதில் இடம் பெற்றுள்ளது.
 

 

யாரும் தடுக்கவில்லை: தீபக்


தீபாவின் குற்றச்சாட்டுகள் குறித்து, அவரின் தம்பி தீபக் கூறுகையில், ''போயஸ் கார்டன் வீடு, எனக்கும், தீபாவுக்கும் சொந்தமானது. யாரும் எங்களை தடுக்க முடியாது. தீபாவை, நான் தான் போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்தேன். தீபா வந்து, ஜெ., படத்திற்கு மரியாதை செலுத்தினார்; அவரை யாரும் தடுக்கவில்லை,'' என்றார்.
 

 

தீபா உயிருக்கு ஆபத்துபோலீசில் மாதவன் புகார்


தீபாவின் கணவர் மாதவன் பேட்ரிக், நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:போயஸ் கார்டன் இல்லத்தில், ஜெ., உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த தீபக் அழைத்தார். ஜெ., அண்ணன் மகளும், என் மனைவியுமான தீபா நேற்று காலை அங்கு சென்றார்; அவருடன் நானும் சென்றேன்.

அப்போது, எங்கள் இருவரையும் குண்டர்கள் தாக்கினர்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம்.
சசிகலா மற்றும் அவரது அக்கா மகன் தினகரன் ஆகியோரின் கூட்டு சதியே இதற்கு காரணம். எனக்கும், என் மனைவி உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும்; தாக்குதல் நடத்தியோர் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டு உள்ளது.
 

 

என்னை கொல்ல சதி: தீபா குற்றச்சாட்டு


சென்னை:''என்னை கொலை செய்ய சதி நடக்கிறது,'' என, ஜெ., அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.போயஸ் கார்டனில் இருந்து, தன் வீடு திரும்பிய, அவர் கூறியதாவது:
சசிகலாவுடன் தீபக் சேர்ந்ததில் இருந்து, அவருடன் பேசாமல் இருந்தேன். நேற்று
அதிகாலை 4:00 மணிக்கு திடீரென அலைபேசியில் அழைத்தார். போயஸ் தோட்டத்தில், அத்தைக்கு பூஜை செய்ய இருப்பதாகவும், அதில் நான் பங்கேற்க வேண்டும் என்றும், கூறினார். தீபக் சோகத்துடன் பேசி, கட்டாயப்படுத்தியதால், ஏற்றேன்.

நான் தனியாக வர வேண்டும் என்றார். 'அது முடியாது; என்னுடன் ராஜா வருவார்' என்றேன். போயஸ் கார்டன் சென்ற போது, வாசலில் யாரும் இல்லை; உள்ளே சென்றேன். அங்கு, அத்தையின் புகைப்படம் வீசப்பட்டிருந்தது. அதை எடுத்து, துாசி தட்டி வைத்தேன்.
அப்போது, அங்கு வந்த நிருபர்களை, காவலாளிகள் தாக்கினர். நாடகமாடி என்னை வரவழைத்த, தீபக் கடுமையாக நடந்து கொண்டார்.

அத்தையின் மரணம் குறித்து ஆதாரத்துடன் நிரூபிப்பேன். என்னை கொலை செய்ய சதி திட்டம் நடக்கிறது; அவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு தீபா கூறினார்.
 

 

தினகரன் உருவ பொம்மை எரிப்பு


தீபாவை, போயஸ் கார்டன் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் ஆதரவாளர்கள், தி.நகர், வெங்கட்நாராயணன் சாலை மற்றும் சிவஞானம் சாலை சந்திப்பில், சாலை மறியல் செய்தனர்; தினகரன் உருவ பொம்மையை எரித்தனர். இது தொடர்பாக, 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1788436

  • தொடங்கியவர்

' தோசை சாப்பிடற வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை!'  -தீபாவால் கொந்தளித்த தீபக்

போயஸ் கார்டனில் தீபா

போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், மகனும் மோதிக் கொண்ட காட்சிகள், அண்ணா தி.மு,க தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ' எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. மாதவனும் ராஜாவும் வந்ததால்தான் இவ்வளவு பிரச்னையும்' எனக் கொந்தளிக்கின்றனர் தீபக் தரப்பினர். 

