"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 125
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 125 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"
அவளுடைய கணவர் கோவலன், நம்பிக்கையற்ற நம்பிக்கையுடன் திரும்பி வந்தபோது, அவள் ஒரு புன்னகையுடன், 'என் காற்சிலம்பை எடுத்துக்கொள்' என்று அவனுக்கு ஆறுதல் வழங்கினாள். இந்தக் காவியத்தின் ஆசிரியர் கண்ணகியை, கணவனின் நன்மை தீமையிலும் அல்லது இன்பத்திலும் துன்பத்திலும் அல்லது எதுவாக இருந்தாலும், அவருடன் நிற்கத் தயாராக இருக்கும் ஒரு அழகான இளம் பெண்ணாக, சித்தரிக்க விரும்பியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இருவரும் பாண்டிய இராச்சியத்தின் பண்டைய தலைநகரான மதுரைக்குச் சென்று, அங்கே, எதாவது ஒரு தொழிலைத் தொடங்குவதற்காக, கொலுசை அல்லாது சலங்கையை விற்று பணம் பெறச் சென்றனர். கவுந்தி அடிகள் இருவரையும் அழைத்துச் சென்று, இடைக் குலமடந்தையாகிய மாதரி என்னும் விருந்தோம்பலில் சிறந்த பெண் வீட்டில்,
'ஈங்கு, என்னொடு போந்த இளங் கொடி நங்கை-தன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்:
கடுங் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு
நடுங்கு துயர் எய்தி, நாப் புலர வாடி,
தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி,'
"இங்கு என்னொடு வந்த இளநங்கை மென்மை மிக்கவள். அவள் காலடிகள் மண்ணை மிதித்தது இல்லை. அத்தகையவள் காதலனோடு கடுமையான வெய்யிலில் கொடுமையான காட்டு வழியில் கணவனுடன் நடந்தாள். நாப் புலர வாடி வருந்தினாள். கணவனுடன் உற்ற துயரில் பங்கு கொண்டாள். தன் துயரை அவள் காணாமல் அவனுக்காக அவன் துயர் துடைப்பதற்காக உடன் வந்தவள்." என்று கூறி, அவளின் பராமரிப்பில் ஒப்படைத்தார். அதன் பின், கவுந்தி முனிவர், அங்கிருந்து தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்தார். கோவலன் அதன் பின், கண்ணகியை மாதரியுடன் விட்டுவிட்டு, தனியாக மதுரை நகருக்குச் சென்றார்.
கோவலன், இடையர் மன்றங்களைக் கடந்து மாநகரில் நடந்து சென்று பீடிகைத் தெருவாகிய கடைவிதியை வந்து அடைந்தான். அங்கே, அரச பொற்கொல்லன் ஒருவனை கோவலன் சந்தித்தான். அரசியின் காலணியை ஏற்கனவே களவாடிய அந்த அரச பொற்கொல்லன், தான் தப்புவதற்காக, ராணியின் சிலம்பு திருடிய திருடன், இவனே என்று கோவலனை மன்னனுக்கு கூறினான். எந்த விசாரணையும் செய்யாமல், தனது பொற்கொல்லனை நம்பி, அவசர அவசரமாக மன்னன் கோவலனின் தலையை வெட்ட உத்தரவிட்டான். கோவலன் உடனடியாக கொல்லப்பட்டான்.
வெற்று நிலத்தில் அரிதாகவே நடமாடும் அளவுக்கு செல்வம் நிறைந்த, நல்லொழுக்கமுள்ள இளம் பெண் கண்ணகி, “யாரும் படாத துயரம் உற்றேன்; இத்தகைய துயரத்துக்குக் காரணமான செய்தியைக் கூறுகின்றேன். கேளுங்கள்; என் கணவன் கள்வன் அல்லன் என் சிலம்பைக் கொள்ளவே இக் கொலை செய்தனர்; அதுதான் நடந்தது” என கோபமடைந்து, மன்னனை நேரில் சந்தித்தாள். மன்னன் “இள நங்கையே நீ யார்?” கண்ணிரோடு கலங்குவது ஏன்?” என்று வினவினான். அவள் அதிர்ந்திடும் மொழியில் தான் யார் என்பதையும், தன் வழக்கு யாது என்பதையும் அடுக்கி வைத்துக் கூறினாள்.
