Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க கொள்கை ரீதியான தீர்மானம் - ஜனாதிபதி ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க கொள்கை ரீதியான தீர்மானம் - ஜனாதிபதி ரணில்

Published By: DIGITAL DESK 5

14 MAR, 2023 | 11:43 AM
image

(எம்.மனோசித்ரா)

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று திங்கட்கிழமை (13) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேவைக்காக எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு தமது நிறுவனம் தயாராக இருப்பதாக சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகள் இதன் போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

அதற்காக, தற்போதுள்ள முறைமைக்கு அமைவாக தமது நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்த குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள், அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ள அம்பாந்தோட்டையில் பிரதான வலுசக்தி மையத்தை சுத்திகரிப்பு நிலையத்துடன் நிர்மாணிக்கத் தேவையான முழு முதலீட்டையும் தமது நிறுவனம் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் நாட்டின் அபிலாஷைகளின் அடிப்படையில் உரிய அழைப்புகளுக்குப் பங்கேற்க தமது நிறுவனம் தயாராக இருப்பதாகவும் பிரதிநிதிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விநியோகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள், அது குறித்து தமது ஆலோசனைகளையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் பின்னர் இலங்கை துரித அபிவிருத்தியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அதேபோன்று, நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வர்த்தகங்களை எதிர்காலத்தில் ஊக்குவிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/150456

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் புவிசார் அரசியல் கரிசனைகளிற்கு மத்தியில் சீனாவின் எண்ணெய் நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்ய முயல்கின்றது- ரணிலுடன் சந்திப்பு

Published By: RAJEEBAN

14 MAR, 2023 | 11:59 AM
image

சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சைனோபெக் இலங்கையின் அம்பாந்தோட்டையில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் சீனா எரிசக்தி மற்றும் துறைமுக துறைகளில் முதலீடு செய்வதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனாவின் பெட்ரோகெமிக்கல் கூட்டுத்தாபனம் எனவும் அழைக்கப்படும் சைனோபெக்கின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது இலங்கையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கு தாங்கள் தயார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிப்பது குறித்து கொள்கையளவில் தீர்மானிக்கப்பட்டு;ள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சீனாவின் துறைமுகம் காணப்படும் அம்பாந்தோட்டை பகுதியில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றை நிறுவுவதற்கு தேவையான முழுமையான நிதியை வழங்க தயார் என இந்த சந்திப்பில் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/150473

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

28 MAR, 2023 | 07:01 AM
image

 

(எம்.மனோசித்ரா)

 

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுப்பதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சீனாவின் சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் , அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோக சந்தையில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

மேற்கூறப்பட்ட நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உரிமங்களை வழங்குவதற்கு வலுசக்தி குழு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற கொள்முதல் குழுக்களும் இதற்கான தமது ஒப்புதல் மற்றும் பரிந்துரைகளை வழங்கியுள்ளன.

தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 150 எரிபொருள் விற்பனை நிலையங்களுடன் இணைந்து குறித்த 3 நிறுவனங்களும் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

இலங்கையில் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் மற்றும் விற்பனை செய்வதற்கும் 20 வருடங்கள் செயற்படுவதற்கான உரிமம் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்தாலும் புதிய இடங்களில் மேலும் 50 எரிபொருள் நிலையங்கள் நிறுவப்படும்.

https://www.virakesari.lk/article/151547

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோலியத்துறையை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு எதிரான சத்தியாக்கிரகம் தொடர்கிறது

 

தொடரும் பெட்ரோலியத்துறை ஊழியர்களின் போராட்டம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றும்(28) தொடர்கின்றது.

தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம்(28) கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக இலங்கை சுதந்திர ஊழியர் சேவை சங்கத்தின் பெற்றோலிய பிரிவிற்கான தலைவர் ஜகத் விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்ககு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளமை, மிகவும் கவலைக்குரிய விடயமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பதற்காக 03 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சீனாவின் சினொபெக்(Sinopak), அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம்(United Petroleum) மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம்.பாக்ஸ்(R M Parks) ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

மின்சக்தி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

இந்த 03 நிறுவனங்களுக்கும் தற்போது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் விற்பனை முகவர்கள் நடத்திச் செல்கின்ற தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வீதம் ஒதுக்கப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் புதிதாக தலா 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிக்கவும் அனுமதி கிடைக்கும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறித்த 03 நிறுவனங்களுக்கும் வழங்கப்படவுள்ள அனுமதிப்பத்திரத்தினூடாக 20 வருடங்களுக்கு இலங்கையில் பெற்றோலிய உற்பத்திகளை மேற்கொள்ளவும் களஞ்சியப்படுத்தவும் விநியோகிக்கவும் விற்பனை செய்யவும் அனுமதியளிக்கப்படவுள்ளது.

https://thinakkural.lk/article/246606

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்கவுள்ள நிறுவனங்கள்

Fuel.jpg

நாட்டில் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த வருடம் ஜூன் மாதம் முதல் தொழில்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மூன்று நிறுவனங்களுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடல் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் நிறைவுறுத்தப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய விலையை விட குறைந்த விலையில் அந்த நிறுவனங்களுக்கு நாட்டினுள் எரிபொருளை விநியோகிக்க வாய்ப்பு ஏற்படும் என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

