Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புற்றுநோய் பற்றிய தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காபி ஒரு கோப்பை, புற்று நோய்க்கு குட்பை!

மார்ச் 05, 2007

சென்னை: தினசரி காஃபி அருந்துவோருக்கு புற்று நோய், சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஒரு காலத்தில் காபி குடிப்பது உடல் நலனுக்குத் தீங்கானது என்று கருதப்பட்டது. காபி அருந்தினால் புத்துணர்ச்சி ஏற்பட்டாலும் அது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு புதிய ஆய்வின்படி காஃபி சாப்பிட்டால் பல்வேறு வகையான புற்று நோய், சர்க்கரை வியாதி ஆகியவை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

புற்று நோய்க் கட்டிகள், வயிற்று புற்றுநோய், ஈரல் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுவது குறையுமாம். மும்பை, பாபா அணு ஆய்வு மையத்தின், பயோ மெடிக்கல் பிரிவின் முன்னாள் இயக்குநரும், பிரபல கதிரியிக்க ஆய்வாளருமான பி.சி.கேசவன் இதைத் தெரிவித்துள்ளார்.

தற்போது எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் கேசவன் இதுகுறித்துக் கூறுகையில், காஃபியில் உள்ள காஃபின், புற்று நோய், சர்க்கரை வியாதி2, இதய நோய், பர்கின்ஸன் நோய், வயிற்றில் கல் ஏற்படுவது ஆகியவற்றை அறவே குறைப்பதாக கூறுகிறார்.

இதுதொடர்பாக கடந்த 6 முதல் 7 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

காஃபின் தவிர பொட்டாசியம், மக்னீசியம், நியாசின், குளோரோஜெனிக் அணிலம் மற்றும் பினோலிக் கூட்டுப் பொருள் ஆகியவை நமது உடம்பில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலினை அதிகரிக்க உதவுகிறதாம்.

தற்போதைய காலகட்டத்தில் மன அழுத்தம் படு சாதாரணமான விஷயமாகி விட்டது. இந்த நிலையில் அடிக்கடி காஃபி சாப்பிடுவது சகஜமாகி விட்டது. ஆனால் இது நல்ல பழக்கம்தான், நல்ல சுத்தமான காஃபியை சாப்பிட்டு வந்தால் புத்துணர்ச்சி மட்டுமல்ல, உடலுக்கும் ஆரோக்கியம் என்கிறார் கேசவன்.

thatstamil

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலிஃபிளவர்,

p31bfv4.jpg

விலை எகிறினா ஜாலி ஃபிளவர்... கொஞ்சம் விலை விழுந்தா, நம்மள காலி பண்ணும் ஃபிளவர்Õ என்று Ôகாலிஃபிளவர் பற்றி விவசாயிகள் எச்சரிக்கையாக குறிப்பிடுவது உண்டு. அந்த அளவுக்கு ஜாக்கிரதையாக கையாள வேண்டிய பயிர்களில் ஒன்றுதான் காலிஃபிளவர்.

பெயரைக் -கேட்டாலே, 'இது நம்ம ஊர் சரக்கு இல்லை' என்பது தெரிந்துவிடும். ஆம், இதன் தாயகம் துருக்கி.

குருசிஃபேரஸ் (cruciferous) காய்கறி குடும்பத்தைச் சேர்ந்த காலிஃபிளவர், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துருக்கி நாட்டு மக்களால் உணவாக உட்கொள்ளப்-பட்டது என்று கி.மு 600&ல் வாழ்ந்த ரோம் நாட்டு தத்துவ மேதையும், கடற்படை தளபதியுமான பிலினி (Plini) தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார். ஆனால், உலகத்தின் பிறபகுதிகளான இத்தாலி, ஸ்பெயின், எகிப்து, போர்ச்சுகல் போன்ற நாடுகளை வந்தடைந்தது பன்னிரண்டாம் நூற்றாண்டில்-தான். காலிக்கட் (கோழிக்கோடு) துறைமுகத்துக்கு மரங்களை ஏற்றிவந்த போர்ச்சுகல் நாட்டு சரக்குக் கப்பல் மூலம் 15-ம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவுக்குள் கால் பதித்தாலும், 17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் காலிஃபிளவர் ஒரு விவசாய பயிராக இங்கே பரவியது.

எல்லா இடங்களிலும்., எல்லா காலங்களிலும் பயிர் செய்யப்-பட்டாலும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை உள்ள சீதோஷ்ண நிலையே சிறந்ததாகும். அமெரிக்கர்களால் அதிகமாக உட்கொள்ளப்படும் காலி-ஃபிளவர் விவசாயத்தில் இன்று முதலிடம் வகிப்பது இத்தாலி, மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

உலகின் அனைத்துப் பகுதி மக்களின் உணவிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் காலிஃபிளவரை, பெரும்பாலும் வெள்ளை நிறத்தில்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், கண்ணை பறிக்கும் பல வண்ணங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட வகைகளில் அது பயிராகிறது.

