Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழ் மக்களை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்" சர்வதேச சமூகத்திடம் தமிழர் பேரவை சுவிஸ் கோரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் மக்களை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்" சர்வதேச சமூகத்திடம் தமிழர் பேரவை சுவிஸ் கோரிக்கை.

- பண்டார வன்னியன் Tuesday, 06 March 2007 10:15

சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டிப்பதுடன் தமிழ் மக்களை அழிவில் இருந்து காப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று தமிழர் பேரவை சுவிஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

நோர்வே மத்தியஸ்தத்துடனும் சர்வதேச சமூகத்தின் ஆசீர்வாதத்துடனும் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறிவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது எந்தவித அழுத்தங்களையம்; பிரயோகிக்காது மௌனம் காத்துவரும் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளையிட்டு கவலை வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்;, தமிழ் மக்களின் துயரங்களைத் துடைப்பதற்காக சர்வதேச சமூகம் நேசக்கரம் நீட்டவேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சட்ட ரீதியான உரிமையை அடைவதற்கு வன்முறையைப் பாவிப்பதென்பது சட்டவிரோதமாகாது என்ற தலைப்பில் தமிழர் பேரை சுவிஸ் வெளியிட்டுள்ள ஆங்கில பத்திரிகை அறிக்கையில், அண்மைக்காலமாக இலங்கையில் சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விபரங்களும், தரவுகளும் விரிவான முறையில் வெளியிடப்பட்டுள்ள.

அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:

சிறிலங்காவில் உள்ள தமிழர் தாயகத்தில் அதிகரித்து வரும் மிக மோசமான வன் செயல்களையிட்டும், ஐ.நா முகவர் நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகம் கடைப்பிடித்துவரும் மௌனத்தையிட்டும் உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாம் ஆழ்ந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்துள்ளோம்.

இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒர் அங்கமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தாலும் அதன் ஆயுதப் படைகள் மற்றும் ஒட்டுக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் இத்தகைய மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் பொறுமையோடு அவதானித்து வருவதுடன் சில நாடுகள் தமிழ் மக்களைக் கொலை செய்வதற்காக சிங்கள இனவாத அரசாங்கத்திற்கு ஆயுதங்களையும் நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றன. சர்வதேச சமூகத்தின் தொடரும் மௌனமானது உண்மையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை ஊக்குவிக்கும் ஒரு செயலாகவே கருதுகின்றோம். ஆகவே, இந்த தேவையற்ற மௌனத்தைக் கலைத்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான செயலை சர்வதேச சமூகம் கண்டிப்பதுடன் தமிழ் மக்களை அழிவில் இருந்து காப்பதற்கு முன்வரவேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

விமானக் குண்டுவீச்சுக்களை மேற்கொள்ளுவதன் ஊடாகவும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை ஆக்கிரமிப்பதன் ஊடாகவும், ஆழ ஊடுருவும் படையணியினரை மறைந்திருந்து தாக்குதலை மேற்கொள்வதற்கு அனுமதிப்பதனூடாகவும், ஒட்டுக் குழுக்களுக்கு ஆயுதங்களும் அனுசரணையும் வழங்குவதனூடாகவும், மிக மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாக தமிழ் மக்களைக் கைதுசெய்து தடுத்துவைப்பதனூடாகவும், கடலில் மீன்பிடித்தடையை அமுல்செய்வதன் ஊடாகவும், யாழ் குடாநாட்டுக்கான ஏ-9 பாதையை மூடியுள்ளதன் ஊடாகவும் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் பங்குதாரரில் ஒரு தரப்பான சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாக மீறி வருகின்றது.

பெண்கள், குழந்தைகள் உட்பட தமிழ் பொது மக்கள் சிறிலங்கா ஆயுதப் படையினரால் தினமும் கொல்லப்பட்டு வருகின்றார்கள். ஆயுதங்களாலும் ஒட்டுக்குழுக்களாலும் நிகழ்த்தப்பட்டு வரும் கைதுகள், கடத்தல்கள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் என்பனவற்றால் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீதான விமானக் குண்டு வீச்சுகள் மற்றும் எறிகணை வீச்சுக்கள் என்பன ஆயிரக்கணக்கான மக்களை வீடுகளை விட்டுத் துரத்தி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதிகளாகத் தஞ்சமடையும்படியான நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. இராணுவ நடவடிக்கைகள் மட்டுமல்லாது சிறிலங்கா இராணுவத்தின் ஒரு பிரிவான ஆழ ஊடுருவும் படையணியால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ஊடுருவல் தாக்குதல்களும் பொதுமக்களைக் கொன்றும் அங்கவீனர்களாக்கியும் வருவதுடன் முழு குடிமக்களையும் அச்சுறுத்தியும் வருகின்றன.

