Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்ப்பொருள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெய்ப்பொருள்

ஆய்வுப்பணிகள்/ஆராய்ச்சி என்பது, இளம் மாணாக்கர்களுக்கு துவக்கப்பள்ளியிலேயே அறிமுகப்படுத்தப்படுகின்றன அமெரிக்காவில்.https://www.soinc.org/ ஆண்டுதோறும் எங்கள் வீட்டுப் பிள்ளைகள்கூட இதில் பங்கேற்று வருகின்றனர். அப்படித்தான் 1997ஆம் ஆண்டு, ஐடகோ மாநிலத்தைச் சார்ந்த 14 வய்து மாணவன் நேதன் ஷோனர் என்பவர் ஓர் ஆய்வுப் பணியை மேற்கொண்டு முதற்பரிசினைத் தட்டிச் சென்றார்.

அவர் எடுத்துக் கொண்ட பொருள் Dihydrogen monoxide என்பது பற்றியதாகும். கீழ்க்கண்ட தன் முன்மொழிவுகளுக்கு உரிய சான்று(evidences)களைக் கொடுத்து விரிவுரை நிகழ்த்தினார்.

---இந்த வேதிப்பொருளானது வாயு நிலையில் இருக்கும் போது புண்களை உண்டாக்கும்.

---உலோகங்களுடன் சேரும் போது அரிப்புக்கு வித்திடுகின்றது.

---ஆண்டுதோறும் எண்ணற்றவர்களின் மரணத்துக்குக் காரணமாக இருக்கின்றது.

---அமிலமழை, நம் உடலில் இருக்கும் கட்டிகள் முதலானவற்றில் இருக்கின்றது.

---அதிகமான சிறுநீர்கழிப்பு, வயிற்று உப்பல் போன்றவற்றுக்கும் வித்திடுகின்றது.

---மிகையாகிப் போகும் போது நம் உயிர்க்கும் கேடாகும்.

இப்படியான இந்த வேதிப்பொருள் பாவனையை நாம் ஏன் தடை செய்யக் கூடாது? தடை செய்வதன் மூலம், ஏற்படும் சேதாரங்களை, மரணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க முடியாவிட்டாலும் கூட ஓரளவுக்காவது மட்டுப்படுத்தலாம்தானே? சர்வே எடுக்கப்பட்டது.

86% வாக்குகள், இது டாக்சிக் கெமிக்கல்தாம், நச்சுப்பொருள்தாம், தடை செய்யப்படுவதற்கு ஆதரவாக வாக்குகள் பதிந்தன. மாணவன் ஆய்வு முடிவுகளை எடுத்துக் கொண்டு மேடையேறினான். ஆய்வு முடிவுகளைப் படிப்படியாக விளக்கி எடுத்துக் கூறினான். கடைசியில் சொன்னான், என் ஆய்வு என்பது Dihydrogen monoxide என்பது பற்றியல்ல. என் ஆய்வு என்பது, என் ஆய்வின் தன்மையைப் பற்றியது என்று சொல்லி,  Dihydrogen monoxide என்பது வேறொன்றுமல்ல, தண்ணீர்தான். நம் உடலே நீரால் ஆனதுதானே? அதைத் தடை செய்யலாகுமா?? அரங்கம் எழுந்துநின்று கரவொலி எழுப்பியது.

இதேபோலத்தான் நேற்று தம்பி ஒருவர் ஒரு நறுக்கினை(flyer) அனுப்பி இருந்தார். அதில், சில பல உணவுப் பொருட்கள் பட்டியல் இடப்பட்டு இருந்தன. அவையாவும், நம் உடலுக்குத் தேவையான சத்துகள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கவல்ல உணவுகள் என்பதாக அந்த ஃப்ளையர் சொல்கின்றது. உண்மைதாம். Phytates (phytic acid) in whole grains, seeds, legumes, some nuts—can decrease the absorption of iron, zinc, magnesium, and calcium. எதற்கு இப்படியான தகவலைச் சொல்கின்றனர்? ஓர் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக, இப்படியான அதிர்ச்சிகரமான, அச்சுறுத்தக்கூடிய தகவலைச் சொல்வதன் வழி, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதும் பணம் பார்ப்பதுமாக கண்ட்டெட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நான் ஒரு விநாடி கூடத் தயங்கவில்லை. “தண்ணீரில் ஊறவைத்தோ, வேகவைத்தோ தின்றால் அந்த பைட்டிக் ஆசிட் அடிபட்டுப் போகும், ஒரு தீங்குமில்லை” எனும் தகவலை அனுப்பி வைத்தேன்.

மாணவன் நேதன் ஷோனருக்கு வருவோம். In recognition of his experiment, journalist James K. Glassman coined the term "Zohnerism" to refer to "the use of a true fact to lead a scientifically and mathematically ignorant public to a false conclusion".

ஊடகங்களிலும், பிரச்சார மேடைகளிலும், தலைவர்கள் பேச்சிலும் வளைக்கப்பட்டதும் திரிக்கப்பட்டதும் மறைக்கப்பட்டதுமாகப் பலவும் இருக்கும். This occurs a lot more often than you think, especially when politicians, conspiracy theorists, etc., use proven facts to persuade people into believing false claims.நாடலையும் தேடலையும் நாம்தான் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.  டாக்‌ஷோக்கள், பட்டிமண்டபங்கள், வெட்டி நறுக்கப்பட்ட வீடியோத் துண்டுகள், யுடியூப்காணொலிகள் என எங்கும் இப்படியான வேலைகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. Be aware of Zohnerism.

https://en.wikipedia.org/wiki/Dihydrogen_monoxide_parody

பணிவுடன் பழமைபேசி

https://maniyinpakkam.blogspot.com/2022/04/blog-post_27.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.