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால், அப்போலோ மருத்துவமனையில் இறந்த தினத்தில் இருந்து, அவருடைய சொத்துக்கள் குறித்த சர்ச்சை எழுந்து கொண்டே இருக்கிறது. ' போயஸ் கார்டன் உள்பட அம்மாவின் சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும்' என்ற தொண்டர்களின் கோரிக்கையும் ஈடேறவில்லை. ஜெயலலிதா இறந்த நேரத்தில் தீபாவுக்கு இருந்த ஆதரவு, தற்போது பெரிதாக இல்லை. இந்நிலையில், நேற்று காலை போயஸ் தோட்டத்து இல்லத்துக்கு திடீரென வந்தார் தீபா. ' என் தம்பிதான் வரச் சொன்னான்' எனக் கூறிவிட்டு உள்ளே சென்றார். அவர் சென்ற பிறகு அவருடைய கணவர் மாதவன், பேரவை நிர்வாகி ராஜா உள்ளிட்டவர்களும் உள்ளே நுழைந்தனர். வீட்டுக்குள் இருந்த சசிகலா படங்களை அவர்கள் வெளியே கொண்டு வர, விவகாரம் வெடித்தது. தீபா தரப்புக்கும் கார்டன் பாதுகாவலர்களுக்கும் இடையே சண்டை மூண்டது.

ஒருகட்டத்தில், தீபாவின் கணவர் மாதவனுக்கும் பேரவை நிர்வாகி ராஜாவுக்கும் இடையில் மோதல் வெடித்தது. ' வீட்டில் இருந்த நகை, பணத்தையெல்லாம் திருடிக் கொண்டு ஓடிப் போனவன்தானே நீ' என மாதவனைப் பார்த்து அவர் கொதிக்க, ' நீ பொறுமையா இரு ராஜா' என சமாதானப்படுத்தினார் தீபா. ஒருகட்டத்தில், போலீஸ் துணை கமிஷனர் சரவணன் இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதன்பின்னர் பேட்டியளித்த தீபா, " சசிகலா குடும்பத்துடன் என் தம்பி தீபக் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கடந்த சில வருடங்களாகவே என் தம்பியோடு நான் பேசுவதில்லை. இன்று காலை அவன் வரச் சொன்னதால்தான் வந்தேன். நான் போனபோது, அங்கே போலீஸார் இல்லை. உள்ளே நுழைந்ததும், தீபக் சண்டை போட ஆரம்பித்தான். என்ன நடக்கிறது என யூகிப்பதற்குள் எங்களை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளிவிட்டு கதவை மூடிவிட்டார்கள். என் அத்தையைக் கொன்ற சசிகலாவுடன் சேர்ந்து கொண்டு தீபக் செயல்படுகிறார்' எனக் கொதிப்பை வெளிக்காட்டினார். 

தீபக்கார்டனில் நடந்த மோதல் குறித்த தீபக் தரப்பிடம் பேசினோம். " போயஸ் கார்டனுக்குள் நடந்த சண்டை திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை. நேற்று அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் கார்டனுக்குள் தீபா வந்துவிட்டார். வெளி உலகுக்கு சண்டை தெரிய ஆரம்பித்தது ஒன்பது மணிக்குப் பிறகுதான். கடந்த சில நாள்களாகவே, 'தீபாவிடம் பேச வேண்டும்' என தீபக் நினைத்தார். 'சொத்து விவகாரம் உள்பட பல விஷயங்களை உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம். மீடியாக்களிடம் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை' என்பதை தீபாவிடம் விளக்கமாவே கூறி வந்தார். நேற்று நடந்த சண்டை பற்றி தீபக்கிடம் நாங்கள் கேட்டபோது, ' அவர் என்னுடைய அக்காதானே. உட்கார்ந்து பேசி முடிவெடுக்கலாம் என நினைத்து, ' வரும்போது நீ மட்டும் வா. வேறு யாருக்கும் போன் போட்டு வரச் சொல்லாதே'ன்னு சொன்னேன். நல்லாத்தான் பேசிக்கிட்டு இருந்தோம். தோசை சாப்பிடச் சொல்லி, சாப்பிட வைத்தேன். அவரும் சாப்பிட்டார். இந்த ராஜாவால்தான் எல்லா பிரச்னையும். அவர் வராமல் இருந்திருந்தால் பிரச்னை வேறு மாதிரிப் போயிருக்கும்'  என வேதனைப்பட்டார்' என விவரித்தவர்கள்,

