Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாவது பதவிக்காலத்துக்கு தயாராகும் கோதாபய- கேணல் ஆர்.ஹரிஹரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது பதவிக்காலத்துக்கு தயாராகும் கோதாபய- கேணல் ஆர்.ஹரிஹரன்

 நரகத்துக்கான பாதை நன்னோக்கத்துடனேயே வகுக்கப்படுகிறது ‘ என்ற மணிகொழி கோதாபய அரசாங்கம் நேர்மையான நோக்ககத்துடன் செயற்படுவதாக உரிமைகோரிக்கொள்கின்ற போதிலும், அதன் மோசமான செயற்பாடுகளுக்கு பிரயோகிக்கப்படக்கூடியதாகும்.’ செயல்வீரர்’ என்றும் ( புலிகள் இயக்கத்தை ஒழித்தமைக்காக)’ ஒழித்துக்கட்டுபவர்’ என்றும் புகழப்படுகின்ற ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தேர்தலுக்கு முன்னதாக அவர் உறுதியளித்த ‘ சுபிட்சமும் சீர்மையும் கொண்ட எதிர்காலத்தை ‘ நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதில் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார்.

  ‘ ஒழித்துக்கட்டுபவரின்’ முயற்சிகளில் பெருமளவானவற்றை தற்போது தொடருகின்ற கொவிட் –19 பெருந்தொற்று பாதித்துவிட்டது என்பது வெளிப்படையானது.இடையறாது பரவும் தொற்றுநோய் கடந்த மாதம் 300,000 என்ற எல்லையைத் தாண்டிவிட்டது.ஆனால், அந்த மாதத்தில் தினசரி சராசரி புதிய தொற்று 1504 மே 26 ஏற்பட்ட மிகவும் உயர்ந்த சராசரி தொற்றின் 47 சதவீதமாக இருந்தது என்பதுஒரு சிறிய ஆறுதலாகும். தொற்றுநோயினால் முடங்கிப்போன சுற்றுலாத்துறை, வெளிநாட்டு அனுப்பீடுகள் மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் ஆகியவை இன்னமும்  மீட்சியடையவேண்டியிருக்கிறது.இது மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருப்பதுடன் அத்தியாவசிய பாவனைப்பொருட்களின் வலைகளை வானளாவ உயர்த்தியிருக்கிறது.
Ym-32rDX_400x400-300x300.jpg
 
  ஆனால், தொற்றுநோயோ அல்லது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளோ  மூழ்கிக்கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்பதற்கும் சுற்றுச்சூழலுக்கு நேசமான சமுதாயமொன்றை உருவாக்குவதற்கும் என்று கூறிக்கொண்டு கடுமையான சில நடவடிகக்கைகளை ஜனாதிபதி அறிமுகப்படுத்துவதை தடுக்கவில்லை. சேதன பசளை பயன்பாட்டை பிரபல்யப்படுத்துவதற்கு இரசாயன பசளைகள் இறக்குமதி தடை, தொலைபேசிகள், வாகனங்கள் இறக்குமதி தடை ஆகியவை இதில் அடங்கும்.
  ஜனாதிபதி கோதாபய தனக்கு விருப்பமான இராணுவ அதிகாரிகளை மேற்பார்வை கமிட்டிகளின் தலைவர்களாகவும் நிர்வாக பதவிகளுக்கும் நியமித்துக்கொண்டு ஏற்கெனவே நாட்டை நிருவகித்துக்கொண்டுவருகிறார். கிறமினல் நடவடிக்கைகளுக்காக  குற்றவாளிகளாகக் காணப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு மன்னிப்பு அளித்திருக்கும் ஜனாதிபதி அத்தகைய நடவடிக்கைகளுக்காக ஆயுதப்படைகளின் அதிகாரிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுகிறார். இவையெல்லாம் அவரது தலைமைத்துவத்தின் கீழ்  நிருவாகம் இராணுவமயப்படுத்தப்படுகின்றது என்ற பரந்தளவு சந்தேகத்தை கிளப்பியிருக்கின்றது.
