Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணமோசடி செய்த ஆலோசனை நிறுவனத்தின் இயக்குனர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணமோசடி செய்த ஆலோசனை நிறுவனத்தின் இயக்குனர் கைது

April 3, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

இளையோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முன்பாக முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரே நேற்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் மத்திய கல்லூரிக்கும் வேம்படி பெண்கள் பாடசாலைக்கும் இடைப்பட்ட சந்தியில் உள்ள வீடொன்றில் வழிகாட்டல் நிறுவனம் நடத்தி வருகின்ற யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்ப்பாணத்தில் இளையோருக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்துள்ளார் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அந்த நிறுவனத்திடம் பல லட்சம் ரூபா பணத்தைச் செலுத்தி வேலைவாய்ப்புக் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் இதுரு தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அத்துடன் நேற்றும் (02) நபர் ஒருவர் யாழ்ப்பாணம் காவல்நிலைய பெருங்குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், நிறுவனத்தின் இயக்குனர் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

 

http://globaltamilnews.net/2019/117504/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண மோசடி தொடர்பில் கல்வி ஆலோசனை நிறுவன இயக்குனருக்கு விளக்கமறியல்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

jail-1.jpg?resize=714%2C400

வெளிநாட்டில் உயர் கல்வி  வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 7 லட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா மற்றும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்று மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் மத்திய கல்லூரிக்கும் வேம்படி பெண்கள் பாடசாலைக்கும் இடைப்பட்ட  சந்தியில் உள்ள வீடொன்றில் வழிகாட்டல்  நிறுவனம் நடத்தி வருகிறார்.

“யாழ்ப்பாணத்தில் இளையோருக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி பெற்றுத் தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்துள்ளார் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அந்த நிறுவனத்திடம் பல லட்சம் ரூபா பணத்தைச் செலுத்தி வெளிநாட்டு கல்வி வாய்ப்புக் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை காவல்துறை பிரிவில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அந்த முறைப்பாடுகளின் பிரகாரம்,  நிறுவனத்தின் இயக்குனர் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்டவரிடம்  காவல்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்தனர். சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை முற்படுத்தப்பட்டார்.

” சந்தேகநபர் வெளிநாட்டு கல்வி வாய்ப்பையும் அதற்கான நுழைவிசைவு (VISA) பெற்றுத்தருவதாகவும் முறைப்பாட்டாளரிடம் 7 லட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபாவையும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்றுள்ளார். எனினும் சில மாதங்களாகியும் வெளிநாட்டுக் கல்விக்கான அனுமதியையும் நுழைவிசைவையும் பெற்றுக்கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்துள்ளார்” என்று  காவல்துறையினர் மன்றுரைத்தனர்.

“முறைப்பாட்டாளருக்கு 6 லட்சம் ரூபா பணத்தை சந்தேகநபர் வழங்கவேண்டும். அதனை மீளச் செலுத்துவதற்கு அவர் தயாராகவுள்ளார். எனவே முறைப்பாட்டாளருக்கு பணத்தை மீள வழங்க தவணை வழங்கி பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சந்தேகநபரின் சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.

முறைப்பாட்டாளரின் பணத்தை முழுமையாக செலுத்தும்வரை சந்தேகநபருக்கு பிணை வழங்க முடியாது என அறிவித்த நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், சந்தேகநபரை வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

 

http://globaltamilnews.net/2019/117615/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.