Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
கருத்துக்களம் கருத்துக்களம்
கருத்துக்களம்
  1. Home
  2. யாழ் உறவுகள்
  3. யாழ் திரைகடலோடி
  4. US fighter jet crashes in South Korea
  • All Activity
கருத்துக்களம் கருத்துக்களம்
கருத்துக்களம்
    • Forums
    • Gallery
    • Blogs
    • Events
    • All Activity
      • stream_title_14
      • stream_title_13
    • வாசிக்காதவை
    • நான் தொடங்கியவை
    • Search
  • முகப்பு
  • Leaderboard
  • Clubs
    • முகப்பு
    • Leaderboard
    • Clubs
    • Sign In

      • Not recommended on shared computers
      • Forgot your password?

      Or sign in with...

    • இங்கு இணைந்து கொள்ள
    1. Home
    2. யாழ் உறவுகள்
    3. யாழ் திரைகடலோடி
    4. US fighter jet crashes in South Korea
    • All Activity

    US fighter jet crashes in South Korea

    nunavilan
    nunavilan
    May 6, 20232 yr in யாழ் திரைகடலோடி

    Featured Replies

    nunavilan Grand Master

    nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    • 53k posts
    • 1 Solutions
    • 10 Badges
    • 6.3k Reputation
    • Gender:Male
    • Location:USA
    nunavilan Grand Master

    nunavilan கருத்துக்கள உறவுகள்

    May 6, 20232 yr

    • கருத்துக்கள உறவுகள்
      May 6, 20232 yr
      • கருத்துக்கள உறவுகள்

      US fighter jet crashes in South Korea

       
       
       

      US fighter jet crashes in South Korea

      Jake Kwon
      By Jake Kwon, CNN
      Updated 11:31 PM EDT, Fri May 5, 2023
       
       
       
       
       
       
       

      An F-16 jet near Las Vegas, Nevada on Feb. 16, 2022.

      An F-16 jet near Las Vegas, Nevada on Feb. 16, 2022.

      Larry MacDougal/MCDOL/AP/FILE

      CNN — 

      A US F-16 fighter jet crashed during training on Saturday near a major US military base in South Korea, the US military has said.

      The jet, which was assigned to the 8th Fighter Wing, “crashed in an agricultural area near Osan Air Base at about 9:45 a.m.” local time, the US Air Force in South Korea said in a statement.

      The pilot safely ejected and was transported to the nearest medical facility, the military said. No civilians were hurt in the incident, according to the military.

       

      The local fire department was dispatched to extinguish fire, South Korea’s Governor of Gyeonggi Province Kim Dong-yeon wrote on Twitter.

      The pilot was participating in a routine training flight, the military said, adding that the investigation into the incident is under way.

      Osan Air Base is the US Air Force’s closest base to North Korea, about 40 miles (64 kilometers) from its border.

       

       

       

      https://www.cnn.com/2023/05/05/asia/us-fighter-jet-crashes-in-south-korea-intl-hnk/index.html

      Archived

      This topic is now archived and is closed to further replies.

      Go to topic listing
      • advertisement_alt
      • advertisement_alt
      • advertisement_alt

      Tell a friend

      Love கருத்துக்களம்? Tell a friend!
      • Email
      • Share

      Topics

      • இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
        கிருபன்
        ஊர்ப் புதினம்

        இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!

        கிருபன் · 1 hour ago1 hr
        • 1 reply
        • 57 views
        கிருபன்
        கிருபன்
        1 hour ago1 hr
        சுவைப்பிரியன்
        சுவைப்பிரியன்
        13 minutes ago13 min
      • மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா? - வீரகத்தி தனபாலசிங்கம்
        கிருபன்
        அரசியல் அலசல்

        மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா? - வீரகத்தி தனபாலசிங்கம்

        கிருபன் · 1 hour ago1 hr
        • 0 replies
        • 43 views
        கிருபன்
        கிருபன்
        1 hour ago1 hr
        கிருபன்
        கிருபன்
        1 hour ago1 hr
      • சமஷ்டி அரசியலமைப்புக்காக அழுத்தமளிக்க வேண்டும் : பா.ஜ.க. தமிழக மாநில தலைவரிடம் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்து
        ஏராளன்
        தமிழகச் செய்திகள்

        சமஷ்டி அரசியலமைப்புக்காக அழுத்தமளிக்க வேண்டும் : பா.ஜ.க. தமிழக மாநில தலைவரிடம் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்து

        ஏராளன் · ஞாயிறு at 06:403 days
        • 4 replies
        • 223 views
        ஏராளன்
        ஏராளன்
        ஞாயிறு at 06:403 days
        விளங்க நினைப்பவன்
        விளங்க நினைப்பவன்
        1 hour ago1 hr
      • தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை
        கிருபன்
        தமிழகச் செய்திகள்

        தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை

        கிருபன் · 1 hour ago1 hr
        • 0 replies
        • 34 views
        கிருபன்
        கிருபன்
        1 hour ago1 hr
        கிருபன்
        கிருபன்
        1 hour ago1 hr
      • விமான விபத்தில் லிபிய இராணுவ தளபதி உயிரிழப்பு
        ஏராளன்
        உலக நடப்பு

        விமான விபத்தில் லிபிய இராணுவ தளபதி உயிரிழப்பு

        ஏராளன் · 2 hours ago2 hr
        • 1 reply
        • 71 views
        ஏராளன்
        ஏராளன்
        2 hours ago2 hr
        கிருபன்
        கிருபன்
        1 hour ago1 hr

      Posts

      • இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
        சுவைப்பிரியன்

        இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!

        கொழும்பு-யாழ்ப்பாணம் புகையிரத நாளாந்த நேர அட்டவணை எங்கு பெறலாம்.

        By சுவைப்பிரியன் · 15 minutes ago15 min

      • மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா? - வீரகத்தி தனபாலசிங்கம்
        கிருபன்

        மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா? - வீரகத்தி தனபாலசிங்கம்

        மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா?
        Veeragathy Thanabalasingham
        December 23, 2025