" ஜெயலலிதா இறந்த பிறகு, 'கட்சிக்குள் பதவி வேண்டும்' என ஆசைப்பட்டார் தீபக். அவரை எந்த இடத்திலும் தினகரன் ஆதரிக்கவில்லை. நடராசன் கட்டுப்பாட்டில் தீபக் இருப்பதால், அவருக்குக் கொடுக்கப்பட்ட சில வாக்குறுதிகளையும் தினகரன் நிறைவேற்றவில்லை. இதுகுறித்து, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து முறையிட்டார். 'தினகரனிடம் எதையும் கேட்டுப் பெறும் நிலையில் நான் இல்லை. தினகரனை துணைப் பொதுச் செயலாளராக ஏற்க முடியாது' எனவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் தீபக். நேரடியான மோதல் வலுத்தாலும், அவர் எந்தநேரமும் போயஸ் கார்டனுக்குள் வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆட்சிக்குள்ளும் மூன்று அணிகள் உருவாகிவிட்டன. ' இனி நாம் கேட்டது எதுவும் கிடைக்கப் போவதில்லை' என்பதை உணர்ந்த பிறகு, 'தீபாவுடன் இணைந்து கேட்டுப் பெறுவோம்' என்ற மனநிலைக்கு வந்தார். ஆனால், தீபா பின்னால் இருக்கும் சிலர் அவரைத் தவறாக வழிநடத்துகிறார்கள். மிகச் சாதாரணமாக அணுக வேண்டிய விஷயத்தை பூதாகரமாக்கிவிட்டார்கள். யாருக்கும் தகவல் சொல்லாமல் தீபா மட்டும் வந்திருந்தால், அனைத்தும் சுமூகமாக முடிந்திருக்கும்" என ஆதங்கப்பட்டனர். 

 

" ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துக்குப் பிறகு, அரசியல் பாதையில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் தீபா. பொதுமக்களும் முன்பு போல அவரைச் சந்திக்க வருவதில்லை. ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் அவர். திகார் சிறையில் இருந்த வந்த பிறகு, தினகரனை எம்எல்ஏ-க்களில் சிலர் தினம்தினம் சந்தித்து வந்தனர். தன்னை பொதுத் தலைவராக காட்டிக் கொள்ள தினகரன் முயற்சி செய்து வருகிறார். இதனை சசிகலா குடும்பத்தில் உள்ள சிலர் விரும்பவில்லை. தீபக்கை முன்வைத்து நேற்று நடந்த ரகளை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக உணர்கிறோம். தினகரன் ஆதிக்கத்தை முழுவதுமாக திசைதிருப்ப நடத்தப்பட்ட நாடகமாகவே உணர வேண்டியிருக்கிறது" என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர். 

http://www.vikatan.com/news/tamilnadu/92014-the-reason-behind-poes-garden-quarrel-among-deepa-deepak-and-madhavan.html

  • தொடங்கியவர்

“தனிக்கட்சி முதல் போயஸ் கார்டன் என்ட்ரி வரை.. ஜெ. தீபாவை இயக்குவது யார்...?”- தொண்டர்களின் மைண்ட் வாய்ஸ்