சீனாவின் – சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கு நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு, களஞ்சியப்படுத்துவதற்கு மற்றும் விநியோகிப்பதற்கு குறித்த நிறுவனங்களுக்கும் அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சினோபெக் அடுத்த மாதம் உடன்படிக்கையில் கைச்சாத்து

Image

இலங்கை வந்துள்ள சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்றுக்கும் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

எரிசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் சில்லறை எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும், விற்பனை நடவடிக்கைகளைத் தொடங்குவது தொடர்பிலும் அதற்கான காலக்கெடு, தொடர்புடைய ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் பிற கவலைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, சினோபெக் நிறுவனம் மே மாதத்தின் நடுப்பகுதியில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்றும், இலங்கையில் அதன் விற்பனை செயல்பாடுகள், அன்றிலிருந்து 45 நாட்களுக்குத் தொடங்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் எரிபொருள் துறையில் யுனைடெட் பெற்றோலிய நிறுவனம் தடம் பதிக்கிறது

United-Petroleum.jpg

இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலிய நிறுவனத்துடன், இணையவழி பேச்சுவார்த்தையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நிறைவு செய்துள்ளதாக, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எரிபொருள் விற்பனை உடன்படிக்கைகள், அரசாங்கக் கொள்கைகள், தளவாடங்கள் மற்றும் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான காலக்கெடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

யுனைடெட் பெற்றோலியம் அடுத்த வாரத்தில் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் திகதிகளை தெரிவிக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டுச் சபை ,இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகியவற்றின் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

https://thinakkural.lk/article/251185

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

QR இன்றி எரிபொருள் வழங்க தயாராகும் புதிய நிறுவனங்கள்!

இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், வாகனம் கழுவல், சேவைப் பகுதிகள், விற்பனையகங்கள் மற்றும் அனைத்து நோக்கங்களுக்கான எரிபொருள் நிலையங்களை அமைக்க முன்மொழிந்துள்ளன.
இலங்கை அரச அதிகாரிகளுக்கும், சீனாவுக்கு சொந்தமான சினோபெக் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட RM Parks-Shell ஆகிய இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான அண்மைய கலந்துரையாடலின் போது இந்த முன்மொழிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவுகளுக்கு அரச அதிகாரிகள் தமது உடன்பாட்டை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வெளியூர் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு இது பொருந்தும் என்றும் அரச அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த எரிபொருள் நிலையங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கியூ.ஆர் முறையின் கீழ் எரிபொருள் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரண்டு வெளிநாட்டு எரிபொருள் நிரப்பு நிறுவனங்களும், நவீன வணிக மையங்களின் அடிப்படையில் எரிபொருள் நிலையங்களை உருவாக்க விரும்புகிறார்கள்.
எரிபொருளைப் பெறச் செல்லும் இடங்களாக மட்டுமல்லாது வாகனங்களை கழுவி சேவை புதுப்பிக்கக்கூடிய பகுதிகளை அவர்கள் வைத்திருக்க விரும்புகிறார்கள்.
அத்துடன் ஒரு நீண்ட பயணத்திற்குச் சென்றால் இரவைக் கூட குறித்த இடங்களில் கழிக்கும் வசதிகளை அவர்கள் முன்மொழிந்துள்ளதாக அரச அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு எரிபொருள் நிலையத்தின் சாதாரண பரப்பளவு சுமார் 40 பேர்சஸ் ஆகும்.
எனினும், புதிய நிறுவனங்களுக்கு சுமார் 1 ஏக்கர் காணி வழங்கப்பட வேண்டும் என்பது முன்மொழிவாக உள்ளது.

இதேவேளை, அடுத்த மாத ஆரம்பத்தில் குறித்த இரு நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மூன்றாவது நிறுவனமான அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியமும் விரைவில் இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் நுழையவுள்ளது.
மூன்று நிறுவனங்களும் கூட்டாக வருடத்திற்கு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் என்றும் இது திறைசேரியின் சுமையை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/251469

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோலியத் துறை தொடர்பான விடயங்களை ஆராய விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு

 

பெற்றோலியத் துறை தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அதிகாரிகளின் கூட்டமொன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்றது.

எரிபொருள் விலை சூத்திரம், புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவுதல், எரிபொருள் விநியோகம் மற்றும் CPSTL தொட்டி பண்ணை வசதிகளை விஸ்தரித்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக் ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, புதிய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் முதல் இரண்டு குழுக்களை அமைச்சர் காஞ்சன விஜேசேகர சந்தித்துள்ளார்.

மொத்தம் 450 டீலர்களால் இயக்கப்படும் நிரப்பு நிலையங்கள், புதிய வெளிநாட்டு எரிபொருள் சேவை ஆபரேட்டர்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, ஒவ்வொன்றும் 150 பேர் கொண்ட மூன்று தனித்தனி குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த மாதம், மூன்று வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.

