Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்
6 மணி நேரங்களுக்கு முன்னர்

நாட்டில் பெரும்பாலான அரசுகள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், அது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறியுள்ளார்.

பிபிசி உடனான சிறப்பு நேர்காணலில் பேசிய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், இந்த மாதிரியான அழுத்தங்கள் 1950 முதலே இருந்து வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த 1975ஆம் ஆண்டு முதல் 1977 ஆண்டு வரையான காலத்தைக் குறிப்பிட்டுப் பேசிய சஞ்சய் கிஷன் கவுல், அப்போது நீதித்துறை மீது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் அவர் பகிர்ந்தார்.

பேச்சு சுதந்திரம் குறித்துப் பேசிய நீதிபதி சஞ்சய், அது ஒரு சமூகப் பிரச்னை என்று கூறினார். பிபிசியுடனான இந்த நேர்காணலில், சமூகத்தில் பேச்சு சுதந்திரப் பிரச்னைகள் தற்போது அதிகரித்துள்ளதை அவர் ஒப்புக்கொண்டார்.

பிபிசிக்கு அளித்த பேட்டியில், நீதிபதிகள் நியமனம், தன்பாலினத்தவர் திருமணம் மற்றும் 370வது பிரிவு ஆகியவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் அவர் ஆதரித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்த சஞ்சய் கிஷன் கவுல் ஒய்வு பெற்றார். தற்போது 56 வயதான சஞ்சய் கிஷன் கவுல், 1982இல் வழக்கறிஞராகப் பதிவு செய்து, டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இவர், மே 2001இல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவியேற்றார். பின், 2015இல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற இவர், 2016இல் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.

 

நீதித்துறை அன்றும் இன்றும்

உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேள்வி: கடந்த காலங்களில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளைப் போலவே இப்போதும் வழங்கலாமா அல்லது, அதில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா?

நீதிபதி கவுல்: “இதுதான் நடைமுறை. நீங்கள் 1950 முதல் பார்த்தால், அப்போதிருந்து இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது.

கடந்த 1975 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் ஒரு வகையான நடைமுறை இருந்தது. நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையில் எப்போதும் மோதல்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். அப்படியான மோதல்கள் இருப்பது நல்லது.

நீதித்துறையின் வேலை, சரிபார்த்து சமநிலைப்படுத்துவதுதான். நம்மிடம் ஜனநாயக தேர்தல் முறை இருப்பதால், கூட்டணி அரசுகள் அமையும்போது, நீதித்துறையில் இருக்கும் சில இடையூறுகள் குறையும்.

ஒருவர் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும்போது, தங்களிடம் மக்கள் ஆதரவு இருப்பதாக நினைக்கிறார்கள். எனவே, நீதித்துறை ஏன் நமது பணியில் தலையிடுகிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால், நீதித்துறைக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தங்கள் உள்ளது. இது சற்று இழுபறியான ஒன்றாகத்தான் உள்ளது. இது மேலும் தொடரும்."

 
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்

கேள்வி: அப்படியென்றால் இப்போது அழுத்தங்கள் அதிகரித்துள்ளதா?

நீதிபதி கவுல்: " பெரும்பான்மை அரசாங்கம் இருக்கும்போது, எப்போதும் அழுத்தங்கள் சற்று கூடுதலாகவே இருக்கும்."

கேள்வி: இந்த அழுத்தங்கள் இப்போது எப்படி அதிகரிக்கிறது?

நீதிபதி கவுல்: "இந்த அழுத்தங்கள் ஒரு கோடு போன்றது. அதன் ஒரு பக்கம் நீதித்துறையும் மறுபக்கம் நிர்வாகத்துறையும் இருக்கும்.

எப்போது கூட்டணி அரசுகள் வந்தாலும், நீதிமன்றம் அந்த எல்லைக்கு வெளியே அரை அடி எடுத்து வைக்கலாம் என்று நான் நம்புகிறேன். பெரும்பான்மை அரசுகள் வரும்போது, நீதிமன்றங்கள் அந்த எல்லையில் நிற்கின்றன.

பெரும்பான்மை அரசாங்கம், தான் எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதைப் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு கொண்டு வருவதாக நம்புகிறது. எனவே, அந்தப் பெரும்பான்மை மக்களின் ஆதரவு மதிக்கப்பட வேண்டும், ஏனெனில் அதுதான் ஜனநாயகம்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் யாராவது முறையீடு செய்து, அதில் நீதிமன்றம் தலையிட்டால், 'நாடாளுமன்றம் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது, சட்டத்தை நிறைவேற்றுவதுதான் எங்கள் வேலை. இந்த விஷயத்தில் ஏன் தலையிடுகிறீர்கள்?' என அவர்கள் நினைப்பதாக நான் பார்க்கிறேன்.

