Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனு!

Featured Replies

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனு!

 

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். அதில், 'மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ttv dinakaran
 

டி.டி.வி. தினகரனுக்கு நேற்றுவரை 18 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்திருந்த நிலையில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ உமாமகேஸ்வரி இன்று காலை தினகரனைச் சந்தித்து ஆதரவளித்தார்.  எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இன்று காலை ஆலோசனை நடத்தினர். 

அதன் பின்னர் முத்தையா, செந்தில் பாலாஜி, பழனியப்பன், கோதண்டபாணி, ரங்கசாமி, கென்னடி மாரியப்பன்,  தங்க தமிழ்ச்செல்வன், அரூர் முருகன், தங்கதுரை, பாலசுப்ரமணியன், வெற்றிவேல், ஜக்கையன், ஜெயந்தி, ஏழுமலை, சுந்தர்ராஜ், கதிர்காமு, உமாமகேஸ்வரி உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ-க்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். அதில், மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/99902-ttv-dinakaran-team-meets-tamilnadu-governor.html

 

 

 

சசிகலாவை நீக்கும் முன்பே ஆட்சியை கவிழ்த்துவிடுவோம்'- வரிந்துக்கட்டும் 19 எம்.எல்.ஏ.க்கள்

 
 

ttv dinakaran

அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்துவருகின்றன. இரு துருவங்களாக இயங்கிவந்த எடப்பாடி கோஷ்டியும் ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியும் இணைந்துவிட்டனர். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்கள். அதையடுத்து, இன்று இரவு தினகரனும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் ஜெயலலிதா சமாதிக்கு மரியாதை செலுத்த வருகிறார்கள். 
முக்கியமான முடிவுகளை அப்போது அவர் அறிவிக்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்லுகிறார்கள். தமிழக துணை முதல்வர் பதவியில் அமர்ந்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வில் சபாநாயகரை தவிர 134 எம்.எல்.ஏ.கள் இருக்கிறார்கள். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ-க்கள் தேவை. ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியில் 10 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். தினகரன் கோஷ்டியில் 18 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக அவர்கள் தரப்பில் சொல்கிறார்கள். எடப்பாடி கோஷ்டியில் 99 எம்.எல்.ஏ-க்கள் இருக்கலாம் என்பது ஒரு கணக்கு.

இப்படியிருக்க... அண்மையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீடியாக்களிடம் பேசும்போது, 'ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் எங்களுடன் சேர்ந்தால், மேற்கொண்டு இரண்டு எம்.எல்.ஏ-க்கள் மெஜாரிட்டி காட்ட தேவைப்படுவார்கள். அதுதான்... பாதாளம் வரை பாயுமே' என்று பொடி வைத்து முதலில் பேசிவிட்டு உஷாரானார்.  பாசம் பாதளம் வரை பாயுமே என்று சமாளித்தார். ஆக, அமைச்சர் சீனிவாசன் சொல்கிறபடி, எடப்பாடி கோஷ்டியில் பெரும்பான்மை எம்.எல்.ஏ-கள் இல்லை. மைனாரிட்டி அரசு என்பது தெளிவாகிறது என்று எதிர்க்கட்சியினர் குரல்கொடுத்தனர். இந்த நிலையில், எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே அணியில் சேர்ந்தும், விரைவில் பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் நீக்குவோம் என்றார் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம். இவரின் இந்தப் பேச்சு தினகரன் கோஷ்டியினருக்கு கடுங்கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. சசிகலாவை நீக்க விட்டால்தானே... அதற்கு முன்பே, ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என்று எச்சரித்துள்ளனர். எடப்பாடி கோஷ்டியினருக்கு தங்களது எதிர்ப்பை காட்டும் வகையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-கள் நேரில் இன்று சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்பட்டுகிறது. முடிவெடுக்கவேண்டிய இடத்தில் உள்ள ஆளுநர் அடுத்த என்ன செய்வார் என்பதுதான் சஸ்பென்ஸாக இருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/99904-dinakaran-team-trying-to-dissolve-tamilnadu-government.html

  • தொடங்கியவர்

’முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்’ - எம்.எல்.ஏ-க்கள் கடிதத்தின் முழு விவரம்

 
 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்துள்ளனர். 

21017590_1493049570741637_1056324708_o_1


ஆளுநர் மாளிகைக்கு வந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். அந்தக் கடிதத்தில், ''ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த பிப்ரவரி மாதத்தில் நானும், 121 எம்.எல்.ஏ-க்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து கடிதம் கொடுத்திருந்தோம். அதேபோல, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு ஆதரவாக நான் வாக்களித்தேன். 

ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுமீது கொஞ்சம் கொஞ்சமாக நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் உள்ளிட்டவையால் நம்பிக்கை இழந்துவிட்டேன். கடந்த நான்கு மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தரப்பினரும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதால், அது எங்கள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. தற்போதுள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அரசியல் சாசனம் அளித்துள்ள விதிமுறைகளின்படி செயல்பட முடியாது. 

Rao_12553.jpg

 


ஆகஸ்ட் முதல் வாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துகிடப்பதாகக் கூறினார். பெரும்பாலான ஊடகங்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டியை ஒளிபரப்பின. இந்தநிலையில், இரண்டு வார கால இடைவெளியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தைத் தனது அமைச்சரவையில் இணைத்துள்ளார். இதிலிருந்து, ஊழல் குற்றச்சாட்டை முதலமைச்சர் பதவியைப் பயன்படுத்தி மறைக்கவும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யவும் என்பது வெளிப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையைத் தமிழக மக்களும் இழந்துவிட்டனர். எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை நான் திரும்பப் பெறுகிறேன். அதேநேரம், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்றதொரு சூழல் கர்நாடகாவின் முதலமைச்சராக எடியூரப்பா இருந்தபோது, கடந்த 2011-ல் ஏற்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினரான நான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுகிறேன். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’' என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.     
 

http://www.vikatan.com/news/tamilnadu/99927-ttv-dinakaran-supporting-mlas-withdraw-their-support-for-eps.html

  • தொடங்கியவர்

சட்டசபை கூடுமா? எடப்பாடி அரசு கவிழுமா ?

 

 

சென்னை: தினகரன் தரப்பினர், முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்து விட்டதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளதை அடுத்து சட்டசபை கூடுமா ? அல்லது சமரசம் ஏற்படுமா, எதிர்கட்சியான திமுக என்ன செய்ய போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக சட்டசபையில் எம்.எல்ஏ.,க்கள் மொத்த உறுப்பினர்கள்; 234 ,அ.தி.மு.க., கூட்டணி மொத்தம் - 135, இதில் எடப்பாடி அணி - 116 , தினகரன் அணி- 19 , தி.மு.க., - 89 , காங்கிரஸ்- 8 , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 1 என்ற நிலையில் உள்ளனர். பெரும்பான்மை நிரூபிக்க 117 உறுப்பினர்கள்தேவை. இதில் அதிமுவிடம் உள்ள கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் என்ன நிலையில் உள்ளனர் என்பது வெளிப்படையாக தெரியவில்லை.
சட்டசபை கூடுமா ? எடப்பாடி அரசு கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

gallerye_140225567_1839359.jpg

 

gallerye_140232619_1839359.jpg

gallerye_140237501_1839359.jpg

http://www.dinamalar.com/news_detail.asp?id=1839359

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிரியாணி, வஞ்சிர மீன் வறுவல்! - தனி கவனிப்பில் தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள்

 

TTV_MLAs_14146.jpg

ஆளுநரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலில் இன்று மதிய உணவை சாப்பிட்டனர். அவர்களில் பலர் பிரியாணி, வஞ்சிர மீன் வறுவலை விரும்பிச் சாப்பிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் அதிகாரப் போட்டி ஏற்பட்டது. சசிகலா, பொதுச் செயலாளரானார். அடுத்து, முதல்வராக காய் நகர்த்தப்பட்டது. அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனால், முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலா மீது பகிரங்கக் குற்றச்சாட்டைத் தெரிவித்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவரது தலைமையில் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அணி வகுத்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியை அமைக்க அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏ-க்களை சசிகலா குடும்பத்தினர் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைத்தனர். அதன்பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது, சசிகலா குடும்பத்தினருக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சசிகலா அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால், சசிகலா அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனி அணியாக உருவெடுத்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. தற்போது, இவர்களுக்கு எதிராக சசிகலா அணி செயல்படத் தொடங்கியுள்ளது.

ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். அதன்பிறகு, ஆலோசனை நடத்திய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் கார்கள் சென்னைக் கிழக்குக் கடற்கரைச் சாலையை நோக்கிப் பயணிப்பதாகத் தகவல் வெளியானது.

இதையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஒருவரிடம் செல்போனில் பேசினோம். "எங்கள் அனைவரையும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணிக்க ஆர்டர் வந்துள்ளது. தற்போது மதிய உணவு, மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் சாப்பிட்டுள்ளோம். அடுத்த உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்" என்றார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து அடுத்தகட்ட ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிலர் தெரிவித்தனர். தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரம் பேசி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், தங்கள் பக்கம் இழுக்க வாய்ப்புள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிரியாணி... வஞ்சிர மீன்

 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும், அவரது ஆதரவாளர்களும் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மதிய உணவு சாப்பிட்டனர். அதில் பெரும்பாலானவர்கள் பிரியாணியும், வஞ்சிர மீன் வறுவலையும் விரும்பிச் சாப்பிட்டுள்ளனர். மற்றவர்கள், தங்கள் இஷ்டம்போல சாப்பிட்டுள்ளனர். பில் தொகை லட்சத்தைத் தொட்டதாம்.

http://www.vikatan.com/news/tamilnadu/99957-ttv-dinakaran-team-mlas-moves-towards-ecr.html

  • தொடங்கியவர்

தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் சிறை வைக்கப்படும் தனியார் விடுதி இதுதான்!

 
 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்தது. இதற்கிடையில் திடீர் திருப்பமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீசெல்வத்தின் அணியும் ஒன்றாக இணைந்தது. இந்த அணிகள் இணைப்பால் அதிர்ச்சியடைந்த டி.டி.வி தினகரன் தரப்பு, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மெஜாரிட்டியை நிரூபிக்கச் சொல்லி எடப்பாடி பழனிசாமி உத்தரவிடுமாறு மனு அளித்திருந்தனர். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் அவர்கள் கடிதம் அளித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஆட்சிக்குச் சிக்கல் என்பதால் டி.டி.வி ஆதரவு எம்எல்ஏ-க்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டது எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் அணி.

புதுச்சேரி

இதையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேரையும் கூவத்தூர் பாணியில், புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி-கடற்கரை சாலையில் அரியாங்குப்பத்தையடுத்து, கடற்கரை கிராமமான சின்ன வீராம்பட்டினத்திலுள்ள ‘விண்ட் ஃப்ளவர்’ (Wind flower) என்ற கடற்கரையோர சொகுசு விடுதியில் தங்க வைக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த விடுதியின் முன்பக்க கேட் மூடப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இன்னும் சிறிது நேரத்தில், விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் தங்க உள்ளனர். ரிசார்ட்டில், மொத்தம் 20 அறைகள் தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

http://www.vikatan.com/news/tamilnadu/99991-dinakaran-support-mlas-to-stay-in-wind-flower-resort-in-pudhucherry.html

  • தொடங்கியவர்

புதுச்சேரிக்கு ஓய்வெடுக்க வந்துள்ளோம்; தினகரனும் வந்து தங்குவார்: தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ பேட்டி

 

 
tamil

புதுச்சேரிக்கு ஓய்வெடுக்க வந்துள்ளோம். தினகரனும் வந்து தங்குவார் என்று தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி - கடலூர் சாலைக்கு அருகே, சின்ன வீராம்பட்டினரம் கிராமத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு வருகை தந்துள்ளனர்.

இது குறித்து தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இன்றைய தினம் ஆளுநரை சந்தித்து முதல்வரை மாற்ற வேண்டும் என மனு கொடுத்தோம். புதுச்சேரிக்கு ஓய்வு எடுப்பதற்காக வந்துள்ளோம். எங்களுடன் துணை பொதுச் செயலாளர் தினகரனும் வந்து தங்குவார். எதிரணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் எங்கள் அணியில் வந்து சேருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் நல்ல முடிவு வரும்'' என்றார்.

எம்.எல்.ஏ பார்த்திபன் செய்தியாளர்களிடன் கூறுகையில், ''பாதுகாப்பு கருதியே புதுச்சேரிக்கு வந்திருக்கிறோம். டிடிவி தினகரனும் இங்கு வர இருக்கிறார். எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை கூடும்'' என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19540658.ece?homepage=true

  • தொடங்கியவர்
 
 
பழனிசாமி தினகரன் 19 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு... வாபஸ்!

 

  • gallerye_220025714_1839418.jpg

 

சென்னை, :'முதல்வர் பழனிசாமி மீது, அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், அவருக்கு அளித்து வந்த ஆதரவை, வாபஸ் பெறுகிறோம்' என, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், கவர்னர் வித்யாசாகர் ராவிடம், நேற்று கடிதம் அளித்தனர். அதன்பின், சென்னையில், தினகரன் வீட்டில் கூடி, பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்வராக்குவது குறித்து ஆலோசித்தனர். இந்த தகவல் தெரிந்ததும், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, கோடிகளை கொடுத்து வளைக்க, ஆளும் தரப்பு தீவிரமாகி உள்ளது.


