Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாதிப்பிற்கு காரணம் மஹிந்த ;விஜித் விஜதமுனி சொய்சா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாதிப்பிற்கு காரணம் மஹிந்த ;விஜித் விஜதமுனி சொய்சா

 

ஜனவரி எட்டாம் திகதி அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எதிர்பார்ப்புடன் கூட்டு அரசாங்கத்தினை ஸ்தாபித்திருந்தாலும் அதில் தோல்வியடைந்து விட்டோம் என ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவளித்து பாராளுமன்றத்தில் ஆளும் வரையில் அமர்ந்த முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவருமான பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜிதமுனி சொய்ஸா வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். 

IMG_7071.JPG

கேள்வி:- தங்களுடைய தந்தையார் முதல் தாங்கள் வரையில் சுதந்திரக் கட்சிக்காரர்களாக செயற்பட்டு வந்திருந்த நிலையில் திடீரென கடந்த செவ்வாயன்று(18) ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தரப்புக்குச் சென்றமைக்கான காரணம் என்ன?

பதில்:- ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு நான் சில காரணங்களை மையப்படுத்தியே தீர்மானித்திருந்தேன். ஜனவரி எட்டாம் திகதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகின்ற போது அவருக்கு மக்கள் அளித்த ஆணையை நிறைவேற்றுவதற்காகவே ஐ.தே.க.வுடன் நாங்கள் இணைந்திருந்தோம். அதன்பின்னர் பொதுத்தேர்தல் நடைபெற்றதைத்தொடர்ந்தும் இணைந்தே பயணித்திருந்தோம்.

ஆனால் திடீரென அந்த இணைந்த பயணத்தில் முறிவு ஏற்பட்டமையானது எமக்கு அதிர்ச்சியளித்தது. எமக்கு மக்கள் வழங்கிய ஆணையினை புறந்தள்ளாது முன்னெடுப்பதை மையப்படுத்தியே நெருக்கடிகளின் பின்னர் அமைந்துள்ள அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானம் எடுத்திருந்தேன்.

கேள்வி:- அவ்வாறாயின் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை பிரதமராக ஜனாதிபதி மைத்திரி நியமித்தது ஸ்தாபித்த அமைச்சரவையில் தாங்களும் பங்கேற்றிருந்தீர்கள் அல்லவா?

பதில்:- ஆம் தனிப்பட்ட முறையில் நான் அந்த தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டேனா இல்லையா என்பது வேறு. ஆனால் கட்சியின் தலைமையினாலும் மத்திய குழுவாலும்  ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்காக எனது ஆதரவை வழங்கியிருந்தேன். 

கேள்வி:- அவ்வளவு தூரம் கட்சிக்காக எதனையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்த நீங்கள் தற்போது அத்தகைய மனநிலையை மாற்றியுள்ளீர்களே?

பதில்:- இல்லை நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவில்லை. தற்போதைய சூழலில் அக்கட்சி தலைமையில் அமையும் அராசங்கத்திற்கு ஆதரவளிப்பதாகவே கூறியுள்ளேன்.

ஐ.தே.க.வுக்கும் எனக்கும் எந்த “டீலும்” இல்லை. பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையின் போதும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் முடிவையே எடுத்துள்ளேன். ஐ.தே.க.வில் இணைந்ததாக கருத வேண்டாம் என்று அனைத்து ஐ.தே.க.வின் உறுப்பினர்களுக்கு நன்கு கேட்கும் படியாக அவர்களைப் பார்த்தே இந்தக் கருத்தினையே வெளிப்படுத்தியிருந்தேன். நான் சுதந்திரக்கட்சிக்காரனாக செயற்பட்டிருந்தேன். செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். எதிர்காலத்திலும் செயற்பட எதிர்பார்த்துள்ளேன்.

