Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

OPPO இனால் Hyper Boost தொழில்நுட்பம் அறிமுகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

OPPO இனால் Hyper Boost தொழில்நுட்பம் அறிமுகம்

 

OPPOமொபைல்,புதிய OPPO Hyper Boost தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. oppo.jpg

அன்ட்ரொயிட் ஸ்மார்ட்ஃபோன்களின் வினைத்திறனை மேம்படுத்தி, பாவனையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதாக இந்த தொழில்நுட்பம் அமைந்திருக்கும். அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக,தொடர்பான வடிவமைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன்,பரந்தளவு பாவனை அம்சங்கள் மற்றும் செயற்பாடுகள் போன்றவற்றை உள்வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்ஃபோன்களில் கட்டமைப்பு-மட்ட வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கான உள்ளார்ந்த தீர்வாக அமைந்துள்ள Hyper Boost தொழில்நுட்பம் OPPO இன் வலிமையை வெளிப்படுத்தும் முக்கிய அங்கமாகவும்,அன்ட்ரொயிட் கட்டமைப்புக்கான கட்ட்மைப்பு-மட்ட சீராக்கத்தை புரிந்துகொள்வதற்கான அடித்தளமாகவும் அமைந்துள்ளது.oppo02.jpgரையன் சென்,மென்பொருள் ஆய்வு நிலையத்தின் தலைமை அதிகாரி,OPPO ஆய்வு நிலையம் OPPO ஆய்வு நிலையத்தின் மென்பொருள் ஆய்வு மைய தலைமை அதிகாரி ரையன் சென் கருத்துத் தெரிவிக்கையில்,“ஸ்மார்ட்ஃபோன்களில் கட்டமைப்பு வினைத்திறனை மேம்படுத்துவதற்கான எமது பயணம் என்பது 2015 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியிருந்தது. OPPO Hyper தொழில்நுட்பத்தின் அறிமுகத்தை காண்பதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். 

தொடர்ச்சியாக நாம் மேற்கொண்டிருந்த மேம்படுத்தல்கள் மற்றும் செம்மையாக்கங்களின் பெறுபேறாக இது அமைந்துள்ளது. அன்ட்ரொயிட் கட்டமைப்புகளில் வளங்களை ஒதுக்கீடு செய்யக்கூடிய இதன் திறன் காரணமாக வலு பாவனை மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களில் அதிகளவு திறன் வாய்ந்த அப்ளிகேஷன்களை செயற்படுத்தும் போது எழக்கூடிய வினைத்திறன் சவால்களை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக உள்ளது. 

oppo03.jpgஇந்த நவீன தொழில்நுட்பத்தினூடாக துறையின் முன்னணி தொழில்நுட்ப புத்தாக்கத்தில் நாம் கொண்டுள்ள வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,எமது பாவனையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொண்டு வருவதற்கான எமது அர்ப்பணிப்பையும் காண்பித்துள்ளது” என்றார்.

OPPO இலங்கைக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லீ கருத்துத் தெரிவிக்கையில்,“OPPO  வை முன்நோக்கி கொண்டு செல்வதில் நுகர்வோர் தன்னிறைவு எப்போதும் முக்கிய பங்காற்றுகிறது. 

பாவனையாளர்களின் தேவையை மையமாகக் கொண்ட நோக்கு மற்றும் நவீன தொழில்நுட்பத்தை வடிவமைப்பது போன்றவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது. 

இவற்றினூடாக OPPO  பாவனையாளர்களுக்கு பரிபூரண அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.

அப்ளிகேஷன்களுக்கிடையேயும் கட்டமைப்பு வளங்களுக்கிடையேயும் அசல் "two-way dialogs" செயற்படுத்துவதனூடாக Hyper Boost செயற்படுகிறது. 

அப்ளிகேஷன்கள் மற்றும் கேம் புரோகிராம்களில் வெவ்வேறு நிலைமைகளையும் பாவனையாளர் செயற்பாடுகளையும் ஆராய்ந்து,ஒதுக்கீடு செய்யப்படும் வளங்களை செம்மையாக்கும் நடவடிக்கையை Hyper Boost மேற்கொள்கிறது. இதனூடாக, வன்பொருள் வளங்களின் சிறந்த பயன்பாடு,அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்களில் வேகமான துலங்கல் மற்றும் கட்டமைப்பின் சீரான செயற்பாடு போன்றன உறுதி செய்யப்படுகின்றன.

மூன்று பகுதிகளை கொண்டுள்ள Hyper Boost இனால் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு மூன்று கட்டங்களில் பரிபூரண தூண்டுதல் வழங்கப்படுகிறது. 

கட்டமைப்பு,கேம் மற்றும் அப்ளிகேஷன் போன்றன அவையாகும்.

