Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பிலிருந்து இன்று யாரெல்லாம் வெளியேறுகிறார்கள் தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பிலிருந்து இன்று யாரெல்லாம் வெளியேறுகிறார்கள் தெரியுமா?

November 3, 2018
31949704_2104964039741086_39290765237928

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து மூவர் கட்சி தாவுகிறார்கள், இருவர் கட்சி தாவுகிறார்கள், கனடாவில் 300 கோடி பேரம்… இணையத்தளத்திற்குள் நுழைந்தாலே இப்படித்தான் மிரட்டல் செய்திகளாக இருக்கின்றன என மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

50 கோடி கொடுத்தார்கள், 48 கோடி கொடுத்தார்கள் என இன்னொரு பக்கம் வயிறு எரிகிறார்கள்.

இப்படியான செய்திகளையே வாசகர்களும் பரபரப்பாக படிப்பதால், நாமும் அப்படியொரு தலைப்பிட்டுள்ளோம்.

இப்படி ஆளாளுக்கு கொளுத்திப் போட்டுக் கொண்டிருப்பதால் உண்மை எது, பொய் எது என்பது தெரியாமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் என்ன நடக்கிறது? கூட்டமைப்பில் இருந்து இன்னும் வேறு யாரெல்லாம் தாவ இருக்கிறார்கள்?

இதோ முழுமையான எக்ஸ்ரே ரிப்போர்ட்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் மூன்று உறுப்பினர்கள் கட்சி தாவ போகிறார்கள் என செய்திகள் வந்து கொண்டிருப்பதின் உண்மையான பின்னணி என்ன தெரியுமா?

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றதும், கூட்டமைப்பிற்குள் ஒரு ரெட் அலேர்ட் ஏற்படுத்தப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே நேரடியாக பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மூவருக்கும் இந்த எச்சரிக்கையை விடுத்தார். கூட்டமைப்பில் இருக்கும் மூன்று கட்சிகளையும் சேர்ந்த- தமிழரசு, புளொட், ரெலோ- தலா ஒவ்வொருவர் மறுபக்கம் தாவலாமென்ற சந்தேகம் இருக்கிறது, அவர்களை கட்டுப்படுத்தி, கவனமாக கையாளுங்கள் என்பதே அந்த செய்தி.

இதில் சுவாரஸ்யம் என்ன தெரியுமா?

கட்சி தாவலாமென சம்பந்தனால் கூறப்பட்ட மூவரில் ஒருவர்தான் வியாழேந்திரன்!

மற்ற இருவரும்- தமிழரசில் இருந்து வர்த்தக பிரமுகர் ஒருவர். மற்றவர் கிழக்கிலுள்ளவர்.

இன்னொரு பக்கத்தால் மஹிந்த தரப்பு ஒரு நகர்வை செய்தது. கூட்டமைப்பிலிருந்து உறுப்பினர்களை பிரித்தெடுக்கும் ஒப்ரேஷனை முழுமையாக கவனித்தவர் நாமல் ராஜபக்ச. ஒரு தமிழ் வர்த்தகரும் அவருடன் பணியாற்றினார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். (வடக்கு எம்.பிக்களிற்கு வலைவீசும் வர்த்தகர் இவர்தான்… புலிவேசம் போடுபவர்களை நம்பவே முடியாது போல) நாமல் இந்த ஒப்ரேஷனை பொறுப்பெடுத்ததற்கு காரணமுள்ளது. கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலர் நாமலுடன் நல்ல நெருக்கம். தோளில் கைபோட்டு மச்சான் என்று கதைக்கும் அளவிற்கு நெருக்கம்.

வியாழேந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோடீஸ்வரன் இவர்கள் மூவரையுமே முதலில் மகிந்த அணி ஸ்கெட்ச் போட்டது. வியாழேந்திரனுடன் பேசிய அதே தரப்புக்கள் கோடீஸ்வரனிற்கும் அதேவிதமாக வலைவீசியிருந்தன. ஆனால் வியாழேந்திரன் மட்டுமே வலையில் சிக்கினார். வியாழேந்திரன் எப்படி வலையில் சிக்கினார் என்பதை இன்று தமிழ்பக்கம் விரிவாக பதிவிடும்.

