Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் இலங்கையின்நீதிக்கான நம்பிக்கைகள் மறைந்து போகின்றன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் இலங்கையின்நீதிக்கான நம்பிக்கைகள் மறைந்து போகின்றன

“நியூயார்க் டைம்ஸ்

முஜிப் மஷால்

காணாமல்போனவர்களின் குடும்பங்கள் சிறியவீதியோரங்களில்  அமர்ந்திருக்கின்றன அல்லது இலங்கையின் அழிவடைந்த  வடக்கின்  கிராமங்களில்  தகவல்கள் அல்லது கருத்துக்களை திரட்டுகின்றன. , அவர்கள் நாட்டின் கொடூரமான  உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன பல்லாயிரக்கணக்கானோரின் புகைப்படங்களை  அணைத்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும், பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் அதிகாரிகளிடம் ஒரு கேள்வியைமட்டுமே கேட்கிறார்கள்: எங்கள் பிள்ளைகள்  எங்கே?

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்ப்பாட்டங்கள் தடையின்றி தொடர்கின்றன,

missing-per.jpg

போரின் மனித இழப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கு ஒரு அரசாங்கத்தால் அனுமதிக்கப்படுகிறது.ஏற்கனவேவிரக்தியுற்றிருந்தநிலையில் இப்போது ஆர்ப்பாட்டங்கள் நம்பிக்கையற்றவகையாகத் தெரிகிறது. இலங்கையில் ஒரு புதிய அரசாங்கம் உள்ளது, அது நினைவுகூர்வதை க் கூட எதிர்ப்பின் செயலாக மாற்றிவிட்டது.கோத்தாபய ராஜபக்ச  2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து, அதிகாரிகள் செய்தி ஊடகங்களை சோதனை செய்தனர், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களை துன்புறுத்தி விசாரித்தனர்,

மனித உரிமை வழக்கறிஞர்களையும் எழுத்தாளர்களையும் சிறைக்கு இழுத்துச் சென்று பல மாதங்கள் குற்றச்சாட்டுக்களின் ன்றி தடுத்து வைத்தனர்என்று சர்வதேச மன்னிப்புச்சபை  மற்றும் மனித உரிமைகள்கண்காணிப்பகம்  போன்ற உரிமைகளுக்கான  கண்காணிப்புக்அமைப்புகள்  கூறுகின்றன.

போர்க்கால துஷ்பிரயோகங்களைப் ஆராயும்  விசாரணையாளர்கள்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள் அல்லது பயணத் தடைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், கடந்த கால குற்றங்களுக்கான பொறுப்புணர்வை அரசாங்கம் ஒரு அவமதிப்பு என்று கருதுகிறது.தெளிவான செய்தியாகவுள்ளது.


அது தற்செயல் நிகழ்வு அல்ல. இலங்கையின் புதிய அரசாங்கம் 2009 ல் மூன்று தசாப்த கால யுத்தத்தை ஒரு  முடிவுக்குக் கொண்டுவந்த அதே ஆட்களால்  வழிநடத்தப்படுகிறது, பின்னர் அரை தசாப்தத்திற்குப் பிறகு அதைப் பற்றிய விவாதத்தைத் தூண்டியது.

“எங்களுக்கு இனிமேல்  நம்பிக்கை இல்லை,” என்று பலவந்தமாக  காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கான சங்கத்தின் செயலாளர் லீலா தேவி ஆனந்தநட ராஜா கூறினார், 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் அவரது 34 வயது மகன் காணாமல் போயிருந்தார்.. “அதனால்தான் இந்த பிரச்சினையில் எங்களுக்கு சர்வதேச தலையீடு தேவை என்று நாங்கள் நினைக்கிறோம். “என்று அவர் கூறியுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை புதன்கிழமை கூடும் போது இலங்கையின் மனித உரிமைகள்  நிலைமை மோசமடைவது நிகழ்ச்சி நிரலில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக  இருக்கும்.