காலிஃபிளவரின் மருத்துவ குணம் அபாரமானது என்கிறது அமெரிக்க கேன்சர் ஆராய்ச்சி மையம். அதிலிருக்கும் குளுக்கோசினோலேட்ஸ் (Glucosinolates)

மற்றும் தையோசையனட்ஸ் (Thiocyanates) ஆகிய என்சைம்கள் (Enzymes),

கேன்சர் நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது என்று அந்த மையத்தின் ஆராய்ச்சியில் தெரிய-வந்துள்ளது. நெதர்லாந்து நாட்டு மருத்துவ பல்கலைக்கழகம் ஒரு லட்சம் மக்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் வாரத்துக்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் தங்கள் உணவில் காலி-ஃபிளவரை சேர்த்துக்-கொள்பவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பே இல்லை என்று தெரிவிக்கிறது.

காலிஃபிளவரின் சிறப்பான மருத்துவ குணங்களைப்பற்றி இப்படி கூறும் ஆய்வுகள், தவறாமல் அடிகோடிட்டு குறிப்பிடும் தகவல்... 'ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாத காலிஃபிளவருக்கு மட்டுமே இந்த குணங்கள் உண்டு.’

ஆனால், காலிஃபிளவரில் இருக்கும் புழுக்களை ஒழிக்கிறேன் பேர்வழி என்று பெரிய பெரிய டிரம்களில் ரசாயன மருந்துகளை வைத்துக்கொண்டு, அதில் காலிஃபிளவர்களை ஊற வைத்தல்லவா சந்தைக்கு அனுப்புவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்!

விகடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோயை விரட்டும் கறிவேப்பிலை

மதுரை, பிப்.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலாப்பொருளான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும்

ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிஷன் சயின்டிஸ்ட் ஆஃப் கிரஸ்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனம். அவற்றின் தலைவர் லனே கோபியா தலைமையில் மசாலாப் பொருட்கள் பற்றி ஆராய்ச்சி நடந்தது. அதில் கறிவேப்பிலையிலுள்ள இராசாயனப் பொருட்கள் புற்றுநோய், இதய நோயகளைக் குறைக்கும் ஆற்றல் உடையது என்பது தெரிய வந்தது. மேலும் ஞாபக சக்தியை பெருக்கும் சக்தியும் உடையது என்பது தெரியவந்தது.

thinaboomi.com

  • 4 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புற்று நோய் செல்களை கட்டுப்படுத்தும் காரட் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சக்தி கரோட்டினாய்டுகளுக்கு உண்டு

[Friday, 2011-06-17 20:23:56]

பொன்நகை அணிபவர்களின் உடல் அந்த நகையோடு சேர்ந்து பளபளப்பாக மின்னுவதைப்போல தினம் ஒரு காரட் உண்பவர்களின் உடலும் தகதக வென மின்னும். இதனாலேயே தாவரத் தங்கம் என்ற அடைமொழியோடு காரட் அழைக்கப்படுகிறது.

காரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்

கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் காரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது.

புற்று நோய் செல்களை அழிக்கும்

நாம் உண்ணும் உணவில் வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு காரட்டிற்கு மட்டுமே உள்ளது. இதில் உள்ள கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகிறது. காரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற சத்து நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது.

கண்பார்வை குறைபாட்டினை போக்கும்

வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் ஏற்படும் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினமும் காரட்டினை சாப்பிட்டால் அவர்களுக்கு மாலைக்கண்நோய் எளிதில் குணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் சக்தி காரட்டிற்கு உள்ளதால் இதயம் தொடர்புடைய நோய்களை அண்டவே விடாது.

வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் காரட்டினை பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் காரட்டில் உள்ள நார்ச் சத்து மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது.

பக்கவாதத்தை அண்டவிடாது

காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். தினமும் காரட்டினை உண்பவர்களை ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் எட்டிப்பார்ப்பதில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மூளையை சுறு சுறுப்பாக வைக்க உதவுகிறது.

பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும். தாங்க முடியாத பசியையும் ஒரே ஒரு காரட் போக்கிவிடும்

அல்சரை குணப்படுத்தும்

பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர்பான அனைத்த நோய்களையும் குணப்படுத்துகின்ற சக்தி கொண்டது. அல்சர் நோய் உள்ளவர்கள், வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் காரட் ஜூஸ் சாப்பிட்டால் வயிறு மற்றும் குடல் தொடர்புடைய நோய்கள் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் எட்டிப்பார்க்காமல் செய்துவிடும்.