 

கேள்வி: நீங்கள் நீதிபதி ஆனதில் இருந்து பேச்சு சுதந்திரம் (கருத்து சுதந்திரம்) விஷயத்தில் ஒருவிதமான போக்கைப் பார்க்கிறீர்கள். கருத்து சுதந்திரம் குறைந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா?

நீதிபதி கவுல்: "எழுதுபவர் எழுதட்டும், ஓவியம் வரைபவர் ஓவியம் வரையட்டும் என்பதே என் கருத்து. ஹிந்துஸ்தானி சமூகம் மிகவும் தாராளமயமாக இருந்தது என்பது எனது சொந்த உணர்வு. ஒரு மதம் ஒன்றை நம்புகிறது, மற்றொரு மதம் வேறொன்றை நம்புகிறது.

இப்படிப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டை, ஒன்றாக வைத்து ஒன்றாக வாழ வேண்டும் என்றால், நாம் ஒருவரையொருவர் சகித்துக்கொள்ளக் கற்க வேண்டும். ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கையை அவர் விரும்பியபடி வாழ உரிமை உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்."

கேள்வி: தற்போதைய காலகட்டத்தில் அது(பேச்சு சுதந்திரம்) மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறீர்களா?

நீதிபதி கவுல்: "எங்கோ சில பிரச்னைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆனால், எந்த குறிப்பிட்ட காலகட்டத்திலும் அதைச் சரிசெய்ய நான் விரும்பவில்லை.

நான் அதை ஒரு சமூக பிரச்னையாகப் பார்க்கிறேன். சமூகத்தைப் பார்த்தால் எங்கோ ஒருவருக்கு ஒருவர் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது.

மேலும் நான் நாட்டைப் பற்றிப் பேசவில்லை. இதே பிரச்னை சர்வதேச அளவிலும் உள்ளது."

 

நீதித்துறையில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாள்வதில் சிக்கல் உள்ளதா?

உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேள்வி: சமீபத்தில், உ.பி.யில் சிவில் நீதிபதி ஒருவர், தனது மாவட்ட நீதிபதி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அதன்பிறகு, அவரது புகார் ஐசிசி-யிலும் பதிவு செய்யப்பட்து. இப்போது அந்தப் பெண் எத்தியோப்பியா செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஏனென்றால் அவருக்கு இனி இங்கு வாழ விருப்பம் இல்லை. அதேபோல, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதை நாம் முன்பே பார்த்தோம். இப்போது மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி இருக்கிறார், அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், நீதித்துறைக்குள் இருந்து வரும் பாலியல் துன்புறுத்தல் புகார்களை நீதித்துறை முழுமையாகச் சமாளிக்க முடியாமல் போய்விட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா?

நீதிபதி கவுல்: "கடவுள், நீதிபதிகளை மேலே இருந்து இறக்குவதில்லை. அவர்களும் நமது சமூகத்தின் ஓர் அங்கம்தால. இத்தகைய சூழ்நிலையில், நீதிபதிகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால், அது முழுமையானதாக இருக்க முடியாது. சமாளிக்கக்கூடிய சில விஷயங்கள் இருக்கும். இப்போது, இதுவொரு சிறப்பு வழக்கு, இது பற்றி எனக்குத் தெரியாது.

ஆனால், எல்லாவற்றிலும் ஒரு குற்றச்சாட்டும், அதற்கு ஒரு தற்காப்பும் இருக்கிறது. ஒருவர் ஏதேனும் தவறு செய்தாரா இல்லையா என்பதைச் சரிபார்க்காமல் குற்றச்சாட்டுகளையே இறுதி முடிவாக ஏற்க வேண்டுமா? எதையும் விசாரிக்காமல், முழுமையாகத் தெரியாமல் முடிவெடுக்க முடியாது."

 
உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேள்வி: உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சாதிப் பிரதிநிதித்துவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? சட்ட அமைச்சகத்தின் கூற்றுப்படி, 5 ஆண்டுகளில் செய்யப்பட்ட 659 நியமனங்களில், 75% பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பட்டியல் சாதியினர் 3.5% மற்றும் பட்டியல் பழங்குடியினர் 1.5% மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் உள்ளனர். இதற்கான காரணங்கள் என்ன?

நீதிபதி கவுல்: "நீதிபதி நியமனங்கள் மூன்று நிலைகளில் செய்யப்படுகின்றன. துணை நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு உள்ளது. இதுவும் செயல்படுத்தப்படுகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் அதிலிருந்து வந்தவர்கள். அதனால் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது.

நாங்கள் வழக்கறிஞர்களின் சங்கத்தில் இருந்து வருபவர்களைப் பற்றிப் பேசுகிறோம். இங்கு சமூக எழுச்சி அவ்வளவாக நடக்கவில்லை. எனவே, நீங்கள் பட்டியலில் எந்த வயதினரைப் பார்க்க விரும்புகிறீர்கள்?