  இத்தகைய சூழ்நிைலைகளின் கீழ், ஆகஸ்டில் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும்  கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் ஒன்றும் ஆச்சரியத்தை தரவில்லை.அதை இன்னொரு இராணுவமயமாக்கல் முயற்சியாக பலரும் நோக்குகிறார்கள்.இராணுவமயமாக்கல் இப்போது மதிப்புக்குரிய கல்வித்துறைக்குள் பிரவேசிக்கிறது.இந்த சட்டமூலம் கடேற் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் ஒரு இராணுவ பயிற்சி நிறுவனமாக விளங்கும் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை முழுமையான ஒரு பல்கலைக்கழகமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.சட்டம், பொறியியல், முகாமைத்துவம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் கல்வி கற்பதற்கும் மாணவர்களை இப்பல்கலைக்கழகத்தில் அனுமதிப்பதை சட்டமூலம் விதந்துரைக்கிறது.இந்த பல்கலைக்கழகம் இராணுவ அதிகாரிகளை கூடுதலாகக்கொண்ட சபையினால் நிருவகிக்கப்படும்.ஒன்பது பேரைக்கொண்ட ஆளுநர் சபையில்  ஐந்துபேர் தற்போது சேவையில் இருக்கும் படை அதிகாரிகளாக இருப்பர்.சட்ட மூலத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் இந்த பல்கலைக்கழகம் ஒரு  இராணுவ நிறுவனம் போன்று நிருவகிக்கப்படும் என்பதை காட்டுகின்றன.கொத்தலாவலை பல்கலைக்கழகம் தனியாக இயங்கும்.1978 பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் வருகின்ற நாட்டின் 16 பல்கலைக்கழகங்களைப் போன்று இது இராது.
    கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு கல்வியுலகில் பரவலான எதிர்ப்பு கிழம்பியிருக்கிறது. பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர்கள் சங்கம், நாட்டில் உள்ள மாணவரகள் சங்கங்களில் செல்வாக்குமிக்க ஒன்றான பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவரகள் சம்மேளனம் ஆகியவை இந்த சட்டமூலத்துக்கு எதிராக குரலெழுப்பியிருக்கின்றன.மாத ஆரம்பத்தில் இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் உறுப்பினர்களால் சட்டமூலத்துக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட இயக்கத்தை அடக்குவதற்கு பொலிசார் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கினர்.ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் சிலர் கொவி்ட் சுகாதார ஒழுங்குவிதிகளை மீறியதாக பொலிசாரால் கைதுசெய்யப்பட்டதையடுத்து அந்த ஒழுங்கு விதிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிளம்பின.
  பொருளாதாரம் ஒரு நெருக்கடியில் இருந்து இன்னொரு நெருக்கடிக்கு நொண்டி நகர்ந்துகொண்டிருக்கிறது. உலக நாடுகளினதும் நிறுவனங்களினதும் கடன் திருப்பிச்செலுத்தும் ஆற்றலை மதிப்பீடு செய்கின்ற சர்வதேச அமைப்பான ‘ மூடீஸ் ‘ கடந்த மாதம் இலங்கை பொருளாதார நிலைவரம் பற்றி இன்னொரு கவலைக்குரிய எதிர்வுகூறலைச் செய்திருக்கிறது.பிணையில்லாமல் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதில் இலங்கைக்கு இருக்க்கூடிய ஆற்றலை மூடீஸ் படியிறக்கம் செய்திருக்கிறது.இலங்கையின் வெளிநாட்டு நாணயக்கையிருப்பு நிலைவரம் நாடு கடன்களை மீளச்செலுத்துவதில் தவணை தவறக்கூடிய ஆபத்தை தோற்றுவிக்கக்கூடியதாகவுள்ளது என்று மூடீஸ் கூறியிருக்கிறது.  ஜூலை இறுதியில் முதிர்ச்சியடையவிரருந்த 100 கோடி டொலர்கள் சர்வதேச பிணைமுறிகளை செலுத்திமுடிக்க அரசாங்கம் கடுமையாக பாடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் மூடீஸின்  இந்த நடவடிக்கையை அநாவசியமானது என்றும் தவறான நேரத்திலானது என்றும் இலங்கை நிதியமைச்சு வர்ணித்திருக்கிறது.ஆனால், முதிர்ச்சியடைந்த சர்வதேச பிணைமுறிகளை செலுத்தி முடிப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகளை நிறைவுசெய்துவிட்டதாக இலங்கை கூறியிருக்கிறது.” கெடுதியை எதிர்வுகூறும் சகலரையும் சந்தேகிப்பவர்களையும் உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் தவறென்று இலங்கை நிரூபித்துக்காட்டியிருக்கிறது.கடன்களை மதித்து திருப்பிச்செலுத்தும் மாசுமறுவற்ற நற்பெயரை இலங்கை தொடர்ந்து காப்பாற்றுகிறது ” என்று மூலதனச்சந்தை அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறியிருக்கிறார்.ஆனால், இலங்கை ஒரு நிதி நெருக்கடியில் இருந்து இன்னொரு நெருக்கடிக்கு கொஞ்சக்காலத்துக்கு நகரவேண்டியிருக்கிறது போல் தெரிகிறது.