வயிற்றுக் கோளாறு காரணமாக ஒரு சிலருக்கு வாயில் துர்நாற்றம் ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு காரட் சிறந்த மருந்தாகும். வாரத்திற்கு 5 நாட்கள் காரட்டை நன்கு அரைத்து ஜூஸ் எடுத்து அதனுடன் எதுவும் கலக்காமல் பருகி வர வாய் நாற்றம் ஓடியே போய் விடும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சக்தி கரோட்டினாய்டுகளுக்கு உண்டு. எனவே நீரிழிவு நோயளிகள் காரட்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இன்சுலின் சுரப்பு சீரடையும்

http://www.seithy.com/breifNews.php?newsID=45021&category=CommonNews&language=tamil

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோய் மற்றும் இதயநோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ்நாளை அதிகரிக்கும் கருஞ்சிவப்பு தக்காளி

[Tuesday, 2011-07-05 20:31:12]

புற்றுநோய் மற்றும் இதயநோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ்நாளை அதிகரிக்கும் கருஞ்சிவப்பு தக்காளியை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான்இன்னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர்.

தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக்காளி உருவாக்கப்பட்டுள்ளது."பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதயநோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதயநோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப்பட்டது. இன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது.சாதாரண மற்றும் சிவப்பு தக்காளி உணவு உட்கொண்டு வந்த எலிகளின் வாழ்நாள் 142 நாட்களில் முடிந்தது. ஆனால், கருஞ்சிவப்பு தக்காளியை உணவாக சாப்பிட்டு வந்த எலிகளின் வாழ்நாள் 182 நாட்களாக நீடித்தது.

புற்று நோய் மற்றும் இதய நோய் தாக்கினாலும், கருஞ்சிவப்புநிற தக்காளிகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த விதமான காரணிகள், புற்று நோய் அல்லது இதயநோயை தடுக்கின்றன என்பது துல்லியமாக கண்டறியப்படவில்லை. கருஞ்சிவப்பு தக்காளியின் மருத்துவ, ரசாயன குணம் குறித்த அடுத்த கட்ட சோதனைக்கு விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். மனிதர்களிடம் இதை பரிசோதிக்க நீண்டகாலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46000&category=CommonNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புற்று நோய் வராமல் தடுக்கும் தூதுவளை மூலிகை: செயல்திறன் மிக்க வேதிப்பொருள்!

[Wednesday, 2011-07-06 07:38:16]

உடலை பாதுகாக்கவும் நோயற்ற வாழ்வு வாழவும் உதவக்கூடிய காயல்கல்ப மூலிகைகளை சித்தர்கள் கண்டறிந்து அவற்றை பயன்படுத்தும் விதம் பற்றி ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்துள்ளனர். மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது அவற்றுடன் உலோக பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்தி பத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த காயகல்ப மூலிகையாக தூதுவளை போற்றப்படுகிறது. தரிசு நிலங்களிலும், நீர் அதிகம் தேங்கும் பகுதிகளிலும் வளரும் மூலிகையான தூதுவளையின் இலை, வேர், மலர், கனிகள் முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் இருந்து சொலசோடைன்,டோமடிட், சொலமரைன் போன்ற வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.இலைகள் கசப்பானவை, இருமல் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகின்றன. வேரின் கசாயம் காசநோய் மற்றும் நுரையீரல் நோய்களைக் குணப்படுத்துகிறது. முழுத்தாவரமும் ஆஸ்துமா, தொடர்ந்த மூச்சுக்குழல் அழற்சி, இருமல், காய்ச்சல், மற்றும் குழந்தைப் பேறு மருத்துவத்தில் பயன்படுகிறது.

தைராய்டு கட்டிகள்

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது.. குளிர் காலங்களில் சளித்தொல்லை அதிகமாக இருக்கும். மூக்கடைப்பு ஏற்படும். இவற்றை நீக்குவதில் தூதுவளை அருமருந்தாகப் பயன்படுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்

நினைவாற்றல் பெருகும்

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

புற்றுநோய் குணமடையும்

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய நேரிட்டால் தூதுவளை இலையைப் பயன்படுத்தி, சில மாதங்களிலேயே பூரண குணமடையலாம்

தாம்பத்ய உறவு மேம்படும்

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும். தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46011&category=CommonNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேன்சர் நோயை விரட்டியடிக்கும் எலுமிச்சை!

[Tuesday, 2011-07-12 19:23:12]

கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை தலைப்பை படித்த உடன் நம்ப முடியவில்லை அல்லவா? இது உண்மைதான்; நம்புங்கள். ஆம்! கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை. உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டுபிடித்துவிட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும். மற்றபடி நோய் பாதிப்பை தடுத்து வாழ்நாளை அதிகரிக்க மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.

உலக மருத்துவ விஞ்ஞானிகள் புற்று நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த செய்தியின் துவக்கத்தில் சொல்லப்பட்ட தகவல். அமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு தான் இந்த பெருமைக்குரிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்கள். தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.