“ஆராயாது தீர்ப்புக் கூறிய அரசன் நீ சோழ நாட்டு மகள் நான் ; புறாவிற்காகத் தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச் சோழன் ஆண்ட நாடு என்னுடைய நாடு; ஆவின் கண்ணிர் தன் நெஞ்சு சுட்டது. மணியின் நா அவனைத் தட்டி எழுப்பியது. தன் ஒரே மகனைத் தெருவில் கிடத்தித் தேர் கொண்டு உயிர் போக்கிய உயர்ந்தோன் மனுநீதிச் சோழன்; இவர்கள் ஆண்ட நாடு சோழ நாடு: புகார்நகரம் எமது ஊர்”. என்றாள்.
ஒருநாள் மாலைவேளை, இளவரசன் தற்செயலாக, ஒரு கன்றின்மேல் தேரை ஏற்றிவிட்டான். கன்றும் அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. அக்கன்றின் தாயான பசு கண்களில் நீர்சோர, மன்னன் கட்டியிருந்த ஆராய்ச்சிமணியின் கயிற்றைப் பிடித்துபெரும் ஒலி எழுமாறு அடித்தது. அதைக்கண்டு மன்னன் துக்கமடைந்தான்.
மன்னனின் அமைச்சர்கள், இளவரசன் மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், மன்னனின் பயன்பாட்டிற்காக மட்டுமே இருந்த தெருவில் தான் சவாரி செய்ததாகவும், அதிக எண்ணிக்கையிலான வீரர்களுடன் சென்றதாகவும் விளக்கினர். அது மட்டும் அல்ல, சக்கரத்தின் கீழ் கன்று இறக்க வாய்ப்பில்லாத வகையில், அதிக சத்தம் இருக்கும் வகையில், தேர் மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்கள் மன்னனுக்கு கூறி, இந்தக் கொலை இளவரசன் வேண்டும் என்று செய்தது அல்ல என்று விளங்கப்படுத்தினர். இருப்பினும், மனுநீதி கண்ட சோழன், தனது அன்புக்குரிய ஒரே மகனை சக்கரத்தின் கீழ் படுக்க வைத்து நெரித்துக் கொன்றான். அதனால் தானும், அந்த தாய் பசுவின் வலியை அனுபவிக்க, உணர முடியும் என்று நம்பினான். என்றாலும் அங்கே கண்ணகி இந்த முழு விவரத்தையும் கொடுக்கவில்லை. அதற்கு அவளுக்கு நேரம் இல்லை. ஆனால் காவேரிப்பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட , முற்காலச் சோழர்களின் தலைநகரில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களையும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறாள்.
Part: 125 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"
When her husband, Kovalan, came dejected with forlorn hope, she offered him with a smile: ‘take my anklet’ (Silambu in Tamil and Hallamba in Sinhala). The author of the epic must have intended to portray Kannaki as a charming young lady who is ready to stand with her husband in the woes and in the weal irrespective of his merit or demerit. Both of them went to Madurai, the ancient capital of the Pandiyan Kingdom, to sell the anklet to get some money, perhaps, to start a business. Kavunti, a sage, accompanied both, and placed them in the care of a shepherd woman, Matari, and the sage Kavunti continued on her way. Kovalan, leaving Kannaki with Matari, went alone to the town of Madurai.
The Royal goldsmith happened to meet Kovalan, and framed Kovalan as the thief who stole the queen consort’s anklet which was earlier stolen by the Royal goldsmith. The king in hasty decision gave order to behead him, and Kovalan was killed.
Kannaki, the virtuous young lady who rarely walked on bare earth got angry, and confronted the king in person. The king inquired who she was, and the reason for her to be there. She introduced her that she came from the city of Puhar where ruled kings before; a king relieved the distress of a bird and another king sacrificed his dear and only son, grieved at the sight of a cow whose eyes were filled with pearl-like tears and who rang the bell for justice. The king’s ministers explained that the prince was riding the chariot adorned with bells along the street which was exclusively for the use of the king, and went with greater number of soldiers. The ministers were trying to convince the king that the chariot was adorned with bells so that there would have quite a lot of noise so that there was no possibility for calf to get killed under the wheel. The prince went with a large number of soldiers so that the killing wouldn’t have been deliberate act of the prince. They also indicated that the street was for the kingly use only. Still the king, Manu Neethi Kannda Cholan, killed his dear and only son under the wheel so that he could suffer the same pain as the mother cow. Kannaki didn’t give this full detail, but she makes terse references to these two incidents with two ancient kings of Puhar.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 126 தொடரும் / Will follow
துளி/DROP: 2078 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 125
https://www.facebook.com/groups/978753388866632/posts/34172313542417189/?
By
kandiah Thillaivinayagalingam ·