    இலங்கையில் முதலீட்டுச் சூழல் பற்றிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை மட்டமான அபிப்பிராயத்தையே வெளியிட்டிருக்கிறது.” மிகவும் உயர்ந்த கொடுக்கல் வாங்கல்களுடனான வாணிக செயற்பாடுகளுக்கு இலங்கை சவாலான ஒரு இடமாகும். முன்னறிந்து கூறமுடியாத பொருளாதாரக் கொள்கைச் சூழல், அரசாங்க சேவைகளின் செயற்திறனற்ற தன்மை, அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்வனவு நடைமுறைகளினால் முதலீட்டுச் சூழல் மோசமாக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தங்கள் மறுதலிக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள், அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் சலுகை காட்டுதல், சட்டப்படியானதல்லாவிட்டாலும் நடப்பில் உண்மையாக இருக்கின்ற அல்லது சட்ப்படியான பறிமுதல் ஆகியவை தொடர்பில் முதலீட்டாளர்கள் விசனம் வெளியி்ட்டிருக்கிறார்கள்.இலங்கையில் செயற்படுகின்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசாங்க சேவையில் நிலவுகின்ற ஊழல் குறிப்பிடத்தக்க ஒரு சவாலாகவும் வெளிநாட்டு முதலீடுகள் மீது நிர்ப்பந்தங்களைக் கொடுப்பதாகவும் இருக்கிறது.ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு போதுமான சட்டங்களும் ஒழுங்கு விதிகளும் இருக்கின்ற அதேவேளை, அவற்றின் நடைமுறைப்படுத்தல் பலவீனமானதாகவும் ஒழுங்கற்றதாகவும் பாரபட்சமானதாகவும் இருக்கிறது.அமெரிக்க பங்குதாரர்களும் முதலீடு செய்யக்கூடியவர்களும் பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களிலும் அரசாங்கத்தின் கொள்வனவுகளிலும் ஊழல் பற்றி குறிப்பாக கவலை வெளியிட்டுள்ளனர்.இந்த பிரச்சினைகளை கவனிப்பதாக அரசாங்கம் உறுதிகூறியிருக்கின்றது.ஆனால், கொவிட்டுக்கு எதிரான நடவடிக்கைகளே முன்னுரிமை பெறுகின்றன. பிரதான கட்சிகள் அதிகாரத்துக்கு வந்த பின்னரோ அல்லது அதிகாரத்தை இழந்த பின்னரோ ஒன்றுக்கு எதிராக மற்றையது ஊழல் வழக்குகளை தொடர்ந்து முன்னெடுப்பதில்லை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
   இத்தகைய இருளார்ந்த சூழ்நிலையில், ஜனாதிபதியின் இளைய சகோதரரும் ராஜபக்ச குடும்பத்தின் ஐந்தாவது உறுப்பினருமான பசில் ராஜபக்ச நிதியமைச்சராக பதவியேற்றிருக்கிறார். ஆளும் பொதுஜன பெரமுனவின் பிரதான மதியூகி என்று கூறப்படுகின்ற பசில், ஏற்கெனவே பொருளாதாரக் கொள்கை தொடக்கம் சுற்றுச்சூழல் மற்றும் அத்தியாவசிய சேவைகள் வரை பெரும்பாலும் சகல ஜனாதிபதி செயலணிக் குழுக்களினதும் தலைவராக பணியாற்றுகிறார். அமைச்சராக அவரது நியமனம் திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு அவர் வகிக்கின்ற செல்வாக்குமிக்க அரசியல் பாத்திரத்தை முறைசார்ந்ததாக மாற்றுவதாக மாத்திரமே அமைகிறது.அவர் அமெரிக்க பிரஜையாகவும் இருப்பது பற்றி யாருமே ( எதிர்க்கட்சியும் கூட) கவலைப்பட்டதாக தெரியவில்லை.