தீபா

மிழக அரசியல் களம், நாளொரு பரபரப்பும், பொழுதொரு குழப்பமுமாகவே சென்றுகொண்டிருக்கிறது. போயஸ்கார்டனுக்குச் சென்று ஜெ. தீபா அரசியல் பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட சில தினங்கள் கழித்து, அங்கு வந்த ஜெ.தீபா, தனது அத்தையைப் பார்க்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போதுதான், தீபா யார் என்றே பெரும்பாலான அ.தி.மு.க. தொண்டர்களுக்குத் தெரிய வந்தது. ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரங்கேறிய பல்வேறு அரசியல் சதுரங்க விளையாட்டுகளில் தீபாவும் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார்.

ஜெ. மரணம் அடைந்தவுடன், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக எதிர்த்து வந்த ஜெ. தீபா, ஓரிரு மாதங்கள், சற்றே அமைதியாக இருந்தார். 'ஜெ. பிறந்தநாளில் தனது முடிவை அறிவிப்பேன்' என்று கூறிவந்த நிலையில், பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தைத் தொடர்ந்து மௌனம் கலைத்த பின், ஜெ. நினைவிடம் வந்த தீபா, "ஓ.பி.எஸ்ஸூடன் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கி போல செயல்படுவேன்" என்று பேட்டியளித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமைந்ததும், இரட்டைக்குழல் துப்பாக்கியை மறந்துவிட்டு, "தனியாக எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை"-யைத் தொடங்கி, சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டார். இதற்கிடையே, தீபா பேரவையில் உறுப்பினராகச் சேர்வதற்கும், நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டதிலும் பெருந்தொகை கைமாறப்பட்டு, அந்தப் பணம் மோசடி செய்யப்பட்டதாக, தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுஒருபுறமிருக்க, தீபாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கணவர் மாதவன் பிரிந்து சென்றதாக தகவல் வெளியானது. பின்னர் திடீரென தீபா கணவர் மாதவன், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திராவிட முன்னேற்றக்கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். ஓ.பி.எஸ். தியானம் முதல் மாதவன் கட்சி தொடங்கியது வரை அனைத்துமே ஜெ. நினைவிடத்தில்தான் அரங்கேறியது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வேட்பாளராகப் போட்டியிட்ட தீபா, அதன் பின்னர் சிறிதுகாலம் ஊடகங்களுக்கு பேட்டி எதுவும் கொடுக்காமல் ஒதுங்கி இருந்ததுடன் மௌனம் காத்தார்.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார் அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். அவர், ஜாமீனில் வெளியே வரும்வரை, அமைதியாக இருந்த தீபா, ஞாயிற்றுக்கிழமை திடீரென்று, தனக்கு வேண்டிய ஊடக நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளரை அழைத்துக்கொண்டு போயஸ்கார்டன் வீட்டிற்குச் சென்று அரசியல் பரபரப்பை மீண்டும் ஏற்படுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க-வின் ஒரு பிரிவினர் ஜெயலலிதா மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணைகோரி வரும் நிலையில், எடப்பாடி தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், தங்களுக்கும் டி.டி.வி தினகரனுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால், 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், தினகரனைச் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நாடகங்களுக்கு மத்தியில், ஜெ.தீபாவும் போயஸ்கார்டன் சென்று, ஜெயலலிதாவின் வீடு தனக்குத்தான் சொந்தம் என்று கூறி, மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

போயஸ்கார்டன் வீட்டிற்கு தீபா சென்றதால் 'தள்ளு,முள்ளு' என்ற செய்திதான் நேற்று அனைத்து ஊடகங்களிலும் இடம்பெற்ற ஹாட் நியூஸானது.