missing-perso1-300x132.jpg

போரின் போது அனைத்து தரப்பினரும் இழைத்த  போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையுடன் ஒத்துழைக்க இலங்கை சமீபத்தில் கைவிடப்பட்ட உறுதிப்பாட்டிற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று அரசாங்கத்தின் விமர்சகர்கள் விரும்புகிறார்கள். அத்துடன் பெளத்த  சிங்கள இன பெரும்பான்மையினரால் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கத்தின் கடும் போக்கை கட்டுப்படுத்துவது  தொடர்பாகவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராஜபக்ச அரசாங்கம் வடக்கில் பெரும்பான்மையான இந்து தமிழர்கள் உட்பட இன மற்றும் மத சிறுபான்மையினரை அந்நியப்படுத்துவதாகவும் பாகுபாடு காட்டுவதாகவும் மனித உரிமைகள் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன. இத்தகைய கொள்கைகள் உள்நாட்டுப் போரை முதன்முதலில்ஊக்குவித்த  அதே பதட்டங்களைத் தூண்டுகின்றன, தமிழ் கிளர்ச்சியாளர்கள் ஒடுக்குமுறைக்குஎதிராக   பிரிந்து சென்ற ஒரு அரசை நிறுவ முயற்சிப்பதன் மூலம் பதிலளிக்க முயன்றனர்

மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிசேல்  ப ச்லெட்டின் கண்டுபிடிப்புகளை ஐ.நா பேரவை  பரிசீலிக்கும், அவர் பெ ப்ரவரி 9 மதிப்பீட்டில் நாட்டின்செல்  திசையைப் பற்றி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிவ்ருந்தார்.மேலும் இந்த விடயத்தை  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பும் வாய்ப்பையும்  வெளிப்படுத்தியிருந்தார்.
“கடந்த ஆண்டின் முன்னேற்றங்கள் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான சூழலை அடிப்படையாகக் கொண்டுள்ளன, ஜனநாயக பரிசீலனைகள் மற்றும் சமப்படுத்தல்கள்  மற்றும் குடிமைக்கான  வெளி  போன்றவை படிப்படியாக அழிந்துவிட்டன., மேலும் அபாயகரமான முறையில்  விலக்கி  வைத்தல் மற்றும் பெரும்பான்மை பற்றிய பேச்சு மீண்டும் உருவாக இடமளித்தது ” என்று திருமதி ப ச்லெட் அறிக்கையில் எழுதியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் கருத்துத் தெரிவித்தபோது , இலங்கையின் வெளிவிவகாரஅமைச்சர்  தினேஷ் குணவர்தன,, “இலங்கைக்கு எதிராக செயற் படும் சக்திகளின் ” வேலையென குறிப்பிட்டதுடன் , நாட்டின் இறைமையைஐ. நா. வின்  அறிக்கை மீறுவதாகவும் அறிவித்தார். அத்துடன் அறிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக  தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று ம் குணவர்த் தன உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார், ஏனெனில் இது “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளிடையே மன உறுதியை இழக்கச் செய்துவிடும்”.
“பேரவைஅளவுகோல்களை  வைத்திருக்க வேண்டும்,” என்று ம் அவர் கூறியுள்ளார்.
ஒரு குறுகிய காலத்திற்கு, இலங்கை, மியான்மருடன் சேர்ந்து, மோதலின் நிழல்களிலிருந்து ஒரு ஜனநாயகமாகமலர்ந்து   வருவதற்கான வெற்றிக் கதையை கொண்டதாக பார்க்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில், சாத்தியமில்லாத அரசியல் கூட்டணியொன்று , 2009 ல் தமிழ் கிளர்ச்சியை நசுக்கிய ஜ னாதிபதி மகி ந்த ராஜபக்ச வை  தோற்கடித்தது.
போர்க்கால துஷ்பிரயோகங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு உறுதியளித்த புதிய அரசாங்கம், போர்க்கால குறைகளை நிவர்த்தி செய்யத் தொடங்கியது டன்  சிவில் சமூகம் தோன்றுவதற்கான வெளியையும் ஏற்படுத்தியது.பேரழிவுகரமான போரின் சில காயங்களை குணப்படுத்தும் பாதையில் நாட்டை நிறுத்தியது. போரின் போது காணாமல் போனவர்களின் குடும்பங்கள் என்ன நடந்தது என்று கணக்கிடுவதற்கு ஆரம்பித்தன.”கண்காணிப்பு சரியான  முறையில் நிறுத்தப்பட்டிருக்க வில்லை. அவர்கள் இராணுவமயமாக்கலைஇல்லாமல் செய்திருக்கவில்லை  , ”என்று இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின்  முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் நாதன் கூறியுள்ளார்.