நீங்கள் பார்க்க வேண்டியது, 45 முதல் 50 வயது வரை உள்ளவர்களை. இந்த எட்டு-பத்து ஆண்டுகளில் நீங்கள் பிரதிநிதித்துவத்தைப் பார்க்க வேண்டும்.

குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களைக் கண்டால் சில சலுகைகள் கொடுப்போம். அவர்களின் செயல்பாட்டையும் பார்ப்பார்கள். ஆனால், அவர்களின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்றால், எப்படி வலுக்கட்டாயமாக அதை அமல்படுத்த முடியும்?

பெண்கள் நியமனம் பற்றிப் பேசும்போது, பல பதவிகளில் 50 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் நியமனம் நடப்பதாக அடிக்கடி கூறுவேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் இல்லை என்றால், இன்று எப்படி அவர்கள் அந்த இடங்களுக்கு வந்திருப்பார்கள்?

இப்போதும் அந்த அம்சம் தெரிகிறது. பல நேரங்களில் அரசு ஆர்வம் காட்டும்போது, சாதி, சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பிரதிநிதித்துவம் உள்ளது, ஆனால், சரியான பிரதிநிதித்துவத்திற்கு சிறிது காலம் எடுக்கும்."

பிரதமர் மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேள்வி: நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்றவில்லையா?

நீதிபதி கவுல்: "இந்த கொலீஜியம் அமைப்பு நடைமுறைக்கு வந்ததில் இருந்து, அரசியல் வர்க்கம் எங்களுக்கு ஏதாவது பங்கு இருக்க வேண்டும் என்று உணர்ந்தது. என்ஜிசி அரசாங்கத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை."

 
தன்பாலின தம்பதிகள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேள்வி: ஒருபுறம், தேர்தல் பத்திரங்கள் போன்ற முக்கியப் பிரச்னைகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மறுபுறம் தன்பாலினத்தவர் திருமணம் போன்ற விவகாரத்தில் ஓராண்டுக்குள் முடிவு எடுக்கப்பட்டது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

நீதிபதி கவுல்: "அரசமைப்பு விவகாரங்களில் முடிவுகள் விரைவாக எடுக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவை பெரிய விஷயங்களைத் தீர்க்கின்றன. எங்கோ தலைமை நீதிபதி பட்டியலிடும் இடத்தில் விஷயம் சிக்கிக் கொள்கிறது. ஓரளவிற்கு, அது அவரது அதிகார வரம்பிற்குள் வருகிறது.

தன்பாலின திருமணம் என்பது தலைமை நீதிபதியின் அதிகாரத்தின் கீழ் ஒரு சமூகப் பிரச்னையாக இருந்தது. தலைமை நீதிபதியின் கருத்துப்படி, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்."

 

பிரிவு 370இல் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சரியா?

காஷ்மீர் மக்கள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேள்வி: சட்டப்பிரிவு 370 தொடர்பான இரண்டு சிக்கல்கள் இருந்தன. முதலாவது அதை நீக்குவது சட்டப்பூர்வமானதா இல்லையா என்பது. ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது சரியா இல்லையா என்பது இரண்டாவது பிரச்னை. இரண்டாவது பிரச்னையில், மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்று சொலிசிட்டர் ஜெனரல் உறுதியளித்திருப்பதால், இது குறித்து நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கத் தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியது. முன்னாள் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன், எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதும் கூட முடிவு தானே என்று கூறியிருந்தார்.

நீதிபதி கவுல்: "அந்த அறிக்கை சொலிசிட்டர் ஜெனரலின் அறிக்கை மட்டும் அல்ல. இது நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அமைந்தது. இப்போது ஏதாவது ஒரு கொள்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டால், அதில் எதுவும் நடக்காது, முன்னோக்கிச் செல்லும் வழி இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை."

கேள்வி: அது திரும்பப் பெறக்கூடிய அறிக்கை, அதில் எந்த சட்டப்பூர்வ கடமையும் இல்லை. மற்ற சட்ட வல்லுநர்களும் நீதிமன்றம் ஒரு முடிவை வழங்கியிருக்க வேண்டும் என்று நம்பினர்.

நீதிபதி கவுல்: சட்டம் என்பதில் பலதரப்பட்ட கருத்துகள் இருக்கும். ஒரு காரணத்திற்காக, அந்த மக்கள் சரியானது என்று நினைப்பதற்கும் அமர்வு(bench) சரியானது என்று நினைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆனால், பிரச்னைக்கான தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை (அரசு வழக்கறிஞர்) சொந்தமாகக் கொடுக்கப்படவில்லை. அவரிடம் கேட்கப்பட்டு, அவர் அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டு திரும்பி வந்து கொடுத்தார்.

https://www.bbc.com/tamil/articles/c72y9wr1z9lo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.