        Photo, Sakuna Miyasinadha Gamage
        இயற்கையின் சீற்றம் அண்மையில் மலையகத்தில் ஏற்படுத்திய பேரழிவையடுத்து மலையக தமிழ் மக்களை குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற வருமாறு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் விடுத்த அழைப்பு ஒரு  தீவிரமான விவாதத்தை மூளவைத்திருக்கிறது.
        மலையகத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் துனபங்களை கேட்டறிந்த  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அந்த மக்களைப் பாதுகாப்பான முறையில் வேறு இடங்களில் குடியேற்றுவது குறித்து பேசினார்.
        மண்சரிவு ஆபத்து இல்லாத மலையகப் பகுதிகளில் அந்த மக்களை குடியேற்றுவதற்கான சாத்தியங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேசப்போவதாக கூறிய மனோ கணேசன் மலையகத்தில் போதியளவில் காணிகளைப் பெறமுடியாமல்போகும் பட்சத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கு முன்வருவீர்களா என்று அவர்களை நோக்கி கேள்வியெழுப்பினார். அங்கு நின்றவர்களில் பெரும்பாலானவர்கள் அதற்குத் தயாராக இருப்பதாகப் பதிலளித்தனர்.
        இயற்கை அனர்த்தத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்து நிராதரவாக நின்ற அந்த மக்கள் உடனடியாக அவ்வாறு கூறுவது இயல்பானதே. ஆனால், அந்த ஒரு மக்கள் கூட்டத்தினரின் பதிலை மாத்திரம் அடிப்படையாக வைத்து மலையக மக்கள் தங்களது பாரம்பரியமான வாழ்வாதாரங்களளையும் வாழ்க்கை முறையையும் துறந்தெறிந்துவிட்டு பெருமளவில் வடக்கு, கிழக்கில் குடியேறுவதற்கு விரும்புகிறார்கள் என்று கருதமுடியாது.
        பாதிக்கப்பட்ட மக்களுடனான மனோ கணேசனின் அந்தச் சந்திப்புக்கு ஊடகங்கள் பிரதானமாக, சமூக ஊடகங்கள் பெரும் முக்கியத்துவத்தை கொடுத்தன. அதையடுத்து இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மலையக தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கில் தாங்களாக வந்து குடியேற விரும்பினால் அதை வரவேற்பதாகவும் அதற்கான உதவிகளைச் செய்யத் தயாராயிருப்பதாகவும் அறிவித்தார்.
        அவரைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் மலையகத்தில் பாதுகாப்பற்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை கிழக்கில் குடியேறவருமாறு அழைத்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) பொதுச்செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் மலையக மக்கள் தமிழ்ப்பகுதிகளில் குடியேறுவதற்கு ஆதரவையும் உதவியையும் வழங்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
        மலையக தமிழ் மக்கள் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதற்தடவை அல்ல. இலங்கையின் சனத்தொகையில் வேறு எந்த பிரிவினரை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவரும் தோட்டத்தொழிலாளர்கள் காலங்காலமாக மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்வை உறுதிசெய்வதற்கு ஒருபோதுமே அரசாங்கங்கள் பயனுறுதியுடைய திட்டங்களை முன்னெடுத்ததில்லை.
        அத்தகையதொரு சமூகம் பேரழிவை மீண்டும் சந்தித்து நிராதரவாக நிற்கும் இடர்மிகுந்த ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இந்த தமிழ் அரசியல்வாதிகள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதையும் வடக்கு, கிழக்கில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுத்ததையும் நிச்சயம் வரவேற்க வேண்டும்.
        திடீரென்று ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தை அடுத்து உருவான வேதனை மிகுந்த சூழ்நிலையில்  பாதுகாப்பாக வாழ்வதற்கு இடமில்லை என்று மலையக மக்கள் கூறும்போது அவர்களை வரவேற்க வேண்டியது தங்களது கடமை என்று கூறிய சுமந்திரன் காணிகளையும் வீடுகளையும் கொடுப்பது மாத்திரம் பிரயோசனமானதல்ல, அவர்களுக்கான வாழ்வாதாரங்களையும் உறுதிசெய்வது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
        அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனோ கணேசனுடன் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் மக்களை குடியேற்றும் இத்தகைய செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்துடனும் பேசவேண்டியிருக்கிறது என்றும் சுட்டிக் காட்டினார். அத்துடன், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த பலர் வடக்கு, கிழக்கில் தங்களது காணிகளை மலையக தமிழர்களுக்கு வழங்குவதற்கு முன்வருவதாக அறிவித்திருக்கிறார்கள் என்ற தகவலையும் சுமந்திரன் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.
        எது எவ்வாறிருந்தாலும், மலையக தமிழ் மக்கள் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிசெய்வதற்கான திட்டங்கள் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் பிராந்தியங்களிலேயே பிரதானமாக முன்னெடுக்கப்பட வேண்டும். படிப்படியாக பாதுகாப்பான பகுதிகளில் குடியமர்த்தும் பரந்தளவிலான திட்டம் ஒன்றின் கீழ் அவர்களை  சுயவிருப்பத்தின் பேரில் வடக்கு, கிழக்கிற்கு அனுப்புவதில் பிரச்சினை எதுவும் இல்லை. அத்தகையதொரு திட்டத்தை அரசாங்கத்தினால் மாத்திரமே முன்னெடுக்க முடியும்.
        தேசிய மக்கள் சக்தி பெருந்தோட்டங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் காணி மற்றும் வீட்டுவசதி பிரச்சினைகள் குறித்து எத்தகைய நிலைப்பாட்டை கடந்த வருடத்தைய இரு தேசிய தேர்தல்களுக்கு முன்னதாக வெளிப்படுத்தியது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது அவசியமாகும்.
        மலையக தமிழ்ச் சமூகம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், அவர்களின் உரிமைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி 2023 அக்டோபர் 15ஆம் திகதி ஹட்டன் பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. அதில் காணி, வீட்டுப் பிரச்சினைகள் குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது:
        ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் மலையகத் தமிழ் மக்களின் அடையாளத்தையும் உரிமைகளையும் அங்கீகரித்து அவர்களின் காணி, வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது.
        ஆட்சியதிகாரத்துக்கு வந்தபிறகு கடந்துவிட்ட ஒரு வருடத்துக்கும் அதிகமான காலப் பகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய இந்த வாக்குறுதியை  நிறைவேற்றுவதை நோக்கி எந்தளவுக்கு கவனம் செலுத்தியிருக்கிறது என்பது முக்கியமான ஒரு கேள்வி.
        அண்மைய இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து மலையக மக்களின் காணிப் பிரச்சினை மீது மீண்டும் கவனம் பெருமளவுக்கு திரும்பியிருக்கும் நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை  தமிழ்க் கட்சிகள் கோரவேண்டும். அது தொடர்பில் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கான இயக்கம் ஒன்றை முன்னெடுப்பதில் மலையக தமிழ்க் கட்சிகளுடன் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளும் இணைந்து கொள்ள வேண்டும்.
        மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கவனத்துக்கு தான் கொண்டுவந்தபோது அவர் ‘காணி எங்கே இருக்கிறது?’ என்று தன்னிடம் கேட்டதாக  மனோ கணேசன் கூறியிருந்தார். காணி எங்கே இருக்கிறது என்று தெரியாமலா ஜனாதிபதி மலையக மக்களின் காணியுரிமைப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக  வாக்குறுதியளித்தார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.
        மலையக தமிழ் மக்கள் ஏற்கெனவே வடக்கில் குறிப்பாக, வன்னிப் பிராந்தியத்தில் குடியேறியிருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்செயல்களுக்குப் பிறகு பாதுகாப்புத்தேடி குறிப்பிட்ட எண்ணிக்கையான மலையக மக்கள் வடக்கிற்கு குடிபெயர்ந்தார்கள். அவர்களின் இன்றைய எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
        தற்போது மலையக மக்களை வடக்கு, கிழக்கிற்கு வருமாறு அழைக்கும்போது ஏற்கெனவே அங்கு குடியேறியவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு சரியான மதிப்பீடு அவசியம். வடக்கு, கிழக்கு மக்களுடன் சமத்துவமானவர்களாக வாழ்வாதாரங்களையும் ஏனைய வசதிகளையும் பாகுபாடின்றி அவர்களினால் பெறக்கூடியதாக இருக்கிறதா என்பதைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும்.
        அதேவேளை, இன்றைய மலையக தமிழ் இளைய தலைமுறையினர் தங்களது சமூகத்தின் எதிர்காலம் குறித்து எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று இனிமேலும் அழைக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. மலையகத் தமிழர்கள் என்ற தனியான இனத்துவ அடையாளம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. மலையக தமிழ்தேசியம் என்ற கோட்பாடு பற்றி பேசுபவர்களும் இருக்கிறார்கள்.
        உண்மையிலேயே, மலையகத் தமிழ் மக்களுக்கு இலங்கையின் ஏனைய தமிழ்பேசும் சமூகங்களை விடவும் தனித்துவமான பிரச்சினைகள், தனித்துவமான வாழ்வாதாரங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசாரம் ஆகியவை இருக்கின்றன. வடக்கு, கிழக்கு தமிழர்கள் இன்று வெளிநாடுகளுக்கு பெரும் எண்ணிக்கையில் செல்வதைப் போன்று மலையகத் தமிழர்களும் இலங்கையின் வேறு பாகங்களுக்கு குடிபெயரத் தொடங்கினால் தங்களுக்கான உரிமைகளைக் கோரமுடியாதவாறு தனியான ஒரு சமூகம் என்ற அடையாளத்தை அவர்கள் இழந்து விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.
        அவர்களை நாட்டின் எந்தப் பாகத்திலும் குடியேற்றக்கூடிய ஒரு நாடோடிக் கூட்டமாக நோக்கக்கூடாது. தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் பிரதானமான பிரிவினராவர். நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக அந்த மக்கள் பல தலைமுறைகளாக உழைத்துவருகிறார்கள்.
        அவர்களை இயற்கை அனர்த்த ஆபத்துக்கள் நிறைந்த பகுதிகளில் இருந்து வேறு இடங்களில் குடியமர்த்துவதாக இருந்தாலும் கூட, அதற்கான திட்டங்களை பிரதானமாக அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த பிராந்தியங்களுக்குள் முன்னெடுப்பதே பொருத்தமானதாகும்.
        பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டையில் உதவி அரசாங்க அதிபராக பதவிவகித்த ஆங்கிலேயரான லெனார்ட் வூல்வ் இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறையை ஏற்படுத்தவேண்டியதன் தேவை குறித்து 1936ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பிய மகஜர் ஒன்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மலைநாட்டுச் சிங்களவர்கள், கரையோரச் சிங்களவர்களுக்கு என்று அலகுகளை விதந்துரைத்த அதேவேளை, தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழ்கின்ற மலையகத்தின் பகுதிகளை ஒன்றிணைத்து தனியான அலகை ஏற்படுத்தலாம் என்று கூறினார்.
        மலையகத் தமிழர்கள் மற்றைய சமூகங்களைப் போன்று தங்களுக்கென்று தனித்துவமான உரிமைகளைக்  கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒரு வெள்ளையரான  காலனித்துவ அதிகாரி 90 வருடங்களுக்கு முன்னரே கூறினார் என்பது கவனிக்கத்தக்கது.
        ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னரான முதல் இலங்கை அரசாங்கம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியது. அரைநூற்றாண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு குடியுரிமையையும் வாக்குரிமையையும் வென்றெடுத்த அந்த மக்கள் காணியுரிமைக்காகவும் ஏனைய வசதிகளுக்காகவும் எவ்வளவு காலத்துக்கு போராட வேண்டியிருக்குமோ யாரறிவார்?
        வீரகத்தி தனபாலசிங்கம்
        https://maatram.org/articles/12493

        By கிருபன் · 1 hour ago1 hr

      • சமஷ்டி அரசியலமைப்புக்காக அழுத்தமளிக்க வேண்டும் : பா.ஜ.க. தமிழக மாநில தலைவரிடம் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்து
        விளங்க நினைப்பவன்

        சமஷ்டி அரசியலமைப்புக்காக அழுத்தமளிக்க வேண்டும் : பா.ஜ.க. தமிழக மாநில தலைவரிடம் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்து

        ஒரு தேசத்திற்குள்ளே இரு தேசம் என்ற அவரது அடிப்படை கொள்கையை அப்படியே வாழைபழம் சாப்பிடுவது மாதிரி அவர் சாப்பிட்டுவிட்டார் என்கிறீர்கள் 🤣
        இப்போ தமிழரசு கட்சியின் சமஷ்டி கொள்கையை தான் இவரும் கையில் எடுத்துள்ளார். இனி இரட்டை குழல் துப்பாக்கியாக இரு கட்சிகளும் செயல்பட போகின்றன 🤣

        By விளங்க நினைப்பவன் · 1 hour ago1 hr

      • கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [எட்டு பகுதிகள்]
        kandiah Thillaivinayagalingam

        கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [எட்டு பகுதிகள்]

        சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 06

        அத்தியாயம் 6 - கண்டி மற்றும் நுவரெலியா

        கண்டியை அடைந்தபோது காற்று குளிர்ந்தது; கோவில்மலர்கள் வாசம் வீசியது. தலதா மாளிகை அல்லது பல் அவையம் ஒளியில் மிதந்தது; ஏரியில் விளக்குகள் பிரதிபலித்தன. தலதா மாளிகையில் பூஜையை மல்வத்து மற்றும் அஸ்கிரி பிரிவுகளைச் சேர்ந்த துறவிகள் தினமும் மூன்று முறை செய்கிறார்கள்: விடியற்காலை, நண்பகல் மற்றும் அந்தி வேளையில் ஆகும். அப்பொழுது நினைவுச் சின்னத்தைப் பார்ப்பதற்காக உள் அறையைத் திறப்பது மற்றும் பக்தர்களால் பூக்கள் காணிக்கை செலுத்துதல் நடைபெறும். ஆரனும் அனலியும் அப்படியான ஒரு சூழலில், வெளிவீதியால், ஆலயத்தை நோக்கி நடக்கும் பொழுது, [hevisi drums] ஹெவிசி பறை கேட்டுக் கொண்டு இருந்தது. அங்கே நிறைய பூக்கடைகள் இருந்தன. கோயிலுக்குப் போகிறவர்கள் வாங்கிச் செல்வதை இருவரும் கவனித்தார்கள். அவர்களும் பூக்களை வாங்கினர். ஹெவிசி மேளம் வெறும் இசை நிகழ்ச்சி அல்ல. இது இலங்கையின் பௌத்த மரபுகள் மற்றும் கோயில் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு புனிதமான கலை வடிவமாகும்.

        தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த, ஸ்ரீ விஜய ராஜசிங்கன் [Madurai Nayakkar king in Kandy, Sri Vijaya Rajasimha] 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட மன்னனாவான். இவன் இலங்கையில் 1700களில், கிட்டத்தட்ட அழிந்துபோன பௌத்தத்தை மீட்டெடுக்க விரும்பி, சியாமில் (Siam / தாய்லாந்து) இருந்து துறவிகளை அழைத்துவர முயற்சி செய்தான். சியாம் பிக்குகள் இறுதியாக 1753-இல் இலங்கைக்கு வந்தனர். அவர்கள் கண்டியில் மல்வத்த மற்றும் அச்கிரிய [Malwatta and Asgiriya chapters] என்னும் இரண்டு பிக்கு சங்கங்களை உருவாக்கினர். அந்த நேரத்தில், எசல [சிங்களத்திலே ஆடி மாதம் எசல எனப்படும்] பெரகரா விழாவில் [The Kandy Esala Perahera procession] பத்தினி அம்மன் [கண்ணகி] முதன்மையாக வணங்கப்பட்டு வந்தார். ஆனால் சியாமிலிருந்து வந்த பிக்குகள் இதை ஏற்கவில்லை. அவர்கள் மன்னரிடம், “தலதா (Dalada / Sacred Tooth Relic) விழாவின் முன்னிலையாக இருக்க வேண்டும்” எனக் கூறினர். அதன் பிறகு, அதாவது சுமார் இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தான், பெரகரா விழாவில் பல் நினைவுச் சின்னம் முக்கியத்துவம் பெற்றது என்ற நீண்ட வரலாற்றை சுருக்கமாக அனலி எடுத்துரைத்தாள்.

        தலதா மாளிகையில் உள்ள ஓவியங்கள் கண்டி காலத்து ஓவியங்கள் ஆகும். இவை மாளிகையின் பல இடங்களில், குறிப்பாக மேல் மாடி உட்கூரையில் உள்ள நிரல்களிலும், தலதா மண்டபம், எண்கோண மண்டபம் போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களில் பல பெண்ணுருவங்கள் அடங்கிய நுட்பமான இரதங்களும், சதுர்நாரி பல்லக்குகளும் இடம்பெற்றுள்ளன. அவை எல்லாவற்றையும் ரசித்து இருவரும் பார்த்தார்கள்.

        தர்மத்தின் தானமே எல்லா தானங்களையும் மிஞ்சும்.
        தர்மத்தின் ருசி எல்லா ரசனைகளையும் மிஞ்சும்.
        தர்மத்தில் உள்ள இன்பம் எல்லா இன்பங்களையும் மிஞ்சும்.
        ஆசையை அழிப்பது எல்லா துன்பங்களையும் வெல்லும்.

        ஆரனும் அனலியும், தலதா மாளிகைக்கு சென்றபின், அதன் முன் இருந்த, 1807 ஆம் ஆண்டு மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கரால் கட்டப்பட்ட கண்டி ஏரியை சுற்றி பொழுதுபோக்காக நடைப் பயணம் செய்து, கோயில் மற்றும் சுற்றியுள்ள மலைகளின் அழகிய காட்சிகளை கண்டு ரசித்தனர்.

