Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Roobha - தடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்

-Élie Castiel  
தமிழில்: சதா பிரணவன்

லங்கையில் பிறந்து கனடாவில் வாழும் லெனின் எம் சிவத்தின், முந்தைய இரண்டு தமிழ் -கனடிய திரைப் படங்கள் 1999(2009) மற்றும் A gun and a ring (2013) . இப்படங்கள் ஆங்கில subtitles-களுடன் உருவாக்கப்பட்டவை. கனடாவில் பல்வேறு சமூகங்களின் ஒன்றிணைவு உண்மையில் வரவேற்கத்தக்கது. முதல் இரண்டு படங்களும் ‘action’ வகை சார்ந்தவை.ஆனால் லெனின் எம் சிவத்தின் புதிய படமான ‘ROOBHA’ முற்றிலும் வேறுபட்ட கருப்பொருளைக் கொண்டுள்ளது .

இத் திரைப்படம் சிறு பான்மையினராகவும், ஒடுக்கப்படுபவர்களாகவும், சமூகத்தின் பெரும்பான்மையினரால் அலட்சியமாக நோக்கப்படுபவர்களுமான திருநங்கைகளின் வாழ்வியல் பற்றியது.

பால்நிலை அடிப்படை முறையைக் கேள்வி கேட்டும், அதே சமயம் பொதுச் சமூகத்தால் குற்ற உணர்விலும், துன்பத்திலும் தள்ளிவிடப்பட்ட தனி மனிதர்களின் விடுதலை குறித்தும் ஆணித்தரமாகப் பேசும் படம் ரூபா.
அண்மையில் மொன்றியல் நகரத்தில் நிகழ்ந்த 42-வது festival des films du monde திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. Roobha துணிச்சலான, அசாதாரணமான படைப்பு. திருநங்கைகளின் துன்ப நிலையின் மீதான எதிர்ப்பின் செயற்பாடு. திரைப்படம் அதிகம் சத்தமிடவில்லை, அதே வேளையில் அது அமைதியாவுமில்லை. சமூகம் சிக்கலாகவும் அபாயமாகவும் நோக்கும் ஒருகதையை, திரையில் நிதானமாக ஒரு கவிதை போல் நிகழ்த்தியுள்ளார் லெனின் எம் சிவம் .

தன் அடையாள தேடல் , குடும்பத்தினருடனான சிக்கல்கள், உடல் இச்சை, காதலின் தேவை நாளை பற்றிய பயம், மகிழ்ச்சி, சமரசம் என வாழ்கை பல பாடங்களை கற்று கொடுக்கிறது ரூபாவிற்கு . படம் முடிகையில் நிகழும் அற்புதமான தார்மீக நியாயத்தை இச் சிறுகட்டுரையில் நான் சொல்லப் போவதில்லை.

எதிர்ப்பாலீர்ப்பு (hetero) இயக்குனரான லெனின் எம் சிவம் திருநங்கைகளின் அச்சத்தை, ஆசைகளை, நிச்சயமின்மையை , அவர்களது உலகிற்குள் நுழைந்து புரிந்து கொண்டுள்ளார். அவரது முதன்மைக் கதாபாத்திரம் எந்த இடத்திலும் காருண்யமாகக் கண்ணியமாக அவரது திரையில் நடைபோடுகிறார்.
ரூபா, எத்தனையோ முறை நொடிந்து போகிறாள்; பலருடன் பழகுகிறாள், காதல் வசப்படுகிறாள் , காதலிக்கப்படுகிறாள், ஏமாற்றப்படுகிறாள், தீயவர்களால் காயப்படுகிறாள், தனிமைப்படுகிறாள். இவற்றின் ஊடாக அவள் இந்தச் சமூகத்தைப் புரிந்து கொள்கிறாள். வாழ்வை,காதலை,மரணத்தை அறிகிறாள். உண்மையான அர்த்தத்தில் சொல்வதானால் அவள் தடைசெய்யப்பட்ட ‘அதி அற்புதமான பெண்’ !
தன்னுடைய உலகிற்கு அப்பாலும் விளிம்புநிலையிலும் வாழும் ரூபாவுடன் அன்ரனி காதல் வசப்படுவது அவனையும் அந்த விளிம்புநிலை உலகிற்குள் நகரச் செய்கிறது.

