Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரிக்கொள்கைக்கு எதிராக வங்கி, வைத்தியசாலை, பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரிக்கொள்கைக்கு எதிராக வங்கி, வைத்தியசாலை, பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

By VISHNU

26 JAN, 2023 | 04:16 PM
image

அரசாங்கத்தின் சட்டவிரோதமான தன்னிச்சையான அடக்கு முறை கொண்ட வரிக்கொள்கைக்கு எதிராக ஜனவரி 23 முதல் 27 வரை கறுப்பு வாரம் எனும் தொனிப் பொருளில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், அரச பல்வைத்திய சங்கம், இணைந்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று வியாழக்கிழமை (26) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG_6966.JPG

அரசாங்கத்தல் நிறைவேற்றபட்ட வரிக் கொள்கையை எதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், அரச பல்வைத்திய சங்கம், இணைந்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து  காந்திபூங்காவிற்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட  உத்தியோகத்தர்கள் ஒன்று திரண்டனர்.

IMG_6982.JPG

இதில் வானுயரும் வரிச்சுமை, நாட்டை விட்டகலும் தொழில் வல்லுனர்கள், நண்பர்களுக்கு வரிச்சலுகை, தொழில் வல்லுனர்களுக்கு வரிச்சுமை, வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கவும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒருமணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாராக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

IMG_6985.JPG

https://www.virakesari.lk/article/146764

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தொழில் வல்லுனர்கள் ஒன்றிணைந்து கறுப்பு வாரம் அனுஷ்டிப்பு

By VISHNU

26 JAN, 2023 | 04:09 PM
image

இலங்கை முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளடங்கலாக தொழில் வல்லுனர்களின் ஒன்றிணைந்த கூட்டணியினரால் கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

IMG_3916.jpg

நீதியற்ற, தன்னிச்சையான முறையில் மக்களிடமிருந்து  கொள்ளையிடப்படும் வரிப்பணத்திற்கெதிராகவும்,  அரச வைத்தியசாலைகளில்  நிலவுகின்ற மருந்து பொருட்களுக்கான, மருத்துவ உபகரணங்களிற்கான தட்டுபாடுகளுக்கு எதிராக  கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் (26) வியாழக்கிழமை யாழ்ப்பாண போதனா வைத்தியசைலையில் நோயாளர்களிடமும்,  பொதுமக்களிடமும்  கையெழுத்துக்கள் பெறப்பட்டு  ஜனாதிபதியிடம்  கையளிக்கப்படவுள்ளது. 

https://www.virakesari.lk/article/146757

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய வரி அறவீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களினால் 'கறுப்பு வாரம்'

By VISHNU

26 JAN, 2023 | 10:07 PM
image

IMG_2543.jpg

IMG_2492.jpg

அரசாங்கத்தின் புதிய வரி அறவீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'கறுப்பு வாரம்' இற்கு ஆதரவு ‍தெரிவித்து மத்திய வங்கி, அரச மற்றும் தனியார் வங்கிகள், துறைமுகம் ஆகிய பிரிவுகளில் ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலரும் இன்று (26) கொழும்பு, அநுராதபுரம், புத்தளம், நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில்‍ கொழும்பு கோட்டையில் முன்‍னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்களை காணலாம்.

(படப்பிடிப்பு ஜே.சுஜீவ குமார்)

https://www.virakesari.lk/article/146787

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் : கப்பல்களை அனுமதிக்கப் போவதில்லை என எச்சரிக்கை !

By VISHNU

30 JAN, 2023 | 10:26 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக கொழும்பு துறைமுக ஊழியர்கள் இன்று (30) திங்கட்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

001.gif

துறைமுக நுழைவாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு துறைமுகத்தின் பல தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நேற்று முற்பகல் சுமார் 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது.

002.gif

அரசாங்கம் முன்வைத்துள்ள வரிகளை திருத்தியமைக்காவிட்டால் இன்று முதல் கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

003.gif

https://www.virakesari.lk/article/147060

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரிலுள்ள அரச, தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

By DIGITAL DESK 5

08 FEB, 2023 | 04:02 PM
image

அரசாங்கத்தின் புதிய வரி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் இன்றைய தினம் புதன்கிழமை (08) கவனயீர்ப்பு போராட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றனர்.