        “வரலாறு நம்மைப் பிரித்தது,” என்று ஆரன் கூறினான், “ஆனால் பக்தி இன்னும் நம்மைப் பிணைக்கிறது.” அனலி சிரித்தாள். அப்பொழுது அவர்கள் இரவில் காலடி எடுத்து வைத்தனர். அமைதியான ஏரியின் குறுக்கே கண்டியின் விளக்குகள் பிரதிபலித்தன. அங்கே பொதுவான கெண்டை மீன் மற்றும் திலாப்பியா மீன்கள் அங்கும் இங்கும் கூட்டமாக ஓடுவது தெரிந்தது, அவைக்கு மேலே நீர்க்காகம் அல்லது பெரிய நெட்டைக்காலி [Great Cormorants], மீன்கொத்தி, மற்றும் அவை போன்ற பறவைகள் வட்டமிட்டுக் கொண்டு இருந்தன. அக்காவின் மகள் அதை பார்ப்பதில், தனது நேரத்தை செலவழித்தாள். அது அவர்களுக்கு தங்களுக்குள் தனிப்பட பேசவும் பழகவும் இடமளித்தது. 'உண்மையான அன்புக்கு ஏங்குபவர்களைத்தான் காதல் மரணக் குழியில் தள்ளுகிறது' என்று யாரோ சொன்னது அவனுக்கு சிரிப்புக்கு வந்தது. ஏன் என்றால், அது அவளின் கன்னக்குழியில் தான் விழுத்தும் என்று இப்ப அவனின் அனுபவம்.

        அவன் தோளில் சாய்ந்து இருந்தவள், கொஞ்சம் எட்டி, அவன் காதில், "நான் உங்களை காதலிக்கின்றேன். இறுதி வரைக்கும் என்னை இப்படியே காதலிக்க வேண்டும்" என்றாள் வெட்கத்துடன். அவள் கன்னத்தை கிள்ளியபடி, "வேற வேல என்ன இருக்கு அத விட முக்கியமா" என்றான் ஆரன். பின் அவன், அவள் முகத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு, "அடி பாவி... இத ஏன் மொதலையே சொல்லல" என்றான்.

        "ம்ம்ம் ... எனக்கு உங்கள பிடிக்கும். ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்குமானுத் தெரியல... அதான் சொல்லல" என்றாள் செல்லச் சிரிப்புடன். பிறகு எனோ, " சும்மா தான்!!!" என்றுக் கூறி அவன் நெஞ்சத்தில் மீண்டும் சாய்ந்து கொண்டாள். அவள், தான் என்ன பேசுகிறேன் என்று ஒரு தொடர்பு இல்லாமல், எதோ ஒரு மயக்கத்தில் உளறுவது போல் இருந்தது.

        "சும்மாவா சொன்னார்கள் பெண்களை புரிந்து கொள்ள முடியாது என்று" என்று எண்ணிக் கொண்டு, ஆரன், " சரி!! நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா" என்றான். "ம்ம்ம்!!!" என்றாள்.

        "நிமிடத்திற்கு நிமிடம் நீ அழகாகிக் கொண்டே போகின்றாயே ... அது எப்படி" என்றான். நாணத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். கூடுதலாய் ஒரு நிமிடம் கூட ஆகவில்லை ஆனால் அவள் அழகைக் கூட்டி இருந்தாள். "ஒ! தன் கேள்வி தவறோ... வினாடிக்கு ஒரு முறை அல்லவா இவள் அழகை கூட்டிக் கொண்டே போகிறாள்" என்று எண்ணிக் கொண்டு அவன் இருக்கும் போதே, "அது ரகசியம்... சொல்ல முடியாது... சரி நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்" என்றாள்.

        "என்ன கேள்வி" என்றான். "உண்மையிலேயே வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து காதல் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?" என்றாள். அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் கண்கள் பேசின. அது சொல்லாமல் சொன்னது.

        உள்நாடு வெளிநாடு
        காதலுக்கு ஏது பாகுபாடு
        உறங்கும் போது கனவிலும்
        விடிந்தவுடன் நினைவிலும்
        வாழும் வரை உயிரிலும்
        காற்றை கண்ட உடன்
        நடனமாடும் மரங்களைப் போல
        ஒருவரை ஒருவர் கண்டவுடன்
        ஆசை அன்பு, பாசம், காமம்
        துளியாய் மனதில் எழும்
        உணர்வே காதல் காதல்

        ஏரிக்கரை கொஞ்சம் அமைதியாய் அப்பொழுது இருந்தது. சூரியன் மறையும் நேரம். குளிர் தென்றல் அவர்கள் இருவருக்கும் பல கதைகளைப் பேசிக் கொண்டு சென்றது. ஏனோ அவள் முகம் திடீரென வாடிப் போனது . "ஏய் என்னாச்சி?" என்றான் ஆரன். பதில் வரவில்லை. "எதாவது பிரச்சனையா...?" ஆரன் தொடர்ந்தான். "இல்லை..." என்றாள் அனலி. பெண்கள் இல்லை என்றால் ஏதோ இருக்கின்றது என்று அர்த்தம். எனவே, அவன் திருப்பி பின்னால் பார்த்தான். அக்காவின் மகள், பறவைகளை, மீன்களை எண்ணுவதை விட்டு விட்டு, சித்தியை எண்ணுவது போல அங்கு நின்றாள். ஆரன், அக்காவின் மகளை கூப்பிட்டு, எப்படி ஏரி, தலதாமாளிகை என்று கேட்டு நிலைமையைச் சமாளித்தான்.

        பின் அடுத்த நாள், கண்டி நகரத்தை விட்டு, நுவரெலியாவிற்கு போகும் பொழுது, வழியில், தொடர் வண்டி நிலையம், கடைத் தெரு, பூந்தோட்டம், பேராதனை பல்கலைக் கழகம், என பலவற்றை இருவரும் ரசித்துப் பார்த்தார்கள். அதன் பின், கண்டி மற்றும் பேராதனையின் பரபரப்பான தெருக்களிலிருந்து, ஆரனும் அனலியும் மத்திய மலைப்பகுதிகளுக்கு மேலும் தெற்கே பயணிக்கத் தொடங்கினர். அங்கு மூடுபனி மூடிய மலைகளும் பச்சை பசேலென தேயிலைத் தோட்டங்களும் அவர்களுக்காகக் காத்திருந்தன. மேகங்கள் நனைந்த மலைகள் மற்றும் மரகதப் பள்ளத்தாக்குகள் வழியாக அவர்களின் வாகனம் மெதுவாக மேலே ஏறியது.

        அக்காவின் மகள், "ஆஹா.. அங்கு பாருங்கள் எவ்வளவு பச்சை பசேல் என்று புல்வெளிகள். வயல்கள். ஆஹா! அதோ சிறிய ஓடைகள், பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது சித்தி" என்றாள். "ஆமாம், கீழே பள்ளத்தாக்கு. மேலே மலை முகடுகள். அவற்றில் மழை மேகங்கள் மிதந்து கொண்டு உள்ளன" என்று அனலி, கை நீட்டிக் காட்டி தொடர்ந்தாள்.

        திடீரென அக்காவின் மகள், ஆரனைப் பார்த்து "இலங்கைக்குப் பறந்து செல்லும்போது அனுமாருக்கு மிகவும் குளிர்ந்து இருக்குமா?" என்று கேட்டாள்.

        ஆரன் சிரித்தான் "வரும் பொழுது குளிர்ந்து இருக்க வேண்டும், அது தான் போகும் போது வாலில் நெருப்புடன் பறந்தானோ ?" என்ற கேள்வியுடன் பதில் அளித்தான்.

        அனலி ஜன்னலுக்கு எதிராக முகத்தை அழுத்திக் கொண்டு, சிவப்பு நிற புடவைகளில் தேயிலை பறிப்பவர்கள் எறும்புகள் போல துடிப்பான பச்சை சரிவுகளில் நகர்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "நாம் வேறொரு உலகத்திற்குள் அடியெடுத்து வைத்தது போல் இருக்கிறது," என்று அவள் கிசுகிசுத்தாள். "பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கவிடப்பட்ட ஒரு உலகம் போல் இருக்கிறது" என்றாள்.

        ஆரன் சிரித்தான். "இது நினைவுகளைச் சுமந்து செல்லும் உலகம் - காலனித்துவ தோட்டங்கள், இந்தியாவிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட தமிழ் தொழிலாளர்கள், தலைமுறை தலைமுறையாக உழைப்பு மற்றும் ஏமாற்றம். அவர்களின் சோகக் கதைகள் நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீரிலும் மூழ்கியுள்ளன." என்றான்.

        நுவரெலியாவிற்குச் செல்வது ஒரு நீண்ட பயணம். இடையில் ஓரிடத்தில், ஒரு பழங்கால கடையில் இறங்கி, பழங்கள் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு, அங்கிருந்து ரம்போதா அருவிகளைப் [The Most Majestic Ramboda Falls In Sri Lanka] பார்த்தார்கள். பச்சைப் பசேல் என்று மலைக் காடுகள் கண்களுக்குக் குளிர்ச்சியாய் இருந்தன. அப்பொழுது சட்டென்று மழை தூறியது. அந்த தூறலில், இருவரும் நன்றாக நனைந்து விடடார்கள். அந்த ஈரத்தில், அவளின் உடல், ஒரு கவிதை போல மிதந்தது அவனுக்கு, அவன் வாய் அவனை அறியாமலே;

        மலையின் உச்சி
        மனம் நொந்து
        விழுந்து சாவதற்கு அல்ல
        மனம் மகிழ்ந்து மேலும்
        பறந்து உயர்வதற்கு

        தாய்நாட்டின் தாலாட்டில்
        மலை உச்சியின் விளிம்பில்
        வாழ்வதை நினைப்போமே அனலி!

        என்று முணுமுணுத்தது. வழியில் தம்ரோ டீ [Damro Tea] தொழிற்சாலைக்கு ஒரு விசிட் [visit] அடித்தார்கள்! ஆனால் அவர்கள் சொல்லும் டெக்னாலஜி [technology] எல்லாம் கேட்கும் நிலையில் ஆரனும் அனலியும் இல்லை! அவர்களின் எண்ணம் எல்லாம் சிகிரியா சித்திரம் போல், முகிலில் மிதந்து கொண்டு இருந்தன.

        அதன் பின், இலங்கையின் "சிறிய இங்கிலாந்து" என்று அழைக்கப்படும் நுவரெலியாவை அடைந்த அவர்கள், பைன் மரம் மற்றும் ஈரமான மண்ணின் நறுமணத்தைச் சுமந்து செல்லும் மிருதுவான மலைக் காற்றில் கிரிகோரி ஏரியின் (Lake Gregory) வழியாக நடந்து சென்றனர். காலனித்துவ கால பங்களாக்கள் தெருக்களில் வரிசையாக இருந்தன, குதிரை வண்டிகள் கற்களின் மீது மெதுவாகச் சத்தமிட்டன.

        நுவரெலியாவில் அப்பொழுது 14°C. பனி மூட்டமாக இருந்தது. ஆனால் ஆரனுக்கு இவை ஒன்றும் பெரிய குளிரல்ல. ஆனால் அனலிக்கு பனி கடந்து செல்லும்பொது, எலும்பு வரை எட்டிப் பார்த்து குளிர்ந்தது. அவள் ஆரனை இறுக்கிப் பிடித்து அணைத்துக் கொண்டாள். அக்காவின் மகளையே மறந்து விட்டாள் அந்த குளிரில். அனலியின் இந்த புத்துணர்ச்சியான முகம், அவளின் தங்க மாலை மின்னிய சங்கு கழுத்து, ஒட்டிய உடையில் அவளின் அழகு, அவனை அப்படியே பிரமிக்க வைத்தது. என்றாலும் அவன், அவள் கைகளை உதறிவிட்டு கொஞ்சம் விலகி நின்றான்.