தீவிரமாகவும் மூர்க்கமாகவும் தனது இயல்புக்கு மாறாகக் காதலில் வீழும் அன்ரனி பாத்திரத்தில், இந்தப் படத்தில் லெனினுடன் இணைந்து திரைக்கதையை அமைத்திருக்கும் ஷோபாசக்தி மிக யதார்த்தமாக நடித்துள்ளார் . நாம் இவரை ஜாக் ஓடியாரின் தங்கப் பனை வென்ற (2015 – கான்ஸ் திரைப்படவிழா) ‘தீபன்’ திரைப்படத்தில் பார்த்துள்ளோம்.

ரூபா கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளவர், சிங்கப்பூர் வம்சாவளியினரும் கனடிய நடிகருமான அம்ரித் சந்து. இவர் தனது பாத்திரத்தில் வியக்க தக்க வண்ணம் வாழ்ந்துள்ளார்.

அவரது பால்நிலை குறித்து அவரது குடும்பத்தில் எழும் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் காட்சிகள் மிக உயிரோட்டமாகவும் அடர்த்தியாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகமின்றி இக்காட்சிகள் திரைப் புரட்சியின் தடங்கள்.

பேசாப்பொருளை ரூபா பேசிவிடவில்லைத்தான். ஆனால் ரூபா நம் ஆன்மைாவைத் தட்டுகிறது, வித்தியாசங்களைப் பேசுகிறது. இரக்கமற்ற வக்கிரமான மனிதர்களைப் புறக்கணிக்கிறது.
சிலி நாட்டு இயக்குனரான sebastian lelio 2017 ஆண்டு A Fantastic Woman எனும் அழகிய திரைப்படத்தை வெளியிட்டார். ரூபாவின் இயக்குனர் லெனின் எம் சிவம் இத்திரைப்படத்தைத் தான் இன்னும் பார்க்கவில்லை என்று என்னிடம் கூறினார். அவரின் ‘ரூபா’ படப்பிடிப்பு ஏப்ரல் 2016 கனடாவில் நடந்துள்ளது. ஆனால் இந்த இரண்டு படங்களும் ஆச்சரியப்படும் வகையில் மிக நெருக்கமாகப் பயணிக்கின்றன.

விசயங்களை இதயசுத்தியுடனும் நேர்மையுடனும் அணுகும் போது அவை தன் போன்ற சக கதைகளுடன் இயல்பாகவும்,பெருமையுடனும் கரம் கோர்த்து நடக்க தொடக்கி விடுகின்றன.

‘Roobha’வில் லெனின் எம் சிவம் நம்மைத் தைரியமூட்டுகிறார், நம்முடன் சண்டை இடுகிறார், நம்மை மயக்குகிறார், ததும்ப வைக்கிறார், எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தனது காலத்தின் சாட்சியம் ஆகிறார்.
அவரவர் பாலியல் விருப்புகளை வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிமை உள்ளது. கலை, பண்பாடு , அரசியல் என அனைத்திலும் புதிது சாதிக்கப்படுபவையாகவும் மாற்றத்தை நோக்கி விரைவதாகவும் காலமுள்ளது. லெனின் நம் காலத்தின் தேவையை அறிந்தவராக உள்ளார். ஒவ்வொரு மனிதரும் பார்க்கவேண்டிய திரைப்படமாக அவர் ரூபாவை நிகழ்த்தியுள்ளார்.

ROOBHA: Canada 2017 நேரம்- 1 h 31 – மொழி – English, Tamil இயக்கம் – Lenin M. Sivam, திரைக்கதை- Lenin M. Sivam, Shobasakthi, நடிகர்கள் – Shobasakthi, Amrit Sandu,Thenuka Kantharajah, Cassandra James,Sornalingam Vairamuthu, John Marcucci, ஒளிப்பதிவு- Arsenij Gusev படத்தொகுப்பு -Thomas Buschbeck,Rohan Fernando ஒலி- Pravin Mani, Princeten Charles, Allan Scarth, Matt R. Sherman இசை – Asif Illyas கலை – Bettina Katja Lange – Angela Galmar தயாரிப்பு – Warren Sinnathamby Next Productions.

பிரஞ்சு மொழியில் எழுப்பட்ட மூலக் கட்டுரை: UNE FEMME PLUS QUE FANTASTIQUE

(காலம் -52வது இதழில் வெளியாகியது)

 

http://www.shobasakthi.com/shobasakthi/2018/10/08/தடைசெய்யப்பட்ட-அதி-அற்பு/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.