கேள்வி:- சுதந்திரக்கட்சியின் தலைவர் உட்பட சிரேஷ்ட கனிஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் ஐ.தே.க.வின் கொள்கையுடன் இணங்கி பணியாற்றி முடியாது என்று காரணம் கூறுகின்றபோது தங்களுக்கு இணைந்து பணியாற்றுவதில் பிரச்சினைகள் இல்லையா?

பதில்:- சுதந்திரக்கட்சியின் கொள்கை ஐ.தே.க.வின் கொள்கை என தனித்தனியாக எமது நாட்டில் எங்குள்ளது என்று முதலில் எனக்கு கூறுங்கள் பார்க்கலாம். தற்காலத்தில் தமக்கென்ற கொள்கைகளை வகுத்து அதனை மையப்படுத்தி எந்தவொரு நாட்டிற்கும் தனித்துவமாக செயற்பட முடியாது. சிறுசிறு தீவுகளுக்கு கூட அவ்வாறான வரையறைகளைக் கொண்டு செயற்பட முடியாது. குறிப்பாக பொருளாதாரக் கொள்கைகளை மட்டுப்படுத்தி வகுக்க முடியாது. எமது நாட்டில் கல்வி தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் முன்னேற்றமடைந்து சர்வதேச தரத்தில் சிந்திக்கின்ற பிரஜைகள் இருக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் வல்லரசு மற்றும் மேற்குலக நாடுகளுடன் தொடர்புகளைப் பேணாது இருக்க முடியாது. நாங்கள் விவசாயிகள். அதற்காக அரிசிரூபவ் குரக்கன் உள்ளிட்ட எமது விளைபொருட்களை மட்டுமா நுகருகின்றோம். 

சர்வதேச வர்த்தகம், சந்தைவாய்ப்பு, கடற்போக்குவரத்து, ஐ.நா. அமைப்புக்கள்ரூபவ் நிறுவனங்கள் என ஜனநாயக பூகோளத்துடனேயே எமது நாடு பயணித்துக்கொண்டிருக்கின்றது. ஆகவே அத்தகையதொரு சங்கிலியிலிருந்து எம்மால் விலகமுடியாது. கிராமிய சிந்தனைகளுடன் நாட்டின் தேசிய பொருளாதாரத்தினை முன்னெடுக்க முடியாது. எந்த தலைவராவது சர்வதேசத்திலிருந்து தனித்து பயணிக்கலாம என்று கூறமுடியுமா? ஒருபோதுமில்லை.

கேள்வி:- அப்படியென்றால் சு.க.விற்கும், ஐ.தே.க.விற்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் இல்லையென்று கூறவிளைகின்றீர்களா?

பதில்:- அரசியலை கடந்து உண்மையை பேசுவோமாகவிருந்தால்ரூபவ் திறந்த பொருளாதரத்திற்கு சந்திரிகாவே வழிவகுக்கின்றார் என்றார்கள். இவருடைய காலத்தில் தான் ஸ்ரீலங்கா டெலிகொம், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் தனியார் மயப்படுத்தப்பட்டன. டெலிகொம் தனியார் மயப்படுத்தப்பட்ட போது தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன. ஆனால் தற்போது தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் முன்னோக்கி சென்றிருப்பதற்கு அன்று எடுத்த தீர்மானமே காரணமாகின்றது.

அதேநேரம் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தினை எமிரேட்ஸ்க்கு வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசப்பற்றாளர்கள் கூச்சலிட்டார்கள். மீளப்பெற்றுக்கொண்டார்கள். இவற்றில் என்ன  நடந்தது? நாட்டிற்கு எயார்லைன்ஸ்ஸை நடத்தும் சக்தி இன்மையால் மக்களே அதற்கான இழப்பீட்டினை செலுத்த வேண்டியவர்களாகியுள்ளனர்.