        அதன் பின் அவர்கள் வடக்கு நோக்கித் திரும்பினார்கள்.

        நன்றி

        [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
        அத்தியடி, யாழ்ப்பாணம்]

        பகுதி: 07 தொடரும்

        துளி/DROP: 1953 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 06
        https://www.facebook.com/groups/978753388866632/posts/32974794075502481/?

        By kandiah Thillaivinayagalingam · 1 hour ago1 hr

      • இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
        கிருபன்

        இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!

        இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
        24 December 2025

        நாட்டின் வடக்கு தொடருந்து மார்க்கம் இன்று (24) முதல் பயணிகள் தொடருந்து போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

        இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான யாழ்தேவி கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் அதன் வழக்கமான கால அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

        அதற்கமைய, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து காலை 6:40 க்குப் புறப்படும் தொடருந்து, பிற்பகல் 2:32 க்குக் காங்கேசன்துறை நிலையத்தைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

        அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து முற்பகல் 10:30 க்குப் புறப்படும் தொடருந்து, மாலை 6:54 க்குக் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

        இந்த தொடருந்தின் முதலாம் வகுப்பு (குளிர்சாதன வசதி) மற்றும் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளுக்கான ஆசன முன்பதிவு வசதிகளையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        அதேவேளை, மட்டக்களப்பு வரையான கிழக்கு தொடருந்து மார்க்கத்தின் சேவைகளும் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

        கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் பயணிகள், காலை 6 மணிக்கு திருகோணமலை நோக்கிப் புறப்படும் தொடருந்தில் பயணித்து, கல் ஓயா சந்தி தொடருந்து நிலையத்தை அடைய வேண்டும்.

        பின்னர் அங்கிருந்து மதியம் 12:40 க்குப் புறப்படும் இலக்கம் 6011 ஐ கொண்ட தொடருந்து ஊடாக மட்டக்களப்பைச் சென்றடைய முடியும்.

        அதேநேரம், மட்டக்களப்பிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் தொடருந்தில் கல் ஓயா சந்தி நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து கொழும்பு நோக்கிய தொடருந்தில் பயணிகள் தமது பயணத்தைத் தொடரலாம் என தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
        வடக்கு நோக்கிய தொடருந்து சேவை

        மட்டக்களப்புக்கான தொடருந்து சேவை


        https://hirunews.lk/tm/437350/from-today-you-can-travel-by-train-to-kankesanthurai-and-batticaloa

        By கிருபன் · 1 hour ago1 hr

      Featured Content

      • ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

        ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

        ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த‌ நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவு முக்கியமானது என்பதையும் தம் இன மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இந்நினைவாலயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கொல்லப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்திய காலணிகள், அவர்களால் அணியப்பட்ட கறுப்பும் வெள்ளையும் சேர்ந்த வரிரியிலான ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய உணவருந்தும் பாத்திரங்கள், அவர்களின் புகைப்படங்கள் என்பவற்றோடு அவர்களை வதைப்படுத்திக் கொன்றுபோட்ட பல நாசிப் படைத் தளபதிகளின் புகைப்படங்களும் அங்கு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றைத் தனது காணொளிகளில் காண்பித்த டேவிட் அவர்கள், எமதினத்திற்கு நடந்த அக்கிரமங்கள், அழிவுகள் குறித்து நாம் பேசுவதை எம்மில் ஒரு பகுதியினரே தடுத்து வருவதையும், சிங்கள இனத்தோடு நாம் ஒன்றித்து வாழ்வதை இவ்வாறான "பழங்கதைகள் பேசுதல்" எனும் முயற்சி தடுத்துவிடும் என்றும், அது இனவொற்றுமையினைக் குலைத்துவிடும் என்றும் காரணம் கூறிவ‌ருவதையும் குறிப்பிட்டு அங்கலாய்த்திருந்தார்.யூதர்கள் தமக்கு நடந்த அழிவினைத் தொடர்ச்சியாகப் பேசியும், காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும் வரும் நிலையில், நாமோ எம்மீது நடத்தப்பட்ட அழிவுகளை வேண்டுமென்றே மறுத்தோ அல்லது மறைத்தோ வாழத் தலைப்படுதல் ஈற்றில் எமது இருப்பிற்கே முடிவாய் அமைந்துவிடும் என்பதும் அவரது ஆதங்கமாக இருந்தது.இக்காணொளிகளின் இறுதிப்பகுதியில் தமிழ் மக்களை நோக்ல்கி வேண்டுகோள் ஒன்றினை அவர் முன்வைத்தார். அதுதான் நாம் அனைவரும், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது ஒரு குழுவாகவோ எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒருவடிவில் கட்டாயம் ஆவணப்படுத்தியோ அல்லது காட்சிப்படுத்தியோ தீரவேண்டும் என்பது. அவரது காணொளிகளைப் பார்த்தபோது அவர் கூறுவது எனக்குச் சரியென்றே பட்டது. ஏனென்றால், எம்மீது நடத்தப்பட்ட அநீதிகளை நாமே பேசவோ அல்லது காட்சிப்படுத்தவோ மறுப்பின், வேறு யார்தான் இதைச் செய்யப்போகிறார் எனும் கேள்வி எனக்குள் வந்தது. ஆகவேதான் எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் தொடர்பான எனது அனுபவங்களை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். இத்தளத்தில் இருக்கும் ஏனையவர்களும் தமது தனிப்பட்ட அனுபவங்களை இங்கு பகிருமாறும் வேண்டிக்கொள்கிறேன்.

          • Thanks
          • Like
        • 26 replies
        ரஞ்சித்
        ரஞ்சித்
        December 7Dec 7
        மோகன்
        Featured by மோகன்
        December 8Dec 8
      • சாத்தான் படை (IPKF)

        சாத்தான் படை (IPKF)

        * அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். [குறிப்பாக உங்களுக்குத் தெரிந்த தமிழக நண்பர்களுக்கு, மக்களுக்கு, ஊடகங்களுக்கு, அரசியற் கட்சியனருக்கு, அமைப்புகளுக்கு அனுப்பிவைக்கவும்.]* * flash: http://ebook.yarl.com/ipkf/ * pdf zipped: Part 1 http://www.mediafire.com/?emj0zigyjyu Part 2 http://www.mediafire.com/?i5tzkzyjfny Part 3 http://www.mediafire.com/?tz1mvzdgggz * pdf: Part 1 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part1.pdf Part 2 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part2.pdf Part 3 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part3.pdf அன்பான உறவுகளே, தற்போதைய இலங்கையின் போர்ச்சூழல் பற்றி நீங்கள் அறிவீர்கள். திட்டமிட்ட வகையில் நடத்தப்படும் இனவழிப்பு / இனக்கருவறுப்புப் போரில் - ஒவ்வொரு நாளும் - குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் - எந்தவிதப் பாகுபாடுமின்றி - கொத்துக்கொத்தாக கொத்தணிக் குண்டுகளாலும், பொஸ்பரஸ் அடங்கிய எரிகுண்டுகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள். "பாதுகாப்பு வலயம்" என அறிவித்து - அங்கும் மக்களை அரக்கத்தனமாகக் கொல்கிறார்கள். சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரச்சொல்லி - ஆண்கள் பெண்களென வகைபிரித்து - பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிப் பின் கொன்று புதைக்கிறார்கள். புதிய ஆண்டும் அவர்களுக்கு கொலைக்களமாகத்தான் பிறந்தது. இந்த ஆண்டின் இரண்டு மாத காலத்தில் மட்டும் - 1500 க்கும் அதிகமான மக்கள் சிறிலங்கா பேரினவாத அரசால் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஒரு இளம் சந்ததியே - ஒரு புதிய தலைமுறையே - கை, கால் இல்லாத சந்ததியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் - இந்த இன்னல் நிறைந்த காலகட்டத்தில் - தமிழகத்திலிருந்து எழும் ஒவ்வொரு ஆதரவுக் குரலும் புலம்பெயர் மக்களாகிய எமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறதென்பதை நீங்கள் அறீவீர்களோ தெரியாது. உங்களின் ஆதரவான ஒவ்வொரு சொல்லும் எங்கள் கண்ணீரைத் துடைக்க வல்லன. எமக்கு ஆதரவாக நீங்கள் வீதியில் இறங்கும் போதும் - உரக்கக் குரல் கொடுக்கும் போதும் - நாம் நம்பிக்கை கொள்கிறோம். சாதாரண நம்பிக்கையல்ல - சரித்திரம் படைக்கிற நம்பிக்கை. ஆனாலும் உறவுகளே - இன்னொரு கசப்பான உண்மையையும் நாம் உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம். உங்கள் ஆதரவான நம்பிக்கை தரும் குரல்களுக்கும் மத்தியிலிருந்து - தமிழகத்திலிருந்து - எம்மீது வெறுப்பைக் கக்குகிற சில குரல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை, மீண்டும் மீண்டும் எம்மைக் காயப்படுத்துகின்றன. நாம் காயப்படுவதைப் பற்றி கவலைப்படவில்லை. அந்தக் குரல்கள் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவுக் குரலையும் பலவீனப்படுத்திவிடும் என்றே பயப்படுகிறோம். உலகத் தமிழினமே இன்று ஒன்றுபட்டு நிற்கையில் - பகைவளர்க்கும் இந்தச் சில குரல்கள் - தமிழினத்தின் விடுதலையில் கீறல்களை ஏற்படுத்திவிடக் கூடாதென்றே விரும்புகிறோம். ஈழத்தமிழர் பிரச்சனை/அவலம் பற்றி நீங்கள் பேசுகிற போதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - உங்களின் வாயை அடைக்கப் பார்க்கிறார்கள். ஈழத்தின் விடுதலை பற்றிப் பேசுகிறபோதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - கொச்சைப்படுத்துகிறார்கள். உங்களின் எழுச்சியை அவர்கள் ஒற்றை வார்த்தை கொண்டு ஒதுக்கிவிடப் பார்க்கிறார்கள். உலகத் தமிழரின் ஒற்றுமையை ஒற்றைவார்த்தையால், சாத்தியமற்றதாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எனவே அன்பான உறவுகளே, எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் சோர்ந்துவிடக்கூடாது - எவருக்கு முன்னும் நீங்கள் தலைகுனியக்கூடாது - உண்மைகளை உணர்ந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கோடு இந்தப் புத்தகத்தை மின்னூல் வடிவில் உங்கள் முன் வைக்கிறோம். ராஜீவ்காந்தியின் கொலையை யார் செய்தார்கள்? அவர் கொலை செய்யப்பட்டது சரியா பிழையா? யார் யாருக்கு அதில் பங்குள்ளது என்பது பற்றியெல்லாம் நாம் இங்கு பேச முனையவில்லை. அவற்றை ஒருபுறம் நாம் ஒதுக்கிவைத்துவிட்டு - எங்கிருந்து எல்லாம் தொடங்கியது என்று பார்த்தால் - சிலவேளை உண்மைகள் புரியக்கூடும். அமைதிப்படை என்கிற பேரில் ஈழத்து மண்ணில் கால்வைத்த இந்திய சாத்தான் படை - எப்படியெல்லாம் ஈழத்தமிழர்களைக் கொடூரமாகக் கொலை செய்ததென்பதைப் பாருங்கள். ஈழத்தமிழரின் விடுதலைப் போரைச் சிதைக்க எப்படியெல்லாம் துணைநின்றார்கள் என்பதைப் பாருங்கள். மீண்டும், அதே கொடுமையையும் துரோகத்தையும் - சிங்கள அரசுக்கு உதவுவதினூடாக/சிங்கள இராணுவத்தின் பின்னாலிருந்து யுத்தத்தை நடத்துவதினூடாக - இந்தியா செய்கிறது. இப்படியான சூழலில் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எழுப்புகிற குரலை நசுக்க ராஜீவ்காந்தியின் கொலையைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இதை தொடர்ந்து கவனிக்கிற போது, ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தில் பேசப்படக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர்களுக்கு தமிழகம் உதவக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி பேசப்படுகிறபோது ராஜீவ்காந்தி கொலை கண்ணுக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவும் - யாரோ திட்டமிட்டு நீண்டகால அரசியல் இலாபத்தோடு இதைச் செய்திருக்கிறார்கள் என்றே உணர முடிகிறது. இந்திய/தமிழக நண்பர்களே, உறவுகளே, ஊடகங்களே நாம் பழையதை நினைவுபடுத்தி, எமக்குள் உள்ள உறவைக் காயப்படுத்த விரும்பவில்லை. எனினும், உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். உங்களின் ஆதரவுக் குரல்கள் "ராஜீவ்காந்தியின் கொலை" என்கிற ஒற்றை வார்த்தையைக் கொண்டு அடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தப் புத்தகத்தை உங்களுக்கு அனுப்புகிறோம். நாம் மீண்டும் மீண்டும் எல்லோராலும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். * அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். --நன்றி: யாழ் இணையம்--