   நிதி எதுவும் இல்லாத நிதியமைச்சர் என்று தனது புதிய பதவியை பாராளுமன்றத்தில் பசில் ராஜபக்ச கிண்டலடித்தார்.அது உண்மையான ஒரு கூற்றேயாகும். அரசியல்ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பட்ஜட் ஒன்றை சமர்ப்பிக்கவேண்டிய சிக்கலான பணி அவருக்கு இருக்கிறது.” நிதியைத் திரட்டுவதற்கு பல்வேறுபட்ட வட்டாரங்களுடன் முறைசாரா தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்று அரசாங்க வட்டாரங்கள் கூறுவதாக சண்டே ரைம்ஸ் சூசகமாக தெரிவித்திருக்கிறது.”  முக்கியமான வெளிநாட்டு பிரமுகர் ஒருவர் கொழும்புக்கு விஜயம் செய்யக்கூடிய சாத்தியமும் இருக்கிறது.அவரது நாட்டிடமிருந்து கூடுதல் பணத்தைப் பெறுவது குறித்து பேச்சுக்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
  அதேவேளை, வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைத்திருக்கும் இலங்கையர்கள் டிசம்பர் 31க்கு முன்னர் அந்த பணத்தை நாட்டுக்குள் கொண்டுவந்தால்,அவர்களுக்கு மன்னிப்பு  வழங்குவதற்கான சட்டமூலம் ஒன்றை பசில் தனது முதல் நடவடிக்கையாக பாராளுமன்றத்துக்கு கொண்டுவருகிறார்.வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைத்திருப்போர் வரி அறவிடத்தக்க தங்களது பணத்தொகையை வெளியிட்டால் விசாரணைகளில் இருந்தோ அல்லது வழக்கு தொடுக்கப்படுவதிலிருந்தோ அவர்கள் பாதுகாக்கப்படுவர்.
   ஆனால், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தனது பொருளாதார சுபிட்ச இலக்கை தற்போதைய பதவிக்காலத்தில் அடைய தன்னால் இயலாமல்போகும்  என்று யதார்த்தமாக சிந்திக்கிறார் போலத்தெரிகிறது.அரசாங்க மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அண்மையில் சந்தித்த அவர் தனது முன்னுரிமைக்குரிய விவகாரங்கள் குறித்து பேசினார்.தனது இலக்குகளை அடைய தனக்கு மேலும் ஐந்து வருடங்கள் இருக்கின்றன என்று கூறிய ஜனாதிபதி இரண்டாவது பதவிக்காலத்துக்கும் தேர்தலில் போட்டியிடவிருப்பதை சூசகமாக வெளிப்படுத்தினார்.பசில் ராஜபக்ச கபினெட் அமைச்சராக்கப்பட்ட பின்னர் இரவாரங்கள் கடந்து ஜனாதிபதி இதைக்கூறியிருப்பது  பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.இலங்கையின் பெருவாரியான பிரச்சினைகளுக்கு முடிவைக்காண்பதற்கு இரண்டாவது பதவிக்காலம் கூட போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். இனங்களக்கு இடையிலான நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு, மனித உரிமைகள் மீறல்களுக்கான பொறுப்புக்கூறுதல் என்று பல பிரச்சினைகள் இருக்கின்றன.
   இத்தகைய பின்புலத்தில் ‘ த பிளேக் ‘ என்ற தனது நூலில் பிரெஞ்சு அறிஞரான அல்பேர்ட் கேமஸ் கூறிய வார்த்தைகளே நினைவுக்கு வருகின்றன.
   அவர் சொன்னார்: “மொத்தத்தில் மனிதர்களிடம் கெட்ட தன்மைகளைக் காட்டிலும் நல்ல தன்மைகளே அதிகம். அது எப்படியானாலும் அது அல்ல உண்மையான பிரச்சினை. அவர்கள் கிட்டத்தட்ட அறியாமை நிறைந்தவர்களாக உள்ளனர். அதைத்தான் நாம் குற்றம் அல்லது சிறந்த பண்பு எனக் கருதவும் செய்கிறோம். இதில் மிகவும் சகிக்க முடியாத குற்றம் என்னவெனில் ஒன்று குறித்து அறியாமை உடையவர்களும் கூட எல்லாம் தெரிந்தவர்களைப் போலக் காட்டிக் கொள்வதும், அதனூடாகக் கொலை செய்வதற்குத் தாங்கள் உரிமை உடையவர்கள் என உரிமை கோருவதும்தான்.”
  சுலபமாக விடுபட இயலாமல் போகக்கூடிய ” சகிக்க இயலாத இந்த குற்றத்துக்குள் ” இலங்கை அகப்பட்டிருக்கிறது போல் தோன்றுகிறது

 

https://thinakkural.lk/article/131468

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.