ambiga.jpg

அந்தக் காலகட்டத்தின் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து கூறிய  அவர் . “ஆனால் இடம் இருந்ததால், சிவில் சமூகம் அதற்கு  சவால் விடுப்பதற்கு  துணிந்தது.”எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அடுத்த நான்கு ஆண்டுகளும்  கூட்டணிக்குள் எற்பட்ட குழப்பமான மோதல்காலை கொண்டதாக அமைந்தது., இது அரசாங்கத்தை முடக்கியது, 2019 ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற  பெரிய பயங்கரவாத தாக்குதலில்   250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். குண்டுவெடிப்பிற்கு   அனுமதித்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு அந்த முரண்பாடு பங்களித்தது.
அச்சத்தின் அந்த தருணத்தில், கோத்தாபய ராஜபக்ச  தன்னை நாட்டுக்குத் தேவையான பலமானவராகக் வெளிப்படுத்தியிருந்தார்.., அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது சகோதரரும் , முன்னாள் ஜனாதிபதியுமான  மகிந்த  பிரதமரானார்.

மேலெழுந்து வந்த  சிவில்வெளி “இப்போது போய்விட்டது” என்று அம்பிகா  சற் குண  நாதன் கூறினார், சமீபத்தில் மியான்மர் முழு அளவிலான இராணுவ சர்வாதிகாரத்திற்கு திரும்புவது ஒரு எச்சரிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.
” சில நேரங்களில் சிறுவிடயங்களில்  திருப்தி அடைவதும், அவர்கள் இணக்கப்பாடுகளை நிறைவேற்றாதபோது  அரசாங்கத்தை முக்கிய கவனத்திற்கு  கொண்டுவராததும்பாடமாக இருக்கிறது. – அது செயற்படாது,” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னாள் இராணுவ அதிகாரிகளை  தனது அரசாங்கத்தில்  கொண்டிருந்த  கோத்தாபய ராஜபக்ச கடந்த கால குற்றங்கள் தொடர்பான விசாரணை முயற்சிகளை பாதுகாப்பு அதிகாரிகளின்மீதான  “அரசியல் பழிவாங்கல்” என்று குறிப்பிட்டதாக  மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் சிங்களவர்களுக்கு சாதகமான ஆனால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கொள்கைகளை உள்வாங்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். முஸ்லிம்களின் எதிர்ப்புக்களுக்குமத்தியில்  கோவிட் -19 ல் இறந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்வது, , இது அவர்களின் நம்பிக்கையை மதிக்கவில்லை என்றும், கடும் விமர்சனங்கள்  மேலெழுந்திருந்தன. மருத்துவ நிபுணர்களிடமிருந்தும், உலக சுகாதார அமைப்பினரிடமிருந்தும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட போதிலும், அடக்கம்செய்வது  ஒரு சுகாதார ரீதியான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி அரசாங்கம் இந்த நடைமுறையைதொடர்ந்தது.[  இப்பொது அடக்கத்துக்கு அனுமதி ]
கோவிட் -19 நோயால் 20 நாள் மகன் ஒரு மருத்துவமனையில் இறந்திருந்த நிலையில் எம்.எஸ்.எம் ஃபாஹிம்,என்பவர்  ஆட்சேபனை தெரிவித்தபோதும்  அரசாங்கம் தகனம்  செய்தது  என்று அவர் கூறியுள்ளார்.

“நான் ஒரு மகனுக்காக  ஆறு ஆண்டுகள் காத்திருந்தேன்,” என்று  பாஹிம் கூறினார். “அவர் இறந்தபோது, நான் மிகவும் கவலையுடன்  இருந்தேன், அவர் தகனம் செய்யப்பட்டபோது, அது எனக்கு விட யங்களை மோசமாக்கியது. என் மகனிடம் முறையாக  விடைபெறக்கூட என்னால் முடியவில்லை. ”என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


நாட்டின் செல் திசைக்கான அச்சதின்  பெரும்பகுதியானது  பேச்சு சுதந்திரம்மற்றும்  கடந்தகால அட்டூழியங்களை நினைவுகூருவதுகுறித்து  சகிப்புணர்வின்மை என்பனவற்றிலிருந்து உருவாகிறது. காணாமல் போனவர்களுக்கான தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களையும், நீதிக்கான அழைப்புகளையும் கொடூரமான பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் ஒரு கிளர்ச்சியைத் தோற்கடித்த ஒரு இராணுவத்திற்கான அவமரியாதை என்று கோத்தாபய ராஜபக்ச  வர்ணிக்கிறார்

gotabaya-77.jpg

 

https://thinakkural.lk/article/114506

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.