IMG_0991.jpg

 

அதன் ஒரு பகுதியாக மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 9 வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று புதன்கிழமை மதியம் ஒரு மணியளவில் முன்னெடுத்திருந்தனர்.

 

IMG_0994.jpg

அரசாங்கத்தினால் முன்னவைக்கப்பட்டுள்ள வரியானது 6 வீதம் தொடக்கம் 36 வீதமாக உள்ள நிலையில் அதை 6 வீதம் தொடக்கம் 24 வீதமாக குறைக்க கோரியும் வரி அறவிடும் சம்பள எல்லையை ஒரு இலட்சம் தொடக்கம் இரண்டு லட்சம் வரை மட்டுப்படுத்தி வரி அறவிடுமாறு கோரியும் வங்கி ஊழியர்கள் போரட்டத்தை மேற்கொண்டனர்.

IMG_0997.jpg

வானுயரும் பணவீக்கம் தொழில் வல்லுனர்கள் நடு வீதியில், நண்பர்களுக்கு வரி சலுகை தொழில் வல்லுநர்களுக்கு வரிசுமை,நியாயமான வரி வேண்டும்,நியாயமற்ற வரி சுமை வேண்டாம் போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாரு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG_1042.jpg

IMG_1034.jpg

IMG_1029.jpg

IMG_1015.jpg

IMG_1011.jpg

IMG_1009.jpg

IMG_1002.jpg

போராட்டத்தின் நிறைவில் மன்னார் பிரதான சுற்றுவட்ட பாதையை நோக்கி வரி சுமைக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/147724

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய வரி அறவீட்டுக்கு எதிராக தொழில் வல்லுனர்கள் ஆர்ப்பாட்டம்

By T. SARANYA

08 FEB, 2023 | 04:38 PM
image

அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தொழில் வல்லுனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (பெப் 08) கொழும்பு கோட்டை பகுதியில் இடம் பெற்றது.

_DSC1164.jpg

இதன்காரணமாக கொழும்பு கோட்டை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பதற்றமான நிலைமை காணப்பட்டது.

GLA_9078.jpg

GLA_9087.jpg

இந்நிலைமையால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியின் இருபுறமும் மூடப்பட்டதுடன், இதன் காரணமாக போக்குவரத்து தடைபட்டது.

GLA_8976.jpg

(படப்பிடிப்பு;- ஜே.சுஜீவ குமார்)

https://www.virakesari.lk/article/147737

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரிக் கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் - அமைச்சர் பந்துல

By VISHNU

08 FEB, 2023 | 02:36 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நட்டமடையும் அரச நிறுவனங்களின் சுமையை  நாட்டு மக்கள் சுமக்க வேண்டியுள்ளதால்  நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தவிர மாற்று வழிகள் ஏதும் தற்போது கிடையாது.

வரி கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற ஜனாதிபதியின் அக்கிராசன உரையை தொடர்ந்து ஊடகஙகளுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச நிறுவனங்கள் அனைத்தையும் மறுசீரமைக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒரு சில கடுமையான தீர்மானங்களை செயற்படுத்த வேண்டியுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 55 அபிவிருத்தி திட்ட அலுவலகங்களை மூடுவதற்கும்,33 அபிவிருத்தி அலுவலகங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்தவும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்காவிடின் அதன் சுமையை நாட்டு மக்கள் சுமக்க நேரிடும்.

பொருளாதார மீட்சியை இலக்காகக் கொண்டு புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.வரி திருத்தங்கள் ஒரு தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.வரி கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும்.

போராட்டத்தில் ஈடுப்படும்  உரிமை அனைத்து தரப்பினருக்கும் உண்டு.போராட்டங்கள் பிற தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும.தொழிற்துறையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம் என்றார்.

https://www.virakesari.lk/article/147698

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரி திருத்த சட்டத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் - நாடுதழுவிய ரீதியில் போராட்டம்

By DIGITAL DESK 5

08 FEB, 2023 | 03:54 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் வரி திருத்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் , துறைமுக ஊழியர் சங்கம் , மின்சாரசபை ஊழியர் சங்கம் , நீர் வழங்கல் ஊழியர் சங்கம் , வங்கி ஊழியர் சங்கம், பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் புதன்கிழமை (08) பணி பகிஷ்கரிப்பிலும் , ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டன.