விமானநிலையத்திலும் சரி துறைமுகத்திலும் சரி முனையமொன்றைக் கூட உருவாக்க முடியாத நிலைமையில் தான் இருக்கின்றோம். இவ்வாறான யதார்த்தத்தினை அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். நாட்டின் நிலைமையினை மாற்ற வேண்டுமாகவிருந்தால் சந்திரிகா வழிவகுத்த திறந்த பொருளாதாரத்திற்கே செல்ல வேண்டும். சந்திரிகாவின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்தார். அவர் கூட இந்த கொள்கையை மாற்றியமைக்கவில்லை. சோமவதி பிரதேசத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கும் காலி முகத்திடலில் ஷங்கிரில்லா நிறுவனத்திற்கும் நிலங்களை திறந்த பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையிலேயே வழங்கினார். அந்த உண்மைகளை வெளிப்படையாக யாரும் கூறுவதில்லை. ஆகவே திறந்த பொருளாதாரக் கொள்கையின்றி நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.

கேள்வி:- ஐ.தே.க. அரசாங்கத்திற்கு ஆதரவளித்துச் செயற்படுவதால் நெருக்கடிகளின்றி சுதந்திரக்கட்சியில் நீடிக்க முடியும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- எனது பிரதேசத்தில் அப்புத்தளை எனும் சிறிய நகரத்தில் உள்ள ஹோட்டலொன்றுக்கு அண்மையில் சென்றிருந்தேன். அதன்போது அந்த முகாமையாளர் சுற்றுலாப்பயணிகளின் முற்பதிவுகள் இரத்துச் செய்யப்படுவதாக கூறினார். குறிப்பாக அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்த காலத்தில் 600வரையிலான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் முற்பதிவுகளை இரத்துச் செய்துள்ளார்கள். 25ஹோட்டல்கள் கொண்ட சிறு சுற்றுலா நகரத்திலேயே நிலைமை இவ்வாறு இருந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் சட்டவாக்கம்  நீதித்துறை ஆகியன சமாந்தரமாக பயணிக்காமையின் காரணமாக உருவான நெருக்கடிக்கு இழப்பீடுகளை வழங்குவது மைத்திரிபாலவோ  மஹிந்த ராஜபக்ஷவோ ரணில் விக்கிரமசிங்கவோ இல்லை. சாதாரண பொதுமக்களே ஆவர்.

ஆகவே இத்தகைய பின்னணிகளின் அடிப்படையில் தான் ஐ.தே.க.தலைமையில் அமையும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்தேன். எதிர்காலத்தில் அவ்வாறான ஆதரவை முழுமையாக வழங்கவுள்ளேன். எனினும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சார்ந்தவனே.  கட்சியையும் தலைவராக உள்ள ஜனாதிபதியையும் நான் அர்ப்பணிப்புடன் ஆதரிப்பதோடு பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுவேன்.

கடந்த காலத்தில் நாங்கள் அரசியலில் கட்சியின் அடிப்படையில் முட்டிமோதி உயிரிழப்புக்களைக் கூட பார்த்திருக்கின்றோம். பெரும்பான்மை சிங்கள மக்கள் கட்சிகளின் அடிப்படையில் பிரிந்திருந்தார்கள். நாட்டு மக்கள் இனரீதியாக பிரிந்திருந்தார்கள். சுதந்திரத்தின் பின்னரான எழுபது வருடங்களின் இவ்வாறான பிரிவினைகளால் மிகுந்த மோசமான அனுபவங்களைக் கொண்டிருக்கின்றவர்களாக உள்ளோம். எனது நாற்பது வருட அரசியல் காலத்தில் ஜனநாயகத்தின் அடிப்படையில் பல அரசியல் கட்சிகள் தோற்றம்பெற்றமையால் இவ்வாறு மோசமான நிலைமைக்கு முகங்கொடுத்திருக்கின்றோம். இனரீதியாக பிரிவடைந்தமையால் முப்பது வருட யுத்தமும் நடைபெற்றுள்ளது. ஆகவே இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக அரசியலில் நல்லிணக்கம் அவசியமாக இருந்தது.