கட்டமைப்பு என்ஜின்:Hyper Boost இனால் கட்டமைப்பு செம்மையாக்கல் Qualcomm  மற்றும் ஆநனயைவுநம போன்ற

வன்பொருட்களில் மேற்கொள்ளப்படுகிறது. கட்டமைப்பு என்ஜின் ஊடாக,50 க்கும் அதிகமான செம்மையாக்கல் தீர்வுகள் வழங்கப்படுவதுடன், 20க்கும் அதிகமான மென்பொருள் நிலைமைகள் மற்றும் 20 க்கும் அதிகமான மென்பொருள் செயற்பாடுகள் போன்றன வழங்கப்படுகின்றன.

 இவற்றினூடாக பாவனையாளர்களுக்கு மிருதுவான மற்றும் நிலையான அனுபவத்தை அனைத்து பொது நிலைகளிலும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். 

இந்த செம்மையாக்கத்தினூடாக பொது அப்ளிகேஷன்களுக்கு 31.91மூ வரை குறுகிய லோடிங் நேரத்தை கொண்டிருக்க உதவும்.

கேம் என்ஜின்: Tencent, Netease மற்றும் கேம் என்ஜின்களான Unreal, Unity மற்றும் Cocos போன்ற ஸ்மார்ட்ஃபோன் கேம் தயாரிப்பாளர்களுடன் பணியாற்றிய ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியாளராக OPPO திகழ்வதுடன்,சிறந்த 100 மொபைல் கேம்களுக்கான செம்மையாக்கங்களை மேற்கொள்ளக்கூடிய திறனை கொண்டுள்ளது. 

இந்த கேம் என்ஜின் ஊடாக,சந்தையில் காணப்படும் மிகவும் பிரபல்யம் பெற்ற 11 மொபைல் கேம்களுக்கான செம்மையாக்கங்கள் வழங்கப்படுகின்றன. இதில் “Honor of Kings”மற்றும் “PUBG”ஆகியன அடங்குகின்றன. 

இதில் காணப்படும் polymorphic வலையமைப்பு தொழில்நுட்பத்தினூடாக செலூலர் மற்றும் Wi-Fi வலையமைப்பு நாளிகைகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தக்கூடிய மதிநுட்ப ஆற்றலை கொண்டுள்ளது. 

இந்த மொத்த வலையமைப்பு latency ஊடாக விளையாடுவோருக்கு அதிகளவு ஓய்வான மற்றும் மிருதுவான கேமிங் அனுபவம் சேர்க்கப்படும்.

அப்ளிகேஷன் என்ஜின்:WeChat, Mobile Taobaoபோன்ற Mobile QQ அப்ளிகேஷன்கள்,Platform-level இலக்காகக் கொண்டு செம்மையாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த செம்மையாக்கத்தினூடாக பாவனையாளர்களின் 39 பொது பாவனை நிலைமைகளுக்கு துரிதப்படுத்தல்கள்  சேர்க்கப்படுகின்றன.

வெவ்வேறு பங்காளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கைகோர்ப்புகளினூடாக OPPO இனால் தனது சாதனங்கள்,சிப் கட்டமைப்புகள்,அப்ளிகேஷன்கள் போன்றவற்றில் இந்த செம்மையாக்கத்தை மேற்கொள்ள முடிந்துள்ளது.Hyper Boostஇனால் அன்ட்ரொயிட் ஸ்மார்ட்ஃபோன்களில் முழுமையாக மேம்படுத்தப்பட்ட பாவனையாளர் அனுபவம் சேர்க்கப்படுகிறது.

பாவனையாளர்களின் தேவைகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றில் தொடர்ச்சியான கவனத்தை செலுத்தும்

OPPO,பவ் துரிதமாக சார்ஜ் செய்தல் மற்றும் புகைப்படமெடுத்தல் போன்ற பிரிவுகளில் தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளது. 5G  மற்றும்artificial intelligence (AI) போன்ற பிரிவுகளிலும் நிறுவனம் தனது நிலையை விஸ்தரித்து

வருவதுடன்,இதனூடாக தொழில்நுட்ப புத்தாக்கத்தை மேம்படுத்தி வருகிறது. 

தொழில்நுட்ப புத்தாக்கத்தை பொறுத்தமட்டில் இந்த ஆண்டு முக்கியமான மைல் கற்களை OPPO எய்தியுள்ளது. இதில் பிரயோக தொழில்நுட்பங்களான Hyper Boost, AI ultra-clear night scene, Super VOOC fast charging, 3D structured light and TOF போன்றன

அடங்குகின்றன. மேலும்,OPPO  வெற்றிகரமாக 5G  வலையமைப்பு மற்றும் டேடா இணைப்பை தனது R15 ஸ்மார்ட்ஃபோனில் உள்ளடக்கியுள்ளது. 

தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் பாரம்பரியத்தை தனது தொழில்நுட்ப சிறப்பில் உள்வாங்கும் வகையில் OPPO  தொடர்ந்து இயங்குகிறது.

 

http://www.virakesari.lk/article/42719

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.