IMG_0986.jpg

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் புதன்கிழமை (08) முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பினால் நாடளாவிய ரீதியிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் முடங்கின.

IMG_0991.jpg

இதனால் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைகளுக்கு சென்ற நோயாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

IMG_0994.jpg

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில் ,

IMG_0997.jpg

வைத்தியர்கள் உள்ளிட்ட 40இற்கும் அதிக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தலைமைத்துவத்தை வழங்குகின்றது. அத்தோடு எம்மால் 24 மணித்தியால பணி பகிஷ்கரிப்பும் முன்னெடுக்கப்பட்டது.

IMG_1002.jpg

எவ்வாறிருப்பினும் நோயாளர்களின் நலன் கருதி அத்தியாவசிய மருத்துவ சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய சிறுவர் வைத்தியசாலைகள், பெண்கள் வைத்தியசாலைகள், புற்று நோய் வைத்தியசாலை , சிறுநீரக வைத்தியசாலை, இராணுவ வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியசாலை உள்ளிட்டவற்றில் நாளாந்த வைத்திய சேவைகள் முன்னெடுக்கப்பட்டன. 

IMG_1009.jpg

எனினும் இவற்றில் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம்.

IMG_1011.jpg

அரசாங்கத்தின் புதிய வரி வசூலிப்பு சட்டத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முதற்படியாக கறுப்பு பட்டி அணிந்துள்ளோம்.

IMG_1015.jpg

எவ்வாறிருப்பினும் உரிய தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைக்கப் பெறாவிட்டால் மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளில் கூட பணி பகிஷ்கரிப்பிற்கு செல்ல வேண்டியேற்படும்.' என்றார்.

IMG_1042.jpg

இதே வேளை துறைமுகத்தின் 3ஆம் இலக்க நுழைவாயிலிருந்து ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்த துறைமுக ஊழியர்கள் சங்கம் பேரணியாக வந்து கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் மின்சாரசபை தலைமையகத்தில் ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்து, கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

IMG_1034.jpg

நிபந்தனைகள் இன்றி புதிய வரி வசூலிப்பு சட்டத்தை அரசாங்கம் நீக்கிக் கொள்ள வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதான கோரிக்கையாகக் காணப்பட்டது.

அவ்வாறில்லை எனில் இனிவரும் நாட்களில் அனைத்து சேவைகளும் முடங்கும் வகையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

IMG_1029.jpg

தொழிற்சங்கங்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரினால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் , கோட்டை நீதவான் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் சிவில் சட்டங்களுக்கு முரணாக செயற்படும் பட்சத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொழும்பு லோட்டஸ் வீதியில் அரச நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் , அந்த வீதியூடான போக்குவரத்துக்கள் நேற்று மாலை வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/147714

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரி அறவீடு எம்மையும் பெரிதாக பாதித்துள்ளது : இது குறித்து எவரும் பேசுவதில்லை என்கிறார் அமைச்சர் சுசில்

Published By: VISHNU

23 FEB, 2023 | 08:34 PM
image

 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை நிவர்த்தி செய்வதற்காக மக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமும் பெரும் அர்ப்பணிப்புகளை மேற்கொள்கின்றோம் என சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.

குறுகிய காலத்தில் நாட்டு மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்காக நாமும் அர்ப்பணிப்பு செய்துள்ளோம். வரி அறவீடு எம்மையும் பெரிதாக பாதித்துள்ளது அது பற்றி எவரும் பேசுவதில்லை.