தீபா

"இதில் என்னதான் நடந்தது?" என்று கார்டன்வட்டாரங்களைத் தொடர்புகொண்டு பேசினோம். "திடீரென்று தீபாவும், சிலரும் போயஸ்கார்டன் வந்தனர். தங்கள் கைகளில் சில ஃபைல்களை வைத்திருந்தனர். சகோதரர் தீபக்கைச் சந்திக்கச் செல்வதாகக் கூறிக் கொண்டு வீட்டிற்குள் செல்ல முயன்றனர். ஆனால், தீபக் அந்த நேரத்தில் அங்கு வரவில்லை. மேலும் வரச்சொல்லவில்லை என்று தீபக் மறுத்துள்ளார். அங்கு வந்தவர்களை வெளியேற்ற அங்கிருந்த போலீஸாரும், தனியார் நிறுவன பாதுகாவலர்களும் முயன்றனர். அப்போது, அங்குவந்த ஊடகத்துறையிருக்கும், பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எந்த அடிப்படையில் தீபா வந்தார்? அவரை பின்னணியில் இருந்து இயக்குவது யார் என்று தெரியவில்லை. பின்னர், அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளித்தார். இதுதான் நடந்தது" என்று தெரிவிக்கிறார்கள் கார்டன் தரப்பினர்.

"அரசியலில் இறங்கப்போவதாகத் தெரிவித்து, தனிக்கட்சி தொடங்கிய தீபா, பின்னர் ஏன் அதில் தீவிரம் காட்டவில்லை. ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ்ஸை சந்திக்கச் சென்றது ஏன்? அல்லது அவரை சந்திக்க அறிவுறுத்தியது யார்? ஓ.பி.எஸ்ஸூடன் இணைந்து செயல்படுவதாகக் கூறிவிட்டு, தனியாக பேரவையைத் தொடங்கியது ஏன்? ஆர்.கே.நகர்த் தொகுதியில், ஆர்வமின்றி பிரசாரம் செய்ததன் பின்னணி என்ன? கணவர் மாதவனுக்கும், அவருக்கும் உண்மையிலேயே கருத்துவேறுபாடு உள்ளதா?" இதுபோன்ற பல கேள்விகளுக்கு  இன்னமும் பதில் அளிக்கவில்லை.

தவிர, "சசிகலாவுடன் சேர்ந்து தனது சகோதரர் தீபக்கும் ஜெயலலிதாவை கொலை செய்து விட்டதாக இப்போது கூறும் தீபா, அதுதொடர்பாக இவ்வளவு காலம் ஏன் புகார் தெரிவிக்கவில்லை? ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு தனக்கு சொந்தம் என்று சொல்லும் தீபா, நீதிமன்றத்தில் அதுகுறித்து வழக்குத் தொடராதது ஏன்?" போன்ற கேள்விகளுக்கும் இதுவரை விடை இல்லை.

 

தமிழகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்கெனவே ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், தினகரன் என பிரிந்துள்ள சூழ்நிலையில், தீபா அவ்வப்போது இதுபோன்று 'ஸ்டன்ட்களை' நடத்துவது, தொண்டர்களை மேலும் குழப்புவதாகவே அமையும். தீபாவின் உண்மையான நோக்கம் என்ன? என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். தீபாவின் பின்னணியில் இருந்து, அவரை இயக்குவது யார்? என்ற சந்தேகம் அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்லாது, தமிழக மக்களுக்கும் தற்போது எழுந்துள்ளது. இதற்கெல்லாம் தீபா பதிலளிப்பாரா?

http://www.vikatan.com/news/coverstory/92015-what-is-the-plan-of-deepa.html

  • தொடங்கியவர்

'என் மனைவி தீபா உயிர் பற்றி தமிழக அரசுக்கு அக்கறையில்லையா?' - கொதிகொதிக்கும் மாதவன் #VikatanExclusive