இவர்கள் மட்டுமல்ல, கூட்டமைப்பின் ஏனைய பல நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் வலைவீசப்பட்டது. பலரை நேரில் சென்றே நாமல் சந்தித்திருந்தார். ஆனால் அவர்கள் யாரும் கட்சி தாவ முடிவெடுக்கவில்லை. அரசியல் செய்பவர்கள் எதிர்தரப்பென்றாலும் சாதாரணமாக சந்திப்பது வழக்கமென்றளவில் அதை கடந்து செல்லலாம்.

கூட்டமைப்பில் இருந்து தாவலாமென கருதப்படும் இரண்டு உறுப்பினர்கள் தொடர்பிலும் கூட்டமைப்பு தலைமை நேற்றிலிருந்து விசேட கவனம் செலுத்தி வருகிறது. அயல்நாட்டு துதரக அதிகாரிகளும் அவர்களுடன் நேற்றிரவு தொலைபேசி வழியாக பேசி, அரசியல் வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டாம் என நேரடியாகவே குறிப்பிட்டுள்ளனர். கொஞ்சம் மிரட்டல் தொனியும் இருந்ததாக தகவல்.

இரண்டில் ஒருவர், மஹிந்த அணி சார்பு நிலையெடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தமிழ்பக்கம் வேறு மூலங்கள் வழியாக அறிந்துள்ளது. இந்த சந்திப்புக்கள், ஆலோசனைகளிற்கு பின்னதாக, நேற்றிரவு தனக்கு நெருக்கமான கட்சி பிரமுகர் ஒருவரை சென்று சந்தித்த அந்த எம்.பி, “இவர்களுடன் இதுவரை இருந்து என்னத்த கண்டனாங்கள்? சனத்துக்கு ஏதும் செய்யிறதென்றால், அமல் (வியாழேந்திரன்) எடுத்த முடிவு சரிதானே?“ என கேட்டு, திகைப்படைய வைத்துள்ளார்.

 

அவரை சமரசப்படுத்த, அந்த பிரமுகர் முயற்சித்தும் பலனிருக்கவில்லை. (அரசியல் அனுபவமற்றவர்களை, செயற்பாட்டு வரலாறுடையவர்களை தவிர்த்து, வர்த்தகர்களை மக்கள் பிரதிநிதிகளாக்காதீர்கள் என்றால் யார் கேட்கிறார்கள்!)

அந்த எம்.பி மட்டுமே இப்போதைக்கு தாவ வாய்ப்புள்ளது. அவர் தாவினால்- அவர் தமிழரசுக்கட்சி இல்லாவிட்டாலும், அவரை நியமித்ததில் தமிழரசின் பங்கும் பெரியது- தமிழரசுக்கட்சிக்கு நெருக்கடி ஏற்படும். அவர்கள் பரம்பரை தமிழரசினர் என அடிக்கடி அவர்களை கட்சி உரிமைகோரி வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் இன்னொரு விசயமும் உள்ளது.

அண்மைய குதிரை பேரங்கள் தொடர்பில் எம்முடன் பேசிய, மூத்த எம்.பியொருவர் சுவாரஸ்ய தகவலொன்றை குறிப்பிட்டார்.

மஹிந்த தரப்பு வலை விரித்துள்ள கூட்டமைப்பின் மூன்று எம்.பிக்களுமே புதியவர்கள். அரசியலில் பழையவர்கள் யாருமே பசிலின் டீலுக்கு போகமாட்டார்கள். இம்முறை மஹிந்த அணி பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல்பட்டு கொண்டிருப்பது, பசிலின் கடந்த கால டீலிங் வரலாறுதான்.

 

பசில் ராஜபக்ச தரப்பிலிருந்து பேரம் பேசும்போது பெருந்தொகை பணம் பேசுவார்கள். ஆனால், அதில் பத்தில் ஒரு பங்கு கூட கொடுக்கப்படுவதில்லை. முதற்கட்டமாக ஒரு தொகை கொடுக்கப்படும். அந்த தொகையை எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைக்க பசில் தரப்பு முயலும். உதாரணமாக 5 கோடி டீல் பேசப்படுகிறது, முதற்கட்டமாக இப்பொழுதே உமது கணக்கில் 5 இலட்சம் போடப்படுகிறது, ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்த பின்னர் படிப்படியாக மற்ற தொகை தரப்படுமென அவர்கள் சொல்வதை, நம்மாள் ஏற்றுக்கொண்டார் என வையுங்கள். அவருக்கு கிடைக்கும் மொத்த தொகையே 5 இலட்சமாகத்தான் இருக்கும். அதன் பின்னர் பணமே வராது.

