Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழாம்!

Featured Replies

 
 
Image

யாழ்ப்பாணத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கொழும்பிலிருந்து இன்று மாலை யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினருக்கு யாழ் கோட்டையில் வரவேற்பளிக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து விமானம் மூலம் பலாலி வந்த பிரதமர் அங்கிருந்து ஹெலிகொப்டரில் யாழ் கோட்டையில் வந்து இறங்கினார்

மேற்படி வரவேற்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்..

யாழில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே பிரதமர் தலைமை யிலான அமைச்சர்கள் குழுவொன்று இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தது.

இதற்கமைய யாழ் மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்கும் நிகழ்வு யாழ் மாநகர மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இக்கொடுப்பனவுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிவைக்க உள்ளார்.

அதே போன்று வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கெலன்தோட்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளையும் உத்தியோகபூர்வமாக உரிமையாளர்களிடம் கையளிக்க உள்ளார்.

இந்த இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதற்காக யாழ் வந்துள்ள பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினர் யாழ் ஜெற்விங் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

பிரதமரின் யாழ் விஐயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரதமர் தங்கியுள்ள இடம் மற்றும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் இடம்பெறுகின்ற இடங்களிலும் அதே போல அவர் பயணிக்கும் இடங்களிலும் பெருமளவிலான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/121194

  • தொடங்கியவர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழிற்கு விஜயம்: நாளை பல்வேறு நிகழ்வுகள்

பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் அமைச்சர்கள் குழுவும் விஜயம் செய்துள்ளது.

கொழும்பிலிருந்து இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம்செய்த பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினருக்கு யாழ். கோட்டையில் வரவேற்பளிக்கப்பட்டது.

மேற்படி வரவேற்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த விஜயத்தின்போது, யாழ். மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு யாழ். மாநகர மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இக்கொடுப்பனவுகளை பிரதமர் வழங்கி வைக்கவுள்ளார்.

அதேபோன்று வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கெலன் தோட்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளையும் உத்தியோகபூர்வமாக உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார்.

இதனிடையே, பிரதமரின் யாழ். விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரதமர் தங்கியுள்ள இடம் மற்றும் அவர் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் இடம்பெறுகின்ற பிரதேசங்களிலும் பெருமளவிலான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

PM-Ranil-Visit-Jaffna-1.jpg

http://athavannews.com/பிரதமர்-ரணில்-விக்ரமசிங்/

  • தொடங்கியவர்

இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றும் முயற்சிகள் நடக்கின்றன ரணில்

 

Ranil-Wickramasinghe-700x450.jpg

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர், நாட்டில் இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளில் சிலர் இறங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இன மோதல்களின் பின்னணியில் குழு ஒன்று உள்ளமையை விசாரணைகள் ஊடாக அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்துப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடா்பாக நாங்கள் முன்னதாகவே அறிந்திருக்கவில்லை. அதற்கு சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.

இந்த தீவிரவாதத்தை ஒழிக்க சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் தற்போது சூழல் நன்றாக இருக்கின்றது.

வாரியபொல உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இந்த தாக்குதல் சம்பவங்கள் திட்டமிட்ட சதி என்றே நான் கூறுகின்றேன்.

இனவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பிடிக்க சிலர் நினைக்கிறார்கள். அதேபோல் நீர்கொழும்பு பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. அதற்கு காரணம் வதந்தி. இவ்வாறு பல தாக்குதல் திட்டங்கள் தீட்டப்பட்ட நிலையில் அவற்றை நாங்கள் முறியடித்திருக்கின்றோம்.

தீவிரவாதிகளுக்கு மனிதாபிமானம் என்பதே கிடையாது. ஆகவே இவ்வாறான தாக்குதல்களுக்கு இனிமேலும் இடமளிக்கக்கூடாது. தீவிரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சி கண்டுள்ளதாக சிலர் கூறினார்கள். ஆனால் நாங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாடசாலைகளை திறந்திருக்கின்றோம். நாட்டின் பாதுகாப்புக்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றாா்கள்.

அவா்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது. தீவிரவாதிகளின் பெயரால் இனவாதம் தலைதூக்குவதைத் தடுக்கவேண்டும். இனவாதம் மீண்டும் தலைதூக்கினால் நாடும் அழிந்துவிடும். நாமும் அழிந்துவிடுவோம். இந்த தாக்குதல்களினால் நாடு பாரிய பின்னடைவுகளைச் சந்தித்திருக்கின்றது” என்று அவர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/இனங்களுக்கிடையில்-மோதலை/

  • தொடங்கியவர்

யாழ்.கொழும்புத்துறையில் வீட்டுத்திட்டத்தை பயனாளிகளிடம் கையளித்தார் பிரதமர்!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கெலன் தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்ட 16 புதிய வீடுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கையளித்துள்ளார்.

பிரதமர் தலைமையிலான வடக்கு அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மேற்படி பகுதியில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைக்கப்பட்டன.

இந்த வீடுகளை கையளிப்பதற்காக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் இன்று இந்த வீட்டு திட்டத்துக்கான அடிக்கல்லைத் திரைநீக்கம் செய்து வைத்ததுடன் வீடுகளையும் நாடா வெட்டி திறந்து வைத்து வீட்டு உபகரணங்களையும் பயனாளிகளிடம் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன . தயாகமகே, விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா , தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அரச அதிகாரிகள்,பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/121226

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.