இத்தகைய ஊடுருவல் தாக்குதல்களின் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் தங்கள் கடமையின் நிமிர்த்தம் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு அதிபரும், கல்வி அதிகாரியும் அண்மையில் கொல்லப்பட்டுள்ளனர். 33 வயதான சிலுவைராசா அமலநேசன் சம்பவ இடத்திலேயே பலியாக, கல்வி அதிகாரியான 47வயதுடைய கிஸ்டியான் ராஜகோன் பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மரணமடைந்திருந்தார். ஆழ ஊடுருவும் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த கிளைமோர் தாக்குதல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மடுப் பகுதியில் சினவலாயன் கட்டு என்னும் இடத்தில் பெப்ரவரி 27ம் திகதி காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இந்த சம்பவம் நடைபெற்று 24 மணித்தியாலங்களுக்குள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் பரப்புக் கடந்தான் வீதி ஊடாக மடுத் தேவாலயத்தை நோக்கி உந்துருளியில் சென்றுகொண்டிருந்த 4வயது சிறுமி மற்றும் 15 வயது சிறுவன் உட்பட ஒரு குடும்பம் காயங்களுக்கு இலக்கானது. காயமடைந்த விவசாயியான கென்றி அந்தோனிமுத்து (40 வயது) அவரது மனைவி கென்றி உக்றிஸ்டா (42வயது) அவர்களுடைய பிள்ளைகளான அஞ்சலா சியோமி (4வயது) சாம் சுரேந்திரன் கென்றி (15வயது) ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டார்கள். இந்தக் கிளைமோர் தாக்குதல் 28ம் திகதி பெப்ரவரி காலை 10 மணிக்கு மடுத் தேவாலயத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் நடைபெற்றது.

மறுநாள் ஆழ ஊடுருவும் படையணியால் நெடுங்கேணி ஒலுமடு வீதியில் நடத்தப்பட்ட மூன்றாவது கிளைமோர் தாக்குதலில் பொதுமக்கள் பயணம்செய்த மகிழூந்து மயிரிழையில் தப்பியது. இந்த தாக்குதல் மார்ச் முதலாம் திகதி காலை 10 மணிக்கு நடத்தப்பட்டது.

இந்த ஆழ ஊடுருவும் படையணி இதுபோன்ற கிளைமோர் தாக்குதல்களை பொதுமக்கள் இலக்குகள் மீதும் இராணுவ இலக்குகள் மீதும் அடிக்கடி நடத்தி வருகின்றன.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பெப்ரவரி 19ம் திகதி காலை 7.15 மணியளவில் முல்லைத்தீவு நகரில் இருந்து 32 கி.மீ. தென்மேற்காக அமைந்துள்ள மணவாளன்பட்டமுறிப்பு அன்னம் பிரதேசத்தில் ஆழ ஊடுருவும் படையணியால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் நெடுங்கேணி அரச வைத்தியசாலைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று மயிரிழையில் தப்பியது. இத் தாக்குதலின் போது சாரதி உட்பட 9 பேர் அந்த வாகனத்தில் பயணித்துக்கொண்டு இருந்தார்கள்.

ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் நெடுங்கேணி பெரியகுளம் வீதியில் பொதுமக்கள் பயணம் செய்துகொண்டிருந்த மற்றொரு வாகனம் கிளைமோர் தாக்குதலில் இருந்து தப்பியது.

2006ம் ஆண்டு ஆகஸ்ட ;08 -நெடுங்கெணிப் பிரதேசத்தில், நெருங்கேணி அரச வைத்தியசாலைக்குச் சொந்தமாக நோயாளிகள் காவு வண்டி ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி ஒரு மருத்துவர் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற அதே இடத்திலேயே இந்த தாக்குதலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாணவர் சமூகத்தின் மீதான தாக்குதல்கள் குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், தீவகப் பகுதிகளிலும் தங்குதடையின்றித் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

சிறிலங்கா இராணுவச் சிப்பாய்கள் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவனான கிருஷ்ணன் கமலதாஸ் 24 என்பரை பெப்பரவரி 18ம் திகதி மாலை 6.30 மணியளவில் வரணியில் அமைந்துள்ள இராணுவத்தின் 52-4 பிறிகேட் தலைமையகத்திற்கு அண்மையில் வைத்துச் சுட்டுக்கொன்றனர். தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கற்பிப்பதற்காகச் சென்ற போதே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆறு மாத இடைவெளியின் பின் யாழ் பல்கலைக் கழகம் மீளத்திறப்பதற்குத் தீர்மானித்திருந்த தினத்திற்கு முதல் நாளிலேயே இந்தக் கொலை இடம்பெற்றிருந்தது.