ஆகவே, வியாழேந்திரன் விவகாரத்தில் 48 கோடியென்பதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்.

ஒரு சில கோடிகள் பேரம் பேசப்பட்டிருக்கலாம். ஆனால் முதற்கட்டமாக எவ்வளவு தொகைக்கு வாத்தியார் ஓஹே சொன்னார் என்பதையும் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் சல்லிக்காசும் இனி வாத்தியாருக்கு போகாது.

பசிலின் டீல் எப்படியிருக்கும் என்பதற்கு நடந்த உதாரணம் ஒன்றையே சொல்கிறோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தல். தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியாவை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் இப்படியான டீல் ஒன்றில் சிக்கினார்கள். வவுனியாவில் நேரடி பேச்சு நடந்தது. மறுமுனையில் பசில் ராஜபக்ச.

நம்மாட்கள் இருவரும் தங்களை பற்றி ஆஹா, ஓஹோவென சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் கேட்ட பசில் ராஜபக்ச, ஆளுக்கு ஐந்து இலட்சம் தரலாமென்றார். நம்மாட்களிற்கு இருக்கும் கடனோ ஏராளம். ஐந்து இலட்சம் எந்த மூலைக்கு போதும்?

தம்மைப்பற்றி இன்னும் உயர்த்தி வாசித்தார்கள்.

பசில் பத்து இலட்சம் என்றார்.

இப்படி பத்து, பதினைந்து இலட்சத்தில் நின்றால் சரிவராதென நினைத்த நம்மவர்கள் வேறுவிதமாக ஹான்டில் பண்ணினார்கள்.

“எங்களுடன் நான்கைந்து மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் அழைத்து வருவோம். நாங்கள் எல்லோரும் வந்தால் வடக்கிலிருந்து கணிசமான வாக்கு வரும். எங்களுடன் இனி வரப் போகிறார்களிற்கு நீங்கள் இப்போது சொன்ன தொகையை கொடுங்கள். அதில் பிரச்சனையில்லை. ஆனால் எங்கள் இருவருக்கும் ஆளுக்கு 3 கோடி தர வேண்..“

அவர்கள், வேண்டும் என்பதற்கு “ ..டும்“ போட்டு முடிப்பதற்கு முன்னர், பசில் மேசையை அவர்களை நோக்கி தள்ளிவிட்டு, கெட்ட வார்த்தையால் திட்டி, அடிப்பதற்கு எழுந்திருக்கிறார்கள்.

திரும்பி பார்க்காமல் ஓடிவந்த நமது மாகாணசபை உறுப்பினர்கள் இருவரும் உச்சபட்சம் தேசியம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்!

செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சரவணபவன், சிறிதரன் என எழும் செய்திகளில் துளியும் உண்மையில்லை. இணையத்தளங்களில் வெளியாகும் இப்படியான செய்திகளை வாசகர்கள் நம்ப வேண்டியதில்லை. சம்பந்தர் இணைந்தார் என்று செய்தி வெளியிடவும் ஆட்கள் இருப்பார்கள்.

இப்போதைய நிலைமையில் இரண்டு உறுப்பினர்களிலேயே கூட்டமைப்பிற்கு கொஞ்சம் டவுட். சுமார் நான்கு உறுப்பினர்களுடன் இடைத்தரகர்கள் மூலம் தற்போது வரை பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அணிமாறும் நிலவரம் எதுவும் இந்த செய்தியை பதிவேற்றும் வரை இல்லை.

இப்படியான அரசியல் குழப்பமான சமயங்களில் சரியான செய்திகளை மத்திரம் மக்கள் நம்புவது அவசியம். அத்துடன், உங்கள் பகுதி அரசியல் தலைவர்கள் வழிதவறாமல் அழுத்தம் கொடுத்து வைப்பது அதைவிட அத்தியாவசியமானது!

 

 

http://www.pagetamil.com/22037/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.