இந்த கீமோ தெரப்பியின் பக்க விளைவுகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் சொல்ல வேண்டியதில்லை. இதற்கொரு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் எலுமிச்சை. உடலில் நல்ல செல்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாமல், ஆபத்தான செல்கள் மற்றும் கேன்சராக மாறிவிடக்கூடிய கட்டிகளை மட்டுமே அழிக்கும் அபரிமிதமான ஆற்றல் பெற்றது எலுமிச்சை என்கிறது இந்த ஆராய்ச்சி. கீமோ தெரப்பியைவிட 10 ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது இந்த எலுமிச்சை என்பது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள ஆச்சரியமான உண்மை.

அதுமட்டுமா? ஆபத்தான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் காளான்களையும் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லையாம் இந்த எலுமிச்சை. இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, நரம்பு கோளாறுகளை சரி செய்வது என்று எலுமிச்சையின் மகிமை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மார்பகம், ப்ராஸ்டேட், கல்லீரல் மற்றும் கணையம் என்று கேன்சர் எங்கிருந்தாலும் அவற்றை அழிக்கும் பணியை சிறப்பாக செய்ய முடியுமாம் எலுமிச்சையால். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த அரிய கண்டுபிடிப்பு மருத்துவ ரீதியாக வெளி வந்தால் புற்று நோய்க்கு சிக்கனமான, முற்றிலுமான தீர்வாக இருக்கும். எனவே, தற்போது இதற்கான மருந்துகளை தயார் செய்து கொள்ளை லாபம் ஈட்டி வரும் வர்த்தக நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது எலுமிச்சை.

http://www.seithy.com/breifNews.php?newsID=46380&category=CommonNews&language=tamil

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தின் மூலமும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும்! மருத்துவ ஆய்வில் தங்கமும் தப்பவில்லை!

[Thursday, 2011-08-18 00:37:49]

புற்று நோயை தங்கம் குணப்படுத்தும் என தெரிய வந்துள்ளது. இதனால் அதற்கு மேலும் மவுசு அதிகரிக்கிறது.ஆபரணங்கள், மற்றும் சிலைகள் போன்றவை செய்ய தங்கம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இது புற்று நோயை குணப்படுத்தவும் உதவும் என தெரியவந்துள்ளது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மற்றும் கிரிப்த் பல்கலைக்கழகங்களை சேர்ந்த சர்வதேச நிபுணர் குழு இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.

அதன்படி தங்கத்தை வேதியியல் மாற்றம் செய்து, புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அதில் உள்ள ரசாயன பொருட்கள் புற்று நோயை உருவாக்கும் செல்களை மட்டுமே அழித்தன. மற்ற செல்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

எனவே தங்கத்தின் மூலமும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சாதாரணமாகவே தங்கத்தின் மதிப்பு அதிகரித்து ஏழை எளிய மக்களின் எட்டா கனியாக உள்ளது. தற்போது புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துவதன் மூலம் அதன் மவுசு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

www.seithy.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புற்று நோய் பற்றி அறிந்தும் தெரிந்தும் கொள்வோம்.

[Thursday, 2011-08-18 22:28:33]

நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் தெரிவித்தள்ள கருத்துக்கள் கீழ்வருமபறு.

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரியவராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டியுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும்குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது.

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.

8)ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்டுவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body�s own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body�s own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது.. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body�s normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும்,வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை.தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது.மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தேவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg�s amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது.எனவே ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹார்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள்,பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

http://www.seithy.co...&language=tamil

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Oct 28, 2011 / பகுதி: மருத்துவம் /

புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்

grenade-grenadier.jpgமாதுளம் பழம் உடல் நலனுக்கு சிறந்தது என்ற பொதுவான கருத்துள்ளது. தற்போது அது சர்வரோக நிவாரணி என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

பிரித்தானியாவிலுள்ள ராணி மார்க்ரெட் பல்கலைக்கழக விஞ்ஞானி டொக்டர் எமாட் அல் துஜாலி கூறும்போது, மாதுளம் பழம் நோய் தீர்க்கும் இயற்கை மருந்தாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

மாதுளம் பழம் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும் என்றும் அதே நேரத்தில் பாலியல் பிரச்சினைகளையும் இது தீர்க்கும் என்றும் தெரியவந்துள்ளது.

தாவரங்களில் பொதுவாகவே புனிகாலஜின்ஸ் என்ற சத்துப்பொருள் உள்ளது. அது மாதுளம் பழத்தில் மிக அதிகமாக உள்ளது. எனவே இது அனைத்து நோய்களையும் தீர்க்கும் என்றும் தெரியவந்துள்ளது என்றும் துஜாலி தெரிவித்தார்.

http://www.pathivu.com/news/18969/57//d,article_full.aspx

புற்றுநோய் பரவுவதை தடுக்கும் அஸ்பிரீன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.