தீபா மாதவன்

 'என் மனைவியின் உயிருக்கு ஆபத்து' என்று தீபாவின் கணவர் மாதவன், பிரதமர் மோடிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்தக்கடித்தத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன், தீபக் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது சொத்துக்கள் யாருக்கு என்பதில் சிக்கல் நீடித்துவருகிறது. ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்களாக அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் உள்ளனர். இதனால் அவர்களுக்குத்தான் சட்டப்படியான உரிமை இருந்தாலும், ஜெயலலிதாவின் சொத்துக்கள் சிலரது கட்டுப்பாட்டில் இருந்துவருகின்றன. இந்த சமயத்தில் தீபாவுக்கும் தீபக்குக்கும் சென்னை போயஸ் கார்டன் வீட்டுக்குள் நேற்று காலை கடும் மோதல் ஏற்பட்டது.  சசிகலாவுடன் சேர்ந்து ஜெயலலிதாவை தீபக் கொலை செய்துவிட்டதாக தீபா, பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், போயஸ் கார்டனில் நடந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர், வீடியோகிராபர் என இரண்டு பேர் மீதும் போயஸ் கார்டன் வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த தனியார் காவலர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துமீறி போயஸ் கார்டன் வீட்டுக்குள் செய்தியாளர்கள் நுழைந்தாக போயஸ் கார்டன் செக்யூரிட்டி தங்கையன் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை, தமிழக ஆளுநர், சென்னை போலீஸ் கமிஷனர், வேப்பேரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தீபாவின் கணவர் மாதவன் புகார் மனு கொடுத்துள்ளார். 

இதுகுறித்து மாதவனிடம் பேசினோம். "போயஸ் கார்டனில் என்னுடைய மனைவி தீபாவை சிலர் சிறைப்பிடித்திருப்பதாக அவர் எனக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனடியாக நான் அங்குச் சென்றேன். அப்போது, தீபா சாலையில் அமர்ந்திருந்தார். என்னிடம் நடந்த சம்பவத்தை முழுமையாக தெரிவித்தார். தீபக் அழைத்ததின்பேரில் தீபா போயஸ் கார்டனுக்குச் சென்றுள்ளார். தீபக் அழைக்கும்போதே வரவில்லை என்று தீபா சொல்லியிருக்கிறார். மேலும், அங்கு வந்தால் கதவு பூட்டப்பட்டு இருக்கும், எனக்கு மரியாதை இருக்காது என்று தெரிவித்துள்ளார். அதற்கு தீபக், எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதன்பேரில் தீபா, அங்குச் சென்று ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மலர் தூவி உள்ளார். அப்போது, மீடியாவைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். திடீரென மீடியாவைச் சேர்ந்த இருவரை அங்குள்ளவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தீபாவும் தாக்கப்பட்டுள்ளார்.

மாதவன்

இதனால் மீடியாவைச் சேர்ந்தவர்கள் போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து தீபாவும் வந்துள்ளார்.

தீபாவுக்கு ஆதரவாக நான் பேசியதும் தீபக் ஆதரவாளர்கள் என்னைத் தாக்கினர். உடனடியாக போலீஸார் என்னையும் என் மனைவியையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர். அப்போது, தீபா, என்னுடைய காரில் ஏற முயன்றார். அதை போலீஸார் தடுத்துவிட்டனர். என்னையும் என் மனைவியையும் சேர விடாமல் போலீஸார் தடுப்பதற்கான காரணம் தெரியவில்லை. 
போலீஸார் மீது நம்பிக்கையில்லாததால்தான் பிரதமர், மத்திய உள்துறை, தமிழக ஆளுநருக்கு புகார் மனு அனுப்பியுள்ளேன். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பிரதமரை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளேன். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு எனக்கு பல வகையில் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது, எனக்கும், மனைவி தீபாவுக்கும், சசிகலா, டி.டி.வி.தினகரன், தீபக் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுவதே இதற்கெல்லாம் காரணம். போயஸ் கார்டன் சம்பவத்தில் செய்தியாளர்கள், தனியார் காவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் போலீஸார், நான் கொடுத்த புகாருக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுத்தபோதும் அலட்சியமாக போலீஸார் செயல்படுகின்றனர். எங்கள் உயிர் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது"என்றார் ஆதங்கத்துடன். 

http://www.vikatan.com/news/tamilnadu/92026-tamilnadu-government-should-give-full-protection-to-my-wife-deepa-says-madhavan.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.