அவ்வாறான சமயத்தில் தான் மைத்திரி-ரணில் இணைவு நடைபெற்றது. அரசியல் நல்லிணக்கத்தினை எதிர்பார்த்திருந்த நாம் அந்த இணைவை வரவேற்றிருந்தோம். அரசியல் நல்லிணக்கம் ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக இனங்களுக்கிடையிலான தேசிய நல்லிணக்கம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். இருப்பினும் தற்போது பார்க்கையில் துரதிஷ்டவசமாக அரசியல் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது போய்விட்டது.

கேள்வி:- ஐ.தே.க.தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் ஊடாக எதனைச் சாதிக்கலாம் எனக் கருதுகின்றீர்கள்?

பதில்:- இணைந்து பயணிப்போம். தனியாக போராடுவோம். ஜனவரி எட்டில் மக்கள் அளித்த ஆணையை முழுமையாக நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து எதிர்வரும் காலத்தில் செயற்படுவதையே கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கேள்வி:- ஐ.தே.க.வுடன் கூட்டிணைந்த பயணத்தினை மேற்கொண்டமையால் தான் சுதந்திரக்கட்சிக்கு பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர்களால் கூறப்படுகின்றதோடு கடந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளும் அதனை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றதல்லவா?

பதில்;:- சுதந்திரக்கட்சியின் தலைவருக்கு பிராஜாவுரிமை பறிக்கப்பட்டு மிகமோசமாக படுதோல்வியைச் சந்தித்திருந்தது. கட்சியின் மொத்த பாராளுமன்ற ஆசனங்கள் எட்டு வரையில் குறைந்திருந்தது. இருப்பினும் பிற்காலத்தில் சுதந்திரக் கட்சி மீண்டெழுந்திருந்தது. அவ்வாறிருக்கையில் மஹிந்த ராஜபக்ஷ தாமரை மொட்டுச் சின்னத்திலான பொதுஜன முன்னணியை ஆரம்பித்தமை தான் சுதந்திரக் கட்சிக்கு ஏற்படுத்தபட்ட மிகப்பெரும் பாதிப்புக்கு காரணமாகும்.

கேள்வி:- சுதந்திரக்கட்சியை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக கூறியுள்ளீர்களே. தற்போதைய நிலையில் மீண்டும் அக்கட்சியை பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியுமென்கின்றீர்களா?

பதில்:- மைத்திரிபால சிறிசேனவால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் உள்ளிட்ட அனைவரையும் சுதந்திரக்கட்சியின் கீழாக இணைக்க வேண்டும். சுதந்திரக்கட்சிக்கும் அது தலைமையில் அமையும் கூட்டணிக்கும் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்க வேண்டும். அவரே தீர்மானங்களை எடுப்பவராக இருக்க வேண்டும். அவருக்கு ஆதரவளிப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். நான்னகந்து தலைமைகளுக்கு கீழாக எம்மால் செயற்பட முடியாது. ஒருதலைமைத்துவத்தின் கீழ் கூட்டிணைந்து செயற்படுதில் எமக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. 

கேள்வி:- தங்களுடைய கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன முன்னணியில் உறுப்புரிமையை பெற்றுள்ளரா?

பதில்:- பொதுஜன முன்னணியில் அவர் உறுப்புரிமையைப் பெற்றார். அவ்வாறு பெற்றால் பாராளுமன்ற உறுப்பரிமை இயல்பாகவே இல்லாது போய்விடும் என்ற பிரச்சினை தற்போது எழுந்துள்ளதையடுத்து சுதந்திரக்கட்சிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். சாதாரணமாக சுடலையை அண்மிக்கும்போது பலருக்கு அச்சமேற்படுவது இயல்பு. அவ்வாறு ஏற்படுகின்றபோது சிலர் கெட்டவார்த்தைகளை கூறியவாறு செல்வார்கள். சிலர் மந்திரங்களைக் கூறிக்கொண்டு செல்வார்கள். அதுபோன்ற நிலைமை தான் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ளது.