          • Like
        • 4 replies
        இளைஞன்
        இளைஞன்
        February 15, 200916 yr
        மோகன்
        Featured by மோகன்
        November 25Nov 25
      • 🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul”

        🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul”

        🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul” ஓ… முள்ளிவாய்க்கால் ஆன்மாக்களேகாற்றில் அலையும் ஜீவன்களே அலைகளுடன் நகரும் மென்மையானவர்களே உங்களின் முன் தலை குனிந்து வணங்குகிறோம்!உங்கள் துன்பம் மறக்கமுடியாதது உங்கள் பெயர்கள் மறையமுடியாததுஉங்கள் கனவுகள் எங்களால் வாழட்டும்!குழந்தைகளைப் பாதுகாத்த தாய்மார்களுக்கும் கதிரவனைக் காணாத குழந்தைகளுக்கும்நம்பிக்கையை மட்டுமே சுமந்த இளைஞர்களுக்கும்நாங்கள் இந்த தீபத்தை ஏற்றுகிறோம்!உங்களை கைவிட்ட உலகிற்கு இந்த தீபம் வழிநடத்தட்டும்!நாங்கள் வழங்க முடியாத பாதுகாப்பை அமைதி சூழ்ந்து கொடுக்கட்டும்! முள்ளிவாய்க்காலின் ஆன்மாக்களேநாங்கள் உங்களைப் போற்றுகிறோம்உங்களுக்காகப் பேசுகிறோம்!ஒவ்வொரு தீபத்திலும் ஒவ்வொரு கண்ணீரிலும்ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் உங்களை நினைவில் கொள்கிறோம்!🕯️ உங்கள் ஒளி நிலைத்திருக்கட்டும்🕯️ உங்கள் உண்மை உயரட்டும்🕯️ உங்கள் நினைவு என்றென்றும் ஒளிரட்டும்![கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்] “A Lamp for Every Soul”O spirits of Mullivaikkal,restless in the wind,gentle in the waveswe bow our heads before you.May your sufferingnever be forgotten.May your namesnever fade from memory.May your dreamslive through us.To the mothers who shielded their children,to the babies who never saw the sunrise,to the youth who carried only hopewe light this lamp.May this flame guide youwhere the world failed you.May peace hold youin the embrace we could not give.O souls of Mullivaikkalwe honour you.We speak for you.We remember youin every lamp,every tear,every heartbeat.🕯️ Let your light endure.🕯️ Let your truth rise.🕯️ Let your memory shine forever.[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]துளி/DROP: 1910 [🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul”]https://www.facebook.com/groups/978753388866632/posts/32502659262715967/?

          • Thanks
        • 0 replies
        kandiah Thillaivinayagalingam
        kandiah Thillaivinayagalingam
        November 22Nov 22
        மோகன்
        Featured by மோகன்
        November 23Nov 23
      • தாயகத்தின் தாய் – ச.பொட்டு