வரி விதிப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 90.000 ரூபாவும் அமைச்சர்களின் சம்பளத்தில் 2 லட்சத்து 41.000 ரூபாவும் அறவிடப்படுகிறது. நான் சபை முதல்வராக செயற்பட்டும் சம்பளத்தில் சொச்சம் தான் எனக்கும் கிடைக்கின்றது. இதனால் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் நோக்கத்திற்காக எவரும் விமர்சனங்களை மேற்கொள்ள முடியும் எனினும் நாம் இரவு பகல் என பாராது மக்களின் இயல்பு வாழ்க்கையை தோற்றுவிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

நாம் கொழும்பிலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதால் எமக்கு பாரிய பிரச்சினை கிடையாது. எனினும் பதுளை, அம்பாறை பகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு வருகை தரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் அசௌகரியமான நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

எவ்வாறெனினும் அரசாங்கம் அவ்வாறான வரி விதிப்பை  மேற்கொள்ளா விட்டால் அரசாங்க ஊழியர்களுக்கு இம்மாத சம்பளத்தைக் கூட வழங்க முடியாத நிலையே ஏற்பட்டிருக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரை எந்த நாடும் எமக்கு கடன் தரத் தயாரில்லை இதுதான் யதார்த்தம் என்றார்.

https://www.virakesari.lk/article/149003

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருமான வரி சட்டம் தொடர்பில் ஜனாதிபதி - தொழிற்சங்க ஒன்றியத்திற்கிடையில் விசேட கலந்துரையாடல்

Published By: DIGITAL DESK 5

24 FEB, 2023 | 05:30 PM
image

(எம்.மனோசித்ரா)

புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாட தொழிற்சங்க ஒன்றியத்தினரை சந்திக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (25) ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களின் கோரிக்கைக்கு அமையவே ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் வெற்றியளிக்காவிடின், எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னரான காலப்பகுதி நாட்டிற்கு மிக தீர்மானமிகு காலப்பகுதியாக மாறக்கூடும் என அவர் கூறினார்.

அதற்கமைய, முதலாம் திகதிக்கு பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறுவோரிடம் வரி அறவிடும் சட்டத்திற்கு எதிராக 40 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இணைந்து கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/149084

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய வரிச்சட்டத்துக்கு எதிராக தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம்

அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிச் சட்டத்துக்கு எதிராக தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

protest-strike-750x375-1-300x150.jpg
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கவும் அதற்கு முன்னதாக எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.

வருமான வரித் திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட இலங்கையிலுள்ள பல நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

https://thinakkural.lk/article/242304

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே பிரபலமற்ற கடுமையான தீர்மானங்களை எடுத்தேன் - ஜனாதிபதி

Published By: DIGITAL DESK 5

27 FEB, 2023 | 03:45 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக பிரபலமற்ற கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது. இதனால் சகலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன். எனினும் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கொழும்பு றோயல் கல்லூரி சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக பிரபலமற்ற கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது. மேலதிக வரி செலுத்த வேண்டியேற்பட்டுள்ளமையால் எனது தீர்மானம் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அறிவேன். எவ்வாறிருப்பினும் அந்த தீர்மானங்களை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. அதனை தட்டிக்கழிக்க முடியாது.

றோயல் கல்லூரி மாணனான நான் தப்பிச் செல்லப் போவதில்லை. பொறுப்புகளிலிருந்து தப்பிச் செல்வதற்கு றோயல் கல்லூரி எனக்கு கற்றுக் கொடுக்கவில்லை. எனவே தான் நான் தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளேன். கிரேஸ் நாட்டுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்பட நான் இடமளிக்கப் போவதில்லை.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள கடனுதவியுடன் அடுத்த ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டுக்குள் சிறந்த பிரதிபலன்களைப் பெற்றுக் கொள்வதே எனது எதிர்பார்ப்பாகும் என்றார்.

மேலும் நாட்டின் சட்டத்துறைக்காக றோயல் கல்லூரி ஆற்றிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய புதிய சட்டத்துறைகள் குறித்தும் இளம் சட்டத்தரணிகளுக்கு எடுத்துரைத்தார். 

துறைமுக நகரத்தை நிதி மையமாக மாற்றுவது தொடர்பான சட்டத்துறை பிரவேசத்திற்காக இளம் சட்டத்தரணிகளை ஊக்குவித்த ஜனாதிபதி, பொறுப்புகள் மற்றும் தலைமைத்துவ பாத்திரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

கடல்சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  வேண்டுகோள் விடுத்தார். 

புதிய துறைமுக நகரமானது கடல்சார் பொருளாதார சட்டத்துடன் கூடிய நிதி மையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/149243

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.