Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் நடந்து கொள்வதை மக்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்

Featured Replies

16630.jpg

 

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் கள் பற்றி சபை அமர்வுகளில் தெரிவிக்கின்ற கருத்துக்களால் தமிழ் மக்கள் கொதிப்படைந் துள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தெட்டத் தெளிவாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் அவர்கள் எடுத்துக்கூறி வருகிறார்.

இதனால் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் கள் சிலரும் வடக்கு மாகாண சபையின் உறுப் பினர்கள் சிலரும் கடும் கோபம் உற்றுள்ளனர்.
இவ்வாறு கோபமுற்றவர்கள் யாவர்? இவர் கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள். இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்ற விட யங்கள் அனைத்தையும் தமிழ் மக்கள் நன் றாக அறிந்து வைத்துள்ளனர்.

அதிலும் மிக அண்மைக்காலமாக முதல மைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதி ரான கருத்துருவாக்கங்கள் வேகமடைந்திருப் பதை அவதானிக்க முடிகிறது.

இதன்காரணம் என்னவென்று நுணுகி ஆராய்ந்தால், வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிந்த பின்பு மீண்டும், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவிடா மல் செய்வதுதான் என்பது தெரியவரும்.
அதாவது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தனிக் கட்சி ஆரம்பித்து வடக்கு மாகாண சபையின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டால்,

அவரை வெல்ல யாராலும் முடியாது என்ற உண்மை தெரிந்த நிலையில்,  சிலர் அவரைக் கடுமையாக எதிர்க்க முற்பட்டுள்ளனர்.
அதன் வெளிப்பாடாகவே வடக்கு மாகாண சபை அமர்வுகளில் குறிப்பிட்ட உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சருக்கு எதிரான கருத்துக் களை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறு கருத்துக்களை முன்வைப்பவர் கள் தாங்கள் ஏதோ விற்பன்னர்கள் என்ற நினைப்பில் செயற்படுவதைப் பார்க்க முடிகி றது.

ஆனால் இவர்களின் உரைகளில் இருக் கின்ற நியாயமற்ற தன்மையும் அநாகரிகத்தின் உச்சமும் எவ்வளவுக்கு மேலோங்கியுள்ள தென்பதை தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக அவதானித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக முதலமைச்சரின் உரை அடங்கிய நூல் வெளியிடப்பட்டதைக் கூட கிண்டலடிக்கும் அளவில் வடக்கு மாகாண சபை யில் சிறுமைத்தனம் கோலோச்சி நிற்கிறது என்பதைத் தமிழ் மக்கள் அவதானிக்கத் தவறவில்லை.
ஆக, வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக பேசு வோருக்கு எமது மக்கள் தக்கபாடம் புகட்டுவர் என்பதும், இத்தகையவர்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவர் என்பதும் நிறுதிட்ட மான உண்மை.

இந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் அனுபவிக்கும்போது, தாங்கள் செய்த தவறை நிச்சயம் உணர்ந்து கொள்வர். 

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.