        தாயகத்தின் தாய் – ச.பொட்டு

        தாயகத்தின் தாய் – ச.பொட்டு அம்மா எமக்கு அறிமுகமான அந்தநாள் இப்போது நினைவில் இல்லை. அது மணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக எம் நினைவுப்பதிவுகளில் இருந்து மறந்து போய்விட்டது. எதொவொரு இலக்கத்தாலும் நினைவில் வைத்திருக்க வாகாகத்தெரிவு செய்யப்பட்ட வழமையல்லாத ஏதோவொருயெராலும், கறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அம்மாவின் கோவையும்பொல் ஒன்றாகத்தான் தூங்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போன்ரவரல்ல. என்றென்றும் மறக்கப்பட முடியாதவராக அந்த அம்மா எம் நிணைவுப்பதிவுகளில்…. கரீர் என்ற கறுப்பு நிறமும், மெலிவான மலர்ந்த முகமும் சளசள வென்ற ஒயாத கதையுமாய்… நகைச்சவை உணர்வுமிக்க ஒரு புலனாய்வாளனால் தமிழகத்து சிரிப்பு நடிகைகளது பெயரில் ஒன்றை புனைபெயராக அம்மாவில் வெளிப் பார்வைக்குத் தெரியும். சில பெண்பிள்ளைகளுடன் இளையவனாய் ஒரேயொரு மகன் என்பது அந்த மகன் மீது அதீத அன்புக்கு காரணமாய் அமைவது இயல்புதான். அம்மாவுக்கும் அப்படித்தான். சில பெண் சகோதரிகளுடனான அந்த ஒரேயொரு மகன் மீது கொள்ளைப் பாசம். காலத்தின் தேவையாக அந்த ஒரேயொரு மகன் போராளியாக ஆனபோது, அம்மாவின் அந்த அதீத பாசத்திற்க்கு சோதனை வந்தது. அந்தச் சோதனை எல்லா அம்மாமாருக்கும் வருவது போன்றபாசத்தின்தளத்தில் எழும்வேதனை மட்டுமல்ல. ****** அம்மா அந்தக் காலத்து பழசுதான். ஆனால் பழமையில் ஊறிய பிற்போக்கு வாதியல்ல. இளமைக்காலத்தில் இருந்தே சமூகத்தின் மீதான பார்வையை செலுத்தக்கூடியவர். எம்மினத்தின் அரசியல் பயணத்தின் அம்சங்களை காலத்தால் அறிந்தவர். மென்முறையில் எழுந்த அரசியல் கோரிக்கைகள் ஆக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதை கண்ணால் கண்டறிந்து குமறியவர். அரசியல் மென்முறைகள் அக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதன் மறவடிவமாக அரசியல் வன்முறை வடிவம் கொண்டதை ஆரம்ப காலத்தில் இருந்தே வியப்புடன் பார்த்தவர். காலம் தன்பாட்டில் ஓடி, அம்மா குடும்பமாகி, பிள்ளைகள் பெற்று வளர்த்து..ஒருசராசரி பெண்ணாக, தாயாக ஆனார். இது வரை அம்மாவால் அப்படியாக வாழவும் முடிந்தது. ஆனாலும் மனதில் ஆயுதப் போராட்ட நியாயத்தின் கடமைக்காய் தன் கடைசிப்பிள்ளை அம்மாவின் பாசத்தை கொள்ளை கொண்ட செல்லமகன் ஆயுதம் ஏந்தப்புறப்பட்டதை அம்மா எப்படி எதிர்கொள்வது? பெற்ற பாசமா? இனத்தின் சோகமா? என்ற தர்ம சோதனையில் அம்மா குழம்பி மகனது ஆயுதப்போர் வடிவத்தெரிவை மனதால் எற்று சமநிலைக்கு வர காலம் பிடித்தது. ***** இப்போது மகன் போராளி. தெருவில் போகவர அம்மாவை எதரிகொள்வான். மகன் இப்போது வளர்ந்து விட்டான். வளர்ந்தவனையே கூட கழந்தையாய் பார்க்கும் அம்மா மனம், இப்போது மகனைக் கண்டு வியந்தது தன்ர சின்னப்பிள்ளை இப்போது எபரிய ஆளாய், ஏதேதோ வேலையாய் அங்கிங்கு ஓடித்திரிவது அம்மாவுக்கு சொல்ல முடியாத பெருமைதான். இயக்கத்தில் இணைந்த காலத்தில் மகன் சின்னப்பெடியன். வயதுக்கே உரிய வேகமான செயற்பாடும் குழப்படியும் கொண்ட இளைய போரளி. அவன் செய்யும் குழப்படிகள், வாங்கும் தண்டனைகள் எதுவும் அம்மாவுக்குத் தெரியய நியாயமில்லைத்தான். அதே போல் வடமராச்சி பொறுப்பாளர் தண்டனை கொடுத்து களைத்துப்போயா அல்லது இவன்தான் தண்டனை செய்து களைத்தப்போயா என்னவோ ஆள் நெல்லியடியில் இருந்து சாவகச்சேரிக்கு நடந்தெ வந்து சேர்ந்தும் அம்மாவுக்கு தெரிய எந்தநியாயமும் இல்லைத்தான். இதற்கிடையில் மகன் சண்டைக்களத்தில் என்ற செய்தியை மட்டுமே கேள்விப்பட்டு கவலைப்பட்ட அம்மா. கடும் சண்டை என்ற செய்தியால் எல்லா அம்மாக்களையும் போல அம்மாவும் பதறிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் மகன் காயமடைந்த செய்தி, பதறிய மனதுடன் அம்மா ஓடித்திரிந்தும், மகனின் நண்பர்கள் மூலம் அவன் நிலையறிந்து துடித்ததுமாக கழிந்தது நாட்கள். அம்மாவுக்கு மகனின் சுகநலன் அறியும் தொடர்புகளும் ஏற்பட்டுவிட்டன. ‘இதுவொரு சின்னக்காயம் இன்னும் கொஞ்ச நாள்ள காம்புக்கு வந்திடுவான்” என்று பொறுப்பாளர் சொல்லும் பொய்யான கதையை மீறி’ வயிற்றுக்காயம்” பதிணைந்து தையலுக்கு மேல் போட்டிருக்கு” ‘இன்னும் சாப்பிடத் தெடங்கேல்ல” என்று உண்மைகளை அறிந்துவிடும் அளவுக்கு அம்மாவுக்குத் தொடர்புகள் எற்பட்டு அதனை தொடர்ந்து மருத்துவனைக்கு போய்வரவும் தொடங்கிவிட்டா. மருத்துவமனை’கெதியாக என்னை துண்டு வெட்டி விடுங்கோ உடனே சண்டைக்குப் போகவேணும்” உறுதியின் வெளிப்பாடுகள். "என்ர இடத்தில ஆமியின்ர பொடியும் ஆயுதமும் இருக்கு காவு குழு அனுப்புங்கோ” ‘……….” எம்மையா? எதிரியையா? என சிந்திக்க வைக்கும் எழுத்தில் சொல்லமுடியாத வசவுகள். மருந்தின் மயக்கத்தில் தம் நிலை மறந்து உளறல்கள். ’ஜயோ தங்கேலாமல் கிடக்கு பெத்தடினைப் போடுங்கோ…..ஓ…” வேதனை தாங்கேலாமல் கிடக்கு இந்தக் காலை வெட்டுங்கோ” கேட்போரின் கண்களில் இரத்தம் கசிய வைக்கும் வேதனைக்குரல்கள். மருந்துக்களின் நெடியை மீறிய புண்களின் மணம். ****** மகனைப் பிரிந்திருந்த அம்மா தனது பாச உணர்வுகளும் அடிமனத்து விடுதலை உணர்வுக்குமாக ஒரு வடிகாலை தேடிக்கொள்ள, காயமடைந்த போராளிகளை பராமரிப்பவர்களில் ஒருவராகிவிட்டார். இந்தக் காலம் அம்மாவுக்கு விடுதலைப் போரை முன்னை விட கூடுதலாகவே அறிமுகம் செய்து வைத்தது. காயமடைந்த போராளிகளுடனான பரிச்சயமும், பழக்கமும் அம்மாவுக்கு போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை அறிமுகம் செய்து வைக்க அவவுக்கே தெரியாமல் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப்போனார். வெளியில் இருந்து போராட்டச் செய்திகளை மட்டும் கேட்பதற்கும், வெற்றிகளை கேட்டு மகிழ்சி அடைவதற்கும் அப்பால் அந்தச் செய்திகளின் உருவாக்கத்தின் யதார்த்தம் அம்மாவை அதிகமாக சிந்திக்க வைத்தது. விட்டுக் கொடுக்கப்பட முடியாததான இவ்விடுதலைப் போராட்டம் இத்தனை கடினமானதா? இவ்வளவு கண்ணீரை வரவழைப்பதா? இழப்புக்களை குறைத்தோ அல்லது குறைக்கவோ ஏதாவது செய்யமுடியாதா? அம்மா அரசியல், இராணுவ வித்தகத்தடன் சிந்தித்தாவோ? இல்லையோ? அம்மாவாகச் சிந்தித்தா. எல்லாப் போராளிகளையும் தன் பிள்ளையாய் பார்த்த அம்மாவாக சிந்தித்தா.. ******* எம் தாயகத்தில் விளைவிக்கும் ஆக்கிரமிப்பு கொடுமையின் ஒரு சிறு பங்காவது எதிரியின் கோட்டைக்குள் திருப்பிக் கொடுக்கப்படுவது அம்மா திருப்தியுடன் பார்க்கும் செய்திதான். அதுவுமல்லாது எதிரியின் பெரும் நிலைகள் அவ்வப்போது ஆங்காங்கே அழிக்கப்படுவதும் அது எதிரிக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியும் அம்மா அறிவார். அதில் எம் போராளிகள் இங்க போல் பெரும் இழப்புக்களை சந்திப்பதில்லை என்பதும் அம்மாவுக்கு தெரியும். ஏற்கனவே எரிபற்று நிலையில் இருந்த அம்மாவின் மனம்தான் இந்த வழியை நாடிப்போனதோ அல்லது அம்மாவை அறிந்து சந்தித்த அந்த போராளிகள்ததான் அம்மாவின் மனதில் தீயை மூட்டினரோ? என்னவோ? அம்மா இப்போது புலனாய்வுத்துறையின் ஆள், முகவராம் வெளிவேலைக்கான முகவாரம். அம்மா இப்போது மாறி விட்டா. முன்பு குடும்பம் அயலவர் என்று எல்லா இடமும் செய்தி சொல்லி மருத்துவமனை சென்று வருபவர். இப்போது சுருக்கமாக வேறெங்கோ தனியாகப் போய்வரத்தொடங்கிவிட்டா. மருத்துவமனை போய்வர நேரம் இருக்குதோ இல்லையோ அம்மா இப்ப அங்கை எல்லாம் போய்வரக்கூடாதம். மருத்துவமனை என்றில்லை. இயக்கம் இருக்கிற இடம் ஒன்றுக்கும் போய் வரவும் கூடாதாம்.இயக்கத்திற்கு ஆதரவாக கதைக்கக் கூடாதாம். அம்மாவுக்கு தன்னையே நம்ப முடியாதபடி ஆச்சிரியம் கலந்த பெருமை சி.ஜ.ஏ, கே.ஜி.பி மொசாட் என்று புலனாய்வு அமைப்புக்களை பட்டியலிடுவதுடன் எங்கட வேலைத்திட்டம் என்று ஏதோ விளக்கங்கள். அம்மாவுக்கு எதுவெது விளங்குகிறதோ? இல்லையோ? மனதுக்குள் குறுகுறுவென்று ஆர்வ முனைப்பு. அம்மாவுக்குள் இப்போது வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அவர் இப்போது இன்னொரு ஆளாகவும் செயற்படக் கூடியவராக ஆகிவிட்டார். தலைநகர் அதிர்ந்தது” தற்கொலையாளி அடையாளம் காணப்பட்டார் ‘புலிகளைத் தேடி வலைவிரிப்பு” சூத்திரதாரி தலைமறைவு” அடையாளம் காணப்பட்டவரின் பெயர் போலியானதென பொலிசார் தெரிவிப்பு” உலகமே செய்திகளை வியப்புடன் நோக்கும். சூழ உள்ள சுற்றத்தினரும் கூட தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல செய்திகளும் கற்பனைகளுமாக கதைகதையாய் பீற்றித்திரிவார். எல்லாவற்றையும் அமைதியாக அமத்தலாக பார்த்தபடி பட்டுக்கொள்ளாமல் இருப்பா அம்மா. ஆக, அம்மாவுக்குள் இப்போ வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அவ்வப்போது வந்து அன்பு மகனை பார்த்துக்கொள்வது தவிர மற்றும்படி எவ்வளவோ மாறிப்போனா அம்மா. ***** இதற்கிடையில் அம்மாவுடன் மகனுக்கு சரியான கோபமாம். அம்மாவின் அக்கா பெரியம்மா – மூலமாக செய்தியனுப்பியிருந்தான்.’ இட இவர் பெரிய மனுசானாகி இப்ப இவருக்கு கோபமும் வருமே” என செல்லமாய் சொல்லிவிட்டிருந்தா அம்மா. இவனது போராளி நண்பனொருவன் ஊர்ப்பக்கமாய் வந்தபோது’ சின்னதாய் ஒரு மூஸ் அடித்து அம்மாவிடம் போய் இவனது சுகநலன் சொல்லியுள்ளான். அவனுக்கு சாப்பாடு கொடுக்காமல் அனுப்பிவிட்டவவாம் அம்மா. போய்வந்தவன் குறையாகவோ இல்லை பகிடியாகவோ சொன்னானோ அல்லது அவன் சொல்லாமல்விட இவன்தான் கதைவிட்டு அறிந்தானோ என்னவோ? ஆளுக்கு சரியான கோபம். அம்மா வழமையில் அப்படியில்லை. எல்லோரையுயம்’ குறிப்பாக போராளிகளை” உபசரிப்பதில் அதுவும் சக்திக்கு மீறியே உபசரிப்பதில் முன்னிப்பவர்தான். அன்று அந்த ஏழைத்தாய்க்கு என்ன கஸ்ரமோ வசதிக்குறைவோ? வீம்புக்காக அம்மாவில் கோபம் போட்டாலும் அவ்வப்போது பெரியம்மாவின் வீடு வந்து’ அம்மாவில் இப்போதும் கோபம்தான்” என்று சொல்லிப் போவான். மகன் பெரியம்மா வீடு வந்து. அம்மாவில் கோபம் சொல்லி நிற்பதும். அம்மாவின் சமையல் வேலிக்குள்ளால் பயணித்துபெரியம்மா வீடு வந்து மகனிடம் சேர்வதும் நல்லதொரு நாடகம். அம்மாவின் கை மணம் தெரிந்தும் தெரியாதது போல நல்ல சாப்பாடு என பெரியம்மாவை புகழ்ந்து விட்டு போகும் பிள்ளையை வேலியால் பார்த்திருப்பா அம்மா. தான் பார்ப்பது தெரிந்தால் அவருக்கு இன்னும் எழுப்பமாய்ப் போய்விடும் என அம்மா, மறைவாய் நின்று சிரிப்பது தெரியாமல் அம்மாவை தேடுவான் பிள்ளை. அன்றைய சுகமும் இன்றைய சோகமுமாய் ஆகிப்போன சின்னச்சின்ன ஞாபகங்கள் இப்படி எத்தனை? ****** காலம் கொஞ்சம் ஓடிப் போக மகன் இப்போது முதிர்ந்தவனாகி விட்டான். அம்மா எதிர்பார்க்க முடியாதபடி என் அவனே கூட எதிர்பார்க்காமல் பொறுப்புள்ளவனாகிப் போனான். இயக்கத்தின் ஆசிரியர் அணியொன்றின் உதவியாளன் என்பதும், அவ் ஆசிரியர் அணியுடனும் அவர்தம் பணியுடனும் அவனுக்கேற்பட்ட ஈடுபாடுமாக அவனைப் படிப்படியாக முதிர்ந்தவனாக ஆக்கிவிட்டதோ? சண்டை அணியில் நிற்கும் போது நண்பர்கள் செய்தது போல அவனும் கரும்புலி விண்ணப்பக் கடிதம் எழுதிக் காத்திருந்தது பழையகதை. இப்போது மொழிப்பெயர்ப்புத் திரைப்பட உருவாக்கற்பொறுப்பை கைமாற்றிக் கொடுத்து விட்டு, அவன் கரும்புலிக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதே புதிய நிலை. அணிசேர்ப்பு, தொடர்வகுப்பு,கடும்பயிற்சி,எதிரியின் தலைநகர் அறிமுகமென தயார்படுத்தல்களுடன், தனிமைப்படுத்தப்பட்ட முகாம் வாழ்வுமாக மகனும் இப்போ வேறொரு உலகிற்கு மாறிப்போனான். ******** மகன் வழிதெருவில் எதிர்படாமல் போனதும், வழமைபோல தேடிப்போன இடத்தில் சரியான பதில் இல்லாது போனதும் அம்மாவுக்கு என்னவோ போலானது. காணாத மகனை தெருவில் கண்டபோது அவனது புதிய கூட்டாளிகளும், வழமையல்லாத நடை, உடை,பாவனையும் அம்மாவுக்கு எதையெதையோ எண்ணவும் வைத்தது. அம்மாவும் இப்போதும் பழைய அப்பாவி அம்மா இல்லையே. மகன் இவ்வழியில் கரும்புலியாய் தெரிவு செய்யப்பட்டுவிட அம்மா வெளிவேலைகளில் இருந்து நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாததாக ஆனது.’ தேவை ஏற்படும் போது அவசரமாக அழைக்கப்படுவீர்கள்” என்ற விளக்கத்தை அம்மாவால் முற்றாக நம்பவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. தனக்கு கூறப்படுவது போலிக்காரணம் என்று தெரிந்தாலும் அதற்கு மேல் அம்மாவாலும் ஒன்றும் செய்யமுடியாமல் போக அம்மா, வழமையான அம்மாவாக வாழத்தொடங்கிவிட்டா. அம்மாவின் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்க அல்லது தீர்த்து வைக்க காரணமாக இன்னொரு செய்தியும் வந்து சேர்ந்தது. அம்மாவின் உறவுக்கார பெண்மணியொருவர் கொழும்பில் இருந்து வந்திருந்தார். மகனை கொழும்பில் கண்டதை அம்மாவுக்குச் சொன்னது மட்டுமின்றி, தன்னைக் கண்டதை அம்மாவுக்குச் சொல்ல வேண்டாமென்று அவன் சொன்னதையும் வலு கவனமாய் மறக்காமல் சொல்லிவிட்டுப் போனார். அம்மாவின் மனப்புதிர் மெல்ல மெல்ல விடுபட்டுப்போகும் காலத்தின் ஒரு நாளில்,’சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று” வீடு வந்தான் மகன். பழைய கோபத்தை நினைவூட்டுவதும் செல்லம் கொஞ்சுவதுமாய், அதே பழைய மகனாய்……..ஒரே கொண்டாட்டம். வீடு நிறைந்து போனது. அப்பாவி அப்பாவுக்கும் அக்காளுக்கும், உறவுகளுக்கும் மகனது வீடு வருகையின் காரணம் தெரியாமல் ஒரே கொண்டாட்டம். அம்மாவுக்கு மட்டும் என்ன தெரியும்? ஒன்றுமே தெரியாதுதானே.’மகனது புதிய நடை, உடை பாவனையில்,வித்தியாசம் விளங்காது”‘அவன் கொழும்புக்கு போனதும் தெரியாது”‘அவனது அன்ரி வந்து ஒன்றுமே சொல்லவும் இல்லை” ஒரே மகிழ்ச்சி வீடு நிறைந்த மகிழ்ச்சி.. பிள்ளை ‘அம்மாவை தனக்கு சாப்பாடு ஊட்டி விடக்கேட்டது’ அம்மாவுக்கு நான் தான் தீத்துவேன் என்று கூறி உணவூட்டிவிட்டதும் ஏன் என்று வீட்டில் மற்றயோருக்குத் தெரியாது.’தம்பி இப்ப தான் செல்லம் கொஞ்சுது என்று அவர்கள் பரிகசித்து பேசும் போதும் அம்மா கண்ணீர் மறைத்து, முகம் சிரித்து,’உணர்வு மறைத்து உணவூட்டி…. வீட்டில் ஒரே சிரிப்பும் கொண்டாட்டமும் தான். அம்மாவுக்குத்தான் ஒன்றும் தெரியாதே. மகன் முகாம் திரும்ப முன்புபோல் அவசரப்படவும் இல்லை. எல்லோரிடமும் விளையாட்டும் , கதையுமாய் கொண்டாடி, உணவுண்டு, பாய்போட்டு நித்திரை கொண்டு அவன் முகாம் திரும்பும் வேளையில் அன்றைய பொழுது இரவைத் தொட்டுவிட்டிருந்தது. அன்று அவன் சொல்லிவிட்டுப் போனது போல தனயாக வரவில்லை அரை டசினுக்கு அதிகமான அவனது நண்பர்களால் வீடு மீண்டும் களைகட்டியது. அவனது அம்மா,அப்பா, அக்காக்கள், வந்திருந்த அனைவருக்கும் அம்மா, அப்பா,அக்கா ஆயினர். அத்தனை பிள்ளைகளும் மாறி மாறியும் ஒன்றாயும் அம்மா…..என்று உறவு சொல்லி அழைக்க வீடு களைகட்டியது. ஒன்றும் தெரியாத அப்பாவி அப்பாவும் அக்காக்களும் அவனது புதிய நண்பர்களின் உற்சாகத்தில் கரைந்து போயினர் அம்மாவும் தான். அவவுக்கும் தான் ஒன்றுமே தெரியாதே. அவவும் சேர்ந்து அந்த உற்சாகத்தில்…….. வந்திருந்த எல்லோருக்கும் தடல்புடலாய் சமையல், சாப்பாடு என்று வீடு அமர்க்களப்பட்டபோதும், குசினியும் முற்றமுமாய் பம்பரமாய் சுழன்ற போதும் அப்பாவி அப்பாக்கும் அக்காக்களுக்கும் ஒன்றுமே தெரியாதே…. அம்மாவுடன் வீடே வாசல் வரை வழியனுப்ப அவர்கள் புறப்பட்டு போயினர். ****** அவர்கள் விடைபெற்று போயினர். அந்தத்தாயின் வழியனுப்பலின் பின்னர் அவர்கள் தாயகத்திடமும் விடை பெற்றுப் போய்……போய் விட்டனர். நல்ல சூரியனின் பெயரால் கொடியோரின் ஆக்கிரமிப்புக் கதிர்கள் விலிகாமத்து மண்ணை சுட்டெரித்த காலத்தின் ஒரு பொழுதில் அவர்கள் எதிரியின் கோட்டைக்குள் புதுவரலாறு படைத்தனர். வீரமும் அர்பணிப்பும் மட்டுமன்றி மனிதாபிமான நிதானமும் நிறைந்த அவர்களது வெற்றிச் செய்தியால் உலகமே உறைந்து நின்ற வேளையில், தமிழீழத்து எல்லோரையும் போலவே அவனது குடும்பத்திலும் மகிழ்ச்சி வளிப்பாடுகள். ஆனால் அம்மா மனதில்?… ****** மகனது பொறுப்பாளர்களை அம்மா சந்திக்கும் அந்த நாள் வந்தேவிட்டது. மகன் எங்கே? என்பதற்கான வழமையயான பதில்கள் அம்மாவிடம் எடுபடாமல் போக, சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக ஆகிப்போனது. மனுசியின்ர வாயை முதலே அடைச்சுப்போட வேணும். கதைக்க விட்டால் தப்பேலாது” என்ற சிந்தனையில் மகன் நிற்குமிடம் அவனைச்சந்திப்பதில் உள்ள வசதிக் குறைவு…என பொருத்தமற்ற பொய்யான பதில்களுடன் பொருப்பாளர். ‘மகன் தூரத்தில்…., மட்டகளப்பில்…நிற்கிறான்…வர கொஞ்சம் காலம் செல்லும்” அம்மாவின் முன்னால் இரத்தம் நீராகிப்போன பொருபாளரின் வார்த்தைகள். அவரது உயிரற்ற வார்த்தைகளை மீறி அம்மாவின் உறுதியான கேள்வி. ‘எப்படி என்ர மகன் கடைசி வரைக்கும் சரியாக செயற்பட்டவனே………? ‘எனக்கு எல்லாம் தெரியும். நான் பெத்து வளத்த பெடியன் அவன் சொல்கிறது பொய் எண்டு எனக்குத் தெரியாதே” ‘உப்பிடி எத்தனை பொய்களை எனக்கு நீங்கள் சொல்லித்தந்திருப்பியள்” ‘வீட்ட வந்து அவன் நித்திரை கொள்ளேக்க அவன்ர பொக்கற்றுக்குள்ள பார்த்தன் வட்டுக்கோட்டை அடையாள அட்டை வச்சிருந்தவன்” என்ர பிள்ளை அம்மாவுக்கு சொல்லேலாதெண்டு எனக்குத் தெரியும். அதில நான் ஏதும் பிழை விட்டிடக்கூடாது என்று தான் நானும் அவனோடை ஒன்றும் கதைக்கேல்லை. ‘செய்தியை கேட்டுப்போட்டு அக்கா வீட்டை ஒடிப்போய் ரூபவாகினிதான் பார்த்தனான்” முகம் தெரியாததால ஒருதருக்கும் விளங்கேல்லை – பெத்ததாய் எனக்கு தெரியாமல் போகுமே. ‘றெயில் தண்டவாளத்துக்குப் பக்கத்துல கிடக்கிறான் என்ரபிள்ளை…” அடக்கி வைத்ததெல்லாம் வெடித்ததால் குமுறி அழும் அம்மாவிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. உலகத்தில் உள்ள பொய்கள் எல்லாம் எங்கோ ஓடிப்போக விக்கித்து நினறவரிடம் அம்மா அந்த கடிதத்தைக் கொடுத்தா. தன் வீரச்சாவு வெளிப்படும் வேளையில் அம்மாவுக்கு கொடுக்கவென மகன் எழுதிய கடிதம். எங்கோ பிசகுப்பட்டு முன்கூட்டியே அம்மாவின் கையில். எண்ணற்ற தடவைகள் படிந்துறைந்த போன அந்தக் கடிதத்தில் அவன் எல்லாம் எழுதியிருந்தான். முத்தாய்ப்பான வரிகள்… உன் கடன் தீர்க்காமல் போகின்றேனம்மா. தமிழீழத்தில் அடுத்த பிறப்பில் உன் வயிற்றில் பிள்ளையாகவே என்னைப் பெற்றிடு அம்மா இப்பிறப்பில் தீர்க்காத உன் கடன் எல்லாம் அப்பிறப்பில் தீர்த்திடுவேன் அம்மா அம்மா தாயே உங்களை எமாற்ற உங்களின் பிள்ளைகள் நாங்கள் எத்தனை திட்டங்கள் போட்டோமம்மா. ஒன்றுமே கூறாது நீ நின்றதும் வென்றதும் எவ்வண்ணம் தாயே. தாயகத்தின் தாயே உங்களிடம் நாங்கள் தோற்றுத்தான் போனோமம்மா… ********* ஆசிரியரை பற்றி…. விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான பொட்டம்மான் பற்றி உலகத்திற்கு தெரிந்தவவைகளில் அனேகமானவை புனைவுகளே. புலனாய்வு நடவடிக்கை பணிப்பாளர்களின் துரதிஸ்டம் அவரையும் வாழ்கை முழுவதும் பிடித்திருந்தது. இயற்கையான தனது வெளிப்பாடுகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சுதந்திரம் மட்டுப்பட்டிருந்தது. அவர் ஒரு படைப்பளியாகவும், தீவிர வாசகராகவும் இருந்தார் என்பது பலர் அறியாதது. வன்னியிலிருந்த வெளியான பத்திரிகைகளிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும் எப்பொழுதாவது எழுதிக்கொண்டிருந்தார். வெளிச்சம் சஞ்சிகையில் அவர் எழுதிய சில கதைகளில் இதுவும் ஒன்று. http://pagetamil.com/?p=5409