அதன்படி, லண்டனை தளமாகக் கொண்ட ஷெல் பிஎல்சியுடன் இணைந்து சீனாவை தளமாகக் கொண்ட சினோபெக், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த யுனைடெட் பெற்றோலியம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்எம் பார்க்ஸ் இன்க் ஆகியவற்றுக்கு சில்லறை விற்பனை உரிமங்கள் வழங்கப்படவுள்ளன.

https://thinakkural.lk/article/252301

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீன, அவுஸ்திரேலிய, அமெரிக்க எரிபொருள் திட்டம் ஆரம்பம் : எரிபொருள் விலைகள் குறையும் மின் கட்டணத்தில் சலுகை - மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு

Published By: DIGITAL DESK 5

06 MAY, 2023 | 10:26 AM
image

(எம்.மனோசித்ரா)

சீன, அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்க எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளை ஒரு மாதத்துக்குள் ஆரம்பிக்கவுள்ளன.

அதன் பின்னர் எரிபொருள் விலைகள் மேலும் குறைவடைவதோடு , விரைவில் மின் கட்டணத்தில் சலுகைகளும் மக்களுக்கும் வழங்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கவுள்ள விநியோக்கத்தர்களுக்கு கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட தரப்பினருடன்  வியாழக்கிழமை (04) கொழும்பு மன்றக்கல்லூரியில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஆகியோர் மேற்குறிப்பிட் விடயங்களைத் தெரிவித்துள்ளனர்.  

இது தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில்  மேலும் தெரிவித்துள்ளதாவது :

நாட்டில் நிறுவப்படவுள்ள 450 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தலா 150 என  மூன்றாகப் பிரிக்கப்பட்டு புதிய வெளிநாட்டு எரிபொருள் விநியோக்கத்தர்களுக்கு வழங்கப்படும். ஒரு மாதத்திற்குள் புதிய விநியோகத்தர்கள் இலங்கையில் அவர்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

அதற்கமைய புதிய விநியோகத்தர்களுக்கான சந்தைப்படுத்தல் பிரதிநிதிகளை ஒதுக்குவது, பயன்படுத்தப்படவுள்ள இயந்திரங்களை வகைப்படுத்துவது, புதிய உடன்படிக்கைகள், விலை சூத்திரம், புதிய விநியோகத்தர்களுக்கான நன்மைகள், சந்தைப்படுத்தல் பிரதிநிதிகளுக்கு கிடைக்கும் வருமானம், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டது.

இதே வேளை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடனும் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் எரிபொருள் விலை சூத்திரம், புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவுதல், எரிபொருள் விநியோகம், எண்ணெய் தாங்கி களஞ்சியசாலை வசதிகளை விரிவாக்கம் செய்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வலு சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ,

'எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதற்காக மூன்று நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டுள்ளன. அதில் இரண்டு நிறுவனங்கள் இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளன. விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்துக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதால் போட்டித்தன்மை அதிகரிக்கும். எனவே எரிபொருட்களின் விலைகள் மேலும் குறைவடையும். அத்தோடு தட்டுப்பாடின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான வாய்ப்புக்களும் உருவாகும்.

கியூ.ஆர். குறியீட்டு முறைமையை நீக்குவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. போதியளவு எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டதன் பின்னர் அது குறித்த தீர்மானம் எடுக்கப்படும். மின் கட்டணம் தொடர்பிலும் நிச்சயம் விரைவில் சலுகைகள் வழங்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/154614

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் விநியோகத்துக்காக சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சினோபெக் ஃப்யூயல் ஒயில் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சீனா, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/254924

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சினோபெக் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளது: அலி சப்ரி

அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சினோபெக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், நிறுவனம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சப்ரி, தனது சமீபத்திய சீன விஜயத்தின் போது, சீன நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்களையும், சீனாவின் EXIM வங்கியின் தலைவரையும் சந்தித்து, ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கு சைனா ஹார்பர் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விருப்பம் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/261475

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோலிய விநியோகம்: அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான வர்த்தமானி வௌியீடு

Fuel.jpg

இலங்கையில் பெற்றோலிய இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, வழங்கல் , விநியோகம் போன்றவற்றுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயல்முறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சருக்கு அதிகாரமுள்ளது.

நிதி மற்றும் தொழில்நுட்பத் திறன் கொண்ட நிறுவனங்கள் அமைச்சின் செயலாளரிடம் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், அவ்விண்ணப்பங்கள் குழுவொன்றினால் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், அமைச்சரால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த கட்டணத்திற்கு உட்பட்டு, 20 வருட காலப்பகுதிக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

தற்போது சீனாவின் Sinopec நிறுவனமும் அமெரிக்காவின் RM Parks நிறுவனமும் நாட்டின் பெற்றோலிய சந்தைக்குள் பிரவேசிக்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் United Petroleum நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.

சீனாவின் Sinopec நிறுவனம் ஏற்கனவே Sinopec Sri Lanka என்ற பெயரில் இலங்கையில் தமது நிறுவனத்தை பதிவு செய்துள்ளது.

https://thinakkural.lk/article/262581

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.