இரண்டு வார இடைவெளியினுள் மார்ச் முதலாம் திகதி இரண்டாவது பல்கலைக்கழக மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டான். கலைப்பீட 2ம் வருட மாணவனான செல்வரத்தினம் சிவரஞ்சன்(23வயது), சாவகச்சேரி இராணுவ முகாமுக்கு அண்மையில் அமைந்துள்ள சாவகச்சேரி வைத்தியசாலையில் பகுதி நேர இரவுக் காவலாளியாக கடமையாற்றிவந்த பொழுதே கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பில் மிகவும் கவலைதரக்குகூடிய ஒரு அம்சம் யாதெனில் இந்த மாணவனின் மறைவு தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இரங்கல் கூட்டத்தில் யாழ் பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் ஆர்.குமாரவடிவேல் அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரையாகும்.

“பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை பல்கலைக்கழக நிர்வாகத்தால் உறுதிசெய்யமுடியாமல் இருக்கின்றது.

தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்வதற்கு தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு மாணவர்களை நான் வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதையும் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும். தென்மாராட்சியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதியை நீங்கள் மனதில்கொள்ளவேண்டும். மாணவர்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் சிறிலங்கா அரசாங்கம் அதனைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை…“

அதேவேளை, குடாநாட்டில் பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுவதும் காணாமல் போவதும் தங்குதடையின்றி தொடர்ந்தவண்ணமே உள்ளது.

ஜனவரி 15ம் திகதி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த உயர்தர மாணவன் முருகானந்தன் பரமநாதன் (19 வயது) காணாமல்போயிருந்தார். அதற்கு முன்னதாக பருத்தித்துறை வேலாயும் ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த தனஞ்செயன் என்ற மாணவன் ஜனவரி 15ம் திகதி காணாமல் போயிருந்தான்.

இருவரின் விடுதலையை வேண்டி மாணவர்கள் பாடசாலையைப் பகிஷ்கரித்த போதிலும் இராணுவத்தினரதும் ஒட்டுக் குழுக்களினதும் அச்சுறுத்தல் காரணமாக அதனைக் கைவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

மேலும், குடாநாட்டில் பாடசாலைகளை விட்டு இடைவிலகும் மாணவர்களின் தொகை மிகவும் அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் மொத்த மாணவர் தொகையில் 7 சதவீதமானோர், அதாவது 10,201 மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகி இருந்தார்கள். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடத்தப்படுதல் காணாமல் போதல் கொல்லப்படுதல், மற்றும் கடல் மீன்பிடிக்கு தடை விதிக்கப்பட்டதால் உருவாகியுள்ள வறுமை, ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளதால் புத்தகங்களுக்கும் மற்றைய கற்றல் உபகரணங்களுக்கும் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, பொருளாதாரத் தடை காரணமாக உருவாகியுள்ள விலைவாசி உயர்வு என்பவையே இந்த இடைவிலகலுக்கான பிரதான காரணங்களாகும்.

சிறிலங்கா அரசாங்கம், மாணவர்களை மாத்திரம் அன்றி தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகக் குரல்கொடுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அட்டுழியங்களை

அம்பலப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அடங்கிய புத்தி ஜீவிகளையும் கொலைசெய்து வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளருமான நடராஜா ரவிராஜ் 2006ம் ஆண்டு நவம்பர் 10ம் திகதி கொழும்பு நகரின் மத்தியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொல்லப்படுவதற்கு முதல் தினம் இராணுவ நடவடிக்கை காரணமாக வாகரையில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் தொடர்பாக கொழும்பில் ஐ.நா அலுவலகம் முன்பாக அவர் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக நீண்டகாலம் பதவிவகித்த ஜோசப் பரராஜசிங்கம் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது, சுட்டுக்கொல்லப்பட்டார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான அரியநாயகம் சந்திரநேரு பொலனறுவை மாவட்டம் வெலிகந்தையில் வைத்து பெப்ரவரி 7, 2005 அன்று சுடப்பட்டு மறுதினம் மரணம் அடைந்தார்.

மற்றொரு முன்னாள் பாhளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான சின்னத்தம்பி சிவமகராஜா யாழ்ப்பாணத்தில் வைத்து 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த நான்கு கொலைகளும் சிறிலங்கா ஆயுதப் படைகளாலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் இராணுவதுணைப்படைகளாலும் மேற்கொள்ளப்பட்டதென்பது நோக்கத்தக்கது. பிரபல தமிழ் ஊடகவியலாளர்களான மயில்வாகனம் நிமலராஜன், ஐயாத்துரை நடேசன், தர்மரெத்தினம் சிவராம், சுப்ரமணியம் சுகிர்தராஜன், சின்னத்தம்பி சிவமகராஜா போன்றவர்கள் ஒரு தசாப்தகாலத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.