          • Like
        • 12 replies
        கிருபன்
        கிருபன்
        June 5, 201411 yr
        மோகன்
        Featured by மோகன்
        November 5Nov 5
      • இது ஒரு தீபாவளிக் கதை: பாவம் நரகாசுரன் -பேராசிரியர் சி. மௌனகுரு

        இது ஒரு தீபாவளிக் கதை: பாவம் நரகாசுரன் -பேராசிரியர் சி. மௌனகுரு

        இது ஒரு தீபாவளிக் கதை: பாவம் நரகாசுரன் -பேராசிரியர் சி. மௌனகுரு   நாளைக்குத் தீபாவளி. அடிக்கடி நண்பர்களும் மாணவர்களும் தொலைபேசியில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்கள். அனைவரும் மகிழ்ச்சிகரமாக இருகிறார்கள் போலத் தெரிகிறது. கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சிதானே? மகிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைத்தானே நாம் விரும்புகின்றோம்.   மட்டக்களப்பில் நான் பிறந்த காலங்களில், அதாவது 1940களில், இற்றைக்கு 77 வருடங்களுக்கு முன்னர், தீபாவளியை யாரும் கொண்டாடவில்லை. நாங்களும் வீட்டில் இதைக் கொண்டாடியதாக ஞாபகம் இல்லை. எமக்கு அன்று கொண்டாட்டம், சித்திரை மாதப் புதுவருடம் தான். அன்று தான் எங்கள் வீட்டில் பலகாரம் சுடுவார்கள்.   முதல் நாளிரவு நான்கைந்து குடும்பங்கள் சேர்ந்து பலகாரம் சுட்டு, அதனைத் தமக்குள் பகிர்ந்து கொள்வார்கள். குடும்பங்களின் விழா அது; கிராமங்களின் விழா அது   புது உடுப்புகளை, காலையில் முதலில் தென்னம்பிள்ளைகளுக்கு உடுத்திவிடச் சொல்லுவார் அம்மா. தென்னம்பிள்ளைகள் அணிந்த உடுப்பைத்தான் நாம் பின்னர் அணிவோம். இயற்கையை நேசித்த மனிதர்கள்; அன்றைய சித்திரை நாள், எங்களுக்குப் பெரும் கொண்டாட்ட நாள்.   தைப்பொங்கலும் கொண்டாட்ட நாள்தான். அதனை விவசாயிகள் கொண்டாடுவர். ஏனையோரும் வீட்டில் பொங்கி மகிழ்வர். ஆனால், சித்திரை வருடமளவுக்கு அது, அன்று பெரும் கொண்டாட்டமில்லை. சின்னவயதில் தமிழ்நாட்டிலிருந்து கல்கி தீபாவளி ஆண்டுமலர், ஆனந்தவிகடன் தீபாவளி ஆண்டுமலர் எனச் சில மலர்கள் வரும். அவற்றின் மூலம்தான் தமிழகத் தீபாவளி எமக்கு அறிமுகமாகியதாக ஞாபகம்.   அதன்மூலம்தான் தலைத்தீபாவளி, கங்காஸ்னானம், அத்திம்பேர், தீபாவளிச்சீடை முறுக்கு, குடும்பிவைத்து பூணூல் போட்ட தாத்தாமார், மடிசார் வைத்த பெண்கள் எனப் பல தீபாவளி சார்ந்த சமாச்சாரங்கள் சிறுவயது மனதில் படிய ஆரம்பித்தன. தீபாவளிச் சிறுகதைகள் வேறு, இவற்றை மனதில் அழுத்தின.   நரகாசுரனைச் சத்தியபாமா துணையுடன் கிருஸ்ண பகவான் அழித்த கதையும் எம்மனதில் வேரூன்றியது. சற்றுவளர்ந்த பின்னர், 15ஆவது வயதில் திராவிடக் கழகக் கருத்துகளுக்கு அறிமுகமானபோது, நரகாசுரன் என்ற திராவிட குலத் தலைவனை, ஆரியனாகிய கண்ணன் அழித்த கதை எமக்கு அறிமுகமானது.   நரகாசுரன் என்பவன் நரன்; அதாவது மனிதன். அசுர என்பதன் அர்த்தம், சுரன் அல்லாதவன். சுரர் என்றால் தேவர். தேவர்கள் என அழைக்கப்பட்ட ஆரியர்கள், சுரபானம் எனும் மதுவை அருந்தியதால் சுரர் என அழைக்கப்பட்டனர். திராவிடர்கள் ஒழுக்க சீலர்கள்; மதுஅருந்தாதோர். ஆகவே, அசுரர் என்றால் சுரம் அருந்தாதோர் என்பது அர்த்தம் (அ+ சுரம்) என்ற விளக்கங்களைத் திராவிடக்கழக நூல்கள் தந்தபோது, இளைஞரான நாம் அதனால் ஈர்க்கப்பட்டோம்.   இவற்றையெல்லாம் தாண்டி, மெல்லமெல்ல தமிழகத் தீபாவளி, தமிழ்ப் பண்பாட்டுக்குள் புகத்தொடங்கி, சித்திரை வருடத்துக்கு அடுத்த பெரும் கொண்டாட்டமாக இடம்பெறலாயிற்று.   1960களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எமக்கு தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், சமணப் புலவர்களின் தனிப்பாடல்கள் என்பன அறிமுகமாகின. அவர்கள் பிராமண மதத்துக்கும் வைதீக மதத்துக்கும் எதிரானவர்கள்; நால்வகைப் வருணப் பாகுபாட்டை விரும்பாதவர்கள்; மக்கள்பால் நின்றவர்கள்; தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை அன்று எற்படுத்தியவர்கள் என்ற விவரங்களும் சமணத் தலைவரான மகாவீரர், ஸ்தாபித்த சமணமதம் அதன் தத்துவங்கள் என்பனவும் அறிமுகமாகின. இவற்றை எமக்கு அறிமுகம் செய்தவர்கள் பேராசிரியர்களான கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, வேலுப்பிள்ளை ஆகியோராவர். கைலாசபதி வகுப்பில் தொடர்ச்சியாகச் சமண தத்துவத்தை எமக்கு விளக்கினார். வேலுப்பிள்ளையும் தமிழ்ச் சமணம், தமிழ்ப் பௌத்தம் பற்றி ஆராய்ந்து எமக்குக் கூறினார்.   இதன் காரணமாக, சமண மகாஞானியான மகாவீரர் மீது ஒரு மதிப்பு உண்டானது. பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் வகுப்புகள் வெகுசுவராஸ்யமானவை. சிரித்துக்கொண்டு கதையோடு கதையாகப் பல ஆழமான விடயங்களை எளிமையாகக் கூறிசெல்வார். ஒருநாள், அவர் எங்களுக்குப் படிப்பித்துக் கொண்டிருக்கையில், “உந்தத் தீபாவளி எப்படி வந்தது என்று தெரியுமோடா”? என்று கேட்டார்.   நாங்கள் நரகாசுரன் கதையைக் கூறினோம். “அதெல்லாம் புழுகடா. சமண மதத்தின் தலைவரான மகாவீரர் சமாதி அடைந்த நாளை நினைவு கூரப் பல தீபங்களை ஏற்றி வைத்து, சமணர் கொண்டாடிய சமண விழாவை, சைவர்கள் தம்வசப்படுத்திக்கொண்ட கதை தாண்டா தீபாவளி. அதற்காக உருவாக்கப்பட்ட கதைதான் நரகாசுரன்கதை” என்றார். சைவம், சமண மதத்திலிருந்து பல விடயங்களைத் தன்வயப்படுத்திச் சைவமாக்கிக் கொண்டது என்பதற்கு நிறைய உதாரணங்கள் கூறி, இதுவும் அதில் ஒன்றடா என்றார்.   எங்களுக்கு வியப்பு அதிகமாயிற்று. தீபாவளியின் மூலம் பற்றி பேராசிரியர் வேலுப்பிள்ளை கூட, தனது நூலில் ஒரு கட்டுரை எழுதியமை ஞாபகம் வருகிறது.   காலங்கள் பல கடந்து விட்டன....   இன்று 2020ஆம் ஆண்டு,   இன்று, வடக்கு-கிழக்கு தமிழர் பிரதேசங்களில் தீபாவளி பெரும் கொண்டாட்டம். நரகாசுரனை அழித்த கதை, பாடசாலைகளிலும் சமயச் சொற்பொழிவுகளிலும் சர்வசாதாரணமாகச் சொல்லப்படுவதாயிற்று. அரசியல்வாதிகளும் ஆட்சியதிகாரத்தில் உள்ள பெரும்தலைவர்களும் சமயத் தலைவர்களும் நரகாசுரன் ஒழிந்த நாள் என்றே மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றனர். நரகாசுரனுடன் தீபாவளி இணைக்கப்பட்டுவிட்டது; பெரும் சமயக் கொண்டாட்டம் ஆகிவிட்டது. இக்கொண்டாட்டத்தை இனி மக்களிடமிருந்து பிரித்துவிட முடியாது. காரணங்கள் பல;    ஒன்று, இது ஒரு பெரும் சமய விழாவாகி விட்டது.   இரண்டு, இது ஒரு பெரும் கொண்டாடமாகிவிட்டது. கொண்டாட்டம் ஆனமையால் மக்கள் கூடுதல், அதனால் கிடைக்கும் பெருமகிழ்ச்ச்சி, ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி தெரிவித்தல் என்ற மனிதகுலம் விரும்பும் அடிமனநல்லியல்புகள் இதில் உள்ளன.   மூன்று, பெரும் வணிக நிறுவனங்களின் இலாபம், இக்கொண்டாட்டத்தில் அடங்கியுள்ளது. உடுப்புகள், பட்டாசு, பலகார வகைகளுக்கான மூலப்பொருள் வியாபாரம் என்பன இதில் அடங்கும்.   நான்கு, கோவில் வருமானம், பூசகர் வருமானம் என்பன இன்னொருபுறம் உள்ளன.   ஐந்து, பத்திரிகைகளின் தீபாவளிமலர் வருமானம், மற்றொரு புறம் உள்ளது.   ஆறு, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் இடைவிடாத கருத்தேற்றமும் அவை, அவற்றால் அடையும் பெருவருமானமும் இன்னொரு புறம் உள்ளது.   ஏழு, அதனை விரும்பி ஏற்றுப் புகழ்பெறச் செல்லும் நமது கலைஞர்களும் அறிஞர்களும் இன்னொரு புறம் பெருவாரியாகக் காணப்படுகின்றார்கள்.   எனவே, தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என எப்படிச் சொன்னாலும் அக்கொண்டாட்டத்தை இலகுவில் போக்கிவிட முடியாது. அது, இந்து மக்கள் கொண்டாட்டமாகி விட்டது.   கொண்டாட்டங்களை மிகவும் வரவேற்கும் பின் நவீன சிந்தனையாளர்களை நாம் காண்கிறோம். மக்கள் இணைகிறார்கள்; மக்கள் மகிழ்கிறார்கள் என அவர்கள் கொண்டாட்டங்களுக்கு ஒரு புது வியாக்கியானம் அளிக்கிறார்கள். ஆனால், கொண்டாட்டங்களுக்குப் பின்னால் மறைந்து கிடக்கும் சுரண்டலையும் பேதங்களையும் மறக்க வைக்கும் போதைநிலையையும் அவர்கள் தோலுரித்துக் காட்டுவதில்லை.   தீபாவளியைக் கட்டுடைத்துப் பார்க்கலாம்; அதன் அதிகாரம் எங்கிருக்கிறது என்று பார்க்கலாம்; தீபாவளிக் கதை கூறும் நரகாசுரன் கதைப் பிரதியைக் கட்டுடைத்துப் பார்க்கலாம்.   இவை யாவும் ஒரு புலமைத்துவ இன்பப்பயிற்சியுமாகும் (Intelectual pleasure excersise). தீபாவளி அன்றுபோல் இன்றில்லை. நிறைய மாறி விட்டிருக்கிறது. இன்னும் மாறும்; இடையில் வந்து மாட்டிக்கொண்டான் நரகாசுரன்; பாவம் நரகாசுரன். அவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.       http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இது-ஒரு-தீபாவளிக்-கதை-பாவம்-நரகாசுரன்/91-258874  

        • 2 replies
        கிருபன்
        கிருபன்
        November 14, 20205 yr
        மோகன்
        Featured by மோகன்
        October 18Oct 18
      View All
      1. Home
      2. யாழ் உறவுகள்
      3. யாழ் திரைகடலோடி
      4. US fighter jet crashes in South Korea
      • All Activity
      • facebook

      • Privacy Policy
      • Contact Us
      • Cookies
        • Events RSS Feeds
        • covid-19
        • Yarl Forum

      யாழ் இணையம் Powered by Invision Community

      Important Information

      By using this site, you agree to our Terms of Use.

      I accept
      • Sign In
      • இங்கு இணைந்து கொள்ள

      Account

      • Existing user? Sign In
      • இங்கு இணைந்து கொள்ள

      Navigation

        • Forums
        • Gallery
        • Blogs
        • Events
        • All Activity
          • stream_title_14
          • stream_title_13
        • வாசிக்காதவை
        • நான் தொடங்கியவை
        • Search
      • முகப்பு
      • Leaderboard
      • Clubs
      1. Home
      2. யாழ் உறவுகள்
      3. யாழ் திரைகடலோடி
      4. US fighter jet crashes in South Korea

      Search

      Configure browser push notifications

      Chrome (Android)
      1. Tap the lock icon next to the address bar.
      2. Tap Permissions → Notifications.
      3. Adjust your preference.
      Chrome (Desktop)
      1. Click the padlock icon in the address bar.
      2. Select Site settings.
      3. Find Notifications and adjust your preference.
      Safari (iOS 16.4+)
      1. Ensure the site is installed via Add to Home Screen.
      2. Open Settings App → Notifications.
      3. Find your app name and adjust your preference.
      Safari (macOS)
      1. Go to Safari → Preferences.
      2. Click the Websites tab.
      3. Select Notifications in the sidebar.
      4. Find this website and adjust your preference.
      Edge (Android)
      1. Tap the lock icon next to the address bar.
      2. Tap Permissions.
      3. Find Notifications and adjust your preference.
      Edge (Desktop)
      1. Click the padlock icon in the address bar.
      2. Click Permissions for this site.
      3. Find Notifications and adjust your preference.
      Firefox (Android)
      1. Go to Settings → Site permissions.
      2. Tap Notifications.
      3. Find this site in the list and adjust your preference.
      Firefox (Desktop)
      1. Open Firefox Settings.
      2. Search for Notifications.
      3. Find this site in the list and adjust your preference.