பலத்தை நிரூபிக்க, இரு தரப்பினரும், தில்லாலங்கடி வேலைகளில் இறங்கியுள்ளதால், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேரும், சகல கவனிப்புகளுடன், புதுச்சேரி கடற்கரை சொகுசு விடுதியில், தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.சென்னையில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், நேற்று காலை, 10:00 மணிக்கு, கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.
அங்கு கவர்னர், வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தனித்தனியே கடிதம் அளித்தனர்.
 

அதிருப்தி



கடிதத்தில், அவர்கள் கூறியுள்ளதாவது:பிப்ரவரியில், முதல்வர் பழனிசாமி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து, நாங்கள் கையெழுத்திட்டு, தங்களிடம் கடிதம் வழங்கினோம். பின், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தபோது, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக ஓட்டளித்தோம்.தற்போது, முதல்வர் பழனிசாமி மீது, அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர், தன் அதிகாரத்தை, முறைகேடாக பயன்படுத்துகிறார்; பாரபட்சமாக நடந்து கொள்கிறார்; அரசு இயந்திரத்தை,

தவறாக பயன்படுத்துகிறார். அதனால், ஊழல் அதிகரித்துள்ளது. அவர் ஊழல் செய்வதாகவும், ஊழலுக்கு துணை போவதாகவும், பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுவது, எங்கள் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது.ஆகஸ்ட் முதல் வாரத்தில், ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், 'தற்போதைய ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது' என, குற்றம் சாட்டினார். இது, முதல்வர் பழனிசாமி அரசு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. தற்போது, அவரை தன் அமைச்சரவையில் சேர்த்து, துணை முதல்வர் பதவியை, பழனிசாமி வழங்கி உள்ளார். இது, முதல்வர் பாரபட்சமாக செயல்படுவதையும், அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும்,
ஊழலுக்கு துணை போவதையும் காட்டுகிறது.அதனால், முதல்வர்பழனிசாமி, தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். எங்களுக்கும், அவர் மீது நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது. எனவே, அவருக்கு அளித்த ஆதரவை, திரும்ப பெறுகிறோம்.அதேநேரத்தில், நாங்கள், அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராகவும், அக்கட்சி, எம்.எல்.ஏ.,வாகவும் தொடர்கிறோம். இந்த விஷயத்தில் தலையிட்டு, சட்டப்படியான நடவடிக்கைகளை, நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 

பெரும்பான்மை



சட்டசபையில், அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில், 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்து உள்ளதால், அரசுக்கு பெரும்பான்மை வாபஸ்இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும் நிலை ஏற்படுமானால், பழனிசாமி அரசுக்கு சிக்கல் ஏற்படும்.எனவே, தினகரன் பக்கம் நிற்கும் எம்.எல்.ஏ.,க்களை, கோடிகளில்

 

விலை பேச, ஆளும் தரப்பு வலை விரித்துள்ளது. அது தொடர்பாக, ரகசிய பேரம் நடப்பதை அறிந்த தினகரன், தன் ஆதரவாளர்களை, புதுச்சேரிக்கு கடத்தி விட்டார். அங்குள்ள, 'விண்ட் ப்ளவர்' சொகுசு விடுதியில், 19 பேரும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்காக, அங்கு, 30 அறைகள், 'புக்' செய்யப்பட்டு உள்ளன.இதற்கிடையில், பழனிசாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, தலித் சமூகத்தை சேர்ந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவரை முதல்வராக்க, தினகரன் தரப்பு திட்டம்தீட்டியுள்ளது. அதன் வாயிலாக, கட்சியில் கணிசமாக உள்ள, தலித் சமூக எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பக்கம் வந்து விடுவர் என, தினகரன் தரப்பினர் கருதுகின்றனர்.இது குறித்து, சென்னையில், நேற்று ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தி உள்ளார். அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, சசிகலா தம்பி திவாகரன் கூறுகையில், ''தற்போது சபாநாயகராக உள்ள, தலித் சமூகத்தை சேர்ந்த தனபாலை, முதல்வர் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும்,'' என, கூறியுள்ளார்.

ஆட்சி கவிழ வாய்ப்பு குறைவு!


தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை, திரும்பப் பெறுவதாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்திருந்தாலும், ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாக, சட்டசபை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:எம்.எல்.ஏ.,க்கள் அளித்த கடிதம் அடிப்படையில், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு கவர்னர் உத்தரவிடலாம்.அவ்வாறு உத்தரவிட்டால், சட்டசபை கூட்டப்படும். கூட்டத்தில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால், குறைந்தபட்சம், 24 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரித்து கையெழுத்திட வேண்டும்.
தற்போது, தினகரனிடம், 19 எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் உள்ளனர். 24 பேர் முன்மொழியாவிட்டால், தீர்மானம் தள்ளுபடி செய்யப்படுவதாக, சபாநாயகர் அறிவித்து விடுவார். எனவே, தி.மு.க.,வினர் ஆதரித்தால் மட்டுமே, முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும்.மேலும், எம்.எல்.ஏ.,க்கள் அளித்துள்ளகடிதத்தில், முதல்வர் பழனிசாமி மீது, நம்பிக்கை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர். இது, முரண்பாடாக உள்ளது. எனவே, அந்த கடிதத்தை, கவர்னர் ஏற்க மறுக்கவும் வாய்ப்புள்ளது.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர விரும்பினால், சபாநாயகரிடம் கடிதம் அளிக்க வேண்டும். சட்டசபை நடைபெறும் போது தான், அதை சபாநாயகர்
எடுத்துக் கொள்வார். இப்போதைக்கு, சட்டசபை கூட வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1839418

  • தொடங்கியவர்

வெளிநாட்டு வகை மீன்கள், இறால்களுடன் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு விருந்து

 

 
cooljpg
Fish-01jpg

வெளிநாட்டு மீன், இறால் வகைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன - படம்:எம்.சாம்ராஜ்.

வெளிநாட்டு வகை மீன்கள், இறால்களுடன் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுக்கு விருந்து தயாராகியுள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பாதுகாப்பு கருதியும், வேறு அணிக்கு மாறிவிடக்கூடாது என்பதற்காகவும் புதுச்சேரி அருகே உள்ள சின்ன வீராம்பட்டினம் கிராமத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ரிசார்ட்டுக்கு வந்ததவர்கள். இன்று காலை எழுந்து ரிசார்ட் அருகே உள்ள கடற்கரையில் நடைப் பயிற்சி மேற்கொண்டனர். ரிசார்ட்டிலேயே காலை உணவை முடித்த அவர்கள், மதிய உணவிற்காக வெளிநாட்டு வகை மீன்களை வெளியில் இருந்து ரிசார்ட்டிற்கு வரவழைத்துள்ளனர். வியட்நாம் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாஷா பிஷ் மற்றும் வஞ்சிரம், இறால் வகைகளை வரவழைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாப்பிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19545052.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

புதுச்சேரி ரிசார்ட்டில் போர்க்கொடி தூக்கும் அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ-க்கள்!

புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தினகரன் ஆதரவு இரண்டு பெண் எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைந்தது. இந்த இணைப்பால் டி.டி.வி.தினகரன் தரப்பு கடும் அதிர்ச்சியடைந்தது ஒருபுறம் இருக்க, தமிழக அரசியலிலும் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. மூன்று தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை சந்தித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்றும் மனு அளித்து பரபரப்பைக் கூட்டினார்.

புதுச்சேரி

 

இந்த விவகாரம் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியதால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கூவத்தூர் பாணியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் புதுச்சேரி தனியார் ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில்தான் ரிசார்ட்டில் இருக்கும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ உமா மகேஸ்வரியும், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபனும் போர்க்கொடி தூக்கியிருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகி இருக்கிறது. “கவர்னர் மாளிகையில வாபஸ் மனுவில் கையெழுத்து வாங்கிட்டு அப்படியே அனுப்பிடுவாங்கனு பார்த்தோம். ஆனால் எதுவுமே சொல்லாம நேரா இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. எங்களாள இங்க இருக்க முடியாது. உடனே நாங்க வீட்டுக்குப் போகணும்” என்று பேசினார்களாம், அந்த இரண்டு பெண் எம்.எல்.ஏ-க்களும். அதற்கு மற்ற எம்.எல்.ஏ-க்கள், 'தினகரன் வருவதாக சொல்லியிருக்கிறார். அவர் வந்ததும் இதுபற்றிப் பேசி முடிவெடுக்கலாம்' என்று சமாதானப்படுத்தி வருகிறார்களாம். இது ஒருபுறம் இருக்க ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்பு, 19 எம்.எல்.ஏ-க்களின் வீடுகளிலும் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டார்கள் என்றும் அதனால்தான் ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்களின் முடிவு மாறத் தொடங்கியிருக்கிறது என்றும் பின்னணி பாடுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/100196-admk-women-mlas-are-furious-in-puducherry-resort.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.