கேள்வி:- சுதந்திரக்;கட்சியும் பொதுஜன முன்னணியும் இணைந்து எதிர்வரும் காலத்தில் பரந்து பட்ட கூட்டணியொன்றை அமைப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்:- சுதந்திரகட்சி தலைமையில் பரந்துபட்ட கூட்டணி அமைக்க வேண்டியது அவசியமாகின்றது. அடிப்படைவாதிகள் எமது அணியில் இருக்கின்றமையால் சிறுபான்மை தரப்புக்கள் சுதந்திரகட்சியிடமிருந்து தூரமாகின்ற நிலைமைகள் இருக்கின்றன. ஆகவே அந்த நிலைமைகளை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. பொதுஜனமுன்னணியில் இணைந்தவர்கள் தற்போது மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வந்துள்ளார்கள். ஆகவே அதனுடன் கூட்டமைப்பது பற்றி எதிர்காலத்திலேயே சிந்திக்க வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும் சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமே ஆட்சிப்பொறுப்புக்களை அதிகமாக வகித்துள்ளது. எதிர்காலத்திலும் பரந்துபட்ட கூட்டணியின்றி எந்தக்கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாது. ஆகவே பரந்துபட்ட கூட்டணி அமைகின்றமை அவசியமாகும். அவ்வாறான கூட்டணி அமைகின்ற போது அது சுதந்திரகட்சியின் தலைமைத்துவத்திலேயே உருவாக வேண்டும்.

கேள்வி:- ஐ.தே.க.வும் பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்க முனைந்துவருகின்ற நிலையில் சுதந்திரக்கட்சிக்கு எதிர்கால அரசியல் பாரிய சவால் ஏற்படும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- எதிர்கால அரசியல் மிகுந்த போட்டிமிக்கதாகவே அமையும். அந்த சவாலுக்கு முகங்கொடுத்தேயாக வேண்டும். ஐ.தே.க.வானது கடந்த 17ஆம் திகதி காலி முகத்திடலில் மக்களை அணி திரட்டியிருந்தது. ஐ.தே.க. தனிக்கட்சியாகவே அந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. இன, மத, குல பேதமின்றி நடைபெற்ற ஒரு பேரணியாகும். ஐ.தே.க.விடத்தில் அரசாங்க பலம் இல்லை. அக்கட்சியின் அடிமட்டத்தில் சரியான அமைப்பாளர்கள் இல்லை. ஆயிரம் மக்களை கூட ஒன்றிணைக்க முடியாதிருந்த தருணத்திலும் அக்கட்சியினர் நாட்டைக்  ட்டிக்கொடுக்கின்றார்கள், சர்வதேசத்திற்கு விற்பனை செய்கின்றார்கள் என்ற கருத்துக்கள் கிராமங்களில் தைக்கப்பட்டிருந்த நிலையிலும் தான் காலி முகத்திடலில் அந்தக்கட்சிக்காக ருந்திரளானவர்கள் அணிதிரண்டனர். ஆகவே இவ்விடயத்தினை இலகுவாக பார்க்க முடியாது. வ்வாறான மக்கள் சக்திக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பதை எமது கட்சி தீர்மானிக்க வேண்டும். த்திய குழுக்கூட்டத்தில் இதுபற்றிக் கவனம் செலுத்தப்பட வேண்டும். வரலாற்றில் முக்கியமான ரணியாக ஐ.தே.க.வினால் மேற்கொள்ளப்பட்ட அப்பேரணிக்கு வித்திட்டவர்களும் நாங்கள் அல்லவா.

கேள்வி:- ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- இந்த நாட்டிற்கும், அரசியலுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் அவ்வாறு யோசனை செய்யப்படும் பிரேரணையை நன்கு ஆராய்ந்தே அது குறித்து தீர்மானம் எடுப்பேன். மேலும் இந்த நாட்டின் இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளன என்பது எனது நிலைப்பாடாகும். அதுதொடர்பிலான யோசனைகள் வருகின்றபோது தேசிய ரீதியில் சிந்தித்து உரிய தீர்மானங்களை எடுக்கத் தவறப்போவதில்லை.

 

http://www.virakesari.lk/article/46833

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.